blank squash : வெற்றிட நீக்கம் : தகவல் பொருள்களுக்கிடையில் வெற்றிடங்களை நீக்குதல். சான்றாக, City + ", " + STATE என்றும் Austin TX என்றும் வருவதை விட AUSTIN, TX என்று வந்து வெற்றிடம் நீக்கப்பட்டிருக்கும்.

bleed : சொட்டுதல் : டிடீ. பீ. மற்றும் வணிக அச்சில் பயன் படுத்தப்படும் சொல். பக்கத்தின் இறுதிப் பகுதியில் இருந்து வெளியே போவதைக் குறிப்பிடுகிறது.

blickering : பளிச்சிடுதல்.

blind carbon copy : அறியா நகல். காண்க : bcc

blind search : கண்மூடித் தேடல் : ஒரு முறையான திட்டமின்றித் தேடல். அதிகநேரம் எடுக்கும் தேடல். இதில் எல்லா வாய்ப்புகளும் முயற்சிக்கப்படும். ஆனால் புத்திசாலித்தனம் இருக்காது.

blinking : சிமிட்டல்; இமைத்தல் : வடிவமைப்பவரின் கவனத்தைக் கவர திரையில் தோன்றித் தோன்றி மறையும் ஒரு வரை படத் தோற்றம்.

blink speed : மின்னும் வேகம்; துடிக்கும் வேகம் : கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது, ஒரு பயன்பாட்டுத் தொகுப்பைத் திறந்தவுடன், எடுத்துக்காட்டாக, ஒரு சொல்செயலியைத் திறந்தவுடன், திரையில் நாம் தகவலைத் தட்டச்சுச் செய்ய வசதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுட்டுக்குறி (cursor) துடித்துக் கொண்டிருக்கும். சுட்டுக் குறி மின்னுகின்ற, துடிக் கின்ற வேகத்தைக் குறிக்கும் சொல் இது.

blip : திரைத் தோற்றம் : ஒளிக் காட்சி திரையில் உள்ள ஒரு சிறிய பிரகாசமான தோற்றம். பொதுவாக இது ஒரு ரேடார் திரையாக இருக்கும்.

blip mark : திரைத் தோற்றக் குறியீடு : நுண் ஃபிலம் போன்ற ஒரு ஊடகத்தில் காணப்படும் கோடு அல்லது புள்ளி. இதை ஒளி முறையில் கண்டறிய முடியும். நேரம் அறிய அல்லது எண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும்.

bloat : உப்பல்

bloatware : உப்பிய மென் பொருள் : பயனாளரின் நிலை வட்டில் இயல்புக்கு அதிகமாய் ஏராளமான இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் கோப்புகளையுடைய மென்பொருள். குறிப்பாக, அதே மென்பொருளின் முந்தைய பதிப்போடு ஒப்பிடுகையில் இப்போதைய பதிப்பு ஏராளமான இடத்தை எடுத்துக் கொண்டால் இப் பெயரிட்டு அழைப்பதுண்டு. block : தொகுதி; தொகுப்பு; தொகை; திரட்டு : 1. உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனத்தில் ஒரே அலகாகக் கருதப்படும் எழுத்து கள், இலக்கங்கள் அல்லது சொற்களின் தொகுதி. எடுத்துக் காட்டாக, ஒரு காந்தவட்டில் இரண்டு இடைப்பட்ட கட்டத்தின் இடைவெளிக்கு இடை யில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கூறலாம். 2. ஒரு தனிப் பதிவேடாகக் கருதப்படும் ஒரு பதிவேட்டின் தொகுதி.

Block Check Character (BCC) : தொகுதி சோதனை எழுத்து.

