உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வாழ்த்து
- திருக்காக் குரும்பருடன் தேவிபெரியவள்
- தழுக்கை விநாயகரும் சரஸ்வதியும் வாழியே!
- இந்திரர் கோத்திரங்கள் எந்நாளும் வாழியே!
- மலையாள் பரங்கிமுத்து மாரிமிக வாழியே!
- சிலைராம ருந்தனுசு சீதைமிக வாழியே
- மாதம் மும்மாரிம ழைகள் பொழிந்திட
- வீரமண வாளர்கள் மேன்மேலும் வாழியே!
- அளவிலாச் செம்பொன் அளகா புரிதனில்
- துளசி மகாராசர் ஆல்போல் தழைத்திட
- துலங்கும் புகழுறந்தை சுந்தரம் வாழியே!
- இலங்குமார்க் கண்டர்போல் இலங்காவி வாழியே!
- சிங்கார மாயர்கள் செட்டிபல வட்டரைகள்
- எல்லாச்சி வாலயங்கள் எந்நாளும் வாழியே!
- துன்னிய கீதம்து லங்கும்உ றந்தையில்
- பண்ணும் தமிழும் பணிக்கலங்கள் வாழியே!