உறந்தைவளர் நாட்டுவளப்பம்/மன்னன் வருகை
- துரந்தரனைத் தஞ்சைவளர் சோழ முசுகுந்தன்
- புரந்தரனைக் காண்பதற்கு உறந்தையில் கந்ததும்
- வந்தார்கள் தென்னுறந்தை வாழுமே ழுநாட்டார்
- உம்பஅ அம்பலம் ஊர்மானி யங்களும்
- வந்தகா ரியமாகச் சந்தோஷ மாய்ச்சென்று
- தென்புறத் திலேலிருந்து சோறுண்டு வாருங்கள்
- நீதிமந் திரியுடன் யூகமந் திரியும்
- யூகிமந் திரியுடன் வாசல்மந் திரியும்
- வாசல்மந் திரிநாட்டுச் சேதிஉ ரைத்ததும்
- வீர மணவாளரைச் சோழ ரழைத்ததும்
- வா ருமிரும் என்றூப சாரங்கள் சொன்னதும்
- அந்திக் கொலுவிலும் ஆசார வாசலும்
- சந்திப் பூக்கொண்டு தயிரிப்பூப் பெற்றார்கள்
- பயிர்வேதி மெய்யுடனே கதிர்சாவி பேர்களும்
- மன்னன் மலையரசன் வாழுமே ழுநாட்டார்
- செந்நெல்லும் முத்தும்சி றந்துவி ளைந்ததும்
- கார்நெல்லும் நெல்லும் கலந்துவி ளைந்ததும்
- நெல்லுட னேபுஞ்சை நிறைந்துவி ளைந்ததும்
- விளைந்தது செந்நெல்முத்து அளந்துத ருகின்றோம்