எதிர்பாராத முத்தம்/பாடல் 19


19

வடநாடு செல்லும் வணிகர்.


பளிச்சென்று நிலா எறிக்கும்
இரவிளில் பயணம் போகும்
ஒளிச்செல்வ வணிகர்க் குள்ளே
ஒரு தெஞ்சம். மகாவீதி
கிளிச் சந்த மொழியாள் மீது
கிடந்தது. வணிக ரோடு
வெனிச்சென்ற அன்னோன் தேகம்
வெறுந் தேகம் ஆன தன்றே!

வட்ட நன் மதியி லெல்லாம்
அவள் முக வடிவங் காண்பான்!
கொட்டிடும் குளிரில் அப் பூங்
கோதை மெய் இன்பங் காண்பான்!
எட்டு மோர் வானம் பாடி
இன்னிசை தன்னி லெல்லாம்
சுட்டிக் கரும்பின் வாய்ச்சொற்
கவிதையே கண்டு செல்வான்

அணி முத்து மணி சுமக்கும்
மாடுகள் அலுத்துப் போகும்.

வணிகர்கள் அதிக தூர
வாய்ப்பினால் களைப்பார் நெஞ்சில்

தணியாத அவள் நினைவே
பொன் முடி தனக்கு நீங்காப்

பிணி யாயிற் றேனும், அந்தப்
பெரு வழிக் கதுதான் வண்டி!

இப்படி வடநாட்டின் கண்
டில்லியின் இப்புறத்தில்,

முப்பது காதமுள்ள
மகோதய முனி வளத்தில்,

அப்பெரு வணிகர் யாரும்
மாடுகள் அவிழ்த்து விட்டுச்

சிப்பங்கள் இறக்கிச், சோறு
சமைத்திடச் சித்த மானார்.

அடுப்புக்கும் விறகி னுக்கும்.
இலைக் கலம் அமைப்ப தற்கும்,

துடுப்புக்கும், அவரவர்கள்
துரிதப்பட் டிருந்தார். மாவின்

வடுப் போன்ற விழிப் பூங்கோதை
வடிவினை மனத்தில் தூக்கி

நடப்போன் பொன்முடிதான், அங்கோர்
நற்குளக் கரைக்குச் சென்றன்.

ஆரியப் பெரியோர்; தாடி
அழகுசெய் முகத்தோர், யாக

காரியம் தொடங்கும் நல்ல
கருத்தினர் ஐவர் வந்து,

சீரிய தமிழரே, ஓ!
செந்தமிழ் நாட்டா ரே, எம்

கோரிக்கை ஒன்று கேட்பீர்
என்றங்கே கூவினார்கள்.

தென்னாட்டு வணிக ரான
செல்வர்கள் அதனைக் கேட்டே,

என்னென் றுசாவ, அங்கே
ஒருங்கேவத் தீண்டி னார்கள்.

" அன்புள்ள தென்னாட் டாரே,
யாகத்துக் காகக் கொஞ்சம்

பொன்தரக் கோரு கின்றோம்;
புரிகஇத் தருமம் " என்றே

வந்தவர் கூறக், கேட்டே
மாத்தமிழ் வணிக ரெல்லாம்

சித்தித்தார் பொன்மு டிக்குச்
சேதியைத் தெரிவித் தார்கள்.

வந்தனன் அன்னோன். என்ன
வழக்கென்று கேட்டு நின்றன்.

பந்தியாய் ஆரி யர்கள்
பரிவுடன் உரைக்க லானார்;

மன்னவன் செங்கோல் வாழும்,
மனுமுறை வாழும்; யாண்டும்

மன்னிய தருமம் நான்கு
மறைப் பாதத்தால் நடக்கும்;

இன்னல்கள் தீரும்; வானம்
மழைபொழிந் திருக்கும்; எல்லா

நன்மையும் பெருகும் நாங்கள்
நடத்திடும் யாகத் தாலே

ஆதலின் உழைக்கேட் கின்றோம்
அணிமுத்து வணிகர் நீவிர்,

ஈதலிற் சிறந்தீர் அன்றோ
இல்லையென் றுரைக்க மாட்டீர்!

போ தமார் முளிவ ரேனும்
பொன்னின்றி, இந் நிலத்தில்

யாதொன்றும் முடிவதில்லை
என்றனர். இதனைக் கேட்டே

பொன்முடி உரைக்க லுற்றான்;
புலமையில் மிக்கீர் நாங்கள்

தென்னாட்டார்; தமிழர், சைவர்;
சீவனை வதைப்ப தான

இன்னல்சேர் யாகந் தன்னை
யாம்ஒப்ப மாட்டோம் என்றால்

பொன்கொடுப் பதுவும் உண்டோ!
போவீர்கள் என்று சொன்னான்.

காளை இவ் வாறு கூறக்
கனமுறு தமிழர் எல்லாம்

ஆனன்பொன் முடியின் பேச்சை
ஆதரித் தார்கள்; தங்கள்

தோளினைத் தூக்கி, அங்கை
ஒருதனி விரலால் சுட்டிக்,

கூளங்காள்! ஒருபொன் கூடக்
கொடுத்திடோம் வேள்விக் கென்றார்.

கையெலாம் துடிக்க அன்னார்
கண்சிவந் திடக் கோ பத்தீ

மெய்யெலாம் பரவ, நெஞ்சு
வெந்திடத் "தென்னாட்டார்கள்

ஐயையோ அநேக குள்ளார்
அங்கத்தால் சிங்கம் போன்றார்

ஐவர்நாம்" என நினைத்தே
அடக்கினார் எழுந்த கோபம்

வஞ்சத்தை, எதிர்கா லத்துச்
சூழ்ச்சியை, வெளிக் காட்டாமல்

நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு
வாயினால் நேயங்காட்டிக்,

"கொஞ்சமும் வருத்தமில்லை
கொடாததால்" என்ப தான

அஞ்சொற்கள் பேசி நல்ல
ஆசியும் கூறிப் போனார்.