block cipher : தொகுதி மறையெழுத்து; தொகுதி மறைக் குறி : இணைய தரவுப் பரிமாற்றத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ள தரவுகள் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. மறுமுனையில் மறை விலக்கம் (decryption) செய்யப்பட்டு மூலத் தரவுப் பெறப்படுகிறது. இதற்குப் பல்வேறு மறையாக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தனி பொதுமறைக் குறிமுறை. ஒரு தனிமறைக் குறியைப் பயன்படுத்தித் தரவுவை மறையாக்கம் செய்வர். அதற்குரிய பொது மறைக்குறியைப் பயன்படுத்கி மறைவிலக்கம் செய்வர். தரவுவைக் குறிப்பிட்ட துண்மி எண்ணிக்கையுள்ள (எடுத்துக் காட்டாக 64 துண்மிகள்) தொகுதிகளாகப் பிரித்து அத்தொகுதியை தனிமறைக் குறி மூலம் மறையாக்கம் செய்யலாம். மறையாக்கம் செய்யப்பட்ட தரவுவிலும் மூலத் தரவுவிலிருந்த அதே எண்ணிக்கையிலான துண்மிகளே இருக்கும். இம்முறைக்கு தொகுதி தனி மறைக்குறி என்று பெயர்.

block compaction : கட்டம் அமைத்தல் : நினைவகம் அமைத்தலில் ஒரு செயல்முறை.

block cursor : கட்டச் சுட்டுக் குறி : உரைக் காட்சித் திரையில் (text screen) வரிக்கு 80 எழுத்துகள் வீதம் 25 வரிகள் திரையிட முடியும். ஒவ்வோர் எழுத்தும் ஒரே அகல, உயரத்தில் அமைந்த கட்டத்துக்குள் படப்புள்ளிகளால் திரையில் காட்டப்படுகிறது. உரை அடிப்படையிலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் சுட்டி (mouse) நிறுவப்படும் போது, அதன் சுட்டுக்குறி ஒர் எழுத்தை உள்ளடக்கும் கட்டத்துக்குள் அமையும் வகையில் உருவாக்கப்படுகிறது.

block device : தொகுதிச் சாதனம் : ஒரு நேரத்தில் தகவல் பைட்டுகளின் தொகுதியை வட்டு போன்ற ஒன்றுக்கு அனுப்பும் வெளிப்புறச் சாதனம்.

block diagram : கட்ட வரைபடம்; பகுதிவாரி வரைபடம் : தரவுகளை செயலாக்கம் செய்யப்படுகின்ற தருக்க வரிசையை குறிப்பிடும் வரைபட வடிவம்.

blocked process : தடுக்கப் பட்ட செயல்முறை : தேவையான வசதிகள் கிடைக்காமல் போதல் அல்லது முன்னதாகவே தடுக்கப்படுவதால் செய்யப்பட முடியாத கணிப்பு செயல் முறை.

blocked records : தொகுக்கப்பட்ட பதிவேடுகள் : இரண்டு அல்லது மேற்பட்ட தருக்கக் கோப்புகளில் உள்ள ஏடுகளை ஒரே குழுவாக்கி ஒற்றை ஏடாக மாற்றி அமைத்தல்.

block gap : தொகுதி இடைவெளி : சேமிப்பக நாடாக்களிலும், வட்டுகளிலும் தரவு, தொகுதி தொகுதியாகத்தான் எழுதப்படுகிறது. அவ்வாறு எழுதப்படும்பொழுது இரு தொகுதிகளுக்கிடையே சிறிது இடைவெளி விடப்படுகிறது. இவ்வாறு இரு தரவுத் தொகுதிகளைப் பிரிக்கும் இடைவெளி தொகுதி இடைவெளி எனப்படுகிறது.

block graphics : தொகுதி வரைகலை : தொகுதி வரை கலை எழுத்துகள், ஆஸ்கி எழுத்துகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வரைகலை உருவங்கள். இந்த எழுத்துகளை சாதாரண எழுத்துகளைப் போலவே கணினி கையாள்வதால் துண்மிப் பட வரைகலையைவிட தொகுதி வரைகலையை கணினி வேகமாகக் காட்ட முடியும். அவற்றை அனுப்புவதும் விரைவாக நடக்கும்.

block header : தொகுதித் தலைப்பு : ஒரு நினைவக தொகுதி யையோ மற்றும் அதன் உள்ளடக்கங்களையோ குறிப்பிடும் தரவுகளின் சிறு பதிவேடு.

