W

wafer : மென்தகட்டுச் சிப்பு : சீவல் : மூன்று அல்லது நான்கு அங்குலம் கணமுடைய வட்ட வடிவ தகடு. இதில் பல ஒருங்கிணைந்த மின் சுற்று வழிகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் தனித்தனிச் சிப்புகளாகப் பகுக்கப்படுகின்றன.

wafer processing : மென்தகடு செயலாக்கம் : மெல்லிய தகடுகளாலான அரைக் கடத்திப்பொருளைச் செயலாக்கம் செய்து மின்சுற்றுகளை உருவாக்குவது. செயலாக்கத்திற்குப்பின் தகட்டினை வார்ப்புருபடிவம் (die) அல்லது சிப்புகள் என்று தனியாக்கப்படும்.

wafer-scale integration : மென்தகட்டு ஒருங்கிணைப்பு : ஒற்றை மென்தகட்டில் பல்வேறு நுண்மின்சுற்றுகளை ஒருங்கிணைத்து ஒரே மின் சுற்றாக கட்டுருவாக்குதல்.

wafer sort : தகடு பிரிப்பு : ஒரு மென் தகட்டில் எந்த டைஸ் ஏற்றுக் கொள்ளக்கூடியது என்பதைச் சோதித்தறிதல்.

WAIS : வெய்ஸ் : விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அடிப்படையிலான மென்பொருள். இணையத்தில் குவிந்து கிடக்கும் ஏராளமான ஆவணங்கள் கருப்பொருள் வாரியாக வகைப்படுத்தப்பட்டு அவற்றின், இருப்பிட முகவரிகள் 400-க்கு மேற்பட்ட வெய்ஸ் வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட திறவுச்சொல் அடிப்படையில் அவற்றுள் நமக்குத் தேவையான தகவலைத் தேடிப் பெற முடியும். திங்கிங் மெஷின் கார்ப்பரேஷன், ஆப்பிள் கம்ப்யூட்டர், டோவ்ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து வெய்ஸை உருவாக்கினர். இயற்கை மொழி அடிப்படையிலான வினவல்களைப் பரிசீலிக்க இவர்கள் இஸட் 39. 50 தர வரையறைகளைப் பயன்படுத்தினர். தனித்த வலைத்தளம் ஒன்றிலும் வெய்ஸ் நிரலை ஒரு தேடுபொறியாகப் பயன்படுத்த முடியும். சில வேளைகளில் வெய்ஸ் மூலம் பெறப்படும் ஆவணப் பட்டியலில் தேவையற்ற தரவுகளும் இடம் பெறுவதுண்டு. வெய்ஸ் வழங்கனில் தரவுவைத் தேட பயனாளர்கள் வெய்ஸ் கிளையன் மென்பொருளைப் பயன்படுத்தவேண்டும்.

wais index : வெய்ஸ் சுட்டுக்குறிப்பு : 1. வெய்ஸ் (WAIS-Wide Area Information Server) வினவல் மென்பொருள் மூலமாக, உரைக் கோப்புகளை அணுகுவதற்கு சுட்டுக்குறிப்பு பட்டியலை உருவாக்கும் யூனிக்ஸ் பயன்கூறு. 2. வெய்ஸ் வழங்கனை அணுகுவதற்கான ஒரு யூஆர்எல் முகவரி wais : //hostport/database என்பது போல் அமையும்.

wait : காத்திரு : ஒரு டிபேஸ் கட்டளை. பயனாளர் விசையை அழுத்தினால் ஒழிய நிரல் தொடர் இயக்கப்படுவது தள்ளிப்போகச் செய்வது. அதன் விளைவான விசைப்பதிவை குறிப்பிட்ட மாறிலியில் எழுத்துச் சரமாக சேமிக்கப்படுகிறது.

wait state : காத்திருப்பு நிலை : காத்திருக்கும் நிலை : மையச் செயலகம் நிரல்களை நிறைவேற்றாமல், வாளாதிருக்கும் நிலை.

wait time : காத்திருப்பு நேரம் : மற்ற நடவடிக்கைகள் முடிவுறுவதற்காகக் காத்திருக்கும் ஒரு செயல்முறை அல்லது கணினி.

wallet PC : பணப்பைக் கணினி : சட்டைப்பையில் வைத்துக் கொள்ளும் அளவுள்ள சிறிய அட்டை வடிவிலான கணினி. பணப்பை போன்றே பயன்பாடு உடையது. இதை வைத்துள்ள நபரின் மெய்நிகர் (virtual) அடையாளத்தைக் கொண்டிருக்கும். மேலும், பணம், பற்று அட்டைகள் மற்றும் பிற இன்றியமையாத் தகவல்களையும் கொண்டிருக்கும். நடமாடும் தகவல் மூலமாகவும் மற்றும் தகவல் தொடர்புக் கருவியாகவும் விளங்கும். இதுபோன்ற சாதனம், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. தயாரிப்பில் உள்ளது.

wall paper : சுவர் தாள் : சாளரச் (window) சொல். சாளரத்துக்குப் பின்னுள்ள அமைப்பைக் குறிப்பிடுவது.

walk through : உலா : ஊடு நடை, உலா வருதல்.

WAM வாமி : உலக மருத்துவத் தகவலியல் சங்கம் என்று பொருள்படும் World Association for Medical Informatics என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

wand : வருடுகோல்; உள்ளிடு கோல், எழுத்தாணி : கணினியில் 

தரவு உள்ளிட்டுக்காகப் பயன் படுத்தப்படுகின்ற பேனா வடிவிலான சாதனம். வரை கலைக்கான வரைபட்டிகை எழுத்தாணி அல்லது பட்டைக் குறி படிப்பிகள்போன்ற வருடு கருவிகளை இவ்வகையில் சேர்க்கலாம்.


wanderer : வலைசுற்றி : வைய விரிவலையில் அடிக்கடி உலாவிவரும் பயனாளர். இவர்களில் பெரும்பாலோர் தாம் பார்வையிட்ட தரவுகளை வகைப்படுத்தி வைப்பதுண்டு.


Wang Labor Tories : வேங் லேபர் டோரிஸ் : அமெரிக்காவில் கணினிகளை உற்பத்தி செய்யும் புகழ்பெற்ற ஒரு நிறுவனம்.


wangnet : வேங்நெட் : வேங் நிறுவனத்தின் அகலத் தகவல் தொடர்பு வழித்தடம் கொண்ட குறும்பரப்புப் பிணையம் (LAN). இது தகவல்கள், குரல் மற்றும் ஒளியையும் கையாள்கிறது.


wang writer : வேங் ரைட்டர் : வேங் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்ட சொல் செயலாக்கத் தொகுப்புகளில் ஒன்று.


warm boot : இதமான உயிரூட்டம்; உடன் தொடங்கல் : கணினியில் மின்விசை ஒடிக் கொண்டிருக்கும்போதும், மின்விசை நிறுத்தப்பட்டு விட்டதாகக் கணினி கருதும்படி செய்து, மீண்டும் உயிரூட்டும் செயல்முறை.


warm link : இதமான இணைப்பு : இரண்டு தரவு கோப்புகளுக்கு இடையிலான மென்பொருள் இணைப்பு. ஒரு கோப்பு புதுப் பிக்கப்படும்போது மற்றொன்றும் (தானாகவே) புதுப்பிக்கப்படும்.


warm start : இதமான தொடக்கம் ; உடன் தொடங்குதல் : இதமான உயிரூட்டம் என்பதும் இதுவும் ஒன்றே


warm up time : ஆயத்த நேரம் : ஒரு சாதனத்திற்கு விசையேற்றுவதற்கும், அதன் வெளிப்பாட்டு எழுத்தாக்கப் பயன்பாடு தொடங்குவதற்குமிடையிலான இடைவேளை.


warnier- orrchart : வார்னியர் - ஆர் விளக்கப்படம் : பொதுவான செயலாக்கங்களை ஒரு புறத்திலும் (வழக்கமாக இடது புறத்தில்) மேலும் மேம்பட்ட தரவுகளை வலதுபுறத்திலும் காட்டும் விளக்கப்படம். வார்னியர்-ஆர் விளக்கப் படத்தினை 1970-களில் ஜீன் டொமினிக் வார்னியர் என்பவரும், கென்ஆர் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்தார்கள்.

ஒரு குறிப்பிட்ட செயல்முறை அல்லது வகை வேறொன்றைச் சார்ந்திருப்பதைக் காட்டும் நிரல் தொடர் வடிவமைப்பில் இது பயன்படுத்தப்படுகிறது.


warnier-orr diagram : வார்னியர் - ஆர் வரைபடம் : அமைப்பு ஆய்வு மற்றும் வடிவமைப்புக்கு மென்பொருள் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் வரைகலை வரைபட தொழில் நுட்பம்.


warning box : எச்சரிக்கை பெட்டி : விண்டோஸ் நிரல் தொடரில் அதிகமாகப் பயன் படுத்தப்படும் பெட்டி வடிவிலான எச்சரிக்கை செய்தி.


warning message : எச்சரிக்கை செய்தி : கடுமையல்லாத ஒரு பிழை குறித்தப் பயன்பாட்டாளருக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு ஒரு தொகுப்பி மூலம் உருவாக்கப்படும் பிழை சுட்டும் செய்தி.


waranty : உத்திரவாதம்.


watch point : கவனப் பகுதி : பிழை நீக்குவதற்காக ஒரு நிரல் தொடரில் நுழைக்கப்படும் ஒரு நிலை. கவனப் பகுதிகள் ஒரு குறிப்பிட்ட நினைவகப் பகுதியின் உள்ளடக்கங்களைக் காட்டும்.


water mark : நீர்வரிக் குறி; நீர்க் குறி.


WATFOR : வாட்ஃபார் : கனடாவில் ஒன்டாரியோவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட 'FORTRAN'-இன் பதிப்பு. 'வாட்ஃபிவ்' (watfiv) என்பது வாட்ஃபார் என்பதன் திருத்தப் பதிப்பு.


Watson, Thomas J. Jr. : வாட்சன், தாமஸ் ஜே (இளைய வர்) : கணினித் தொழிலில் IBM கழகத்தை முன்னணி நிலைக்குக் கொண்டு வந்தவர்.


