கணினி களஞ்சிய அகராதி-2/B
add-on card : திறனேற்றி அட்டை : கூடுதல் அட்டை : கூட்டுறுப்பு அட்டை.
add record : ஏடு சேர்.
add/remove programmes : நிரல்கள் சேர்/அகற்று.
addresable : அழைதகு முகவரி.
address : முகவரி;முகவெண் : சேமிப்பில் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குறிப்பிடுகிற அடையாள எண் அல்லது பெயர்.
addressable cursor : முகவரி இடஞ்சுட்டி;முகவரி இடப்படு காட்டி : திரையில் உள்ள எந்தக் கிடக்கை அல்லது நெடுக்கையையும் நகர்த்தக்கூடிய வகையில் நிரல் தொடர் அமைக்கப்பட்ட இடங்காட்டி.
address arithmatic : முகவெண் கணக்கீடு;முகவரிக் கணக்கீடு.
address bar : முகவரிப்பட்டை.
address, base : தள முகவெண், தள முகவரி;அடி முகவரி;தொடக்க முகவரி.
address book : முகவரி புத்தகம்;முகவரி சேமிப்பு நூல்;முகவரிக் கையேடு : ஒரு மின்னஞ்சல் மென்பொருளில், மின்னஞ்சல் முகவரிகளையும் அவர்களின் பெயர்களையும் கொண்ட பட்டியல். அடிக்கடி மின்னஞ்சல் அனுப்ப வேண்டியவர்களின் முகவரிகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். முதல் முறையாக அஞ்சல் அனுப்புபவரின் முகவரியையும் முகவரிப் புத்தகத்தில் சேமித்துக் கொள்ள முடியும். பட்டியலிலுள்ள ஒருவருக்கு அஞ்சல் அனுப்ப நினைக்கும்போது, முகவரிப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
address buffer : முகவெண் தாங்கி, முகவரி இடையகம்.
address bus : முகவெண் பாட்டை : முகவெண் மின் இணைப்புத் தொகுதி : கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண் செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தரவு ஏந்திச் செல்லப் பயன்படும் மின் இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்பிட முகவரிகளைக் குறிப்பிடும் சமிக்கைகளை ஏந்திச் செல்லும் பாட்டை, முகவரிப் பாட்டை எனப்படும். இது பெரும்பாலும் 20 முதல் 6 வரையிலான தனித்தனி தடங்களின் சேர்க்கையாக இருக்கும்.
address calculation : முகவெண் கணக்கீடு;முகவரிக் கணக்கீடு.
address decoder : முகவெண் கொணர்வி;முகவரி குறிவிலக்கி : எண்களால் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவக முகவரியை, ரேம் சில்லுகளிலுள்ள நினைவக இருப்பிடங்களைத் தேர்வு செய்யும் வகையாக மாற்றித் தரும் ஒரு மின்னணுச் சாதனம்.
address, direct : நேரடி முகவெண்;நேரடி முகவரி.
address field : முகவெண் புலம்.
address format : முகவரி வடிவம் : முகவரியைக் குறிப்பிடும் முறை.
address, indirect : மறைமுக முகவெண்;மறைமுக முகவரி.
addressing : முகவரியிடல் : (1) குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவையான தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணல். (2) தரவு அனுப்பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தரவு, தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தரவுத் தொடர்பு கட்டுப்பாட்டு முறை.
addressing, absolute : முற்று முகவெண்ணிடல்;முற்று முகவரியிடல்.
address, instruction : முகவெண்;அறிவுறுத்தல்;ஆணை முகவரி; அறிவுறுத்த முகவரி.
addressless instruction formate : முகவரியிலா கட்டளை வடிவம்.
address, machine : எந்திர முகவெண், பொறி முகவரி.
address management : முகவரி மேலாண்மை : முகவரி எண்களைக் கொண்ட தரவுத் தளம் அமைக்க உதவும் மென்பொருள்.
address mapping : முகவரி காணல் : ஒரு விவர சேமிப்பு இருப்பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல்.
address mapping table : முகவெண் பதிலீட்டு அட்டவணை : கணினிப் பிணையங்களில் குறிப்பாக இணையத்தில் திசைவிகளிலும் (routers), களப் பெயர் வழங்கன் கணினிகளிலும் (domain name servers) பயன்படுத்தப்படும் அட்டவணை. உரை வடிவில் (எழுத்துகளில்) அமைந்துள்ள ஒர் இணைய தளத்தின் களப்பெயரை, இணைய நெறிமுறை முகவரியாகப் (internet protocol address) பதிலீடு செய்யப்பட்ட விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, md2. vsnl. net. in என்ற இணைய தளமுகவரி இணையான 202. 54. 1. 30 என்னும் ஐபீ முகவரி அவ்வட்டவணையில் இருக்கும்.
address mask : முகவெண் மறைப்பான்;முகவரி மறைப்பு : ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தரவுகளை தடுக்கப் பயன்படும் ஒர் எண். எடுத்துக்காட்டாக, xxx. xxx. xxx. yyy என்ற முகவரியைப் பயன்படுத்தும் ஒரு பிணையத்தில், அதில் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அதே முதல் முகவரி எண்களைப் பயன்படுத்துகையில், மறைப்பான் xxx. xxx. xxx முகவரிகளை மறைத்து விட்டு yyy முகவரியிலுள்ள குறிப்பிட்ட எண்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும்,
address memory : நினை முகவெண் முகவரி;நினைவக முகவரி.
address mode : முகவெண்முறை;முகவரிப் பாங்கு : கணினி நினைவகத்தில் ஒரு முகவரியை குறிப்பிடும் வழிமுறை, absolute address, Indexed address, paged address, relative address போன்ற சொற்களையும் காண்க.
address modification : முகவரி திருத்தம்;முகவரி மாற்றம் : கணினி ஒன்றினால் ஒரு குறிப்பிட்ட வழியில் முகவரியை மாற்றுவதற்கான நடவடிக்கை.
address, multi : பன்முக வெண்;பன் முகவரி.
address, one : ஒற்றை முகவரி.
address part : முகவரி பகுதி.
address port : துறை முகவரி.
address real : உண்மை முகவெண், மெய் முகவரி.
address, reference : மேற்கோள் முகவெண் : குறிப்பு முகவரி.
address register : முகவரிப் பதிகவகம் : தற்பொழுது நிறைவேற்றப்படும் ஆணையின் முகவரி உள்ள பதிவு.
address space : முகவரி இடம்;முகவரி பகுதி : கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முகவரிகளின் முழுத்தொகுப்பு.
address, specific : குறித்த முகவெண் : குறிப்பிட்ட முகவரி.
address resolution : முகவெண் அறிதல் : முகவெண் பதிலீட்டு அட்டவணையில், ஒரு வன்பொருள் உறுப்பின் முகவரியைக் கண்டறிதல்,
address resolution protocol : முகவெண் கண்டறி நெறிமுறை.
address translation : முகவரி பெயர்ப்பு : முகவரி மாற்றம் : உள் நினைவகத்தில் கோர்க்கப்பட வேண்டிய, அல்லது வேறிடத் துக்கு மாற்றப்பட வேண்டிய முகவரிக்கு ஏற்கெனவே நினைவகத்தில் உள்ள தரவுவின் அல்லது நிரலின் முகவரியை மாற்றும் நடைமுறை.
