உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/துறவு

18. துறவு

இந்த உலகில் மூன்று விதத் துறவுகள்:- அறிவையும் இன்பத்தையும் சமயத்துக்காக வெறுத்தால் சமயத்துறவு; அதிகாரத்துக்காக வெறுத்தால் போர்த்துறவு பணத்துக்காக வெறுத்தால் பணத்துறவு. இக்காலத்தில் காணப்படும் துறவு மூன்றாவதே.

-ரஸ்கின்

எனக்குத் துறவறத்தில் நம்பிக்கை இல்லை. ரோஜாச்செடியில் முட்களைப் போல் மலரும் அவசியமானதே. கடவுள் உடலை உண்டாக்கிய பொழுது அனாவசியமானது எதையும் அமைத்து விடவில்லை.

-பார்க்கர்

★ ★ ★