Watson, Thomas J. Sr (1874-1956) : வாட்சன், தாமஸ் ஜே மூத்தவர்; (1874-1956) : IBM கழகத்தின் வழிகாட்டி. தலை சிறந்த விற்பனையாளர். 1952 வரை IBM தலைவராக இருந்தவர். சிந்தனை செய்வதே இவரது குறிக்கோளாக இருந்தது. எனினும் இலக்க முறைக் கணினிகளுக்கு அதிகம் கிராக்கி இருக்கும் என்று இவர் கருதவில்லை.


watt : வாட் : ஒரு வினாடியில் ஒரு ஜூல் திறனை (energy) செலவழிப்பதற்கு இணையான மின்சக்தியின் அளவு. ஒரு மின்சாரச் சுற்றின் சக்தி, அந்த மின்சுற்றிலுள்ள மின்னூட்டம், அதில் பாய்கின்ற மின்னோட்டம்


ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

E - மின்னூட்டம்
I - மின்னோட்டம்
R - மின்தடை
P - மின்சக்தி (வாட்டில்)

எனில்,

P = IxE = I2xR = E2./R


. wav : வேவ் : அலைவடிவ கேட்பொலி வடிவாக்கத்தில் பதிவு செய்துள்ள ஒலிக் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர் (file extension).


wave : அலை : கதிரியக்க சக்தியின் வடிவம். அனைத்து வானொலி சமிக்கைகளும், ஒளிக்கதிர்கள், எக்ஸ்- கதிர்கள் மற்றும் அண்டக் கதிர்களும் தொடர் அலைபோன்ற ஒரு சக்தியைக் கதிரியக்கம் செய்கின்றன.


waveform : அலைவடிவம் : ஒப்புமை (அனலாக்) வடிவில் ஒரு குறிப்பிட்ட ஒலி அலை அல்லது மின்னணு சமிக்கையின் அமைப்பு.


wavelet : சிற்றலை; அலைத் துணுக்கு : வரம்புக்குட்பட்ட நேரத்தில் மாறுபடுகின்ற ஒரு கணிதச் சார்பு. ஒலி போன்ற சமிக்கைகளை பகுத்தாய்வதற்கு அலைத்துணுக்குகள் உதவுகின்றன. மிகக்குறைந்த நேரத்தில் அலைவரிசையிலும் அலைவீச்சிலும் திடீரென மாற்றத்துக்கு உள்ளாகின்றன. ஆனால் சைன், கொசைன் சார்புகளில் வரம்பிலா நேரம்வரை அலைவரிசையும் (Frequency), அலைவீச்சும் (Amplitude) மாறாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.


WΒΕΜ : டபிள்யூபிஇஎம் : வலை அடிப்படையிலான நிறுவன மேலாண்மை என்று பொருள்படும் Web-Based Enterprise Management என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு வலை உலாவியை (web browser), பிணையத்தைக் கண்காணிக்கும் ஒரு சாதனம் அல்லது ஒரு பயன்பாட்டு மென்பொருளுடன் நேரடியாகப் பிணைத்து வைக்கும் ஒரு நெறி முறை (Protocol).


weak typing : பலவீன இனப் பாகுபாடு; கண்டிப்பில்லா இன உணர்வு : தரவு இனங்களைக் (Data type) கையாளுவதில் நிரலாக்க மொழிகளில் கடைப் பிடிக்கப்படும் நடைமுறை. நிரலின் இயக்க நேரத்தில் ஒரு மாறிலியின் (Variable) தரவு இனத்தை மாற்ற அனுமதித்தல். (எ-டு) : சி#, ஜாவா போன்ற மொழிகளோடு ஒப்பிடுகை

யில், சி-மொழி தரவு இனங்களைக் கையாள்வதில் ஒரு கண்டிப்பில்லாத நடைமுறையைப் பின்பற்றுகிறது எனலாம்.


wear : அணி


web : (தரவு) வலை; இணையம் : மீவுரையால் (Hyper Text) ஆன, ஒன்றோடொன்று தொடுப்புடைய ஏராளமான ஆவணங்களின் தொகுப்பு. பயனாளர், முகப்புப் பக்கம் (Home Page) வழியாக இணையத்தில் நுழைகிறார்.


web based Tamil education : இணையம் வழி தமிழ்க் கல்வி.


web browser : வலை உலாவி; இணைய உலாவி : வைய விரி வலையிலோ, ஒரு பிணையத்திலோ அல்லது தன் சொந்தக் கணினியிலோ பயனாளர் ஒருவர் ஹெச்டீஎம்எல் ஆவணங்களைப் பார்வையிடுவதுடன், அதிலுள்ள மீத்தொடுப்புகள் மூலம் பிற ஆவணங்களையும் பார்வையிட்டு தேவையான கோப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ள உதவும் ஒரு கிளையன் பயன்பாடு. லின்க்ஸ் (Lynx) போன்ற இணைய உலாவிகள், செயல்தளக் கணக்கு (Shell Account) வைத்திருப்பவர்கள் பயன்படுத்துவது. ஹெச்டீஎம்எல் ஆவணத்தின் உரைப் பகுதியை மட்டுமே பார்வையிட முடியும். பெரும்பாலான உலாவிகள் உரைப்பகுதி மட்டு மின்றி வரைகலைப் படங்கள், கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலையும் தருகின்றன. ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் உட்பொதிவாக இருக்கும் ஜாவா அப்லெட்டுகள் அல்லது ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசைகள் போன்ற சிறு நிரல்களையும் இயக்கும் வல்லமை பெற்றுள்ளன. சில உலாவிகளுக்கு இதுபோன்ற பணிகளைச் செய்ய உதவி மென்பொருள்கள் (plug-ins) வேண்டியிருக்கலாம். தற்காலத்தில் பயன் பாட்டில் இருக்கும் இணைய உலாவிகள், பயனாளர்கள், மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் உதவுகின்றன. செய்திக் குழுக்களைப் பார்வையிடவும் கட்டுரைகள் அஞ்சல் செய்யவும் பயன்படுகின்றன. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் இன்டர் நெட் எக்ஸ்புளோரர், நெட் ஸ்கேப் நிறுவனத்தின் நேவிக் கேட்டர் ஆகிய இரண்டு உலாவிகளும் உலகத்தில் பெரும் பாலான பயனாளர்களால் பயன் படுத்தப்ப்டுகின்றன. இணைய உலாவி சுருக்கமாக உலாவி என்றும் அழைக்கப்படுகின்றது.


web browsing centre : வலை உலாவி மையம். 

webcasting : வலைபரப்பு.


web counter : வலை எண்ணி.


Web Crawler : வெப்கிராலர் : அமெரிக்கா ஆன்லைன் நிறுவனத்தின் வைய விரிவலைத் தேடுபொறியின் பெயர்.


web designing : வலைப்பக்க வடிவமைப்பு


web development : வலைசார் உருவாக்கம் : வைய விரி வலைப் பக்கங்களை வடி வமைத்தலும் நிரலாக்கலும்.


web directory : வலைக் கோப்பகம் : வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும்.


web events : வலை நிகழ்வுகள்.


web form : வலை படிவம்


web graphics : வலை வரைகலை


Web index : வலை சுட்டுகை : பயனாளர் ஒருவர், இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத் தளம். வலைச் சுட்டுகை, தேடு கின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனித்தனி மீத்தொடுப்புகளை மட்டுமே கொண்டிருக்கலாம்.


webmaster : தளநிர்வாகி; தளத் தலைவர் : ஒரு வலைத்தளத்தை உருவாக்கிப் பராமரிக்கும் பொறுப்பினை வகிக்கும் நபர். மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்புதல், தளம் சிக்கலின்றிச் செயல்படுமாறு கவனித்துக் கொள்ளுதல், வலைப்பக்கங் களை உருவாக்குதல், புதுப்பித்தல், தளத்தின் ஒட்டு மொத்தக் கட்டமைப்பையும் வடிவமைப்பையும் பராமரித்தல் ஆகிய பொறுப்புகளை தள நிர்வாகி வகிக்கிறார்.


web page : வலைப்பக்கம்; தளப் பக்கம்; இணையப் பக்கம் : வைய விரிவலையில் உள்ள ஆவணம். ஒரு வலைப்பக்கம் என்பது ஒரு ஹெச்டிஎம்எல் கோப்பு. தொடர்புடைய வரைகலை, உரைநிரல் (scripts) ஆகியவற்றை குறிப்பிட்ட கணினியில் குறிப்பிட்ட கோப்பகத்தின்கீழ் கொண்டிருக்கும். இவையனைத்தும் சேர்ந்தே ஒரு யூஆர்எல் எனப் படுகிறது. பொதுவாக, வலைப் பக்கங்கள் பிற வலைப் பக்கங்களுக்கான தொடுப்புகளைக் கொண்டிருக்கும்.


web page design programme : வலைப்பக்க வடிவமைப்பு நிரல்கள்.

web page organizer : வலைப் பக்க ஒருங்கிணைப்பு.


web press : வெப் அச்சகம் : வலை அச்சகம் 'வெப்' எனப்படும் உருளையிலிருந்து காகிதத்தில் அச்சடிக்கும் அச்சகம்.


web ring : வலை வளையம்.


web server : வலைப் பணியகம்.


web server form : வழங்கன் படிவம்.