address, variable : மாறு முகவெண்.
address, virtual : மெய் நிகர் முகவரி;மாய முகவெண்.
address, zero level : சுழி நிலை முகவெண்.
add separater : பிரிப்பி சேர்.
add-subtract time : கூட்டு கழிப்பு நேரம் : இரண்டு எண்களைக் கூட்டவும், கழிக்கவும் எடுத்துக் கொள்ளப்படும் நேரம்.
add time : கூட்டல் நேரம் : ஒரு கூட்டலைச் செய்யக் கணினிக்குத் தேவைப்படும் நேரம். இதில் சேமிப்பிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கும் மீண்டும் அதனை சேமிப்பகத்துக்கு அனுப்புவதற்கும் தேவைப்படும் நேரம் அடங்காது.
add to favourites : கவர்வுகளில் சேர்.
add trend line : போக்கு வரி சேர்.
ad hoc inquiries : தற்காலிக வேண்டுகோள்கள் : தனிப்பட்ட, பட்டியலிடப்படாத, சூழ்நிலைக்கேற்ற தரவு வேண்டுகோள்கள்.
ad hoc query : தற்காலிக வினவல்;தற்காலிகத் தேடல் : கோப்பில் எந்த இடத்திலாவது இருக்கும் தரவுவை திரும்பப் பெறுவதற்கான திறன்.
ADI (Apple Desktop Interface) : ஏடிஐ (ஆப்பில் கணினி இடை முகம்).
adjacency operator : அண்மைய செயற்குறி.
adjacent matrix : அண்டை அணி;அருகு அணி.
adjective : பெயரடை.
adjust : சரிசெய்தல்.
adjust to : சரியாக்க.
administrative data processing : நிர்வாகத் தரவுகள் செயலாக்கம் : நிர்வாகம் அல்லது நிறுவனம் ஒன்றின் நிரல் தொடர்பான தரவுகளைச் செய்முறைப்படுத்தும் துறையாகும்.
ADP : ஏடிபி : Automatic data processing என்பதன் குறும்பெயர். தானியங்கு முறையில் தரவுகளைச் செய்முறைப் படுத்தும் பணி.
advanced BASIC : மேம்பட்ட பேசிக்;உயர்நிலை பேசிக் : தொடக்கக் கால பேசிக் மொழியை மேம்படுத்தி உரு வாக்கப்பட்ட கணினி மொழி.
advanced controls : உயர் நிலை இயக்கு விசைகள்.
advanced course : உயர் நிலைப் பாடத்திட்டம்.
Advanced Digit Network : உயர் நிலை இலக்கமுறைப் பிணையம் : தரவு ஒளிக் காட்சி (Video) மற்றும் ஏனைய இலக்க முறை சமிக்கைகளை மிகவும் நம்பகத் தன்மையுடன் அனுப்பும் திறன்வாய்ந்த தனி தடச் சேவை. தரவுத் தொடர்பு நிறுவனங்கள் சிறப்புச் சேவையாக இதனை வழங்குகின்றன. இத்தகைய உயர்நிலைப் பிணையங்களில், பெரும்பாலும் வினாடிக்கு 56 கிலோ (துண்மி) பிட்டுக்கு அதிகமான வேகத்தில் தரவுப் பரிமாற்றம் நடைபெறும்.
advanced filter : உயர்நிலை வடிகட்டி,
advanced interactive executive : உயர்நிலை இடைப் பரிமாற்ற நிர்வாகி.
advanced power management : உயர்நிலை மின்சார மேலாண்மை : கணினி அமைப்புகளில் குறிப்பாக, மின்கலன்களால் இயங்குகின்ற மடிக் கணினிகளில் மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (API). மைக்ரோ சாஃப்ட் மற்றும் இன்டெல் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. கணினி இயக்க நிலையில் நாம் பணியாற்றாமல் இருக்கின்ற போது, கணினியின் பாகங்கள் (தாய்ப்பலகை, செயலி, நிலைவட்டு, திரையகம்) மிகக் குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்படி இந்த நிரல் கட்டுப்படுத்தும்.
Advanced RISC : உயர்நிலை ரிஸ்க் : குறைந்த நிரல் தொகுதிக் கணினிப் பணி (Reduced Instruction Set Computing) என்பதை கருக்கமாக ரிஸ்க் (RISC) என்று அழைக்கின்றனர். துண் செயலி வடிவாக்கத்தில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பத்தை இது குறிக்கிறது. மிப்ஸ் கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் நிறுவனம், பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுக்கு இடையே இரும ஒத்தியில்பை (binary compatibility) ஏற்படுத்தும் வண்ணம் ரிஸ்க் கட்டமைப்பு மற்றும் பணிச் சூழலுக்கென உருவாக்கிய வரையறுப்பு, உயர் நிலை ரிஸ்க் எனப்படுகிறது.
advanced RISC computing specification : உயர்நிலை ரிஸ்க் கணிப்பணி வரையறுப்புகள் :
ரிஸ்க் செயலி அடிப்படையிலான ஒரு கணினி, உயர் நிலைக் கணிப் பணி பணித்தளத்தரத்தை எட்டுவதற்குரிய குறைந்த அளவு மென்பொருள் தேவைகள்.
advanced SCSI programming interface : உயர்நிலை ஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம் : ஸ்கஸ்ஸி புறவன் தகவி (host adapter) களுக்குக் கட்டளைகளை அனுப்புவதற்கு, அடாப்டெக் நிறுவனம் உருவாக்கிய ஒர் இடைமுக வரையறுப்பு (interface specification). இந்த இடை முகம், நிரலுக்கு ஒரு கருத்தியல் அடுக்கினை (abstraction layer) வழங்குகிறது. எத்தகைய தகவி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப்பற்றி நிரலர் கவலைப் படத் தேவையில்லை.
advanced search : மேம்பட்ட தேடல்.
AEDS : ஏஇடிஎஸ் : 'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிருப்பவர்களுக்குச் சேவை செய்யும் லாப நோக்கமற்ற தனியார் நிறுவனம். நவீனக் கல்விக்கும் நவீனத் தொழில் துணுக்கத்திற்கும் இடையிலான உறவைப் பற்றிய கருத்துகளை தரவுகளைப் பரிமாற்றிக் கொள்ள ஒரு அரங்கத்தை வழங்குகிறது. ஆண்டுக்கொரு முறை மாநாடு, தேசிய வட்டார, உள்ளுர் பயிலரங்குகளை நடத்துகிறது. மேனிலைப் பள்ளி மாணவர்களுக்காகக் கணினி செயல்முறைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. காலாண்டு அறிக்கை, சஞ்சிகை ஆகியவற்றை வெளியிடுகிறது.
AFCET : ஏஎஃப்சிஇடிடீ : Association Francaise pour la Cybernetique Economique et Technique என்பதன் குறும் பெயர்.
AFIPS : ஏஎஃப்ஐபீஎஸ் : American Federation of Information Process Societies என்பதன் குறும்பெயர். தரவு செயலாக்கச் சங்கங்களின் அமெரிக்கக் கட்டமைப்புகள் என்பது பொருள்.
