உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு/மஹாத்மா காந்தி

மஹாத்மா காந்தி



அண்ணல் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
1869, அக்டோபர் 2 காந்திஜி பிறப்பு
1881, ராஜகோட் ஹைஸ்கூலில் சேர்ந்தார்.
1883, அன்னை கஸ்தூரிபாயை மணந்தார்.
1888. செப்டம்பர், இங்கிலாந்துக்குப் பிரயாணம்.
1891, ஜூன்,இந்தியாதிரும்பி வக்கீல்தொழிலில் ஈடுபட்டார்.
1893, ஏப்ரல்,தென்னாப்பிரிக்கா பிரயாணம்.
1896, இந்தியா திரும்பினார்.
1896, நவம்பர், தமது குழந்தைகளுடனும் மனைவியுடனும்

தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பவும் சென்றார்.

1906, டிரான்ஸ்வாலிலிருந்த ஆசிய மக்களைப் பகிஷ்கரிக்கும்

சட்டத் திருத்தத்தை எதிர்த்து சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.

1907, வக்கீல் தொழிலை உதறித்தள்ளிவிட்டுச் சாத்வீகப்

போராட்டத்தில் இறங்கினார்.

1908, ஜன.10. டிராஸ்ஸ்வாலிலிருந்து வெளியேற மறுத்ததால் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
1908, ஜன, 30, ஒரு சமரஸம் ஏற்பட்டதால் விடுதலை பெற்றார்.
1908. பிப். 8. ஒரு பட்டாணியன் அவரைக் கொல்ல முயற்சித்தான்.
1908, ஆக. மீண்டும் சாத்வீகப் போராட்டம்.
1908, அக். மீண்டும் சிறைவாசம்.
1909, ஜூன். பிரிட்டிஷ் சர்க்காரிடம் தூது போக இங்கிலாந்து பிரயாணம்.
1911--12, ஒரு வாரம் உண்ணாவிரதம். 4 மாதத்துக்கு தினசரி ஒருவேளை சாப்பாடு; பின்னர் 14 நாள் உண்ணாவீரதம்.
1912, ஐரோப்பிய ஆடைகளைத் துறந்தார். பழவர்க்கங்களை

மட்டும் உண்ண ஆரம்பித்தார்.

1913, 3 பவுன் தலைவரி விதித்ததை எதிர்த்து சத்தியாக் கிரஹம் ஆரம்பித்தார். கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையடைந்தார்.
1913, நவ.9.மீண்டும் கைது செய்யப்பட்டு 9 மாத சிறை

தண்டனையடைந்தார்.

1913, டிச.18. நிபந்தனையின்றி விடுதலையடைந்தார். காந்திஜி -- ஸ்மட்ஸ் உடன்படிக்கை
1914, ஜன.21. காந்தி - ஸ்மட்ஸ். உடன்படிக்கை; சத்தியாக்கிரஹம் நிறுத்தப்பட்டது.
1914, ஜூலை, இங்கிலாந்து பிரயாணம்.
1914, ஆக. உலக யுத்தம் ஆரம்பம்: காந்திஜி லண்டனில் இந்தியர் ஆம்புலன்ஸ் படையைத் திரட்டினார்.
1915, ஜன. இந்தியா திரும்பினார்.
1915, மே, சபர்மதி ஆசிரமம் ஆரம்பித்தார்.
1915, 16, ரயில் வண்டியில் 3-வது வகுப்பில் இந்தியா-பர்மா

சுற்றுப்பிரயாணம்.

1918, ஜன. தீர்வையை ரத்து செய்ய பம்பாயிலுள்ள கெய்ரா

ஜில்லாவில் சத்தியாக்கிரஹம் ஆரம்பம்.

1919, பிப், கிரளலட் சட்டத்தை ரத்து செய்ய சத்தியாக்கிரஹப் பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.

சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம்

1919, 6. ஆசிய இந்தியா சத்தியாக்கிரஹ இயக்கம் ஆரம்பம்;

நாடெங்கும் ஹர்த்தால்.

1919, ஏப்.8, பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
1919, ஏப்.13. அமிருதசரஸில் ஜாலியன்வாலாபாக் கோரவதை.
1919, ஏப்.14. ஜனங்கள் பலாத்காரத்தில் ஈடுபட்டதால் மூன்று நாள் உண்ணாவிரதம்.
1919, ஏப், 18. சத்தியாக்கிரஹ நிறுத்தம்.
1919, செ. 'நவஜீவன்' ஆசிரியரானார் ; அக்டோபரில்

'யங் இந்தியா' ஆசிரியரானார்.

