ஒரு படவுக்காரி கதை

STORY OF A BOAT WOMAN.


ஒரு படவுக்காரி கதை.


நாம் இருக்கிற தேசத்திற்கு வடகிழக்கே சீனதேசம் இருக்கிறது. அதில் கந்தோன் என்கிற ஒரு பட்டணமுண்டு. சனங்கள் இலேசாய்ப் போக வர இதற்குச் சமீபத்தில் ஒரு பெரிய வாய்க்கால் வெட்டி யிருக்கிறது. இந்த வாய்க் கால் நிரம்பப் படவுகள் நிற்கும். வெகுசனங்கள் அந்தப் படவுகளில் குடியாயிருந்து, போகிறவர்களையும் வருகிறவர்களையும் ஏற்றிக கொண்டு சீவனம் பண்ணி வருகிறார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு குடும்பத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்லுகிறேன், கேளுங்கள்:

ஒரு படவு கந்தோன் பட்டணத்துக்கு ஓரமாய்ப் போக, படவின் பின் பக்கத்தில், ஒரு பெண் தன் குழந்தையை ஒரு துணியிலே கட்டி, மாராப்புப் போட்டுக் கொண்டு உட்காந்திருந்தாள். அவளுடைய மகன் முன் பக்கத்திலே இருந்து படவைத் தள்ளிக் கொண்டு போனான். பதினாறு வயசுள்ள அவன் தங்கச்சி குறாவின முகத்தோடு அவனுக்குப் பின்னாலே யிருந்து, மெள்ளமெள்ளத் துடுப்பு வலித்தாள். இவள் பேர் இருளாயி. அண்ணன் தங்கச்சியைப் பார்த்து: இருளாயி, ஏன் இவ்வளவு மெதுவாய்த் தண்டு வலிக்கிறாயென்று கேட்க, அவள்: அண்ணே, நான் உனக்குச் சமதையாய்த் தண்டு வலிக்க என்னால் ஆகாதேயென்று சொல்ல, அதற்கு அவன்: நீ இதற்குள்ளே களைத்துப்போய் விட்டாயா என்ன, அவள் ஆம் அப்படித்தான், களைத்துத் தான் போனேன்; பெண்களாயிருந்தென்ன? என்றைக்கிருந்தும், மிருகங்களுக்குச் சமானம், வீட்டைத் தூர்த்துப் பெருக்குகிறது ஞ் சோறு சமைக்கிறதும் படவு வலிக்கிறதுக் தவிர, வேறென்ன செய்கிறோம்? என்னத்தைப் படிக்கிறோம்? காரியமானதொன்று மில்லையே; ஆகையால் நான் ஒரு பெண்ணபிருக்கிறதைப் பார்க்கிலும் மாடாய்க் கழுதையாயிருக்தால் தாவிளை அண்ணே என்று சொல்ல, அப்போதவன்: பெண்ணுடைய ஆத்துமா மிருகத்துக்குள் பிரவேசிக்குமென்று நமது குருக்களுஞ் சொல்லுகிறார்கள். ஆகையால் நீ மாடாயாவது கழுதையா பாவது இருக்க விரும்புவது ஆச்சரியமல்ல. ஆகிலும் இது உனக்கு அதிக வருத்தமான கால மென்று நான் நினைக்கிறதில்லை. நம்மெல்லாருக்குங்கூடிய மட்டும் போதுமான அரிசியும் மீனுமிருக்கிறது. இதைத் தவிர, சீக்கிரத்திலே தகப்பனுந் தாயும் உனக்கு ஒரு மாப்பிளை தேடிக் கட்டிக் கொடுப்பார்கள். அப்போ இதிலும் பெரிதும் நேர்த்தியுமான படவிலே வாசம் பண்ணபோனாலும் போவாய், ஆனதால் இப்போ நீ அன்னம்பாற வேண்டியதென்ன வென்று சொல்லவே, அந்தப் பெண்: வெகு நேர்த்தி! நீ சொல்லுகிறது போல மாப்பிளை வந்து வாய்த்தாலும், இப்போ இருக்கிறதிலும் கேடான நிலமையாயிருக்கும். ஏனென்றால், புருஷன்மார் பெண்சாதிகளை அடிமை போலக் கொடூரமாய் நடத்துகிறார்களே. நம்முடைய தகப்பனுக்கு நம்முடைய தாய் பயப்படுகிறதைப் பார்க்கவில்லையா! என்றதற்கு, அண்ணன்: தங்கச்சி, இதுதாய் காதிலே விழும்; பேசாதே யென்று அதட்டினான். இப்படி யிருக்கிறபோது, ஒரு வெள்ளைக்காரத் துரையாகிறவர் பக்கத்துகரையிலிருந்து படவு கொண்டுவரும்படி கை காட்டுகிறதை, இந்தப் பிள்ளைகளுடைய தாய்கண்டு, மக்களே அந்தத் துரைக்கு வெகு சலுதியாய்ப் படவை வலித்துக்கொண்டு போங்கள், மதியச் சாப்பாட்டுக்குப் பத்துத் துட்டுக் கிடைக்குமே என்று சொல்ல, அவர்களும் படவை வி ரசாய்த் தள்ளிக் கொண்டு போய், அந்தத் துரையையும் அவர் மக ளையும் படவில் ஏற்றிக்கொண்டார்கள். அந்தத் துரை அஞ்ஞானி களுக்குள் வெகு முயற்சியோடு பிரயாசப்பட்டு வருகிற விருத்தாப்பியமுள்ள ஒரு பாதிரியாராக்கும். இவர் மகள் நல்லழகுள்ள ஒரு சிறு பெண், இவள் பேரோ தயவாயி. தயவாயி