web site : வலைத்தளம்; வலையகம்; இணையத் தளம்; இணையகம் : வைய விரிவலையில், ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் தொடர்பான ஹெச்டீஎம்எல் ஆவணங்கள், தொடர்புடைய பிற கோப்புகள், உட் பொதி நிரல்கள், ஒரு ஹெச்டீடீபீ வழங்கன் மூலம் தகவல் வழங்குகின்ற தகவல் தளங்கள் இவையனைத்தும் சேர்ந்த தொகுப்பு. ஹெச்டிஎம்எல் ஆவணங்கள் மீத்தொடுப்பு (Hyperlinks) களினால் பிணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வலைத்தளங்கள் உள்ளடக்கத்தைப் பொருளடக்கமாகத் தரும் முகப்புப் பக்கத்தைக் (Home Page) கொண்டிருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் தங்களின் ஒரே வலைத்தளத்திற்கென ஒன்றுக்கு மேற்பட்ட ஹெச்டீடீபீ வழங்கன் கணினிகளை வைத்திருக்கின்றன. எனினும், ஒரே ஹெச்டீடீபீ வழங்கனில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறு வலைத்தளங்கள் இருக்கமுடியும். தனிநபர்கள் தமக்கென வைத்திருக்கும் பல நூறு வலைத்தளங்கள் ஒரே வழங்கனில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு வலைத் தளத்தைப் பார்வையிட பயனாளர் கணினியில் இணைய இணைப்பு வசதியும், ஒரு வலை உலாவி மென் பொருள் இருக்க வேண்டும்.


web site addresses : வலைத்தள முகவரிகள்.


web style : வலைப் பாணி.


web terminal : வலை முனையம் : மையச் செயலகம் (CPU), ரேம் (RAM), அதிவேக இணக்கி (Modem), மற்றும் இணையத்தில் இணைத்துக் கொள்வதற்குத் தேவையான கருவிகள், திறன் மிகுந்த ஒளிக்காட்சி வரை கலை-இவற்றைக் கொண்ட கணினி; நிலை வட்டு கிடையாது. இது, பெரும்பாலும் வைய விரிவலையின் கிளையனாக மட்டுமே செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதனைப் பொதுப்பயன் கணினியாகப் பயன்படுத்த முடியாது.


web TV : வலை டீவி; வலைத் தொலைக்காட்சி : ஒரு சிறிய 

கருவிப் பெட்டியின் உதவியுடன், வைய விரிவலையை அணுகி, வலைப்பக்கங்களைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்கான தொழில் நுட்பம்.


webzine : வலைஇதழ்; இணைய இதழ்; மின்னிதழ் : தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ்.


weed : களை : ஒரு கோப்பிலிருந்து விரும்பத்தகாத அல்லது தேவையற்ற இனங்களை அகற்றுதல்.


weighted code : எடைக்குறியீடு : துண்மியின் இடைநிலை ஒர் எடையிட்ட மதிப்பளவைக் கொண்டிருக்கிற குறியீடு. 8-4-2-1 என்ற எடையிட்ட குறியீட்டுப் பொறியமைவில் 529 என்ற பதின்ம எண், 0101 0010 1001 என்று எழுதப்படும்.


weitek coprocessor : வெய்டெக் கூட்டுச் செயலகம் : வெய்டெக் கார்ப்பரேஷன் உருவாக்கிய நுண் மற்றும் சிறு கணினிகளுக்கான அதிக திறன்மிக்க கணினி கூட்டுச் செயலகம். 1981-முதல் இந்நிறுவனம் கேட் மற்றும் வரைகலை பணி நிலையங்களுக்கான கூட்டுச் செயலகங்களை உருவாக்கி வருகிறது. இதனைப் பயன்படுத்த மென் பொருளும் இதன் மீதே எழுதப் பட்டிருக்க வேண்டும்.


WELL : வெல் : முழுப்புவி மின்னணுத் தொடுப்பு என்று பொருள்படும் Whole Earth Electronic Link என்ற தொடரின், தலைப்பெழுத்துக் குறும்பெயர். கலிஃபோர்னியா மாநிலத்தில் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்டு செயல்படும் ஒரு கலந்துரையாடல் அமைப்பு. பல்வேறு நகரங்களிலிருந்து இணையம் வழியாக, தொலைபேசி இணைப்பு மூலம் அணுக முடியும். இது ஒரு மெய்நிகர் மனிதச் சமூகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கணினி வல்லுநர்கள் தவிர சாதாரண மக்களும் இதில் விரும்பிப் பங்கேற்கின்றனர். ஏராளமான பத்திரிகையாளர்களும் பிற செல்வாக்குப் பெற்ற அறிஞர்களும் பங்கு பெறுவதால், இதனுடைய குறைந்த எண்ணிக் கையிலான வாடிக்கையாளர்களையும் தாண்டி பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


well behaved : நன்னடத்தையுள்ள : ஒரு தர அமைப்பில்  இருந்து விலகிச் செல்லாத நிரல் தொடரைக் குறிப்பிடுகிறது.

welcome page : வரவேற்புப் பக்கம்.

welknown port : நன்கறிந்த துறை.

west coast computer fair : மேற்குக்கரைக் கணினிக் காட்சி : அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான நுண் கணினி வணிகக் கண்காட்சி.

wetware : வெட்வேர் : உயிரியல் அமைப்பு அல்லது அதைப் போலச் செய்ய முயலும் ஒன்று.

wetzel : வெட்ஜெல் : ஒரு எதிர் மின் கதிர்க்குழாயிலுள்ள உருக் காட்சியுடன் சேர்க்கப்படும் படக்கூறு. இது காட்சியின் தெளிவினை மேம்படுத்த உதவுகிறது.

what if : விரிதாள் வினவல் ; காரண விளைவு அலசல் : பெரும்பாலான மின்னணு விரிதாள் செயல்முறைகள் செயற்படுகிற வளாகம். மற்ற மதிப்பளவுகளின் கூட்டு விளைவினை தீர்மானிக்க புதிய மதிப்பளவுகளைப் புதிதாக அமைக்கலாம்.

what-if analysis : இது கொடுத்தால் எது கிடைக்கும்; இது தரின் எது வரும் : விரிதாள் பயன்பாட்டில் இருக்கின்ற வசதி. சில உள்ளீடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட விடை பெறப்பட்டுள்ளது; உள்ளீட்டு மதிப்புகளில் ஒன்றை மாற்றும் போது, அதற்கேற்ப விடையும் உடனடியாக மாற்றம் பெறும். எடுத்துக்காட்டாக, வங்கியில் கடன் பெறும் ஒருவர், வெவ்வேறு வட்டி வீதங்களில் மாதத்தவணையாக எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். what will be the result, if the input is this? என்பதன் சுருக்கமே what if analysis எனப்படுகிறது.

whatis : வாட்இஸ்; என்ன இது : 1. யூனிக்ஸ் கட்டளை. யூனிக்ஸ் கட்டளைகளில் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்கள் பற்றிய விளக்கங்களைத் தரும். 2. இணையத்திலுள்ள ஒரு மென்பொருளைத் தேடிக் கண்டறிய, அதைப்பற்றிய விவரிப்பில் குறிப்பிட்ட சொற்கள் உள்ளனவா எனத் தேடுவதற்குப் பயன்படும் ஓர் ஆர்க்கி (Archie) கட்டளை.

wheel printer : சக்கர அச்சுப்பொறி, உருளை அச்சு : அச்சடிக்கும் எழுத்துகளை உலோகச் சக்கரங்களில் கொண்டிருக்கும்  அச்சடிப்புச் செயல்முறை அமைந்துள்ள அச்சுப்பொறி.

whetstones : வெட்ஸ்டோன்ஸ் : பதின்மப் புள்ளி கணக்கீடுகளைச் சோதிக்கும் பெஞ்ச் மார்க் நிரல் தொடர். ஒரு நொடிக்கு எத்தனை வெட்ஸ்டோன்கள் என்ற அளவில் இதன் முடிவுகள் கூறப்படுகின்றன. வெட்ஸ்டோன் I-32 துண்மி, வெட்ஸ்டோன் II-64 துண்மி இயக்கங்களைச் சோதிக்கின்றன.

while loop : நிகழ்சுற்று.

WHIRLWIND : வேர்ல்விண்டு  : 1940களில் மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) உருவாக்கப்பட்டு, 1950 களில் பயன்படுத்தப்பட்ட, வெற்றிடக் குழாய்களினால் ஆன இலக்கமுறைக் கணினி. சிஆர்டீ திரைக்காட்சி, நிகழ் நேரச் செயலாக்கம் ஆகிய புதிய கண்டுபிடிப்புகள் வேர்ல் விண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இத்திட்டப் பணியில் உறுப்பினராய் இருந்த கென்னத் ஹெச் ஓல்சன் (Kenneth H. Olsen), 1957ஆம் ஆண்டில் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷனை நிறுவினார்.

Whiteboard : ஒயிட்போர்டு; வெண்பலகை ; கரும்பலகை (நம் வழக்கு) : ஒரு பிணையத்தில் பல பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஓர் ஆவணத்தைத் திறந்து கையாள வகைசெய்யும் மென்பொருள். அனைத்துப் பயனாளர்களின் கணினித் திரைகளிலும் ஒரே நேரத்தில் ஆவணம் திறக்கப்படும். ஒரு கரும்பலகையில் எழுதப்பட்ட விவரங்களைப் பலரும் கூடி நின்று படிப்பதைப்போல.

white board window : வெண்பலகைச் சாளரம்.

white noise : வெள்ளை ஓசை ; வெண்ணிரைச்சல் : அச்சுப் பொறிகள், விசைப்பலகைகள், காலடிகள் போன்ற அலுவலகச் சந்தடிகளின் இடைவெளிகளை நிரப்புவதற்காக கேட்கக்கூடிய எல்லா அலைவெண்களிலும் உண்டாக்கப்படும் தொடர் ஓசை.

white paper : வெள்ளை அறிக்கை : பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பத் தரவுபற்றி முறைசாரா வகையில் விவரங்கள் தருதல் அல்லது வரைவு வரன்முறைகளை முன்வைத்தல்.

white space character : வெள்ளை இட எழுத்து : திரையில் தோன்ற வேண்டியிராத எழுத்து. சான்றாக, இடைவெளி, டேப், வரி திரும்புதல் போன்றவை. இந்த எழுத்துகளைப் பார்க்கவோ அல்லது  பார்க்காமல் இருக்கவோ பல சொல் செயலகங்கள் வாய்ப்பளிக்கின்றன.