blocking : தொகுத்தல்; தொகுதியாக்கம் : திரட்டு தொகுதி என்று அழைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான சேமிப்பு அலகாக குறிப் பிட்ட அளவில் பதிவேடுகளைத் தொகுக்கும் செயல். கணினியின் உள்ளீட்டு, வெளியீட்டு செயல் முறைகளின் திறனை அதிகரிக்க இவ்வாறு செய்வதுண்டு. சொல் செயலாக்கத்தில், உரையின் ஒரு பகுதி தொகுதியாக ஒதுக்கப் படுவதுண்டு.

blocking factor : தொகுக்கும் காரணி : ஒரு வட்டு அல்லது காந்த நாடாவில் உண்மையாக இருக்கும் பதிவேட்டின் படி உள்ள தருக்கப் பதிவேடுகளின் எண்ணிக்கை. blocking object : தொகுக்கும் பொருள் : பொருள் சார்ந்த நிரல் களில், பல்வகைக் கட்டுப்பாட்டு இழைகளுக்கு உறுதியளிக்கும் அமைப்பு கொண்ட இயங்காத பொருள்.

block leader : தொகுதித் தொடக்கம்.

block length : தொகுதி நீளம் : ஒரு தொகுதியின் அளவை அளப்பது. பொதுவாக பதிவு, சொற்கள், எழுத்துகள் அல்லது பைட்டுகள் என்ற அலகுகளில் குறிப்பிடப்படும்.

block length, fixed : மாறாத் தொகுதி நீளம்.

block list : தொகுதிப் பட்டியல் : ஒரு கோப்பின் அச்சுத் திணிப்பு. மீண்டும் மாற்றியமைப்பதை குறைவாகச் செய்து, பதிவு களும், புலங்களும் அச்சிடப் படுகின்றன.

block move : தொகுதியாக நகர்த்தல் : 1. ஒரு உரையின் தொகுதியை ஒரு ஆவணம் அல்லது கோப்பில் இருந்து வேறொரு ஆவணம் அல்லது கோப்புக்கு மாற்றுதல். 2. சொல் செயலிகளில் ஒரு பனுவலின் தொகுதியை அடையாளம் கண்டு ஒரு கோப்பின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் நகர்த்தும் வசதி.

block operator : தொகுதிச் செயற்குறி

block protection : தொகுதிக் காப்பு.

block quote : தொகுதி வினா.

block size : தொகுதி அளவு : கோப்புப் பரிமாற்றத்தில் அல் லது இணக்கி வழியிலான தரவுப் பரிமாற்றத்தின்போது கணினிக்குள் ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இட மாற்றம் நடக்கும்போது கையாள வேண்டிய தரவுத் தொகுதியின் அளவு முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. தரவுப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து வன்பொருள் சாதனங்களையும் திறன் மிக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த அளவு தீர்மானிக்கப்படுகிறது.

block sort : தொகுதி வரிசையாக்கம் : ஒரு கோப்பினை தொகுதி தொகுதியாகப் பிரிக்கும் நுட்பம். கோப்பு தொடர்பான குழுக்களாகப் பிரிக்க இந்த நுட்பம் பயன்படும்.

block, storage : சேமிப்புத் தொகுதி.

block structure : தொகுதிக் கட்டமைப்பு : தொடர்புடைய அறிவிப்புகள், தொடர்கள் ஆகியவற்றை ஒன்றாகத் தொகுப்பதற் கான நிரல் கோட்பாடு. block structured language : தொகுதிக் கட்டமைப்பு மொழி.

blocks world : தொகுதிகள் உலகம்; தொகுதிகள் சூழல் : எந்திர மனிதனியல் மற்றும் இயற்கை மொழிகள் பற்றிய ஆராய்ச்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தொகுதிகளின் சூழல்.

block transfer : தொகுதிப் பரிமாற்றம் : சேமிப்பகத்தின் ஒரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தரவுத் தொகுதி முழுவதையும் மாற்றுதல்.

blow : ஊது : உப்பல் : துண்மிகளின் மென்கம்பிகளை ஊதி ப்ரோம் PROM சிப்புகளில் தரவு அல்லது குறியீடுகளை எழுதுதல். 1 துண்மி தனித்து விடப்படும்.

blow up : தடுத்து நிறுத்து : மிகை உப்பல் : ஒரு பிழை காரண மாகவோ, தன்னால் கையாள முடியாத தரவுகளைப் பெற்ற சூழ்நிலையிலோ ஒரு நிரல் திடீரென்று நின்று விடுதல்.