AFK : ஏஎஃப்கே : விசைப் பலகையிலிருந்து விலகி எனப்பொருள்படும் Away From Keyboard என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலும், தரவுப் பணிகளிலும் நிகழ்நேர அரட்டைகளில் இம்மரபுத் தொடர்பயன் படுத்தப்படுகிறது. ஒரு வினாவுக்கு சட்டென்று பதிலிறுக்க முடியாத நிலையைச் சுட்டுகிறது.
. af. mil : ஏஎஃப். மில் அமெரிக்க நாட்டு விமானப் படையின் இணைய தள முகவரி என்பதைக் குறிப்பிடும் களப் பெயர்.
AFS : ஏஎஃப்எஸ் : ஆண்ட்ரூ கோப்பு முறைமை என்று பொருள்படும் Andrew File System என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மிகப் பெரும் பிணையங்களில் தொலைவிலுள்ள கோப்புகளை அணுகுவதற்கு வகைசெய்யும், பகிர்மானக் (distributed) கோப்பு முறைமை. கார்னெஜீ மெல்லான் (Carneie - Melion) உருவாக்கியது.
. ag : ஏஜி : இணையத்தில், ஆன்டீருவா மற்றும் பார்புடா பகுதிகளைச் சேர்ந்த இணைய தளம் என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.
agent : முகவர் நிரல் : 1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதா\வது ஒரு நிகழ்வின்போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல். 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தரவுகளை ஆவணக் காப்பகங்களில் அல்லது தரவுக் கருவூலங்களில் தேடிக் கண்டறிந்து தரும் ஒரு நிரல் பெரும்பாலும் இத்தகைய முகவர் நிரல்கள் இணையத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இவை ஒரே வகையான தரவு சேமிப்புக் கருவூலங்களில் தேடுவதற்கென உருவாக்கப் பட்டவை. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களில் வெளியிடப் பட்டுள்ள தரவுகளைத் தேடுபவை. இணையத்தில் ஸ்பைடர் என்ற முகவர் நிரல் பயன் படுத்தப்படுகிறது. அறிவுக் கூருள்ள முகவர் என்றும் அழைக்கப்படும். 3. கிளையன்/ வழங்கன் பயன்பாடுகளில், வழங்கன் கணினிக்கும், கிளையன் கணினிக்கும் இடையே இடையீடாக இருந்து செயல்படுவது. 4. எளிய பிணைய மேலாண் நெறிமுறையில் (Simple Network Management Protocol - SNMP) - பிணையப் போக்குவரத்தை கண்காணிக்கும் செயல்முறை.
aggregate operator : மொத்தமாக்கு செயல்குறி.
AGP - Accelarated Graphics Port முடுக்கு வரைகலைத் துறை.
AI : ஏஐ : செயற்கை நுண் அறிவு : Artificial Intelligence என்பதின் குறும்பெயர். இது கணினி அறிவியலின் ஒரு கிளையாகும். அது மனிதர்களைப்போல கணினி களைச் சிந்திக்கவைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இந்
நோக்கங்களுக்காக மனிதப் பகுப்பாய்வு குறித்து பெருக ஆய்வுகள் நடந்துள்ளன.
ΑΙFF : ஏஐஎஃப்எஃப் : ஆப்பிள் மற்றும் சிலிக்கான் கிராஃபிக்ஸ் கணினிகளில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலித் தரவுச் சேமிக்கும் கோப்பு வடிவம். ஒலியலை வடிவக் கோப்புகள் 8 துண்மி (8-பிட்) வடிவில் சேமிக்கப்படுகின்றன.
Aiken, Howard Hathaway : (1900-1973) அய்க்கன் ஹோவர்ட் ஹாத்வாய் : (1900-1973) 1937-க் கும் 1944-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தானியங்கு தொடர் முறைக் கட்டுப்பாட்டு கணிப்பி எனும் முதல் மின் இயந்திரக் கணினியை உருவாக்கி வடி வமைத்த வல்லுநர்கள் குழுவின் தலைவர்.
aircraft simulator : வானுர்தி போன்மி : வானூர்தி பாவிப்பு : வானூர்தி விமானிகளுக்குப் பயிற்சியளிக்கும் கணினி கட்டுப்பாட்டுச் சாதனம். நவீன ஜெட் வானூர்தி விமானி அறையில் உள்ள கருவிகள் அனைத்தும் இதில் இருக்கும். உண்மையான விமானத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி மனம் வியக்கும் வரை கலைகள் உருவாக்கப்படும். உண்மையான விமானத்தில் போன்றே இதிலும் பயிலலாம்.
airline reservation system : வானூர்தி முன்பதிவு முறைமை : நேரடிப் பயன்பாட்டு அணுகல் கணினித் தொடர்பு முறை. இம் முறையில், வானூர்திகளின் இருக்கைகள் நிலை, வானுர்தி பறக்கும் நேர வரிசைகள், மற்றும் வானுர்திப் பணிகளை நடத்த தேவையான தரவுகள், அந்நேரம் வரையிலான தரவுக் கோப்புகளைப் பராமரித்தல், கோரல்களுக்கு விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் பதிலளித்தல், முதன்மைக் கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள பயணச் சீட்டு முகவர்களின் கேள்விகளுக்கு உடனடியாகப் பதிலளித்தல் ஆகியவற்றுக்கு கணினி பயன்படுத்தப்படுகிறது.
AISP : ஏஐஎஸ்பீ : தகவல் முறைமைத் தொழில் துட்பவியலாளர் சங்கம் எனப் பொருள்படும் Association of Information Systems Professionals என்பதன் குறும் பெயர். தரவு முறைமைகளின் எல்லா அம்சங்களுடன் தொடர் புடைய தொழில் நுட்பவியலாளர் சங்கம். 1972இல் உரு வாக்கப்பட்டது. இதன் கிளைகள் உலகெங்கும் உள்ளன.
AIX : ஏஐஎக்ஸ் : உயர்நிலை ஊடாடும் இயக்கநிலை என்று
பொருள்படும் Advanced Executive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனம் தனது பணிநிலையக் கணினிகளிலும், சொந்தக் கணினிகளிலும் செயல்படுத்திய இயக்க முறைமை - யூனிக்ஸின் இன்னொரு வடிவம்.
AL : சில்லுமொழி : Assembly Language என்பதின் சுருக்கம்
alarm beep : எச்சரிக்கை ஒலி
alert box : எச்சரிக்கும் பெட்டி : ஒரு திரைக்காட்சி சிறிய சாளரம்
போன்று இருக்கும். பயனாளரின் அடுத்த இயக்கம் தவறானதாக இருந்தால் இது எச்சரிக்கும். சுட்டி (மவுஸ்) பொத்தானை அழுத்தியோ அல்லது விசை மூலம் நிரல் கொடுத்தோ இதற்குப் பதில் தரலாம்.
alert messages : எச்சரிக்கைச் செய்திகள் : செய்யப்படும் இயக்கம் தவறானது அல்லது இயலாதது என்பதை உணர்த்தும் செய்திகள்.
algebra : அல்ஜீப்ரா; இயற் கணிதம் : ஒரு வகைக் கணிதம். இதில் எழுத்துகள் எண்ணிக்கை அலகுகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. எண் கணித விதிகளின்படி இம்முறை கையாளப்படுகிறது.
algebra, boolean : பூலியன் இயற் கணிதம்.
algebra of logic : தருக்க முறை அல்ஜீப்ரா; தருக்க முறை இயற்கணிதம் : இதில் தருக்க முறை உறவுகள் இயற் கணித அல்ஜீப்ரா சூத்திரங்களாக வெளியிடப்படுகின்றன. ஜார்ஜ் பூல் இதனை அறிமுகப்படுத்தினார்.
