உறந்தைவளர் நாட்டுவளப்பம்/வீரமணவாளர் பெற்ற சிறப்புகள்
- வளந்தேறி வாழுமெங்கள் உறந்தை வளநாட்டில்
- அறிவில் மிகுந்தவர் வீர மணவாளர்
- பெறுவார் பெறுவாரென்று சிவந்திரங்க ளுரைத்ததும்
- உம்பளம் அம்பலம் ஊர்மானியங்களும்
- கோவில்மா னியமும்கு ருக்கள்மா னியமும்
- காளிமானி யமும்முத்து மாரிமா னியமும்
- பிள்ளையார் மானியம்பெ ருமாள்மா னியமும்
- அய்ய னார்மானியம் அரசுகு றுணியும்
- கோவில்கு றுணியும்கு ருக்கள்கு றுணியும்
- பிள்ளை யார்களுக்கு முன்னேகு றுணியும்
- பெருமாள் குறுணியுடன் ருசுவாகச் சொல்கிறேன்
- மூலைக் கதிருண்டு முடுக்குக் கதிருண்டு
- வெள்ளைக் கதிருடனே பிள்ளை யரியுண்டு
- கட்டுக் களங்கள் களவடி செவ்வடி
- பொட்டிக் கதிரும்பண்ணைக் கட்டுக் கலமுண்டு
- அட்ட வணைக்கணக்கைக் கிட்டே அழைத்ததும்
- விட்டுவிடு கிறோமென்று கட்டளை விட்டதும்
- ஆறில் ஒருவாரம் ஏழு குறுணியும்
- பூரணி வாங்கிவந்தார் வீர மணவாளர்
- சாலுவை சாலுவை சரிகைமுண் டாசியும்
- போருவை துப்பட்டா பெரிய பீதாம்பரம்
- நாலு வகையும்வெகு மானங்கள் செய்ததும்
- வீரமண வாளரே ஊரேபோய் வாருங்கள்
- நாடுசி றந்ததுடன் நல்லச பைகளும்
- ஊரு சிறந்ததுடன் உயர்ந்தமா நியமும்
- அரைக்காரச் செம்புருதி அட்டவளை அய்யரைக்
- கூட்டுக் கொண்டு உறந்தை நாட்டார் வரச்சொன்னார்
- அந்தக் கணமேநாலு தண்டக்கா ரோடியே
- அந்தக் கணமேகூட்டம் அழைத்துவந் தார்களாம்
- வந்தகா கிதவோலை வாசகம் செய்ததும்