blue ribbon problem : நீல நாடா பிரச்சினை : முதல் முயற் சியிலேயே சரியாக இயங்கும் கணினி ஆணை தொடர். பிழை நீக்கவேண்டிய அவசியமில்லை.

blue ribbon programme : நீல நாடா நிரல் : முதல் முயற்சியிலேயே மிகச் சரியாக இயங்கி பிழைநீக்கம் செய்யப்பட வேண்டிய தேவையில்லாத நிரல்.

blue screen : நீலத்திரை : திரைப்படங்களில் ஒர் உருப் படத்தின் மீது இன்னோர் உருப் படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத் திரைக்கு முன்னால் ஒரு காட்சியை அல்லது ஒருவரின் நடிப்பைப் படம் பிடித்துக் கொள்வர். அடுத்து, விரும்புகின்ற பின்புலத்தைத் தனியாகப் படமெடுப்பர். முதலில் எடுத்த காட்சியை இந்தப் பின்புலத்தின் மீது பதியச் செய்வர். இப்போது குறிப்பிட்ட பின்புலத்தில் அக்காட்சி நடைபெறுவதுபோல இருக்கும். ஒருவர் நடந்து செல்வதையும் பாலைவனத்தையும் தனித்தனியே படம் பிடித்து, அவர் பாலைவனத்தில் நடப்பது போலக் காட்டிவிட முடியும்.

. bm : . பிஎம் : ஒர் இணையதள முகவரியில், அத்தளம் பெர் முடா நாட்டில் அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் பெருங்களப் பிரிவு.

BMMC : பிஎம்எம்சி : அடிப்படை மாதப் பாராமரிப்புக் கட்டணம் என்று பொருள்படும் Basic Monthly Maintenance Charge என்பதன் குறும் பெயர்.

. bmp : . பிஎம்பீ : துண்மி வரை படக் கோப்புப் படிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள, ராஸ்டர் வரைகலைக் படத்தைச் சுட்டும் ஒரு கோப்பின் வகைப் பெயர் (extension).

. bn : . பிஎன் : ஒர் இணைய தளம் புரூணை தாருஸ்ஸ்லாமில் அமைந்துள்ளது என்பதைச் சுட்டும் பெருங்களப் பிரிவின் பெயர்.

BNC : பிஎன்சி : இணையச்சு (coaxial) வடத்தில் இணைப்புக் காகப் பயன்படுத்தப்படுவது. ஒரு உருளைபோல தோன்றும் இந்த பிளக்கின் இரு எதிர்ப் புறங்களிலும் இரு சிறிய கம்பிகள் இருக்கும். பிளக்கை நுழைத்தவுடன், சாக்கெட்டை இயக்கினால் பிளக்கில் உள்ள கம்பிகள் இறுக்கம் அடைகின்றன.

BNC connector : பி. என். சி இணைப்பி : கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சுக் கம்பி வடத்தின் முனையைச் சாதனங்களில் இணைக்கப் பயன்படுகிறது. வண்ணத் தொலைக் காட்சிகளில் அலைவாங்கிகளை இணைக்க இத்தகைய இணைப் பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணைப்பியை அதற்குரிய செருகு வாயில் செருகி 900 திருப் பினால் சரியாகப் பொருந்திக் கொள்ளும்.

BNF : பிஎன்எஃப் : பேக்கஸ் இயல்பு வடிவம் என்று பொருள்படும் Backus Normal form என்பதன் குறும்பெயர். ஆர்டிபி எம்எஸ் தரவுத்தள அட்டவணை களில் பேசப்படுவது.