முகத்தில் விளங்கிய செந்தளிப்பை இருளாபி கண்டு, தண்டு வலித்துக்கொண்டு போகிறபோதே கடைக்கண் பார்வையாய்த் தயவாபியை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்தாள்; சொந்தத் தேசத்தை விட்டு அஞ்ஞானம் பெருத்த அந்த இடத்தில் வந்து வாசம் பண்ணுகிற தயவாயி இருதயத்தில் சந்தோஷத்தை யுண்டாக்கியது தேவ சமாதானமே யென்று இருளாயிக்கு தெரியவில்லை. மேலும் தனக்கும் தன் பக்கத்திலே யிருக்கிற தயவாயிக்கும், கடலுக்கும் மலைக்குமிருக்கிற வித்தியாசம்போல் எண்ணி, தயவாபியை யுற்றுப் பார்த்துக் கொண்டே யிருக்க, கண்ணிலிருந்து கண்ணீர் மலங்க, அதை மறைக்கும்படியாக ஒருச்சாய்த்துக் கொண்டாள். இது கண்டு, தயவாயி அவள் தோழ்மேல் கை வைத்து, மெள்ள மெதுவாய், அம்மாள், உன் மனசுக்குச் சந்தோஷமில்லையோ வென்ன; அவள்: அம்மா, நான் அதை என்னென்று சொல்லப்போகிறேன், சீன தேசத்துப் பெண்கள் எக்காலமாவது சந்தோஷமுள்ளவர்களாயிருக்க நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் இருக்கிறார்களாவென்று அக்கறை கொள்ளுகிறவர்கள் யார் என்று வெகு துயரத்தோடே சொல்ல, அதற்கு தயவாயி நான் கவலைப் படுகிறேன், அதற்கோசரந்தானே என் சொந்த தேசத்தை விட்டு இந்த அன்னியதேசம் வந்திருக்கிறேன். பெண்பிள்ளைகள்பேரில் அதிக கரிசனங்கொள்ளுகிற மகா பெரிய ஒரு சிநேகிதரைப் பற்றி நான் பெண்பிள்ளைகளுக்குச் சொல்லக்கூடும். அவரோ ஒரு மகத்தான இராசா, அவரை நாம் கண்ணாலே பார்க்கக்கூடாவிட்டாலும், அவரோ நம்மை எத்தேசகாலமும் பார்த்துக்கொண்டாக்கும் இருக்கிறார். அவரை நோக்கி யார் செபம் பண்ணினாலும், அவர்கள் பிரார்த்தனையைக் கேட்கிறாரே என்று சொன்ன போது, இருளாயி பிரமித்து, அம்மா, அவரார்? இப்போ அவர் எ ன்னைப் பார்க்கிறாரென்று நினைக்கிறீர்களா என்று கேட்க, தயவாயி: ஆம், எப்போதும் அவர் பார்க்கிறார். அவரை நீ நேசிக்கவும், அவரை நோக்கிச் செபம் பண்ணவும் அவர் விரும்புகிறார். உனக்கேதாவது சங்கடம் வரும்போது, அவரைப் பார்த்து கெஞ்சினால் அவர் தப்பாமல் உதவி செய்வார், அம்மா, என்று சொன்னாள். அப்போ இருளாயி: நானோ புத்த தேவனையும், மற்றச் சாமிகளையும் நோக்கி செபம்பண்ணி வருகிறேன். அவர்கள் என் பிரார்த்தனையைக் கேட்கிறார்களென்று நான் நினைக்கவில்லை, யம்மா! ஏன், தய வாயி, அந்தச் சாமி பூதங்கள் இங்த படவைப் போல் ஒரு மரந்தானே. அவைகள் எப்படிக் கேட்கும்? நான் பிரார்த்திக்கிற தேவனோ இந்த லோகத்தையும் வானலோகத்திலுள்ள நட்சத்திரங்களையும் உண்டாக்கினவராக்கும் என்று சொல்லவே; இருளாயிக்கு இது புத்தப் புதுசாயும் ஆச்சரியமாயும் இருந்ததினாலே, மறுபேச்சுப் பேசாமலும், என்ன ஏதேன்று அதிகமாய் விசாரியாமலும் இருந்து விட்டாள். அப்போது தயவாயி தான்பேசிய வார்த்தைகள் அவளுடைய மனசில் பட்டிருக்கமாட்டாதென்று, விசாரப்பட்டாள். படவு கோணம்பட்டணம் வந்து சேர்ந்தவுடனே, தயவாயி படவை விட்டுப்புறப்படுகிற சமயத்தில் இருளாயி அந்த அம்மாளண்டைக்கு ஆசையோடு போய், அம்மா, ஒருவரைப்பற்றி எனக்குச் சொன்னீர்களே, அவர் பேர் என்னவென்று கேட்க, தயவாயி: நாங்கள் அவரை உலக இரட்சகராகிய இயேசுவென்று சொல்லுகிறோம் என்கிறதாய்ச் சொல்லி, படவை விட்டுக் கரையில் இறங்க, இதைப் பார்த்தவர்கள் இருளாயியை இந்த அம்மாள் இனிமேலாகப் பார்க்கமாட்டார்கள் என்கிறதாய் நினைத்திருக்கலாம். கல்லும் முள்ளுமான இடமெனச் சொல்லத்தக்க இருளாயி இருதயத்தில் நல்ல விதையாகிய ஞானோபதேசம் விழுந்தது. ஆனபோதிலும், அந்த ஞானவிதை முளைக்கும் காலம் வரையில் பதனமாய் மறைப்படும் படியான தன்மையையுடைய ஏது இருந்ததென்று சொல்லவேண்டும்.