who is : ஹூஇஸ்; யார் எவர்? : 1. இணையத்தில் சில களங்கள் (domains) வழங்கும் சேவை. அக்களத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளத்தில் மின்னஞ்சல் முகவரிகளையும், பயனாளர்கள் பற்றிய வேறுசில தரவுகளையும் பயனாளர் ஒருவர் அறிந்துகொள்ள இச்சேவை உதவுகிறது. 2. "யார் எவர்" சேவையைப் பெறப் பயன்படும் யூனிக்ஸ் கட்டளை. 3. நாவெல் பிணையத்தில் அந்த நேரத்தில் நுழைந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்துப் பயனாளர்களின் பெயர்களையும் பட்டியலிடும் கட்டளை.

who is client : ஹூஇஸ் கிளையன்ட்; யார் கிளையன் : பயனாளர் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய தரவுத் தளத்தை அணுகுவதற்குப் பயனாளர்க்கு வாய்ப்பளிக்கும் ஒரு கட்டளை. (யூனிக்ஸிலுள்ள ஹூஇஸ் கட்டளை போன்றது).

who is server : ஹூஇஸ் செர்வர் ; வழங்கன் யார் : ஹூஇஸ் கிளையன்ட் கட்டளை மூலம் தரவு அறிய விரும்பும் ஒரு பயனாளருக்கு தரவுத் தளத்திலிருந்து பயனாளர் பெயர்கள். மின்னஞ்சல் முகவரிகளை (பெரும்பாலும் ஓர் இணையக் களத்தினில் கணக்கு வைத்துள்ள பயனாளர்களின் பட்டியல்) வழங்குகின்ற மென்பொருள்.

whole number : முழு எண் : பின்னப் பகுதிகள் இல்லாத நேர். எடுத்துக்காட்டு : 84 அல்லது 22. 0 அல்லது 0.

wide area network (WAN) : நாடளாவிய கணினிப் பிணையம்; விரிபரப்புப் பிணையம் : பல்லாயிரம் மைல் வட்டாரத்திற்குச் சேவைபுரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட தகவல் செய்தித் தொடர்பு பிணையம்.

Wide Area Telephone Service (WATS) : விரிபரப்பு தொலைபேசி சேவை : 'வாட்ஸ்’ தொடர்பு எனப்படும் அணுகு இணைப்பு மூலம், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில் தகவல் தொடர்பு கொள்வதற்கு வாடிக்கையாளரை அனுமதிக்கிற தொலைபேசி நிறுமங்கள் வழங்கும் சேவை. அமெரிக்கா ஆறு "வாட்ஸ்" மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் மாதக் கட்டணம் செலுத்தி இந்த வசதியை பயன்படுத்தலாம். wide band : அகல் அலை வரிசை ; அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை.

wide/ broad band : அகல /விரி கற்றை.

wide SCSI or Wide SCSI-2 : விரிந்த ஸ்கஸ்ஸி அல்லது விரிந்த ஸ்கஸ்ஸி-2 : ஒரு நேரத்தில் 16 துண்மி (பிட்) கள் வீதம் வினாடிக்கு 20 மெகா பைட்டுகள் வரை தரவுப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஸ்கஸ்ஸி-2 இடைமுகம். இவ்வகை ஸ்கஸ்ஸி இணைப்பியில் 68 பின்கள் உள்ளன.

widow & orphan : துணையிலியும் அனாதையும் : அடுத்த பக்கத்தின் மேற்பகுதியில் தோன்றுகின்ற ஒரு பத்தியின் கடைசி வரியை துணையிலி (window) என்றும், ஒரு பக்கத்தின் கடைசிவரியில் வரும் ஒரு பத்தியின் முதல்வரியை அனாதை (orphan) என்றும் கூறுகிறோம்.

width : அகலம்.

width of field : புல அகற்சி.

width table : அகலப் பட்டியல் : ஒரு அச்செழுத்துத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு எழுத்தின் குறுக்குவாட்ட அளவுப் பட்டியல். சொல் செயலாக்க மற்றும் டி. டி. பி நிரல் தொடர்களில் பயன்படுத்தப்படுகிறது.

width, tape : நாடா அகலம்.

wiener ; வைனர், நெர்பெர்ட் (1894-1964)  : அமெரிக்க அறிவியலாளர். கணினியியல் எனப் பொருள்படும் cybernetics என்ற சொல்லைப் புனைந்து ஒரு புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர். மனித மூளையின் பல சிந்தனைச் செய்முறைகளைக் கணிதமுறையில் தீர்மானித்து, கணினிகளில் பயன்படுத்தலாம் எனக் கருதியவர். தானியக்கக் கோட்பாட்டின் முன்னோடி.

wild card : வரம்பிகந்த அட்டை ; வரம்பிலா உரு : ஒரு செயற்பாட்டுப் பொறியமைவு நிரலில் செருகப்படும் ஓர் எழுத்து. இது, பல்வேறு பொருள்படுவதாகக் கூறப்படும். இது கோப்புகளுக்குப் பெயரிடும் முறை.

wildcard characters : பதிலீட்டுக் குறிகள் : ஓர் எழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலீடாகப் பயன்படுத்தப்படும் விசைப்பலகைக் குறி.  பெரும்பாலும் நட்சத்திர அடையாளம் (*) ஓரெழுத்து அல்லது பல எழுத்துகளுக்குப் பதிலாக இடம் பெறும். கேள்விக்குறி (?) ஓரெழுத்துக்குப் பதிலாக இடம் பெறும். இயக்க முறைமைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை, அதாவது குறிப்பிட்ட கோப்புகளின் தொகுதியைக் கையாள இக்குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. (எ-டு) : SALES.* என்பது SALES என்னும் முதன்மைப் பெயருள்ள, வகைப்பெயர் (extension) எதுவாக இருப்பினும் அத்தனை கோப்புகளையும் குறிக்கும். *. DOC என்பது DOC என்னும் வகைப்பெயர் கொண்ட அனைத்து கோப்புகளையும் குறிக்கும். SALES1. XLS, SALES2. XLS, SALES3. XLS ஆகிய கோப்புகளை SALE?. XLS என்று குறிப்பிடலாம்.

Wilkes Maurice Vincent : வில்கஸ், மாரிஸ் வின்சென்ட் : கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மின்னணு சேமிப்புத் தானியங்கிக் கணிப்பியை 1949இல் உருவாக்கிய குழுவின் தலைவராக இருந்தவர்.

WIN32 : வின்32 : விண்டோஸ் 95/98 என்டி இயக்க முறைமைகளுக்கான பயன்பாடுகள், இன்டெல் செயலி 80386 மற்றும் அதனிலும் மேம்பட்ட செயலிகளிலுள்ள 32-பிட் நிரல்களைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தைக் (Application Programm Interface - API) குறிக்கிறது. விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி ஆகியவை 16-பிட் உள்ள 80x86 நிரல்களையும் ஏற்கும் என்றபோதிலும், வின்32 செயல்திறன் மிக்கதாகும்.

WIN32S : வின்32எஸ் : வின்32 பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் ஓர் உட்பிரிவு. விண்டோஸ் 3. எக்ஸில் செயல்படக் கூடியது. இலவசமாக வழங்கப்படும் வின்32எஸ் மென்பொருளைச் சேர்த்துக் கொண்டால், ஒரு பயன்பாடு இன்டெல் 80386 மற்றும் மேம்பட்ட செயலிகளில், விண்டோஸ் 3. எக்ஸ் சூழலில் செயல்படும் போது, 32-பிட் நிரல்களைப் பயன்படுத்திக் கொள்வதால் செயல்திறன் அதிகரிக்கும்.

winchester disk drive : வின்செஸ்டர் வட்டு இயக்கி : அதி வேகத்துணை நிலைச் சேமிப்புச் சாதனம். இது ஒரு வகை நிலை வட்டு. இது காற்றுப் புகாத கொள்கலத்தில் வைத்து முத்திரையிடப்பட்டிருக்கும்.

winchester disks : வின்செஸ்டர் வட்டுகள். winchester technology : வின்செஸ்டர் தொழில் நுட்பம் : கடின காந்த வட்டு சேமிப்பகங்களில் நிரந்தரமாக (அணுகு கரங்கள் மற்றும் படி/எழுது முனைகளுடன்) மூடப்பட்ட பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப்படுபவைகளுக்குத் தரப்படும் பெயர். பல அளவுகளிலும், சேமிப்புத் திறன்களிலும் வின்செஸ்டர் வட்டு அமைப்புகள் வருகின்றன.

window : பலகணி; சாளரம் : ஒளிப்பேழைக் காட்சிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் குறித்தமைக்கப்பட்டுள்ள ஒரு பகுதி. திரையை பன்முகப் பலகணிகளாகப் பகுப்பதற்கு ஒரு தனிவகை மென்பொருள் அனுமதிக்கிறது. இந்தப் பலகளிைகளை நகர்த்தலாம். பெரிதாகவோ சிறிதாகவோ ஆக்கலாம். இது பெரிய சொல் செய்முறைப்படுத்தும் ஆவணங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது.

window definition function : சாளர வரையறுப்புச் செயல்கூறு : ஒரு மெக்கின்டோஷ் பயன்பாட்டில் ஒரு சாளரத்தோடு தொடர்புடைய வளத்தைக் குறிக்கும். ஒரு சாளரத்தை திரையில் காட்டும்போதும், சாளர அளவுகளை மாற்றியமைக்கும்போதும் மெக்கின்டோஷ் "விண்டோ மேனேஜர் நிரல் இந்த செயல் கூறை நிறைவேற்றும்.

windowing : பலகணியாக்கம்; சாளரமாக்கல் : திரையில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புகளை அல்லது ஒரு கோப்பின் பகுதிகளைக் காட்டுதல்.

window menu : சாளரப் பட்டி.

windows : சாளரம்; பலகணி.

