உறந்தைவளர் நாட்டுவளப்பம்/நாட்டார் பெருமைகள்
- வீர மணவாளர் விருதுகளைக் கூறுவோம்
- காறாளர் வீரர்க ணக்குக் கதிகாரி
- தோறாத கோவிலூர் துலங்கும்வெள் ளார்கள்
- தன்னர சுள்ளவர் தலைமை யவர்களாம்
- முன்னர சுள்ளவர் பல்லவ ராயர்கள் (75)
- கனவென்று சொன்னவரைக் காதை அறுமென்றார்
- நெடுவாண்டா ராயரவர் படைகொண்ட மன்னவர்
- அண்டின பேருக்கோ ராலவி ருட்சம்போல்
- கண்டியர் தேவர்படை கண்டால் விடுவாரோ?
- தீரங்கொண் டாயரென்று சொல்வார்உ றந்தையில் (80)
- வீரங்கொண் டாயர்கள் வென்றுவ ருவார்கள்
- சொல்லாளர் என்றுது லங்கும்உ றந்தையில்
- வல்லாளர் தேவர்படை வெல்வார் நிசங்காணும்
- சுண்டுவில் கொண்டுபோரில் துரத்தி வருவார்கள்
- கண்டியர் தேவசாரம் கொண்டா ரிருபேரும் (85)
- ஆலிங்க நெஞ்சுஅ ருமைதெ ரிந்தவர்
- காலிங்க ராயர்போரில் கலங்காத வீரியர்
- மாசுத்த வீரர்வ ளரும்உ றந்தையில்
- பூபோதித்திச் சேதிராயர் ஆபத்துக் காத்தவர்
- மானைக் கண்டுநடக்கும் மரியாதை ராமன்போல் (90)
- சேனைக்கொண் டாயர்கள் செயங்கொண்ட மன்னவர்
- சொல்லிக்கொண் டாடுவோம் சோலை வளநாட்டில்
- மல்லிக்கொண் டாயர்கள் வில்லில்வி சையர்கள்
- சிறந்த மணவாளர் செல்வார் உறந்தையில்
- உறந்தை ராயரவர் உச்சித வீரர்கள்
- வீராதி வீரர்வி சையர்இ வர்களாம்
- போருக்கு வீரர் துரை சேதிரா யர்களாம்
- சேதிரா யர்வளத்தா தேவர்வாண் டையாரும்
- சேகர மாகச்சி றந்துவ ருவார்கள்