இது நடந்து கொஞ்சநாளுக்குப்பிறகு, இருளாயி முன் வெறுப்பாய்ப் படவிலே பேசின காரியமே வந்து லபித்தது. இவளுடைய தாய் தகப்பன் இவளை முகமறியாத ஒரு மாப்பிளைக்குக் கட்டிக் கொடுத்தார்கள். புருஷனுடைய படவில் இவளுக்குண்டாகிய நிற்பாக்கியம் அவள் சிறுவயதில் அனுபவித்ததிலும் அதிகமான தாயிருந்தது. கடின வேலையினாலும் புருஷனுடைய கடோரமான நடத்துதலினாலும் இருளாயி முன்னிலும் அதிகக் கேட்டவளானாள். ஒருநாள் தடவை இவளை புருஷன் வழக்கந் தப்பி மிதம் மிஞ்சி அடித்ததினால், கொடுசூரியாகிப், படவை விட்டுக்கரையிலே போய் ஏதொரு வழியாயாவது சீவனம்பண்ணுவேன், இல்லாவிட்டால் வீதியிலே பட்டினியாயாவது கிடந்து சாவேன் என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டாள். கொஞ்ச நேரம் அங்குமிங்குமாக அலைந்து திரிந்துவருகையில், மேகங்கரு த்துக்கொண்டு காற்றும் புசலும் அடித்து இடி முழங்குகிறது போலிருந்ததினால், அந்த இராத்திரித்தங்கும்படியாக ஒரு கோவிலுக்குள் புகுந்தாள். இந்தக்கோவில் ஐஞ் நூறு தேவாதிகள் கோவில். இதில் இருட்டடைந்த ஓர் மூலையில் போய்ப் பதுங்கினாள். அங்கே ஒரு ஆள்பருமமுள்ள விகாரமான அந்தங் கெட்ட விக்கிரகங்கள் அநேகமாயிருந்து, இருட்டினபிறகு இடிமுழக்கங் கோவிலைக் கிடுகிடென்று அதிரப்பண்ண, பளிச்சென்று மின்னுகிற மின் வெட்டு அந்த ஐஞ்ஞறு உருவாரங்களின் பேரிலும் பட, அவைகள் இவளுடைய கண்ணுக்குப் பயங்கரமாய்த் தோன்றிற்று. அப்போதிவள் நடுநடுங்கி இங்கிருக்கிறதைக் காட்டிலும் அந்தரவெளியில் காற்றிலும் மழையிலும் நனைந்தாலுந்தாவிளையப்பா! என்று மனசில் நினைத்துக்கொண்டு, கோவில் கத வண்டை போனாள். ஆனால் கதவையோ பூசாரி ஏற்கெனவே உள்ளே அளிருக்கிறதென்று அறியாமல், அடைத்துப் போய்விட்டான். இப்படி ஒன்றியாய் ஒரு உதவியுமில்லாமல் ஒரு மூலையிலே போய், மின் வெட்டுகையில் தோன்றுகிற அந்தப்பயங்கரமான உருவாரங்களைப் பார்க்காதபடி முகத்தைக் குப்புற வைத்துக்கொண்டு முடக்கினாள்.