Windows 95 : விண்டோஸ் 95 : இன்டெல் 80386, அதற்கும் மேம்பட்ட செயலிகளில் செயல்படக்கூடிய ஓர் இயக்க முறைமை. வரைகலைப் பயனாளர் இடைமுகம் கொண்டது. மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் ஆகஸ்ட் 1995இல் வெளியிட்டது. விண்டோஸ் 3. 11, பணிக்குழுவுக்கான விண்டோஸ் 3. 11, எம்எஸ் டாஸ் ஆகிய அனைத்திற்கும் மாற்றாக வெளியிடப்பட்ட ஒரு முழுமையான இயக்கமுறைமை. விண்டோஸ் 3. x டாஸ்மீது செயல்படும் ஒரு பணிச்சூழல் (Operating Environment). ஆனால் விண்டோஸ் 95, டாஸின் உதவியின்றிச் செயல்படும் ஒரு தனித்த இயக்க முறைமை. என்றாலும் எம்எஸ்டாஸ் மென்பொருள்களை விண்டோஸ் 95இல்  இயக்கமுடியும். 255 எழுத்துகள் வரை நீண்ட கோப்புப் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். எந்தப் பிணையத்தின் கிளையனாகவும் செயல்படவல்லது. தம்மளவில் விண்டோஸ் 95 கணினிகளை ஒன்றாகப் பிணைத்து, சமனி-சமனி (peer to peer) பிணையம் அமைத்துக் கொள்ளமுடியும். இணைத்து இயக்கு (plug and play) முறையில் எந்தவொரு வன்பொருளையும் அதுவாகவே அடையாளம் காணும். பல்லூடகம், இணைய இணைப்புக்கான வசதிகள் அனைத்தும் கொண்டது. 80386 செயலி, 4 எம்பி ரேம் உள்ள கணினிகளில் செயல்படும். என்றாலும் 80486 செயலி 8 எம்பி ரேம் இருப்பது நல்லது.

windows application : விண்டோஸ் பயன்பாடு : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் சூழலில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்ட ஒரு மென்பொருள் பயன்பாடு.

windows-based accelerator : விண்டோஸ் அடிப்படையிலான வேக முடுக்கி : விண்டோஸ் மற்றும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகளை வேகமாக இயக்குவதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மீத்திறன் விஜிஏ (Super VGA) ஒளிக்காட்சித் தகவியின் ஒருவகை. தகவியின் படிப்பு நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தனிச்சிறப்பு நிரல் கூறுகளின் உதவியால், சாதாரண எஸ். விஜிஏ ஒளிக் காட்சித் தகவிகளைவிடக் கூடுதல் வேகமும் திறனும் கொண்டது. இந்த நிரல்கள், ஒளிக்காட்சி தொடர்பாக ஆற்ற வேண்டிய சில பொறுப்புகளிலிருந்து விண்டோஸ் இயக்க முறைமையை விடுவிக்கின்றன. இதனால் செயல்பாட்டு வேகம் கூடுகிறது.

Windows CE : விண்டோஸ் சிஇ : மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் குறுகிய வடிவம். கையகக் கணினிகளுக்கென வடிவமைக்கப்பட்டது. எக்செல், வேர்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஷெட்யூல்+, மின்னஞ்சல் கிளையன் போன்ற விண்டோஸ் பயன்பாடுகள் பலவற்றின் குறுகிய வடிவங்களையும் விண்டோஸ் சிஇ-யில் இயக்க முடியும்.

Windows Driver Library : விண்டோஸ் இயக்கி நூலகம் : மூல விண்டோஸ் தொகுப்பில் சேர்க்கப்படாத, மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமைக்கான வன்பொருள் சாதன இயக்கிகளின் தொகுதி. 

windows environment : சாளரச் சூழ்நிலை : திரையில் பல் சாளரங்களை அளிக்கின்ற பயன்பாட்டு நிரல் தொடர் அல்லது விரிவாக்கம். டெஸ்க்வியூ, விண்டோஸ், பிஎம், மல்டி ஃபைன்டர், மற்றும் எக்ஸ் விண்டோ ஆகியவை இதற்குச் சான்றுகள். இப்போது செயலாக்க அமைப்பையே 'விண்டோஸ் என்ற சொல் குறிப்பிடுகிறது.

Windows Explorer : விண்டோஸ் எக்ஸ்புளோரர் : விண்டோஸ் 95/98இல், கோப்பு மற்றும் கோப்புறைகளை மேலாண்மை செய்வதற்கு அமைந்துள்ள ஒரு பயன்கூறு. விண்டோஸ் 3. 1-ன் கோப்பு மேலாளர் (File Manager) நிரலை ஒத்தது. ஒரு விண்டோவில் இரண்டு பாளங்கள் (Panels) இருக்கும். இடப்புறப் பாளத்தில் கோப்புறைகளின் பட்டியலைப் பார்வையிடலாம். ஒரு கோப்புறையைத் தேர்வு செய்து அதன் உள்ளடக்கத்தை வலப்புறப் பாளத்தில் பார்வையிடலாம்.

Windows For Workgroups : பணிக் குழுவுக்கான விண்டோஸ் : 1992ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விண்டோஸின் ஒரு பதிப்பு. ஈதர்நெட் லேனில் செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டது. இதற்கென தனியான பிணைய மென்பொருள் தேவையில்லை.

Windows keyboard : விண்டோஸ் விசைப்பலகை.

Windows Media Player : விண்டோஸ் மீடியா பிளேயர் : ஒரு மென்பொருள்.

windows metafile : விண்டோஸ் மெட்டாஃபைல் : 'மைக்ரோசாஃப்ட்' விண்டோஸ் நிறுவனம் பயன்படுத்தும் வரைகலைக் கோப்புப் படிவம். இதில் நெறிய (வெக்டார்) வரைகலை, பிட்மேப், சொற்பகுதி ஆகியவை இடம்பெறும். சில சமயங்களில் மெட்டா ஃபைல்களை தற்காலிக சேமிப்பகத்துக்கு பயன்படுத்துவார்கள். ஆனால், அதன் பயன்பாடுகள் பெரும்பாலும் மறுமுறை பயன்படுத்துவதற்காகச் சேமித்து வைக்கப்படுகின்றன.

Windows Metafile Format : விண்டோஸ் மீகோப்பு வடிவாக்கம் : நெறிய வரைகலைக் (vector graphics) கோப்புகளுக்கான விண்டோஸ் கோப்பு வடிவாக்கம். இரண்டு பயன்பாடுகளுக்கிடையே வரைகலைத் தரவுகளை பரிமாறிக் கொள்ளவும், இருவேறு பணி அமர்வு  களுக்கிடையே தரவுவைச் சேமிக்கவும் பயன்படுகிறது.

Windows NT : விண்டோஸ் என்டி : மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய இயக்க முறைமை. என். டி. எஃப்எஸ் (NTFS) என்னும் பாதுகாப்பான கோப்பு முறைமையைக் கொண்டது. பல் பயனாளர் அமைப்பில் பாதுகாப்புமிக்கது. விண்டோஸ் என்டி 4. 0 பதிப்பு ஒர்க்ஸ் டேஷன், செர்வர், அட்வான்ஸ்டு செர்வர், டேட்டா சென்டர் செர்வர் என்னும் நான்கு வடிவங்களில் வெளியிடப்பட்டது.

Windows NT Advanced Server : விண்டோஸ் என்டி அட்வான்ஸ்டு செர்வர் : விண்டோஸ் என்டியின் மேம்பட்ட வடிவம். மையப் படுத்தப்படாத பகிர்ந்தமைகள (domain) அடிப்படை கொண்ட பிணைய மேலாண்மை மற்றும் பாதுகாப்புக் கொண்டது. மேம்பட்ட நிலைவட்டு பழுது தாக்குப்பிடித்தல் வசதிகளைக் கொண்டது. நிலைவட்டுகளில் ஏற்படும் எதிர்பாராப் பழுதுகளை எதிர்கொள்ள பிம்பமாக்கம் (Mirroring) போன்ற வசதிகள் உள்ளன. வலைவழங்கன்களுக்கு ஏற்ற இயக்கமுறைமை.

windows programme : விண்டோஸ் நிரல்தொடர் : இருக்கின்ற ஒரு இயக்கத் தொகுப்புக்கு விண்டோஸின் திறனைச் சேர்க்கின்ற மென்பொருள். விண்டோஸின் கீழே இயங்குவதற்காக எழுதப்பட்ட பயன்பாட்டு நிரல் தொடர்.

Windows Update : விண்டோஸ் இற்றைப்படுத்தல்.

Windows XP : விண்டோஸ் எக்ஸ் பீ : மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள மிக அண்மைய இயக்கமுறைமைய விண்டோஸ் என்டீ 5. 0 பதிப்பே இவ்வாறு பெயர் மாற்றம் பெற்றுள்ளது. எக்ஸ் பீ என்ற எழுத்துகள் eXPerience என்ற சொல்லைக் குறிக்கின்றன. கண்ணுக்கதிமான பயனாளர் இடைமுகத்தைக் கொண்டுள்ளது. குரல் கட்டளையை ஏற்கும். கையெழுத்தை அறியும். உரையைப் பேச்சாய் மாற்றும். இதுபோல் இன்னும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ள பாதுகாப்பான திறன்மிக்க இயக்க முறைமை.

winG : வின்ஜி : விண்டோஸ் விளையாட்டுகள் என்று பொருள்படும் Windows Games என்பதன் சுருக்கம். விண்டோஸ் 95 சூழலில் கணினி விளையாட்டுகளுக்கான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API).

வின்ஜி-யின் கீழ், விளையாட்டு நிரல்கள் ஒளிக்காட்சிச் சட்ட இடையகத்தை (Video Frame Buffer) நேரடியாக அணுக முடியும். இதனால் வேகம் கூடும்.

WINS : வின்ஸ் : விண்டோஸ் இணையப் பெயரிடு சேவை எனப் பொருள்படும் Windows internet Naming Service என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் புரவன் பெயரை (Host Name) அதன் ஐ. பீ முகவரியோடு பொருத்தும் விண்டோஸ் என்டீ செர்வர் வழிமுறை.

WINS - Configuration : வின்ஸ் உள்ளமைவு.

Winsock : வின்சாக் : விண்டோஸ் செருகுவாய் என்று பொருள்படும் Windows Socket என்பதன் சுருக்கம். விண்டோஸில் டீசிபி/ஐபி இடைமுகத்தை வழங்குகின்ற ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). 1991இல் நடைபெற்ற யூனிக்ஸ் மாநாட்டில் மென்பொருள் விற்பனையாளர்களிடையே நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தர வரையறை. மைக்ரோசாஃப்ட் உட்பட பல மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆதரவினை இது பெற்றது.