1920, கிலாபத் விஷயமாக வைசிராயிடம் தூது.
1920. ஆ. 1. கேஸரி ஹீந்த் மெடல், ஜூலுயுத்த மெடல், போயர் யுத்த மெடல் ஆகியவைகளைத் துறந்தார்.
1920, டிச. அஹிம்சா முறையில் சுயராஜ்யம் பெறுவதென்று

நாகபுரி காங்கிரஸில் ஒரு தீர்மானம் நிறைவேறியது.

1921, ஜூலை,அந்நியத் துணி பகிஷ்காரம்.
1921, டிச.காங்கிரஸ் காந்திஜிக்கு சர்வாதிகாரம் அளித்தது.
1922,, பிப். 1. பர்த்தோலியில் சத்தியாக்கிரஹம் ஆரம்பிக்க போவதாக வைசிராய்க்கு நோட்டீஸ்.
1922, பிப். 6. சௌரி சௌராவில் ஜளங்கள் கொள்ளி, சூறையில் ஈடுபட்டதால் 5-நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சத்தியாக்கிரஹ நோக்கத்தைக் கைவிட்டார்.
1922, மார்ச், 18. ராஜதுரோகமாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்டு 6-வருஷ சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டார்.
1924, ஜன. 21. அப்பெண்டிஸிடிஸ் ஆபரேஷன் ; பிப், 5

விடுதலையானார்.

21-நாள் உண்ணாவிரதம்

1924, செப். 18, ஹிந்து -- முஸ்லிம் ஒற்றுமைக்கு 21-நாள் உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
1924, டிச. பெல்காம் காங்கிரசுக்குத் தலைமை வகித்தார்.
1925, செப் அகில இந்திய சர்க்கார் சங்கத்தை ஆரம்பித்தார்.
1925, நவ, ஆசிரமவாசிகள் தவறாக நடந்துகொண்டதால் உண்ணாவிரதம் இருந்தார்.

உப்பு சத்தியாக்கிரஹம்

1925, நவ.சத்தியசோதனை - காந்திஜி தமது சுய சரிதத்தை

எழுத ஆரம்பித்தார்.

1928, டிச 1929-க்குள் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிக்கப்படாவிடில் சுதந்திரப் போராட்டம் ஆரம்பிக்கப் போவதாகக் காங்கிரஸில் ஒரு நீர்மாளம் கொண்டுவந்தார்.
1929, டிச. இந்தியாவின் பூர்ண சுதந்திரத்துக்குப் போராடுவதாக லாகூர் காங்கிரசில் ஒரு தீர்மாளம் கொண்டு வரப்பட்டது,
1930, பிப். சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்க முடிவு.
1930, மார்ச், 2. உப்பு சத்தியாக்கிரஹம்.
1930, மார்ச், 12, தண்டி யாத்திரை
1930, மே, 5. கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை.
1931, ஜன. 26. நிபந்தனையின்றி விடுதலை.
1931, மார்ச், காந்தி-இர்வின் உடன்படிக்கை.
1931, ஆக. 29. காங்கிரஸ் தூதராக இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்து பிரயாணம்.
1931, டிச. 28. இந்தியா திரும்பினார்.
1932, ஜன. 4. கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் தள்ளப்பட்டார்.
1932, செப். 20. ஹரிஜனங்களின் தனித்தொகுதியை ஒழிக்க

சிறையில் சாகும்வரை உண்ணாயிரதம்.

1932, செப். 26. தம் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதால்

உண்ணாவிரதம் நிறுத்தம்.

1933, பிப். 11. 'ஹரிஜன்' பத்திரிகை ஆரம்பம்.
1933, மே. 8. ஆத்ம பரிசுத்தத்துக்காக 21 நாள் உண்ணாவிரதம் ஆரம்பம்.
1933, மே. 9. சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டது.
1933, மே. 23. உண்ணாவிரதம் முடிந்தது.
1934, ஜன. 26. சத்தியாக்கிரஹ ஆசிரமம் கலைக்கப்பட்டது.
1934, செப். 17. அக்டோபர் முதல் தேதியிலிருந்து அரசியலிலிருந்து விலகிக்கொள்ளப்போவதாக அறிவித்தார்.
1934, டிச. 14. அகில இந்தியக் கிராமக் கைத்தொழில்சங்கம்

ஆரம்பம்.

1936, ஏப் 30 வார்தா அருகிலுள்ள சேவா கிராமம் தலைமைக் காரியாலயமாயிற்று.
1937, அக். 22. வார்தா கல்வித் திட்டம்.
1939, மார்ச், 3. ராஜகோட்டை சீர்திருத்தம் சம்பந்தமாக

உண்ணாவிரதம் ஆரம்பம்; வைசிராய் தலையீட்டால் மார்ச் 7-ம் தேதி உண்ணாவிரதம் நின்றது.