ஏது! சாவு கிட்டிக்கொண்டது என்று நினைத்துத் திடுக்குத்திடுக் கென்று பயந்தாள். இந்த அந்தரமான நிலைமையில் இவள் யாரை நோக்கி செபஞ் செய்வாள்? தன்னிலுங் கடை கெட்ட சபலமற்ற ஐஞ்ஞறு சாமிகளில் ஒன்றை நோக்கியா? அல்லவே யல்ல. அச்சணமே, தயவாயி அம்மாள் லோக ரட்சகரை நாங்கள் இயேசுவென்று சொல்லுகிறோம். அவர் நம்மோடே எப்போதுமிருக்கிறார். எவர்கள் அவரை நோக்கி செபம் பண்ணுவார்களோ, அவர்கள் பிரார்த்தனையைக் கேட்கிறார் என்று தனக்கு முன் சொல்லி யிருந்த வார்ததைகள் இவள் ஞாபகத்துக்கு வர, இவள் சந்தேகப்படாமல், இயேசுவே என்னை ரட்சியும், எனக்கு உதவி செய்யும், இயேசுவே என்னை ரட்சியுமென்று கூப்பிட்டாள்.

இந்த அக்தியான பெண் பாவி கூப்பாட்டை கேட்க ஒரு உத்தமர் வெளிப்பட்டார். இவள் பயத்தை நீக்கி நல்ல உறக்கத்தை கட்டளை யிட்டார். மறுநாட் காலமே அதிக வெள்ளென பூசாரி வந்து கதவைத்திறந்துவிடவே, இருளாயி தனக்கு நலமான வார்த்தைகளைச் சொல்லி யிருந்த தயவாயி அம்மாளைத் தேடி கண்டுபிடிக்க வேணுமென்கிறதாக வெளிப்பட்டு, ஒரு வெள்ளைக்கார அம்மாள் படித்துக் கொடுக்கிற பள்ளிக்கூடம் எங்கே என்று வீதிகள் எங்குந் திரிந்து விசாரித்துக் கொண்டு வருகையில், ஒருவன் அப்பேர்ப்பட்ட பள்ளிக்கூடம் இதோ இருக்கிறதென்று இருளாயியைக் கூட்டிக்கொண்டு போக, அங்கே இருந்த அம்மாள் தான் தேடிப்போன அம்மாள் அல்லவென்று கண்டு பின்னும் வழிநெடுக விசாரித்துக் கொண்டு போசையில், ஏறாங்கட்சி யாய் ஒருவன் வந்து, அம்மா! நீ ஆரைத் தேடுகிறாய் நீ தேடிப்பார்க்கிற அம்மாள் அதோ! அங்கேதாவிருக்கிறார்கள், நாள் தப்பாமல் அங்கே படித்துக் கொடுக்கப்போவார்களென்று சொல்ல; சொன்னபடி போய்ப் பார்க்கையில், அங்கேயே தயவாயி அம்மாளைக் கண்டு கொண்டாள். இருக்க இடத்துக்கும் பசியாறச் சோற்றுக்கு மாக மாத்திரமல்ல, முக்கியமாய் தான் சொல்லி விட்டுவந்த யேசுவைப்பற்றி, திரும்பவுந்தன்னிடங் கேட்கவந்த இருளாயியைப் பார்க்கவே, தயவாயி அம்மாளுக்கு பூரித்துப்போயிற்று. இருளாயி இதற்குப்பின் சில நாளாக தருமப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கவே, இவளிடத்தில் தெய்வபத்திக்குரிய மாறுதல் அதிகமாய் விளங்கிற்று. இரட்சகரைப் பற்றி விசாரிக்கிறதில் அதிக ஆசையைக் காட்டினாள். இருளாயி பல தடவையிலும் இப்படி நான் நடந்தால், இரட்சகர் விசனமாயிருப் பாரோ? நான் இப்படி செய்கிறதை அவர் விரும்புவாரென்று நினைக்கிறீர்களோ? என்றிப்படிப்பலமாதிரியான கேள்விகளைக் கேட்பாள். இவளுக்குப் படித்துக் கொடுத்தவர்கள் இவளை இயேசுவுக்கடியாளென்று நினைத்தார்கள். காரியம் இப்படி நடந்துவருகையில், இவளைத் தேடித் திரிந்த இவள் புருஷன் ஒரு நாள் இவளைக் கண்டுபிடித்து, எப்போதும்போல வீட்டடிமையாய்த் தன்படவில் வந்திருக்கவேண்டுமென்று இவளுக்குச் சொல்ல, புருஷன் வீட்டில் போய் வாழ்வதைப் பார்க்கிலும் பசி பட்டினியாய்ச் செத்துப்போவது வாசியென்று வைராக்கியம் சாதித்துக்கொண்டு புறப்பட்ட இவளோ, அப்பொழுது தன் புருஷனுக்குக் கீழ்ப்படுவது தனக்குக்கடமை யென்றுணர்ந்து புருஷன் கூட சந்தோஷமாய் போக மனசானாள். இதைப் பார்க்கும்போது, தயவாயி அம்மாள் போதித்த ஞானோபதேசம் இவள் மனசைத் திருப்புகிறதற்கு எவ்வளவோ வல்லமையுடையதாயிருந்ததென்று விளங்குகிறது.

