உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வீரக்குடி நாட்டுடன் ஒரு போர்
- தாவளத்தில் வந்துகுரும் பீசரைப்ப ணிந்ததும்
- வாளெடுக்கும் முன்னேதிரு நீறெடுத்த ணிந்ததும்
- நீறணிந்த கையால்சமு தாடெடுத்துச் சேர்ந்ததும்
- வீரமண வாளர்பதி னாறணியில் வந்ததும்
- ஈட்டிகட் டாரிஇ டிகொம்பு சக்கரம்
- பூட்டிய வில்லுமெங்கள் நாட்டுத் துரைகளும்
- துப்பாக்கி சஞ்சாலி தொடர்ந்த சரம்போகி
- கைக்கஞ்சு வாணங்கள் கவண்டி வளைதடி
- ஓடிய காலுக்கொரு ஒண்டி மிதியடி
- நாடிய சூரர்களைத் தேடிவந் தார்களாம்
- வாடிக்குந் தெற்கேவ ளர்ந்தவீ ரக்குடி
- வீரக் குடிநாடு சோக் கலியாட்டம்
- சூரர் தனைவெட்டிச் செயங்கொண்டு வந்தார்கள்
- வெட்டாத பேரைவெட்டி விருதும் பறித்தார்கள்
- துட்டர் குணமடக்கிச் செயங்கொண்டு வந்தார்கள்
- பெரிய நகராவுடன் பேரிகை பூரிகை
- சரிகைமுண் டாசியுடன் தான்பறித்து வந்தார்கள்
- நித்தச் சங்கீர்தம் நிஅரிந்த வளநாடு
- வெற்றிச் சங்குபிடிக்கும் வீர மணவாளர்
- வலியன் இடமாகத் தளிகை வலமாகப்
- பெரியவள் பாதந்தேடித் துதிசெய்ய வந்தார்கள்
- சிங்காரத் தோப்பிலும் தேரோடும் வீதியும்
- வந்தார்கள் தென்னுறந்தை ரெங்கர் சபைபோல