1940, செப் யுத்த நிலைமை சம்பந்தமாக வைசிராயைச் சந்தித்தார்.
1940, அக். தனிப்பட்ட நபர் சத்தியாக்கிரஹத்துக்கு அனுமதி
1941, டிச. 30. காங்கிரஸ் தலைமைப்பதவியிலிருந்து விலகினார்
1942, ஜன. 18, 1940 அக்டோபரில் நிறுத்தப்பட்ட 'ஹரிஜன்'

பத்திரிகையை மீண்டும் தொடங்கினார்.

1942, மார்ச். 27. புது டெல்லியில் ஸ்டாபோர்டு கிரிப்ஸுடன்

சந்திப்பு.

குவிட் இந்தியா

1942, மே. இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு பிரிட்டிஷாரைக் கேட்டுக்கொண்டார்.
1942, ஆக. 8. குவிட் இந்தியா தீர்மானம்பற்றி பம்பாயில் நடந்த அ. இ. கா. சு, கூட்டத்தில் பேசினார்.
1942, ஆக. 9. கைது செய்யப்பட்டு பூனாவிலுள்ள ஆகாகான்

மாளிகையில் சிறைவைக்கப்பட்டார்.

1943, பிப் .10. 22. கஸ்தூரிபாய் காந்தி ஆகாகான் சிறையில் உயிர்நீத்தார்.
1944, மே 6. நிபந்தனையின்றி விடுதலை.
1944, செப். 9-47. பாகிஸ்தான் சம்பந்தமாக ஜின்னாவுடன்

சம்பாஷனை.

சென்னை விஜயம்

1946, ஜன. 21. சென்னைக்கு விஜயம்.
1946, பிப். சென்னையில் பார்லிமெண்டரி தூதுகோஷ்டி சந்திப்பு.
1946, ஏப். ஹெர்பார்ட்ஹுவருடன் சந்திப்பு.
1946, ஜூன் 30 பூனா அருகில் காந்திஜி சென்ற ஸ்பெஷல்

ரயிலைக் கவிழ்க்க முயற்சி.

1946, அக் நவகாளி கலவரப் பிரதேசங்களில் சுற்றுப் பிரயாணம்.
1947, ஏப். 16 அமைதி ஏற்பட வாந்திஜி - ஜின்னா கூட்டு அறிக்கை.
1947, ஆக. 15 இந்தியா சுதந்திரம் அடைந்தது.
1947, செ .1. ஹிந்து -- முஸ்லிம் ஒற்றுமைக்குக் கல்கத்தாவில் உபவாசம்,
1947, செ. 73 மணிநேரம் கழித்து உபவாச நிறுத்தம்,
1948, ஜன. 13. டில்லி கலவரத்தைக் கண்டித்து மீண்டும் தேதி நிர்ணயிக்காமல் உபவாச ஆரம்பம்.
1948, ஜன. 18. தலைவர்கள் வாக்குறுதியின்மீது உண்ணா விரதம் நிறுத்தம்.
1948, ஜன. 20. பிரார்த்தனையில் குண்டு வீசப்பட்டது.
1948, ஜன. 30. பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும் பொழுது காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் ஆத்மா சாந்தி அடைக!

மகாத்மாவின் பொன்மொழிகள்

சமூகத்தோடு ஒட்டிவாழும் தன்மையை உடையவன் மனிதன் தனி மனிதன் சாதனைகள் பிறருக்கும் உபயோகப் படவேண்டுமானால் போதுமான அளவு சாமர்த்தியமுள்ள வேறு எந்த மனிதனுக்கும் சாத்தியமானவைகளாக அவை இருக்கவேண்டும்.

வாழ்க்கை லட்சியத்தை நோக்கி முன்னேறாமல் கீழ் நோக்கிச் செல்வது சுலபமான காரியம்.

🞸🞸🞸

மோசமான நிலைமை ஏற்படப்போகிறது என்றிருந்தால், அப்போது ஒரு நல்ல காரியத்தைச் செய்வதன் மூலம் அந்நிலைமை ஏற்படாதபடி தடுக்கமுடியும். இது நாம் அனுபவ பூர்வமாகக் காணும் உண்மை.

உலக மக்களின் செய்கைகள் நாசகாரச் செய்கைகளாக இருந்திருந்தால் உலகம் முன்னமே அழிந்திருக்கும் என்பதை நாம் உணர முடியாதா? அன்பு, அல்லது வேறுவிதம்சொல்ல வேண்டுமானால், அஹிம்சையால்தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.

🞸🞸🞸

உலகுக்கு நல்லவனாக இருக்க நாள் கடவுளுக்குத் துரோகம் செய்யமாட்டேன்.