ALGOL : அல்கால் : 1960களில் உருவாக்கப்பட்ட கணினி மொழி. அல்கோரித்மிக் மொழி என்பதன் குறும் பெயர். பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற் கணிதமுறைகளைச் செய்யப் பயன்படும் உயர்நிலை கணினி மொழி.
algorithm : கணி முறை; தருக்கப்படிமுறை : ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற்கான நடை
முறை அல்லது முழுமையாக வரையறுக்கப்பட்ட குழப்பமற்ற விதிகள்.
algorithmic language : தருக்கப் படிமுறை மொழி; கணிமுறை மொழி : தருக்கப்படிமுறைகளை வெளியிட வடிவமைக்கப்பட்ட மொழி.
alias : மாற்றுப் பெயர்; மறு பெயர்; புனைபெயர் : ஒரு கோப்புக்கு அல்லது அட்டவணைக்கு பயனாளர் வழங்கும் மாற்றுப் பெயர்.
aliasing : ஏற்பற்ற தோற்ற மாறுபாடு : கணினி உருவாக்கிய படிமங்களில் ஏற்படக்கூடிய
விரும்பத்தகாத தோற்ற மாறுபாடுகள். இத்தோற்ற மாறுபாடு களில் பொதுவான விளைவு படிமத்தின் எல்லைகளில் தோன்றும் ஒழுங்கற்ற கோடுகளாகும்.
align bottam : அடிவரி நேர்ப்படுத்தல்.
aligning : ஒரஞ் சீரமைத்தல்.
aligning disk : இசைவு வட்டு; சீரமை வட்டு.
aligning edge : ஒழுங்கமை விளிம்பு : வடிவத்தின் முன் விளிம்புடன் இணைந்து ஒர் ஆவணத்தை நிலைப்படுத்தி கருவி மூலம் நுண்ணாய்வு செய்ய உதவும் ஒப்பு விளிம்பு.
alignment : இயைவு நிலை; சீர்மை நிலை : கருவியின் எந்திர அமைவிற்கு எந்திரம் முறையாக இயங்கப் பிழை பொறுத்தல் நிலைகளைச் சரி செய்தல்.
alignment / justify : ஓரச் சீர்மை.
align property : சீரமைப் பண்பு.
align top : விளிம்புவரி நேர்ப்படுத்தல்
all , அனைத்தும்.
allocate : ஒதுக்கு; ஒதுக்கிடு; ஒதுக்கிவை : போதுமான நினைவகப் பகுதி அல்லது அது போன்ற, எந்தவொரு வளத்தையும் நிரலின் பிந்தைய பயன் பாட்டுக்காக ஒதுக்கி வைத்தல்.
allocation : ஒதுக்கிடு : இயக்க முறைமைகளில், ஒரு நிரல் பயன்படுத்திக் கொள்வதற்காக நினைவகத்தில் ஒதுக்கீடு செய்யும்முறை.
allocation block size : ஒதுக்கீட்டுத் தொகுதி அளவு : நிலை வட்டுப் போன்ற சேமிப்பு ஊடகங்களில் ஒரு தனிப்பட்ட தொகுதியின் கொள்ளளவு. வட்டின் மொத்தக் கொள்ளளவு மற்றும் பாகப்பிரிவுகளின் அடிப்படையில் இந்தத் தொகுதி அளவு தீர்மானிக்கப்படுகிறது.
allocation table : ஒதுக்கீட்டு அட்டவணை.
allow zero length : வெற்றுச் சரம் அனுமதி
ALOHA : அலோஹா : செயற்கைக்கோள் தரவுத் தொடர்புகளில் அமெரிக்காவில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தரவுத் தொடர்பு நெறிமுறை (Protocol).
all points addressable : அனைத்துப் புள்ளி முகவரியிடல் : ஒரு திரையிலுள்ள ஒவ்வொரு படப்புள்ளியையும் தனித்தனியாக முகவரியிடக் கூடிய ஒரு வரைகலை முறை.
all purpose computer : அனைத்துச் செயல் நோக்குக் கணினி.
Alpha : ஆல்ஃபா : டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் (DEC) ரிஸ்க் (RISC) தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கிய 64-துண்மி (64-பிட்) துண்செயலியின் வணிகப் பெயர். 1992 பிப்ரவரியில் டெக்சிப் 21064 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. டெக் நிறுவனத்தின் சிப்புத் தொழில் நுட்பததையும் இப் பெயர் குறிக்கிறது. சில வேளைகளில் ஆல்ஃபா சிப்பு பொருத்தப்பட்ட கணினியை ஆல்ஃபா அடிப்படையிலான கணினி எனக் கூறுவர்.
Alpha AXP : ஆல்ஃபா ஏஎக்ஸ்பீ : டெக் நிறுவனத்தின் 64-துண்மி (64-பிட்) ரிஸ்க் சிப்பின் தொழில் நுட்பம் இவ்வாறு அழைக்கப்பட்டது. டெக் நிறுவனம் தான் உற்பத்தி செய்த சொந்தக் கணினிகள் டெக் சிப்பினைக் கொண்டுள்ளன என்பதைக் குறிக்க ஏஎக்ஸ்பீ என்னும் பெயரைக் குறிப்பிட்டது.
alphabet : அகரவரிசை : 1. ஒரு மொழியிலுள்ள எழுத்துகள். 2. ஒரு கணினி மொழியைப் பொறுத்தவரை பல்வேறு வகையான எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள் மற்றும் பிற சிறப்புக் குறியீடுகளும் பயன் படுத்தப்படுகின்றன. அவற்றுள் அகர வரிசை ஒர் உட்குழுவாகும்.
alphabetic : எழுத்துக் கோவை : எழுத்துகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைக் கொண்ட தரவுகள்
alphabetic code : எழுத்துக் குறி முறை.
alphabetical order : அகர வரிசை : ஆங்கிலத்தில் முதல் இசட் வரை.
alphabetic string : எழுத்துக் கோவை; எழுத்துச் சரம் : எழுத்துகளின் தொகுதிகளைக் கொண்ட ஒரு கோவை.
alphabetical sorting : அகர வரிசையாக்கம்; எழுத்தெண் வரிசையாக்கம்.
