- கடன் கோடல் என்பது கடன் கொள்ளுதல் ஆகும். இவை விவகாரம் என்பதனுள் அடங்கும். இவ்விவகாரம் பதினெட்டுவகைப்படும். அவை: 1. கடன் கோடல் 2. உபநிதி 3. கூடி மேம்படல் 4.நல்கியதை நல்காமை 5. ஒப்பிப் பணிசெய்யாமை 6. கூலி கொடாமை 7. உடையனல்லான் விற்றல் 8. விற்றுக் கொடாமை 9. கொண்டுள்ளம் ஒப்பாமை 10. கட்டுப்பாடு கடத்தல் 11. நில வழக்கு 12. மாதர் ஆடவர் தருமம் 13. தாய பாகம் 14. வன்செய்கை 15. சொற்கொடுமை 16. தண்டக் கொடுமை 17. சூது 18. ஒழிபு ஆகியவையாம். இவை அக்காலத்தே வழக்குக்கான ஏதுவாகும்.
பார்க்க:
திருக்குறள் பரிமேலழகர் உரை/உரைப்பாயிரம்