எது வியாபாரம், எவர் வியாபாரி/017-017
வியாபாரிகள் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தி, சேமிப்பைப் பெருக்கி, அவற்றைப் பாதுகாப்பது மட்டும் போதாது. பாதுகாத்த செல்வத்தை அறச் செயல்களில் ஈடுபடுத்தியும் ஆகவேண்டும்.
“செல்வத்தின் பயனே ஈதல்” என்பது சான்றோர் மொழி. இன்பங்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த இன்பம் ஈத்து உவக்கும் இன்பம். அது தனக்கே உரிய செல்வத்தை இல்லாத ஏழை மக்களுக்கு வழங்கி, பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மலர்ச்சியடைவதைக் கண்டு மகிழ்ச்சியைடயும் இன்பம்.
இருப்புப் பெட்டியில் பணம் பல ஆயிரம் இருக்கலாம். அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டு வெளி வந்து அறச் செயலில் ஈடுபடும்போதுதான் அச்செல்வம் தகுதியும், உயர்வும், அழகும் பெறுகிறது. இவற்றைப் பெட்டியிலுள்ள மற்ற பணங்கள் பெற முடியாது.
“எது வாழ்வு?” என்ற கேள்விக்கு, ‘பிறரை வாழ வைத்து வாழ்வதுதான் வாழ்வு’ என்று வள்ளுவம் கூறுகின்றது. இஸ்லாம் சமயத்தில் “ஐம்பெரும் கடமைகள்” என்பதில் ‘ஜக்காத்து’ என்று ஒன்று உண்டு. அதைத் தர்மம் என்றோ, அறம் என்றோ மொழி பெயர்க்க முடியவில்லை, ஒரு பணக்காரன் தன்னுடைய சொத்தில் 40-இல் ஒரு பங்கை இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாய வரி-என்றுதான் மொழி பெயர்க்க வேண்டியிருக்கும்.
இதிலிருந்து ஒவ்வொரு பணக்காரனுக்கும் தன் சொத்தில் 40இல் ஒரு பங்கு அவனுக்குச் சொந்தம் இல்லை என்றும் அப்பணம் ஏழைகளின் பணம் என்றும் உறுதி செய்யப்படுகிறது.
வியாபாரிகள் வியாபாரத்தைத் தொடங்குகின்ற முதல் நாளிலேயே ‘சாமி வரவு’ என்றும் ‘மகமை’ வரவு என்றும் ரூ. 101/- அல்லது ரூ. 51/- அல்லது ரூ. 11/- வரவு வைத்துத் தான் தமிழகத்தில் தொழிலைத் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த மகமைக் கணக்கில் பிறரிடம் வாங்குகிற மகமை மட்டும் அல்லாமல் தன்னுடைய இலாபத்திலும் ஒரு பங்கை மகமைக் கணக்கில் வரவு வைத்து, பல அறச் செயல்களுக்கு வழங்கியாக வேண்டும். இம் முறை வர்த்தகனை மட்டும் அல்ல அவன் வர்த்தகத்தையும் உயர்த்தி வைக்கும்.
மூத்தமிழ்க் காவலர்
கி.ஆ.பெ. விசுவநாதம் நூல்கள்
தமிழ்ச் செல்வம்
தமிழின் சிறப்பு
அறிவுக் கதைகள்
எனது நண்பர்கள்
வள்ளுவரும் குறளும்
வள்ளுவர் உள்ளம்
திருக்குறள் கட்டுரைகள் - - -
திருக்குறளில் செயல்திறன் - - -
திருக்குறள் புதைபொருள் (முதற்பகுதி
திருக்குறள் புதைபொருள் (இரண்டாம் பகுதி)
மும்மணிகள்
நான்மணிகள்
ஐந்து செல்வங்கள்
ஆறு செல்வங்கள்
அறிவுக்கு உணவு
தமிழ் மருந்துகள்
மணமக்களுக்கு
இளங்கோவும் சிலம்பும்
நல்வாழ்வுக்கு வழி
எண்ணக்குவியல்
வள்ளலாரும் அருட்பாவும் ---
வாைெrாவியிலே (அச்சில்)
மாணவர்களுக்கு - - -
எது வியாபாரம்? எவர் வியாபாரி?
திருச்சி விசுவநாதம் வரலாறு (மா. சு. சம்பந்தம்)
பாரி நிலையம்
184, பிராட்வே, சென்னை–600 108.