Alpha box : ஆல்ஃபா பெட்டி : ஆல்ஃபா கணினி : டெக் (DEC) நிறுவனத்தின் ஆல்ஃபா என அழைக்கப்படும் 21061 சிப்பினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.
alpha build : தொடக்க உருவாக்கம்.
alpha channel ; எழுத்து வழித்தடம் : 32 துண்மி வண்ணக் கணினி அமைப்பில் கூடுதல் 8 துண்மி தரவு வழித் தடத்தைக் குறிக்கும் ஆப்பிள் கணினிச் சொல். இது படப்புள்ளிகளின் தெளிவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல ஒளிக்காட்சி மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது.
alpha geometric : முதல் வடிவக் கணிதம்.
alpha micro systems : ஆல்ஃபா மைக்ரோ சிஸ்டம்ஸ் : ஆல்ஃபா செயலியைக் கொண்ட ஒர் உயர் முனை நுண் கணினி, சிறு (mini) கணினி என்றும் வகைப்படுத்தலாம்.
alphamosaic : எழுத்துக் கோலம் : மிகக்குறைந்த தெளிவு கொண்ட காட்சி தொழில் துட்பம். ஆஸ்கியின் மேல்பகுதியைக் கொண்ட அடிப்படை வரைகலை எழுத்துகளை மட்டும் பயன்படுத்துவது.
alphanumeric : எழுத்தெண் : எழுத்தும் எண்ணும் கொண்ட வரைவுருக்களுக்கான பொதுச் சொல் எழுத்துகள். ஏ (A) முதல் (Z) இசட் வரை, எண் இலக்கங்கள், சிறப்புக் குறியிடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
alphanumeric characters : எழுத்தெண் வரையுருக்கள் : தரவு செயலாக்க இயக்கங்களில் பயன்படுத்தப்படும் எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள்.
alphanumeric code : எழுத்தெண் குறிமுறை : A முதல் Z வரையுள்ள எழுத்துகள் மற்றும் 0 முதல் 9 வரையுள்ள எண்கள் இவற்றில் சிலவற்றைக் கொண்ட தொகுதி.
alphanumeric display terminal : எழுத்தெண் காட்சி முனையம் :
கணினி முறைமையில் எழுத்தெண் தகவல்களைப் பதிவதற்கும் திரையில் காட்டுவதற்குமான கருவி.
alphanumeric sort : எழுத் தெண் வரிசையாக்கம் : ஒரு பட்டியலை எழுத்து வரிசையில் அல்லது எண்ணேறு முகத்தில் அல்லது இரண்டு வகையிலும் ஆக்கும் கணினிச் செயல்முறை.
aipha photographic : எழுத்தெண் ஒளிக்கீற்று.
alpha test : ஆல்ஃபா சோதனை : ஒரு மென்பொருள் தொகுப்பினை உருவாக்கி முடித்தவுடன் அது சரியாகச் செயல்படுகிறதா எனக் கண்டறிவதற்கு நடத்தப் படும் முதல்கட்டப் பரிசோதனை. மென்பொருள் தயாரிப்புக் கூடத்திலேயே தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் பயனாளரால் நடத்தப்படும் சோதனை காண்க Beta Test.
alpha testing : முதல் கட்டச் சோதனை : பீட்டா ஆய்வுக்கு உட்படுத்தும் முன்னால் சொந்த நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் புதிய பொருள் அல்லது பனிைத் தொகுப்பு ஒன்றை ஆய்வு செய்தல்.
alt (key) : மாற்று (விசை).
alternate path routing : மாற்றுவழி திசைவித்தல்.
alternate routing : மாற்றுத் திசைவிப்பு : இரண்டு முனைகளுக்கிடையில் ஒரு வழித் தடத்தில் வழக்கமாகச் செல்லும் தகவலை, கட்டமைப்பில் அதிக போக்குவரத்துக் காரணமாய் வேறு ஒரு வழித் தடத்தில் செலுத்தும் கணினி அமைப்பு.
alternate sector : மாற்றுப் பிரிவு : காந்த வட்டில் ஒரு பிரிவு சோதனையின்போது மோசமானது என்று கண்டுபிடிக்கப் பட்டால் வேறு பிரிவைப் பயன்படுத்துவது.
alternate track : மாற்றுத் தடம் : நேர் அணுகு சேமிப்பகத்தின் குறைபாடுள்ள தடத்திற்கு மாறான தடம்.
alternating current : (AC) மாறு மின்னோட்டம் : ஒரு விநாடிக்கு 50 அல்லது 60 முறை தனது ஒட்டத் திசையை எதிர் எதிராக மாற்றிக் கொள்ளும் மின்சாரம். நேர் மின்சாரத்துக்கு மாறானது.
alternator : மின்மாற்றி
விற்பனைக்கு வழங்கப்பட்ட முதலாவது குறுங்கணினி ஆகும்.
AடU : கணிதத் தருக்ககம்; கணித தருக்க முறை அலகு : கணித தருக்கக் (Arithmetic Logic Unit) பகுதியின் குறும் பெயர். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல்கள் நிகழ்கின்றன.
alway programme : ஆல்வே நிரல்; ஆல்வே செயல்முறை.
always on top : எப்போதும் மேலாக,
ambarsand : உம்மைக்குறி
ambient conditions : சூழல் நிலைமை : ஒளி, வெப்பம், ஈரப்பதம் போன்ற சுற்றுச் சூழல் நிலைகள்.
ambient error : சூழல் பிழை
ambient temperature : சூழல் வெப்பம் : ஒரு கருவியைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலை.
ambiguity error : இரு பொருள் வழு; இரட்டுறு பிழை.
Amdahl Gene : அமதால் ஜெனி : முன்பு ஐபிஎம் கணினிகள் பலவற்றை உருவாக்கிய இவர் 1964இல் ஐபிஎம் கணினி-360
வரிசை முறைமையை உருவாக்கியதன் மூலம் கணினிக் கட்டமைப்பில் புரட்சியை நிகழ்த்தினார். இந்தக் கணினியில் ஒருங்கிணைந்த இணைப்புகள் முதலில் பயன்படுத்தப்பட்டன. அவர் பின் அம்தால் வாரியத்துக் காகப் பல கணினிகளை வடிவமைத்தார்.
American Federation of information Processing Societies (AFIPS) : அமெரிக்க தகவல் செயலாக்க சங்கங்களின் கூட்டமைப்பு : கணினி, அறிவியல் மற்றும் தரவு செயலாக்க நிறுவனங்களின் பிரதிநிதித்துவ அமைப்பு. உலகின் மிகப் பெரிய கணினி மாநாடகிய வருடாந்திர தேசிய கணினி மாநாடுகளை சார்பாளராக நடத்துதல், அரசின் கல்வி, ஆய்வு நடவடிக்கைகள், தர நிலைகள், நடைமுறைகள், கணினி வரலாற்றியல் தொடர் பான குழுப் பணிகளை நிறை வேற்றுதல் உள்பட பல நடவடிக்கைகள் இதன் பணிகளாகும். தரவு செயலாக்கத்துக் கான பன்னாட்டுக் கட்டமைப்பில் அமெரிக்கப் பிரதிநிதியாகவும் உள்ளது.
American National Standards Institute (ANSI) : அமெரிக்க தேசிய தர நிறுவனம் : அமெரிக்காவில் சுய தர நிலைகளுக்கான தேசிய ஒப்புதல் நிறுவனமாகவும் ஒருங்கிணைப்பு நிறுவனமாகவும் இவ்வமைப்பு செயல் படுகிறது.
