உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வணக்கம்

22. வணக்கம்

உயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது.

-கார்லைல்

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம்.

-கோல்ரிட்ஜ்

மக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர்.

- கிரீஷியன்

அன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர்.

-அகஸ்டைன் ஞானி

★ ★ ★