. bo : . பிஒ : ஒர் இணைய தளம் பொலீவியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்க, முகவரியின் இறுதியில் குறிக்கப்படும் பெருங்களப் பெயர்.

board : அட்டை : அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுவது. ஒரு தட்டையான, மெல்லிய, செவ்வக வடிவமுள்ள அட்டை கணினியின் உள்ளிருப்பது ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட அச்சிடப்பட்ட மின்சுற்று அடுக்குகளைக் கொண்ட வெளிப்புற உறுப்பு. இதில் சிப்புகள் மற்றும் பிற மின்னணு உறுப்புகள் இணைக்கப்படுகின்றன.

board computer : அட்டைக் கணினி : ஒரு தனி மின் சுற்று அட்டையில் எல்லா மின்னணு பாகங்களும் அமைக்கப்பட்டுள்ள ஒரு கணினி.

board exchange warranty : அட்டை மாற்றக்கூடிய சான்றுறுதி : முதல் அட்டையில் பழுது ஏற்பட்டால் அதற்குப் பதிலாக புதிய ஒன்றை மாற்றித்தருவதற்கு வாடிக்கையாளருக்கு அளிக்கப்படும் உறுதி.

board level : அட்டை நிலை : மரப்பலகையில் அல்லாது அச்சிட்ட மின்சுற்று அட்டையில் ஏற்றப்படும் மின்சுற்றுச் சாதனங்கள்.

body : உடற்பகுதி : இணையத்தில் மின்னஞ்சல் மற்றும் செய்திக்குழுத் தகவல்களில் தலைப்பகுதி மற்றும் உடற்பகுதிகள் உண்டு. அனுப்புபவரின் பெயர், இடம், சென்று சேரும் முகவரி போன்றவை தலைப்பகுதியிலும், உள்ளடக்கத் தகவல் உடற்பகுதியிலும் இடம் பெறுகின்றன.

body face : உடற்பகுதி எழுத்து வடிவம் : ஓர் ஆவணத்தை உருவாக்கும்போது முகப்புத்தலைப்பு, ஆவணத் தலைப்பு, பத்தித் தலைப்புகள் பெரிய/ தடித்த எழுத்தில் அமைகின்றன. உடற்பகுதியில் அமையும் தகவல்கள் ஒரளவு சிறிய எழுத்திலேயே அமைய வேண்டும். உடற்பகுதிக்கு ஏற்ற வடிவத்தை உடற்பகுதி வடிவம் என்கிறோம். சேன் செரீஃப், டைம்ஸ் நியூ ரோமன் போன்ற எழுத்துருக்கள் (fonts) உடற்பகுதிக்கு ஏற்றவை.

body type : உடல்வகை மாதிரி.

body works : உடல் இயக்கம் : மனித உடல் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி மென்பொருள்.

BOF : பிஓஎஃப் : Beginning of File என்பதன் குறும்பெயர். முதன்முதலாகத் திறக்கும்போது உள்ள கோப்பின் நிலை. கோப்புகாட்டியை மீண்டும் அமைக்கும் ஆணை அல்லது கட்டளை.

boilerplate : கொதிகலன் தகடு; கொதி தட்டு : பல்வேறு ஆவணங்களில் சொல்லுக்குச்சொல் மீண்டும் பயன்படுத்தப்படுகின்ற பனுவலின் பகுதி.

boilerplate document : கொதிகலன் தகட்டு ஆவணம் : சில தரமான பத்திகளில் தகவலைக் கொண்டு தேர்ந்தெடுத்த பத்திகளை ஒன்றாக இணைத்து ஏற்படுத்தப்படும் ஆவணம். bold : தடித்த.

bold declaration : தடித்த எழுத்தமைத்தல் : அச்சிட்ட பக்கத்தில் சொற்கள் தடிமனாக அமைய அச்சுக்கட்டுப்பாட்டு எழுத்துகளை சொல் செயலக ஆவணத்தில் சேர்த்தமைத்தல்.

boldface : தடித்த எழுத்து : சாதாரண எழுத்தைவிடத் தடித்துத் தோன்றும் எழுத்து. ஆவணத்தில் உள்ள உரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து தடிமன் என்ற கட்டளை தரும்போது, அப்பகுதி முழுவதும் தடித்த எழுத்துகளாகிவிடும்.

boldface bomb : தடித்தமுகக் குண்டு : Abend and Crash போன்றது. நிரல் தொடர்களை அழிக்கும் நிரலில் (வைரசின்) ஒரு அம்சம்.

boldface font : தடித்த அச்செழுத்து : வழக்கமான எழுத்துகளைவிட கறுப்பாகவும் கனமானதாகவும் உள்ள எழுத்துகளின் தொகுதி. தடித்த அச்செழுத்தில் எல்லா எழுத்துகளும் தடித்ததாக இருக்கும்.