American Online (AOL) : அமெரிக்கா ஆன்லைன் (ஓர் இணைய நிறுவனம்) : இணையத்தில் மின்னஞ்சல், செய்தி, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பிற சேவைகளை வழங்கும் இணைய தகவல் சேவை நிறுவனம். அமெரிக்காவில் வியன்னா வர்ஜீனியாவைத் தலைமையகமாய் கொண்டது. அமெரிக்காவிலேயே மிகப் பெரிய இணையச் சேவை மையம்.
American Society for Information Science (ASIS) : தகவல் அறிவியல் சங்கம் : தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்த உழைக்கும் நூலகர்கள், தகவல் வல்லுநர்கள், அறிவியலாருக்கு அரங்கம் ஒன்றை வழங்கும் தொழில் முறை அமைப்பு இது. இதன் உறுப்பினர்கள் பெரும் பாலும் கற்றவர்கள், செயல் முறை நிர்வாகிகள். மேலாளர் கள், ஒருங்கிணைப்பாளர்கள், தகவல் துறை தொழில் துணுக்க வல்லுநர்கள், அறிவியலார்கள். இவர்கள் முறைமை ஆய்வு, வடிவமைப்பு ஆகிய துறைகளில் பணிபுரிகிறார்கள். தகவல் தொடர்பு திட்டங்களை, சேவைகளை நிர்வகிக்கிறார்கள். தகவல் தொடர்பு சந்தை, தகவல் திட்ட சேவைகள், தகவல் தொடர்பு அடிப்படைகள் ஆகியவற்றில் தேடுதல், தயாரிப்பு ஆய்வு ஆகிய வற்றை மேற்கொள்கிறார்கள்.
American Standard Code for Information Interchange (ASCII) : தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்கத் தரக் குறிமுறை.
American Statistical Association (ASA). அமெரிக்க புள்ளியியல் சங்கம் : புள்ளி விவர இயலை மேம்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்ட பன்னாட்டு அமைப்பு. 1983இல் உருவாக்கப்பட்டது. முடிவுகளை மேற்கொள்வதற்கும், முன் அறிவிப்புச் செய்வதற்கும் கையாளப்படும் உத்திகளின் தரத்தை உறுதி செய்ய ஆய்வு மற்றும் பயன்பாட்டில் புள்ளி விவரங்களின் தரத்தை பேணுகிறது. தொழில் முறை அறிவைப் பரிமாறுதல், வளர்ச்சிகளை அறிவித்தல் மூலம் மாணவர்களை வணிகத்துக்கும் தொழில் துறைக்கும் தயார் செய்கிறது.
AMI BIOS : அமி பயாஸ் : ஐபிஎம் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்துவதற்கென அமெரிக்கன் மெகாட் ரெண்ட்ஸ் நிறுவனம் (AMI) தயாரித்து விற்பனை செய்யும் ரோம் பயாஸ் (ROM BIOS). ரோம் சிப்பிலேயே பயாஸ் செயல் முறைகளுடன் மென்பொருள் தகவமைவு (Configuration) விவரங்களையும் உள்ளடக்கி யிருப்பது இதன் சிறப்புக் கூறாகும். பயனாளர் தன் கணினி யின் நினைவகம் மற்றும் வட்டுகள் பற்றிய தகவமைவு விவரங்களை மாற்றியமைக்க தனியாக ஒரு வட்டினைப் பயன் படுத்தத் தேவையில்லை.
Amiga : அமிகா : பிரபலமான குறுங் கணினி. காமடோர் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு.
AMIS : Audio Media Intergration Standard : 'கேட்பொலி ஊடக ஒருங்கிணைப்புத் தரம்.
AMPS : ஆம்ப்ஸ் : உயர்நிலை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும், Advanced Mobile Phone Service என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். அலை வரிசைப் பகிர்வு ஒன்று சேர்ப்பு (Fraquency Division Multiplexing) துட்பத்தின், அடிப்படையில் செயல்படும் தொடக்க கால நடமாடும் தொலைபேசிச் சேவை களில் ஒன்று.
ampere : ஆம்பியர்; மின்னோட்ட அலகு : மின்சாரத்தின் அடிப்படை எஸ்ஐ அலகு.
amplifier : பெருக்கி : உள்ளிட்டு மின் குறிப்பின் மின்னழுத்தம். மின்னோட்டம், மின் ஆற்றலைப் பெருக்குவது.
amplifier, buffer : இடையகப் பெருக்கி
amplitude : வீச்சு; அலைவீச்சு : ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒலி, மின் அல்லது மின்காந்த சமிக்கையின் வலிமையை அளக்கப் பயன்படும் அளவீடு, படுகை அச்சிலிருந்து அலைவீச்சின் உயரத்தைக் கொண்டு இது மதிப்பிடப்படுகிறது.
amplitude modulation : அலை வீச்சுப் பண்பேற்றம் : மின்காந்த அலை மூலம் நமது பேச்சுத் தகவலை ஏந்திச் செல்லும்
- : : குறியீட்டுச் சமிக்கை
- : : அலைவீச்சுப பணபேறறம்
பொருட்டு, இயல்பான தகவலை மாற்றியமைக்கின்ற ஒரு செயல் முறை. இம்முறையில், தகவல் அலையை, நிலையான அலை வெண் கொண்ட ஒரு மின்காந்த கமப்பி அலையின் மீது செலுத்தி, அத்தகவல் அலையின் அலை வீச்சுக்கு ஏற்ப, சுமப்பி அலையின் அலைவீச்சு மாற்றி யமைக்கப்பட்டு மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
anachromic : காலத்திற்குப் பொருந்தாத
analog : தொடர்முறை ஒத்திசை முறை ஒத்திசைவிலான : தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கும் ஒத்திசைவுகளால் குறிப்பது. இலக்கமுறைக்கு மாறானது.
analog channel : தொடர்முறை தடம்; ஒத்திசை வழித் தடம் : மாறும் மின்சமிக்கைகளை தொடர்ச்சியாக அனுப்ப அல்லது பெற பயன்படும் ஒரு தகவல் தொடர்புத் தடம்.
analog circuit : தொடர்முறை மின்சுற்று ஒத்திசை மின் சுற்று : வெளியீடானது தொடர்ச்சியான உள்ளீட்டின் பணியாக உள்ள மின்சுற்று. இலக்கமுறை மின்சுற்றின் தனித்தனி மதிப்புகளுக்கு மாறான நிலை.
analog computer : தொடர்முறைக் கணினி : ஒத்திசைக் கணினி : மாறும் வெப்பநிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து பருநிலை அளவுகளாகக் காட்டும் கணினி. இலக்கமுறை கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது.
analog data : தொடர்முறைத் தரவு; ஒத்திசைத் தரவு : இம் முறையில் தரவுக்கும் அளவுகளுக்கும் இடையில் உள்ள உறவு துல்லியமாக உணர்த்தப்படுகிறது. தொலைபேசி வழியாகச் செல்லும் மின் சமிக்கைகள் தொடர்முறைத் தரவாகும். இவை ஒலிகளுக்கான துல்லியமான உருவகிப்பாகும். இலக்கமுறை தரவுகளுக்கு இது மாறானது.
analog device : தொடர்முறை காரணிப்படுத்தல்; ஒத்திசைக் கருவி; தொடர்முறைச் சாதனம்.
