உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/சரித்திர உண்மை
53. சரித்திர உண்மை
முன்னாளில் நடந்தவற்றை அறியாவிடில் நாம் என்னாளும் குழந்தைகளே.
-ஸிஸரோ
எதைப்பற்றி எழுதினாலும் பெரிய எழுத்தாளர் எல்லாரும் சரித்திர ஆசிரியர்களே.
-லாண்டார்
சகலரும் ஏற்றுக்கொள்ளும் கட்டுக்கதை தானே சரித்திரம் என்பது?
-நெப்போலியன்
சரித்திரம் என்பது முன்மாதிரி மூலம் கற்பிக்கும் தத்துவ சாஸ்திரமே யன்றி வேறன்று,
-போலிங்புரோக்
சரித்திரம் என்பது மனித ஜாதியின் குற்றங்கள் குறைகள் அதிர்ஷ்டங்கள் அறிவீனங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் நூலேயன்றி வேறன்று.
-கிப்பன்
★ ★ ★