உறந்தைவளர் நாட்டுவளப்பம்/மக்கள் நேர்த்திக் கடன்
- தேர்நிலை கொண்டதும் சிறந்தமங் கையர்கள்
- மாவிளக்கு ஏந்திவ ருந்திவ ருவார்கள்
- நெய்விளக்கு ஏந்தியவர் நேர்ந்துகொள் வார்களாம்
- கைவிளக் கேந்தியவர் காணிக்கை செய்வார்கள்
- அங்கப் பிரதிஷ்டங்கள் எங்கும் வருவார்கள் (385)
- இருப்புச் சலாகைஇ சைவாய் நிறுத்தொன்றார்
- ஆரியத் தொம்பைகள் சாதக வித்தையும்
- நேர்மே லிருந்துமுத்து மாரியம்மன் பார்த்ததும்
- எள்ளுக்குள் எண்ணெய்போ லெங்குத் துலங்கவே