boldfacing : தடித்த எழுத்து அச்சு; தடிப்பாக்கம் : சில அச்சுப்பொறிகளிலும் சொல்செயலாக்க அமைப்புகளிலும் உள்ள ஒரு தன்மை. கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றத்தைத் தருவது. நிழல் அச்சுமுறை மூலம் கொட்டை எழுத்து அச்சுபோன்ற தோற்றம் பல அச்சுப்பொறிகளில் தரப்படுகின்றது.

bold italics : தடித்த சாய்வெழுத்து.

bold printing : தடித்த அச்சு : சுற்றிலும் உள்ள எழுத்துகளைவிட அழுத்தமாக சில எழுத்துகளை உருவாக்கும் திறன். நிழல் அச்சு அலலது பலமாக அடித்தல் மூலம் சில அச்சுப்பொறிகள் தடித்த எழுத்துகளை உருவாக்குகின்றன.

Bollee, Leon : போலி, லியோன் : திரும்பத்திரும்ப கூட்டுவதற்குப் பதிலாக நேரடியாக பெருக்கலைச்செய்யும் முதல் எந்திரத்தை 1886இல் வெற்றிகரமாக வடிவமைத்த ஒரு ஃபிரெஞ்சுக்காரர்.

bomb : வெடி : 1. ஒரு நிரலாக்கத் தொடரின் மகத்தான தோல்வி. 2. ஒரு அமைப்பைத் தடுக்கக்கூடிய ஒரு நிரலாக்கத் தொடரை எழுதி ஒரு அமைப்பை வேண்டுமென்றே நாசம் செய்தல்.

book keeping : கணக்கு வைப்பு.

bookman : புக்மேன் : ஒரு வகையான எழுத்துரு. ஐடிசி நிறுவனம் உருவாக்கிய ஒரு எழுத்துரு வகை. bookmark : பக்க அடையாளக் குறி; நினைவுக் குறி : 1. பின்னால் எளிதாக அடையாளம் காணும்பொருட்டு ஓர் ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இட்டு வைக்கும் அடையாளக் குறி. 2. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற இணைய உலாவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையப்பக்கம் அல்லது இணைய முகவரிக்கு, பின்னால் மீண்டும் காணும்பொருட்டு ஒரு தொடுப்பினை நிலைவட்டுக் கோப்பில் குறித்து வைத்துக் கொள்வது.

bookmark file : அடையாளக் குறிக்கோப்பு : 1. நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர் உலாவியில் இது ஒரு கோப்பு. நமக்குப் பிடித்தமான வலையகங்களின் முகவரிகளைக் கொண்டது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் விருப்பத் தளங்களின் கோப்புறை (Favourites Folder) எனப்படுகிறது. சூடான பட்டியல் (hotlist) என்றும் அழைக்கப்படுவதுண்டு. 2. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, ஹெச்டி எம்எல் வடிவத்தில் ஒரு பக்கத்தில் வெளியீடு செய்யப்படுகின்ற, நாம் விரும்பிப்பார்த்த வலையகங்களின் முகவரிகள் அடங்கிய கோப்பு.

boolean : பூலியன் : பெரும்பாலான கணினி மொழிகளில் பயன்படுத்தப்படும் தரவு இனம் (data type). உண்மை/பொய், சரி /தவறு, ஆம்/இல்லை என்பது போன்ற இரண்டிலொரு மதிப்புகளையே இந்தத் தரவு இனம் ஏற்றுக்கொள்ளும். சில மொழிகளில் நேரடியாகவே பூலியன் என்னும் தகவல் இனம் உண்டு. சரி, தவறு ஆகிய மதிப்புகளில் ஒன்றை இருத்திவைக்க முடியும். வேறுசில மொழிகளில் நேரடியான பூலியன் இனம் கிடையாது. சுழி என்னும் பூஜ்யம் தவறு எனவும், சுழியல்லாத மதிப்பு சரி எனவும் கையாளப்படுகிறது. பூலியன் குறிக்கணிதத்தை உருவாக்கிய ஆங்கிலக் கணித மேதை ஜார்ஜ் பூல் (George Bool) அவர்களின் பெயரில் இது அமைந்துள்ளது.