Wintel : வின்டெல் : மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் இயக்க முறைமையையும், இன்டெல் மையச் செயலகத்தையும் கொண்ட கணினிகளைக் குறிக்கும் சொல்.

wire board : கம்பிப் பலகை.

wired , பிணைப்புறு; இணைப்புறு : 1. ஒரு மின்னணுச் சுற்று அல்லது வன்பொருள் தொகுதியின் பண்புக் கூறு. அவை எந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளதோ அதன்படியேதான் அதன் தகவமைவுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு மென்பொருள் மூலமாக விரும்பியவாறு நிரல்படுத்தவோ, ஒரு நிலைமாற்றியின் மூலம் மாற்றியமைக்கவோ முடியாது. 2. இணைய வளங்கள், அமைப்புகள், பண்பாடு பற்றி அறிந்திருத்தல். 3. இணையத்தோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளல்.

wired programme computer : கம்பிச் செயல்முறைக் கணினி : நிறைவேற்ற செயற்பாடுகள், கம்பி அமைப்பு மற்றும் கம்பி இணைப்புகள் மூலம் குறிப்பிடப்படுகிற நிரல்களைக் கொண்டுள்ள கணினி. இந்தக் கம்பிகள், அகற்றக்கூடிய கட்டுப்பாட்டு தொடர்மூலம் பிணைக்கப் பட்டுள்ளன. இது  செயற்பாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நெகிழ்திறனை அளிக்கிறது.

wireframe : வலைப்புள்ளிச் சித்திரம்; கம்பிச் சட்டம்.

wireframe modeling : கம்பிச் சட்ட மாதிரியமைப்பு : கேட் பயன்பாட்டில் முப்பரிமாணத்தைக் குறிப்பிடும் ஒரு நுட்பம். இதில் எல்லா கோடுகளும், எதிர்க்கோடுகளும் தெளிவாகக் காட்டப்படும். ஆனால், உட்புற உறுப்புகள் பார்வையிலிருந்து மறைக்கப்படும். மேற்பரப்பு மற்றும் திட மாதிரியமைப்பை விட, கம்பிச் சட்ட மாதிரியமைப்பு முப்பரிமாண உருவங்களுக்கு எளிதானது.

wireless : கம்பியிலா.

Wireless LAN : கம்பியில்லா லேன் : தனித்த கணுக் கணினிகளுக்கும் குவியத்துக்கும் (Nodes and Hub) இடையே பருநிலை இணைப்பு எதுவும் இல்லாமல், வானலை, அகச்சிவப்பு ஒளிச்சமிக்கை அல்லது பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவலை அனுப்பவும். பெறவும் முடிகிற குறும்பரப்புப் பிணையம். பயனர் ஒரு கையகக் கணினியை இங்கும் அங்கும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கின்ற அலுவலக அல்லது தொழில்கூடச் சூழல்களில் கம்பியில்லா லேன் தொழில்நுட்பம் மிகவும் பயன்படக்கூடியது.

wireless telephone : கம்பியிலா தொலைபேசி.

wire printer : கம்பி அச்சுப் பொறி.

wire wrap : கம்பிப் பொதிவு ; கம்பிச் சுற்றமைவு : மின்சுற்றுவழிப் பலகை உருவாக்குவதில் ஒருவகை. இதில் மின் இணைப்புகள், உரிய உறுப்புகளின் இணைப்பு முனைகளுக்கு இணையான கம்பங்களுடன் இணைக்கப்பட்ட கம்பிகள் வழியாக ஏற்படுத்தப்படுகின்றன.

wire-wrapper circuits : கம்பி சுற்றிய மின்சுற்றுகள் : அச்சிட்ட மின்சுற்றுப் பலகைகளில், உலோக இணைப்புத் தடங்களுக்குப் பதிலாக, துளையிடப்பட்ட பலகைகளில் கம்பிகளால் இணைக்கப்படும் மின்சுற்று. இணைப்புக் கம்பிகளின் முனைகள் நீண்ட பின்களின் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இத்தகைய மின்சுற்றுகள் கையால் செய்யப்பட்டவை. மாதிரியங்களை உருவாக்கவும், மின்சாரப் பொறியியலில் ஆய்வுகளை மேற்  கொள்ளவுமே இத்தகைய மின்சுற்றுகளைப் பயன்படுத்துவர்.

wiring diagram : கம்பி வரிப்படம்.

Wirth, Niklaus : விர்த், நிக்ளாஸ் : சுவிட்சர்லாந்தில் 1968இல் பிளைஸ் பாஸ்கல் பெயரால் 'பாஸ்கல்' என்ற கணினி மொழியை உருவாக்கியவர். இது பிரபலமான உயர்நிலைச் செயல்முறைப்படுத்தும் மொழியாகும். இது, கட்டமைவுச் செயல் முறைப்படுத்தும் உத்திகளைக் கையாள உதவுகிறது.

wizard : வித்தகர் : மைக்ரோ சாஃப்ட்.

. wmf . டபிள்யூஎம்எஃப் : நெறிய வரைகலை (vector graphics) அடங்கிய மைக்ரோ சாஃப்ட் விண்டோஸ் மீகோப்புகளை அடையாளங் காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension).

word : சொல்; தகவல்; தரவு : துண்மிகளின், எழுத்துகளின் அல்லது எட்டியல்களின் தருக்க முறை அலகு. இது ஒரு தனி அலகாகக் கருதப்படுகிறது. இதனை ஒரே சேமிப்பு அமைவிடத்தில் சேமித்து வைக்கலாம்.

word addressable : சொல் முகவரியிடக்கூடிய : சொல் எல்லைகளுக்கு மட்டும் நினைவகத்திற்கு முகவரியிடும் கணினி.

word-addressable processor : சொல்-அழைதகு செயலி : நினைவகத்தில் ஒரு தனி பைட் அணுக இயலாத, ஆனால் பைட்களின் தொகுதியை அணுக முடிகிற ஒரு செயலி. ஒரு தனி பைட்டைக் கையாள வேண்டுமெனில் அந்த பைட் உள்ளடங்கிய நினைவகத் தொகுதியைப் படித்து எழுத வேண்டியதிருக்கும்.

Word Art : வேர்டு ஆர்ட் : எழிலான எழுத்துகளை உருவாக்க உதவும் மென்பொருள்.

word coordinates : சொல் ஒருங்கிணைப்புகள் : எக்ஸ் மற்றும் ஒய் ஒருங்கிணைப்பு வரிசையைக் குறிப்பிடும் மென் பொருளால் அமைக்கப்பட்ட திரை ஒருங்கிணைப்பு அமைப்பு. இதில் எதிர்மறை எண்கள் இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். சான்று, -100 மற்றும் +100-க்கு இடது, வலது மதிப்புகள். இந்த ஒருங்கிணைப்புகளை திரையின் உருவ ஒருங்கிணைப்பு அமைப்புடன் அமைக்கப்படும். அதன்படி மேல் இடது மூலை எப்போதும் x=0 மற்றும் y=0 என்றே குறிப்பிடப்படும். இதில் உடன்பாட்டு எண்களே பயன்படுத்தப்படுகின்றது.

word count : சொல் எண்ணிக்கை.  word length : சொல்நீட்சி ; சொல் நீளம் : ஒரு சொல்லிலுள்ள துண்மிகளின் எண்ணிக்கை. பொதுவாக, இது 4, 8, 16 அல்லது 32 என்ற எண்ணிக்கைகளில் இருக்கும்.

Word Pad : வேர்டுபேட் : ஒரு சொல்செயலி மென்பொருள்.

word parser : சொல் பகுப்பான்.

word passing : சொல் பரப்பி.

Wordperfect : வேர்டுபர்ஃபெக்ட் : கோரல் நிறுவனம் வழங்குகின்ற முழுநீள சொல் செயலாக்கத்தில் அனைத்துத் தன்மைகளும் கொண்ட நிரல் தொடர். 1980இல் அறிமுகப்படுத்தப்பட்ட இது ஐ. பி. எம் ஆப்பிள் II, மெக்கின்டோஷ், அமீகா, அட்டாசி போன்ற தனிநபர் கணினிகளில் பயன்படுகிறது. பதிப்பு 5. 0 இல்... முன்பார்வை முறையும், பதிப்பு 6. 0இல் வரைகலை முறையும் ஹையேர் டெக்ஸ்ட் ஆவணங்களை உருவாக்கும் திறனும் பெற்றுள்ளது.

word processing : WP : சொல் செய்முறைப்படுத்துதல் ; சொல் தொகுப்பு நிரல் தொடர் : ஒரு மின்னணு விசைப்பலகை, கணினி, அச்சுப்பொறி ஆகியவற்றைப் பயன்படுத்தி, மின்னணுமுறையில் வாசகங்களைச் சேமிப்பதற்கும், எழுதுவதற்கும், கையாள்வதற்குமான உத்தி. வாசகம் பொதுவாக நெகிழ் வட்டு போன்ற ஒரு காந்தச் சாதனத்தில் பதிவு செய்யப்படுகிறது. இறுதி வெளிப்பாடு காகிதத்தில் பதிவாகிறது.

word processing centre : சொல் தொகுப்பி செய்முறைப்படுத்தும் மையம் : சொல் செய்முறைப்படுத்தும் சாதனங்களையும், ஓர் அமைவனத்திற்கு எழுதிய செய்திகளைத் தயாரிப்பதற்குரிய வசதிகளையும் உடைய ஒரு மையம்.

word processing machine : சொல் செயலாக்க எந்திரம் : சொல் செயலாக்கப் பணிகளுக்கு மட்டுமே சிறப்பாகப் பயன்படுத்தப்படும் கணினி.

word processing operator : சொல் செய்முறைப்படுத்தும் இயக்குநர் : சொல் செய்முறைப்படுத்தும் சாதனத்தை இயக்குகிற ஆள்.

word processing package : சொல் செயலாக்கத் தொகுப்பு : சொல் செயலாக்கப்பணிகளைச் செய்யும் மென்பொருள்.