analog display : ஒத்திசைக் காட்சி; தொடர்முறை சமிக்கை வடிவிலான திரைக் காட்சி : நிறம், நிழல் இவற்றின் அளவுகள் துண்டு துண்டான மதிப்புகளாக இல்லாமல் தொடர் மதிப்புகளாய் அமைந்த ஒளிக் காட்சி முறை.
analogical reasoning : ஒத்திசை அறிதல்; ஒப்புமை அறிதல்.
analog input system : ஒத்திசை உள்ளிட்டு முறைமை; தொடர் முறை உள்ளிட்டு முறைமை.
analog line : ஒத்திசை தகவல் தடம்; தொடர்முறைச் சமிக்கை வடிவில் தகவலை ஏந்திச் செல்லும் ஊடகம் : தொடர்ச்சியில் நிலைமாறும் அலை வடிவிலான தகவல் சமிக்கைகளை ஏந்திச் செல்லும் தகவல் தொடர்பு ஊடகம், பரவலாகப் பயன் படுத்தப்படும் தொலை பேசி இணைப்புக் கம்பிகளை எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம்.
analog model : தொடர்முறை மாதிரியம்; ஒத்திசை மாதிரி; ஒத்திசை வடிவு : நிலவும் சூழலுக்கு ஏற்ற பருநிலை ஒற்றுமையை வெளிப்படுத்தும் மாதிரி வடிவு.
analog modem : ஒத்திசை இணக்கி.
analog monitor : ஒத்திசைக் கணித் திரை தொடர்முறைத் திரையகம்.
analog reasoning : தொடர்முறை காரணிபடுத்தல்; ஒத்திசை வடிவப் பகுப்பாய்வு : முறைமை ஒன்றின் மாதிரி வடிவு ஒன்றை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் முறைமை குறித்த முடிவுகளை எடுத்தல்.
analog representation : தொடர்முறை உருவகிப்பு : தனிப்பட்ட மதிப்பீடுகள் அற்ற உருவகிப்பு. ஆனால் தொடர்ந்து மாறக் கூடியது.
analog signal : தொடர்முறை சமிக்கை; ஒத்திசை சமிக்கை : மனிதக் குரல்போல தொடர்ந்து அலை வடிவில் மாறிச் செல்லும் சமிக்கை.
analog signal generator : ஒத்திசைச் சமிக்கை உருவாக்கி : தொடர்ச்சியாய் நிலைமாறும் அலை வடிவிலான சமிக்கைகளை உருவாக்கும் ஒரு சாதனம். ஒரு கணினியில் வட்டு இயக்கியின் சுழற்றியை இயக்கி வைக்க சிலவேளைகளில் இச் சாதனம் பயன்படுகிறது.
analog-to-digital converter (A-D converter) : தொடர்முறையிலிருந்து இலக்கமுறைக்கு மாற்றி (ஏ-டி மாற்றி) : தொடர்ச்சியான அளவியல் சமிக்கைகளை தனித் தனியான எண்களாக மாற்றக் கூடிய மின்னுறுப்பு. எண்களை அளவியல் மதிப்புகளாக மாற்றும் உறுப்புக்கு மாறானது.
analog transmission : தொடர்முறைபரப்பி; ஒத்திசை பரப்பி : தரவுகளை தொடர்ச்சியான அலைவடிவ முறையில் பரப்புதல்
analysis : பகுப்பாய்வு : ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அல்லது சிக்கலின் பல்வேறு பரிமானங்களையும் பல கோணங்களில் ஆய்வு செய்தல். கணினித் துறை யைப் பொறுத்தவரை, பகுப்
பாய்வு என்பது, பொதுவாக தொடர்வரிசைக் கட்டுப்பாடு, பிழைக் கட்டுப்பாடு மற்றும் திறன் மதிப்பீடுகளை உள்ளடக்கியது. ஒரு சிக்கலை எளிதாக எதிர் கொள்ளும் பொருட்டு அதனை சிறுசிறு கூறுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்வது வழக்கமான நடைமுறை ஆகும்.
analysis, cost : செலவுப் பகுப்பாய்வு.
analysis, system : முறைமை பகுப்பாய்வு.
analyst : பகுப்பாய்வாளர் : பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பதற்கான உத்திகளை உருவாக்குகிற, அதனை வரையறை செய்கிறதிறனுள்ள நபர். குறிப்பாக கணினி ஒன்றில் தீர்வுக்கான உத்திகளை வகுப்பவர்.
analyst/designer work bench : பகுப்பாய்வாளர்/வடிவமைப்பாளர் பணி இருக்கை.
analyst, programmer : நிரல் பகுப்பாய்வாளர்.
analyst, system : முறைமை பகுப்பாய்வாளர்.
Analytical Engine பகுப்பாய்வுக் கருவி; பகுப்பாய்வுப் பொறி : கணிதப் பிரச்சினைகளைத் தீர்க்க 1800களின் மத்தியில் பிரிட்டன் கணிதவியலாளரான சார்லஸ் பாபேஜ் என்பவர் கண்டுபிடித்த கருவி. நவீன இலக்கமுறை கணினியின் முன்னோடி.
analytical graphics : பகுப்பாய்வு வரைகலை : பாரம்பரிய வரி வரைபடங்கள், மற்றும் பட்டை வரைபடங்களைக் கொண்டு தரவுகளை ஆராய்தல், விரிதாள், தரவுத் தளம் அல்லது சொல் செயலி தொகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வரைகலை.
analytical machine : பகுப்பாய்வு எந்திரம்.
analyze : பகுப்பாய்
ancestral file : முந்தையக் கோப்பு : கோப்பில் உள்ள தரவு தொலைந்து போகும் அல்லது சிதைந்து போகும் என்ற எச்சரிக் கையினால் முந்தைய கோப்பு பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. ஒரு கோப்பின் மூன்று பிரதிகள் வைக்கப்பட வேண்டும். தாத்தா, தந்தை, குழந்தை. சமீபத்தியதைப் பயன் படுத்துவது குழந்தைக் கோப்பாகும். குழந்தைக்குச் சேதமானால் தந்தை கோப்பையும், அதுவும் சேதமானால் தாத்தா கோப்பையும் தேடி எடுத்து பயன்படுத்தலாம்.
anchor : நங்கூரம்
anchor cell : தாக்கு கலம் : விரி தாள் பயன்பாட்டில் ஒரு பணித் தாளில் காட்டி நிற்கும் கலம்.
AND : உம்மை : (a and b) என்பதன் பொருள், "ஏ" யும் "பி" யும் ஒரே நேரத்தில் உண்மையாக இருந்தால் மட்டுமே சொற்றொடர் உண்மையானதாக அமையும் என்பதாகும். இதனை 'தருக்கவியல்' உம்மை என்றும் கூறலாம்.
AND gate : உம்மை வாயில் : 1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளிடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆகும். உள்ளீடுகளில் ஏதாவது ஒன்று தருக்கம் சுழி (பூஜ்யம்) யாக இருந்தால் வெளியீடு கழி (பூஜ்யம்) யாக அமையும். 2. கணினி ஒன்றின் வாயில் மின் னிணைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளிட்டு முனையங்களைக் கொண்டது. எல்லா உள்ளீடுகளுக்கும் ஒரே நேரத்தில் துடிப்பு வழங்கப்படாவிட்டால் வெளியீட்டுச் சமிக்கை எதுவும் உருவாகாது.
