உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வாழ்க்கைக்கு நம்பிக்கை

28. வாழ்க்கைக்கு நம்பிக்கை

ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.

- ஸ்காட்
மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே.
- மார்ட்டின் பூபெர்
நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது.
-ஷேக்ஸ்பியர்

காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி.

-அக்கம்பிஸ்

நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி.

- கெளலி

இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும்.

-ஆவ்பரி

நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும்.

-மூர்

எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை- அப்படிச் செய்திருந்தால்'- என்னும் மொழிகளே.

-விட்டியர்

ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை

-புல்வெர் லிட்டன்

நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு.

-பிளினி

நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன்.

-போப்

நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார்.

-காஸ்காயின்

நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும்.

-மூர்

நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு.

-கெளலி

உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும்.

-கே

சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும்.

-வெரிஜில்

★ ★ ★