word processing programme : சொல் செய்முறைப்படுத்தும் நிரல் : வாசகத்தை எழுதுவதிலும், பதிப்பிப்பதிலும் உருவமைப்பிலும் கணினி பொறி  யமைவுக்கு வழிகாட்டுகிற மென் பொருள். இதுவும் சொல் செய்முறைப்படுத்தி என்பதும் ஒன்றே.

word processing society (WPS) : சொல் செய்முறைப்படுத்தும் கழகம் : சொல் செய்முறைப்படுத்துவதை ஒரு தொழிலாக வளர்ப்பதற்காகப் பள்ளிகளில் சொல் செய்முறைப்படுத்தும் கல்விச் செயல்முறைகளை ஊக்குவிக்கிற அமைவனம்.

word processing system : சொல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு : தானியங்கும் கணினிமயமாக்கிய தட்டச்சு, படியெடுப்பு, கோப்பிடுதல், எழுதக்கூறுதல், ஆவணமீட்பு ஆகியவற்றை தொடர்புபடுத்துகிற தகவல் செய்முறைப்படுத்தும் பொறியமைவு. இக்கால அலுவலகங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

word processor : சொல் செய்முறைப்படுத்தி; சொல் செயலி; சொல் தொகுப்பி : வாசகங்களைக் கையாள்வதற்கு வசதி செய்துகொடுக்கும் கணினிச் செயல்முறை. இதனை, ஆவணங்களை எழுதுதல், சொற்கள், பத்திகள் அல்லது பக்கங்களைப் புகுத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு பயன்படுத்தலாம். ஆவணங்கள் அச்சடிக்கவும் பயன்படுகிறது.

word publishing : சொல் பதிப்பித்தல் : கலத்தல், காட்டுதல் மற்றும் சொல்-வரைகலை அச்சிடல் போன்ற டி. டீ. பீ தன்மைகளை வழங்கும் சொல் செயலாக்கம்.

word search : சொல் தேடல்.

word separator : சொல் பிரிப்பி : ஒரு சொல்லைப் பிரிக்கின்ற ஒரு அமைப்பு-வெற்றிடம், காற்புள்ளி, புள்ளி, கேள்விக்குறி, வியப்புக்குறி போன்றன.

words, reserved : ஒதுக்கீட்டு சொற்கள்.

Wordstar : வேர்டுஸ்டார் : பெரும்பாலான நுண்கணினிப் பொறியமைவுகளில் உள்ள புகழ்பெற்ற சொல் செய்முறைப்படுத்தி. மைக்ரோ புரோ நிறுவனத்தின் தயாரிப்பு.

word wrap : சொற் பொதிவு : சொல் மடிப்பு : ஒரு சொல், மூல வரிகளின் இறுதியில் பொருந்தவில்லையென்றால் அதனை தானாகவே அடுத்த வரியின் தொடக்கத்திற்கு நகர்த்திவிடுகிற சாதனம். இது சொல் செய்முறைப்படுத்தும், பொறியமைவுகளில் காணப்படும்.

work area : பணி இடப் பரப்பு.  work around : ஒப்பேற்றுதல்; சமாளித்தல் : ஒரு மென்பொருளில் அல்லது வன்பொருளில் பிழை அல்லது பிற குறைபாடுகள் இருப்பினும் அக்குறைபாட்டினை நீக்காமலே குறிப்பிட்ட பணியை ஒருவாறாகச் செய்துமுடிக்கும் தந்திரம்.

Workbook : பணிப்புத்தகம் : எக்செல் போன்ற விரிதாள் பயன்பாடுகளில், பல தொடர்புடைய பணித்தாள்களைக் கொண்ட ஒரு கோப்பு.

workbench : பணிமேசை; பணி மேடை : வன்பொருள் மற்றும் மென்பொருள் இனங்களைப் பல பயன்பாட்டாளர்கள் பகிர்ந்து கொள்ள இடமளிக்கும் செயல்முறைப்படுத்தும் சூழல்.

work breakdown structure : பணி முறிவுக் கட்டமைவு ; பணிப் பகுப்புக் கட்டமைவு : ஒரு குறிப்பிட்ட திட்டத்தை முடிப்பதற்குத் தேவைப்படும் பணிக்கூறுகளையும் சாதனங்களையும் விரிவான பட்டியலாகத் தயாரித்தல். திட்டமிடும் செய்முறையை விரைவுபடுத்தத் திட்ட வரைவாளருக்குப் பயன்படும் சாதனம்.

workflow application : பணிப்பாய்வுப் பயன்பாடு : ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதிவரை அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து மேலாண்மை செய்வதற்கு உதவும் நிரல்களின் தொகுப்பு.

work group : பணிக்குழு : கோப்புகளையும் தரவுத் தளங்களையும் பங்கிட்டுக் கொள்ளும் இரண்டு அல்லது மேற்பட்ட தனி நபர்கள். பணிக் குழுவை ஒட்டி அமைக்கப்படும் 'லேனில்' மின்னணு தரவுகளைப் பங்கிட்டுக் கொள்ள முடியும்.

work group computing : பணிக் குழு கணிப்பு : பணிக்குழு சூழ்நிலையில் இறுதிப் பயனாளர் கணிப்பிடல். இதில் தங்களது வன்பொருள் மென்பொருள் மற்றும் தரவுத் தளங்களை குழுவின் வேலைகளுக்காக லேன் முறையில் பணிக்குழுவின் உறுப்பினர் எவரும் பயன்படுத்தமுடியும்.

working directory : பணியாற்றும் கோப்பகம் : தரவு மாற்றல்களுக்காக நடப்பில் பயன்பட்டுவரும் விவரத் தொகுப்பு.

working storage : செயற்படு சேமிப்பகம் : தற்காலிகச் சேமிப்பகம் என்பதும் இதுவும் ஒன்றே.

work offline : அகல்நிலை பணி செய்.  workplace shell : ஒர்க்பிளேஸ் ஷெல் ; பணியிட செயல்தளம் : ஒஎஸ்/2 இயக்க முறைமையின் வரைகலைப் பயனாளர் இடைமுகம். மேக்ஓஎஸ், விண்டோஸ் 95 போலவே ஒர்க்பிளேஸ் ஷெல்லும் ஆவணங்களை மையமாகக் கொண்டது. ஆவணக் கோப்புகள் சின்னங்களாகக் காட்டப்படும். ஒரு ஆவணச் சின்னத்தின்மீது சொடுக்கியதும் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாடு முதலில் திறந்து பின் அதில் ஆவணம் திறக்கப்படும். ஓர் ஆவணத்தை அச்சிட அந்த ஆவணத்துக்குரிய சின்னத்தை அச்சுப்பொறி சின்னத்தின்மீது இழுத்து விட்டால்போதும். ஒர்க்பிளேஸ் ஷெல், பிரசென்டேஷன் மேனேஜர் மென்பொருளின் வரைகலைச் செயல் கூறுகளைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

worksheet : பணித்தாள் : விரி தாள், திட்டத்தாள் என்பனவும் இதுவும் ஒன்றே.

worksheet compiler : பணித்தாள் தொகுப்பு : spread sheet போன்றதே.

workspace : பணியிடம் : செயற்பாட்டுச் சேமிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள செயல் முறைகளுக்கும் தரவுகளுக்குமான உள்முக சேமிப்பு அளவினைக் குறிக் கும் சொல்

workstation : பணி நிலையம் : ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்தியங்கும் பொறியமைவாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டு : தனித்தியங்கும் வரைகலைப் பொறியமைவு, சொல் செய்முறைப்படுத்தி; நேரப்பகிர்வு முனையம்.

work year : பணியாண்டு : ஓர் ஆள் ஒராண்டு செய்துள்ள முயற்சிகள். ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க எத்தனை ஆட்கள் தேவைப்படும் என மதிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்.

World Conference on Computer in Education (WCCE) : கல்வியியல் கணிப்பொறி பற்றிய உலக மாநாடு (டபிள்யூசிசிஇ)  : பன்னாட்டுத் தரவு செய்முறைப்படுத்தும் இணையமும், அமெரிக்கத் தகவல் செய்முறைப் படுத்தும் கழகங்களும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கணினிக் கல்வி மாநாடு. இது வெவ்வேறு நாடு  களில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

World Wide Web Consortium : வைய விரிவலைக் கூட்டமைப்பு : வைய விரிவலை தொடர்பான அனைத்துப் பிரிவுகளிலும் நடைபெறும் ஆய்வுகளைக் கண்காணித்து சிறந்த தரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு. சுருக்கமாக டபிள்யூ 3 சி (W3C) என்றழைக்கப்படும்.

World Wide Web or World-wide web (WWW) : வைய விரி வலை : உலக முழுவதிலுமுள்ள ஹெச்டீடீபீ வழங்கன்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று தொடர்புடைய மீத்தொடுப்பு ஆவணங்களின் ஒட்டுமொத்தத் தொகுப்பு. வைய விரிவலையிலுள்ள ஆவணங்கள் வலைப்பக்கங்கள் எனப்படுகின்றன இவை ஹெச்டீஎம்எல் மொழியில் எழுதப்பட்டவை. இவை யூஆர்எல் மூலம் அடையாளம் காணப்படுகின்றன. ஹெச்டீடீபீ நெறிமுறை மூலம் இவை ஒரு கணினியிலிருந்து இன்னொரு கணினிக்குப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இவற்றில் மீத்தொடுப்புள்ள சொல் / சொல் தொடர் மீது சுட்டியால் சொடுக்க அதனால் சுட்டப்படும் இன்னோர் ஆவணம் பயனாளருக்குக் கிடைத்துவிடுகிறது. அந்த இன்னோர் ஆவணம் ஒரு வரைகலைப் படமாகவோ, ஒலி, ஒளிக்காட்சிக் கோப்பாகவோ, ஜாவா குறுநிரலாகவோ, ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசையாகவோ இருக்கலாம். வலப்பக்கங்களைப் பார்வையிடும் பயனாளர் எஃப்டீபீ வழங்கனிலிருந்து கோப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மின்னஞ்சல் அனுப்பலாம். ஐரோப்பிய நுண் துகள் இயற்பியல் ஆய்வுக் கூடத்தில் (European Laboratory for Particle Physics - CERN) பணி புரிந்த டிமோத்தி பெர்னர்ஸ் - லீ (Timothy Berners - Lee) என்பவர் 1989 ஆம் ஆண்டில் வைய விரிவலையை உருவாக்கினார்.

worm : புழு : பெருக்கி : தன்னைத் தானே இரட்டிப்பாக்கிக் கொள்ளும் ஒரு நிரல் தொடர். முனையப் பெருக்கி மிகப் புகழ்பெற்றது. இணையத்தில் இது தன்னைப் பெருக்கிக் கொள்கிறது.