இருளாயி தன் பழய நிலைமைக் கே திரும்பிப் போவது அவளுக்கு வருத்தமாகக் காணப்பட்டும், அவள் மனசு ஞானம் உதயமாகிப் பிரகாசமடைந்தபடியால், தயிரியங்கொண்டு போனாள். கடூரமான வார்த்தைகளும் மிலாறடிகளும் அவளுக்கு வந்து லபிக்கிறதா யிருந்தும், அன்பினாலே பகையையும் நன்மைபினாலே தீமையையுஞ் செயித்தாள். முன்னே கொடு சூரியும், கோபக் காரியுமாயிருந்த தன் பெண்சாதியை புருஷன் இப்போது பொறுமைசாலியுஞ் சாந்தமுமாயிருக்கக் கண்டு, அவளை அன்பாய் அரவணைத்துக்கொண்டு, அவள் அங்கிகரித்திருக்கிற கிறிஸ்து மார்க்கம் அதிக நன்மையுள்ளதென்று ஒப்புக்கொண்டதுமல்லாமல், இந்தக்காலமுதல் அவளை ஏசவுமில்லை, பேசவுமில்லை; அவள்மேல் ஒரு துரும்பெடுத்துப் போடத் துணியவுமில்லை. இதற்குக் கொஞ்சநாளுக்குப் பிறகு, பாதிரிமார் வைக்கிற தேவாராதனைக்குப் போய் வரும்படி இடங்கொடுத்ததுந் தவிர, தானுங் கூடப் போக ஆரம்பித்து, தன் பிள்ளைகளுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவுஞ் சம்மதித்தான்.

இதை வாசிக்கிற பிள்ளைகளே, இப்போது சொல்லிவந்த பெண்ணாகிய இருளாயி தான் சங்கடப்பட்ட வேளையில் தேவனை நோக்கிச் செபம்பண்ணிச் சகாயம் பெற்றுக்கொண்டாள். இதுவுமல்லாமல் முதலில் கொடுசூரியாயிருந்த இவள் குணசாலியானதுமன்றி, தான் வாழ்க்கைப்பட்ட புருஷனையும் சத்திய மார்க்கத்துக்குத் திருப்பிக் கொண்டாள். ஆபத்துக்காலத்தில் நீங்களுங் கர்த்தரைப் பார்த்து பிரார்த்தனை பண்ணுவீர்களானால், கர்த்தர் உங்கள் செபத்தைக் கேட்டு, உங்களுக்கு ஒத்தாசை செய்வார். உங்களைச் சுற்றி அக்கம்பக்க மிருக்கிறவர்களையும் உங்களுடைய நன்மாதிரியினாலே மனந்திருப்பும்படி தேவ சகாயத்தைத் தேடி முயற்சி செய்வீர்களாக.

முற்றிற்று

ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.

 

இந்தப் படைப்பு now in the public domain because it originates from India and its term of copyright has expired. According to The Indian Copyright Act, 1957, all documents enter the public domain after sixty years counted from the beginning of the following calendar year (ie. as of 2024, prior to 1 January 1964) after the death of the author.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒரு_படவுக்காரி_கதை&oldid=1288712" இலிருந்து மீள்விக்கப்பட்டது