AND operation : உம்மைச் செயல் : இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவற்றை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை’ என்று வர வேண்டுமென்றால் இரண்டும் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வெளியிடு பொய் ஆகிவிடும்.
android : ஆண் மனிந்திரம் : மனிதர்களைப் போன்ற ஆண் தானியங்கு எந்திரம்.
angle bracket : கோண அடைப்புக் குறி.
angstrom : ஆங்ஸ்ட்ராம் : ஒளி அலை நீளளவை; நீட்டலளவை அலகு : 2. 5 சென்டி மீட்டரில் 1/25 கோடி. சிப்பு ஒன்றில் உள்ள மின்னணுவியல் கருவிகளில் உள்ள பாகங்களை அளக்கப் பயன்படுபவை.
ANI : அனி : Automatic Number Identification, என்பதன் சுருக்கம். தொலைபேசி அமைப்புகளின் ஒரு தன்மை அழைப்பவரின் எண்ணை கணினி அமைப்பின் மூலம் பெறுபவருக்கு அனுப்பி. அழைப்பவரை அடையாளம் காண உதவுவது.
animated cursors : அசைவூட்ட சுட்டுக்குறிகள் : இயங்கு இடங்காட்டி
animated GIF : அசைவூட்ட ஜிஃப்; இயங்கும் ஜிஃப், நகர் பட ஜிஃப் : வரைகலைப் படங்கள் கோப்புகளாக வட்டுகளில் பதியப்படும்போது பல்வேறு
தொழில்நுட்ப அடிப்படையில் பதியப்படுகின்றன. அவற்றுள் ஜிஃப் என்பது குறிப்பிட்டவடிவமைப்பைக் குறிக்கிறது.
வரைகலை மாறுகொள் வடிவாக்கம் (Graphics Interchange Format) என்பதன் சுருக்கமே GIF எனப்படுகிறது. இந்த வடிவமைப்பிலுள்ள வரைகலைப் படங்கள் வட்டுகளில் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்கின்றன. ஜிஃப் வடிவமைப்பில் அமைந்த வரைகலைப் பட உருவங்களை கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து திரையிடும்போது, அந்தப்படம் உயிரோட்டம் பெற்று இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
animated graphics : அசைவுட்ட வரைகலை : இயங்கும் வரைபடங்கள் அல்லது கருத்துப் படங்கள். காந்த வட்டுகளில் வரை படங்கள் ஒளிக்காட்சி தோற்றங் குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்ளும்.
animation : அசைவூட்டம் : நிகழ்வு ஒன்றின் தொடர் வரிசைப் படங்களை மிகவிரைவாக வெளிப்படுத்துவதன் மூலம் இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்குதல். இவ் வுத்தி, கணினி மூலம் திரைப்
படங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
animation picture : அசைவூட்டப் படம்.
animation window : அசைவியூட்டச் சாளரம்.
anion : எதிர்மின்மம் : மின்னுட்டத் திரவத்தில், நேர்மின் முனையை நோக்கி நகர்கிற ஒர் எதிர் அயனி (மின்மயத்துள்).
anisotropic : திசை மாறு பாட்டுப் பண்பு : அளவுக்கும் திசைக்குமேற்ப மாறும் அனுப்பு வேகம் போன்ற பண்புகளைக் குறிப்பிடுகிறது.
annexure : இணைப்பு.
anode : நேர்மின் முனை; நேர் மின்வாய் : மின்னணுவியலில் பயன் படுத்தப்படும் சொல். நேர் மின்னுட்டம் பெற்ற முனையை அல்லது மின்வாயை நோக்கி மின்னணு (எலெக்ட்ரான்) பாய்கிறது.
annotation : குறிப்புரை : சேர்க்கப்பட்ட விளக்கக் குறிப்பு.
annotation symbol : குறிப்புக் குறியீடு; விளக்கக் குறியீடு : தொடர் வரைபடம் ஒன்றில் செய்திகள் மற்றும் குறிப்புகளைச் சேர்க்கப் பயன்படுத்தப் படும் குறியீடு. மற்ற தொடர் வரைபடம் துண்டுக் கோடுகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
anomaly : முரண் : இயல்புக்கு மாறானது.
anonymity : பெயர் மறைப்பு; பெயர் ஒளிப்பு; பெயரிடாமை : இணையத்தில் மின்னஞ்சல் அல்லது செய்திக் குழுவில் தகவல் அல்லது கட்டுரை அனுப்பும்போது, அனுப்பியவர் எவர் என்பதைப் பெறுபவர் தெரிந்து கொள்ள முடியாதவாறு அனுப்பி வைக்கும் முறை. இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றத்தில் பொதுவாக அனுப்பு பவரின் மின்னஞ்சல் முகவரி தகவலின் தலைப்புப் பகுதியில் இடம்பெறும். தகவல் பரிமாற்றத்துக்கான கிளையன் அல்லது கேட்பன் (client) மென் பொருள்தான் இந்த முகவரியைத் தகவலின் தலைப்பில் இடும். பெயர் மறைப்புச் செய்ய, ஒரு பெயர் மறைப்பு மறு மடல் வழங்கன் மூலம் செய்தியை அனுப்பி வைக்க வேண்டும். செய்தியைப் பெறுபவர், பதில் அனுப்ப வசதியாக அனுப்பியவரின் முகவரி, வழங்கன் கணினியில் சேமித்து வைக்கப்
பட்டிருக்கும். செய்தியைப் பெறுபவர் அனுப்பியவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாதே யொழிய பதில் அனுப்ப முடியும்.
anonymous : அனானிமஸ் : பெயரிலி : இணையத்திலுள்ள எவரும் இலவசமாகப் பயன் படுத்திக் கொள்ளும் வகையில் பல்வகைக் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள எஃப்டிபி தளங்கள் பல உள்ளன. இணையப் பயனாளர் ஒருவர் இத்தகைய தளங்களை அணுகப் பயன்படுத்தும் அணுகுப் பெயர் "பெயரிலி" எனப் பொருள்படும். "அனானிமஸ் என்ற பெயராகும்.
anonymous FTP : அணுகுப் பெயரிலா ஆவணச் சேமிப்பகம், பொதுப்பயன் எஃப்டிபீ தளம் : இணையத்தில் எவ்வளவோ தகவல்கள் எல்லோரும் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இணையத் தகவல் பரி மாற்றத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (File Transfer Protocol) என்பது ஒருவகை. இந்த அடிப்படையில் கோப்புப் பரிமாற்றம் கொள்ள வாய்ப்பளிக் கும் தளங்கள் எஃப்டிபீ தளங்கள் என்றழைக்கப்படுகின்றன. பொதுவாக பிணையத்திலுள்ள (network) ஒரு சேமிப்பகக் கணினியை அணுக பெற்றிருக்க வேண்டும். உரிய அணுகு பெயரையும் நுழை சொல்லையும் தந்தபிறகே தளத்தை அணுக முடியும். ஆனால் இைையத் திலுள்ள பல எஃப்டிமீ தளங்களை அனானிமஸ் அல்லது