WOSA : வோசா : விண்டோஸ் திறந்த நிலை முறைமைக் கட்டுமானம் என்று பொருள்படும் Windows Open System Architecture 

என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வெவ்வேறு விற்பனையாளர்கள் உருவாக்கும் விண்டோஸ் அடிப்படையிலான பயன்பாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளச் செய்ய, மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களின் (APls) தொகுப்பு. திறந்தநிலை தரவுத் தள இணைப்புறுத்தம் (Open Data Base Connectivity-ODBC). செய்தியனுப்பு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Messaging Application Programming Interface-MAPI) தொலைபேசிப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Telephone Application Programming Interface-TAPI) விண்டோஸ் பொருத்துவாய்கள் {Windows Sockets - Winsock) மைக்ரோ சாஃப்ட் தொலைநிலை செயல்முறை அழைப்புகள் (Remote Procedure Calls - RPC) ஆகியவை, வோசாவில் அடக்கம்.

Wozniak, Stephen : ஓஸ்னியாக், ஸ்டீபன் : ஆப்பிள் கணினிக் கழகம் என்ற அமைவனத்தின் கூட்டு நிறுவனர். Apple lLa, மெக்கின்டோஷ் போன்ற பல நுண்கணினிப் பொறியமைவுகளை உருவாக்கியவர்.

. wp : . டபிள்யூபீ : வேர்டு பெர்ஃபெக்ட் எனப்படும் (கோரல் நிறுவன வெளியீடு) சொல் செயலி மென்பொருளில் உருவாக்கப்படும் ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர் (extension).

WPM : டபிள்யூபீஎம் : வினாடிக்கு எத்தனை சொற்கள் என்று பொருள்படும் Word Per Minute என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். தரவு அனுப்பீட்டு வேகத்தின் அளவு.

WRAM : டபிள்யூரேம் : சாளர குறிப்பிலா அணுகு நினைவகம் என்று பொருள்படும் Window Random Access Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிக்காட்சித் தகவிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை ரேம். ஒளிக்காட்சி ரேம் (VRAM) போலவே, ஒரு வரைகலைப் படிமம் எழுதப்படும்போதே திரையை மறு வண்ணமிட (Repaint) டபிள்யூ ரேம் அனுமதிக்கிறது. ஆனால், விரேமைவிட டபிள்யூ ரேம் வேகம் அதிகம் கொண்டது.

wraparound : சுற்றுப்பபொதிவு : மிகப் பெரிய முகவரியிடத்தக்க அமைவிடத்திலிருந்து முதல் முகவரியிடத்தக்க அமைவிடத்துக்கு மாற்றுதல், காட்சிச் சறுக்கு நகர்வினை கடைசி எழுத்து நிலையிலிருந்து முதல் எழுத்து நிலைக்கு மாற்றுதல் போன்ற தொடர் செயற்பாடு.

wrap round : மடங்கித்தடுப்பு.

. wri : . டபிள்யூஆர்ஐ : மைக்ரோ சாஃப்டின் ரைட் (write) பயன்பாட்டுத் தொகுப்பில் உருவாக்கப்பட்ட ஆவணங்களை அடையாளம் காட்டும் கோப்பு வகைப்பெயர்.

wrist rest : மணிக்கட்டு தங்குமிடம் : தட்டச்சு செய்பவர்கள் தங்களது கை மணிக்கட்டினை உயர்த்தி விசைப் பலகை அளவுக்கு வைத்துக் கொள்ளும் மேடை.

wrist support : மணிக்கட்டு ஆதரவு : கைகளை மணிக்கட்டு நரம்பு நிலையில் வைத்துக் கொள்வதன்மூலம் கார்ப்பல்டன்னல் நோய்க் குறியைத் தடுத்துப் பாதுகாக்கும் பொருள்.

படிமம்:Wrist support. png

 மணிக்கட்டு ஆதரவுக் கருவி

write : எழுது : 1. தகவல்களை கணினியிலிருந்து ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றும் செய்முறை. 2. உள்முகச் சேமிப்பகத்திலிருந்து துணைநிலைச் சேமிப்புச் சாதனங்களில் தரவுகளைப் படியெடுத்தல். இது 'படி என்பதிலிருந்து மாறுபட்டது. 3. விண்டோஸ் 3. x தொகுப்புகளில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சொல் செயலி (Word Processor).

write back cache : திருப்பி எழுதும் விரைவி : எழுதுவதைக் கையாளும் வட்டு அல்லது நினைவக விரைவி. அதிவேக விரைவி நினைவகத்திற்கு மையச் செயலகத்தில் இருந்து எழுதப்பட்ட தரவுகள், எந்திரம் வேலையின்றி இருக்கும் நேரத்தில் வட்டுக்கோ அல்லது நினைவகத்திற்கோ திருப்பி எழுதப்படுவது. 

write-behind cache : எழுதும் முன் இடைமாற்று : நிரந்தரச் சேமிப்புக்காக வட்டில் எழுதப்படுவதற்கு முன்பாக தரவுவை இடைமாற்று நினைவகத்தில் குறுகிய நேரம் இருத்தி வைக்கும் தற்காலிகச் சேமிப்பு முறை. இவ்வாறான இடைமாற்று நடவடிக்கை பொதுவாகக் கணினியின் செயல் திறனைக் கூட்டும். ஒப்பு நோக்கில் மெதுவாகச் செயல்படும் வட்டில், எழுதவும் படிக்கவும் அடிக்கடி அணுக வேண்டிய தேவையைக் குறைப்பதால் இது இயல்வதாகிறது.

write enable ring : எழுத உதவும் வளையம் : ஒரு நாடாச் சுருளில் தகவல்களைப் பதிவு செய்வதற்கு முன்பு அந்த நாடாச் சுருளில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் வளையம்.

write error : எழுதும் பிழை : ஊடகத்தில் ஏதாவது ஒரு கோளாறின் காரணமாக தகவல்களை நினைவகம் அல்லது சேமிப்பகச் சாதனத்திற்கோ அல்லது அதிலிருந்தோ பதிய முடியாத நிலை. நினைவகச் சாதனங்களில் மின்னணு சாதனங்களின் கோளாறுகளாலும் இவ்வாறு ஏற்படுவதுண்டு.

write head : எழுது முனை : சாதனங்களுக்குள் தரவுகளை எழுதுவதற்காக வடிவமைக்கப்பட்ட காந்தமுனை. இது படிப்பு முனை என்பதிலிருந்து மாறுபட்டது.

write inhibit ring : எழுத்துத் தடுப்பு வளையம் : எழுதவிடா வளையம் : ஒரு காந்தநாடாவில் தரவுகளை எழுதுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வளையம். இது படிப்புக் காப்பு வளையம் என்பதிலிருந்து வேறுபட்டது.

write mode : எழுது பாங்கு : கணினிச் செயல்பாட்டில், ஒரு நிரல் ஒரு கோப்பில் எழுத (பதிய) முடிகின்ற நிலை. எழுது பாங்கில் ஒரு கோப்பில் ஏற்கெனவே இருக்கும் தகவல்களை மாற்றியமைக்க அனுமதிக்கப்படுகிறது.

Write Once, Use Anywhare : ஒருமுறை எழுதி எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்.

Write Once, Use Manytimes : ஒருமுறை எழுதி பலமுறை பயன்படுத்து.

write protect : எழுதவிடா படிப்புக் காப்பு : ஒரு வட்டில் அல்லது நாடாவில் எழுதுவதைத் தடுப்பதற்கான நடைமுறை.

write protection : எழுதவிடாப் பாதுகாப்பு : முக்கிய தரவுகள் மற்றும் செயலாக்க அமைப்பு 

போன்ற நிரல் தொடர்களில் தற்காலிகமாகவோ அல்லது வேண்டுமென்றோ மாற்றம்/ நீக்கல் ஆவதைத் தடுக்கப் பயன்படுத்தும் நுட்பம். வன்பொருளில் எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும். சான்று : நெகிழ் வட்டில் எழுதவிடாப் பாதுகாப்பு நாட்கள், இரகசியச் சொல் போன்றவற்றின் மூலம் மென் பொருளிலும் பாதுகாப்பு அளிக்கலாம். நிலைவட்டுகளில் கட்டுப்பாட்டு மின்சுற்று மூலம் மட்டுமே எழுதவிடாப் பாதுகாப்பு அளிக்க முடியும்.

write-protect notch : எழுத விடாக் காப்புப் பிளவு : விரும்பத்தகாத தரவுகள் நெகிழ் வட்டுகளில் (நுண் வட்டுகளில்) பதிவு செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான குறியீடு. இது, எழுத விடாத் தடுப்புப் பிளவின்மீது ஒரு பசையிட்ட இழையினை ஒட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது.

write protect ring : எழுதவிடாக் காப்பு வளையம் : ஒரு நாடாச் சுருளில் ஒட்டப்பட்டுள்ள காப்பு வளையம். இது, நாடாவில் எழுதுவதைத் தடுக்கிறது. இதனை எழுதவிடாத் தடுப்பு வளையம் என்றும் கூறுவர்

write protect sensor : எழுத விடாத் தடுப்புணர்வு.

write to : எழுது.

written media : எழுத்து ஊடகம்.

. ws : . டபிள்யூஎஸ் : ஒர் இணையத் தள முகவரி மேற்கு சமோவாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. wv. us : . டபிள்யூ. வி. யு. எஸ் : ஒர் இணையத் தள முகவரி அமெரிக்க நாட்டு மேற்கு வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

WYSIBY G - What You See Before You Get it : காண்பதே கிடைக்கும்.