🞸🞸🞸

நான் சாகவேண்டுமென்று நூற்றுக்கணக்கானவர்கள் விரும்பினாலும் சத்தியும் நிலைக்கட்டும்.

🞸🞸🞸

எனது நம்பிக்கையின் முதல்படி அஹிம்சை; கடைசிப் படியும் அஹிம்சையே.

🞸🞸🞸

நான் நம்பிக்கையை எப்பொழுதும் இழக்கவில்லை. மிகவும் நெருக்கடியான காலத்திலும் நம்பிக்கை என துள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து கெண்டிருக்கும். என்றும் எனது நம்பிக்கையைக் கொல்லமுடியாது.

ஆத்மீக மனப்பான்மைக்குப் பீதியின்மையே முதல் தேவையாகும். கோழைகளிடம் தார்மீக மனப்பான்மையைக் காண முடியாது. எங்கு பீதி நிலவுகிறதோ அங்கு மதம் இல்லை; கடவுளும் இல்லை.

உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அதுபோல ஆத்மாவுக்குப் பிரார்த்தளை மிகவும் அவசியம்.

ஹிருதய பரிசுத்தத்தில்தான் அழகைக் காணமுடியும்.

வாழ்க்கையின் ஒரு மாறுதலே சாவாகும். அதைத்தவிர வேறொன்றுமில்லை. ஆதலால் சாவை நாம் எப்பொழுதும் எதிர்பார்க்க வேண்டும். சாவுக்கு அஞ்சுபவன் கோழையே.

மாணவர்களே பின்பற்றுங்கள் !

மாணவர்கள் பின்பற்றுவதற்காக மகாத்மா காந்தி உபதேச ரூபமாகச் சில அருள்மொழிகளைக் கூறியிருக்கிறார், அவைகள் ஒவ்வொன்றும் சிறந்த மாணிக்கச் சொற்களாகும்.

மாணவர்கள் அரசியலிலும் கட்சி வாதங்களிலும் ஈடுபடக் கூடாது. அவர் உன் அரசியல் வேலை நிறுத்தங்களிலும் ஈடு படக்கூடாது. அவர்கள் நூல் நூற்பதைத் தங்களுடைய முக்கிய கடமைகளில் ஒன்றாகக் கருதவேண்டும் அவர்கள் கதருடையையே அணியவேண்டும்.

மாணவர்கள் வகுப்பு உணர்ச்சிக்கோ அல்லது தீண்டாமை உணர்ச்சிக்கோ மனதில் இடந்தாலாகாது. தேசீயக்கொடியின் தத்துவத்தை அவர்கள் உணரவேண்டும். மாணவர்கள் தோட்டி வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய உயிர் போவதாக இருந்தாலும், அஹிம்சையைக் கைவிடலாகாது. அவர்கள் ரகசியமாக எதுவும் செய்யக்கூடாது. அவர்கள் எப்பொழுதும் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்.

காந்திஜி அனுஷ்டித்த உண்ணாவிரதங்கள்

மகாத்மா காந்தி பல தடவைகளில் தமது ஆத்மா பரிசுத்தத்துக்காகவும் ஹிந்து--முஸ்லின் ஒற்றுமைக்காகவும் உண்ணாவிரதம் எடுத்திருக்கிறார். அந்த உண்ணாவிரதங்களில் முக்கியமானவைகள் பின்வருமாறு:

1924, செப். 18. கோஹத்தில் ஹிந்து--முஸ்லிம் கலவரத்தை நிறுத்த டில்லியில் 21 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.

1932, செப். 20. மாக்டொனால்டு வகுப்புத் தீர்ப்பை எதிர்த்து எர்ரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். செப்டம்பர் 16- தேதி சர்க்கார் அனுப்பிய அறிக்கை கண்டு திருப்தியடைந்து உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

1933, மே 8. தம்மை பரிசுத்தமாக்கிக்கொள்ள காந்திஜி எர்ரவாடா சிறையில் 2 நாள் உபவாசமிருந்தார். அதே தினம் சர்க்கார் அவரை விடுதலை செய்தனர். பூனாவிலுள்ள பர்ணகுடியில் உபவாசம் முடிந்தது.

1943, பிப். 10--ஆகாகான் அரண்மனையில் 3 வார உண்ணாவிரதமிருந்தார்.

1947, செப் 1--கல்கத்தாவாசிகள் நிதானமடையும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். செப்டம்பர் 4-ந் தேதியன்று கல்கத்தாவில் அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பதாகத் தலைவர்கள் கூறியதன்மீது உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

1948, ஜன. 13 புது டில்லியில் வகுப்பு ஒற்றுமையை ஏற்படுத்த, சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். 18-ம் தேதியன்று தலைவர்கள் அளித்த வாக்குறுதியின்மீது உபவாசத்தைக் கைவிட்டார்.