boolean algebra : பூலியன் குறிக்கணக்கு : குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரணகாரிய உறவுகளைப் பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற துறைகளில் வெளியே தெரியாமல் இருந்த துறை. மின்னணு கணினியின் காரண - காரிய வடிவமைப்பில் ஒரு முக்கிய பிரிவாக உருவாகி உள்ளது. ஜார்ஜ் பூலேவுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டது. boolean calculus : பூலியன் கணக்கீடு.

boolean complementation : பூலியன் நிரப்புகை.

boolean data : பூலியன் தரவு : ஆம்/ இல்லை அல்லது உண்மை / பொய் என்னும் மதிப்புகளை ஏற்கும் தரவு.

boolean equations : பூலியன் சமன்பாடுகள் : கணக்கோட்பாடு (set theory) கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் கணங்களுக்கிடையேயான சமன்பாடுகள்.

boolean expression : பூலியன் தொடர்; பூலியன் கோவை : பூலியன் இயக்கிகளின் மூலம் உண்மை அல்லது பொய் என்ற இரண்டில் ஒன்றை குறிக்கும் தொடர்.

boolean logic : பூலியன் தருக்கம் : 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஜார்ஜ் பூல் என்ற ஆங்கிலக் கணிதமேதை உருவாக்கிய தருக்கக் கணிதம். அதன் விதிகளும், இயக்கங்களும் எண்களுக்குப் பதிலாக தருக்கப் பணிகளை ஆற்றுகின்றன. AND, OR, NOT ஆகியவை பூலியன் இயக்கத்தின் அடிப்படைகள்.

boolean operation, binary : இரும பூலியன் செயற்பாடு.

boolean operator : பூலியன் இயக்கி : தருக்க இயக்கிக் கணக்கீடுகள் மற்றும் முடிவுகள் இரண்டு மதிப்புகளில் ஒன்றாகவே அமையும்.

boolean Search : பூலியன் தேடல் : குறிப்பிட்ட தரவுகளைத் தேடல், பூலியன் இயக்கிகளான AND, OR, NOT ஆகியவற்றைப் பயன்படுத்தி எந்த ஒரு நிலையையும் தேட முடியும்.

boolean variable : பூலியன் மாறிலி : உண்மை அல்லது பொய் என்ற இரண்டு மதிப்புகளை மட்டுமே ஏற்கும் மாறிலி.

Boole, george 1815 - 1864 : பூல், ஜார்ஜ் 1815-1864 : ஆங்கில தருக்கவியல் மற்றும் கணிதவியல் அறிஞர். 1847இல் தருக்கவியலை கணித முறையில் ஆய்வது என்று ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டார். 1851இல் தருக்க அமைப்பைப் பற்றிய முதிர்ச்சிமிக்க சிந்தனை விதிகளின் ஆய்வு என்ற அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். இதில் தருக்கவியல் பற்றிய கணிதகொள்கைகள் உருவாக்கப்பட்டன.

bool type : தருக்க இனம்.

boot : ஏற்று; இயக்கு : Boot strap என்பதில் இருந்து எடுக்கப்பட்ட சொல். கணினியின் சேமிப்புச் சாதனத்தின் மூலம் நிரல்களைப் படித்து ஒரு கணினியின் நினைவகத்திற்கு அனுப்புவது அல்லது மீண்டும் கணினியைத் இயக்குவது. ஏற்கெனவே கணினி இயங்கிக் கொண்டிருக்கும்போது அதனை இயக்கும் முறையை முதன்மை நினைவகத்திற்கு அனுப்புவது.

bootable : இயக்க முறைமை ஏற்றிய : இயக்க முறைமைக் கோப்புகள் பதியப்பட்டு கணினியை இயக்கி வைக்கப் பயன்படுகின்ற நெகிழ்வட்டைக் குறிக்கும்.

bootable disk : இயக்குறு வட்டு : இயக்க முறைமையைக் கொண்டுள்ள வட்டு. பொதுவாக இது நெகிழ் வட்டின் இயக்கத்தில் ஏற்றக்கூடிய நெகிழ்வட்டு இல்லையென்றால், நிலைவட்டிலிருந்து எடுத்துத் துவக்கும் ஆணை ஏற்றப்படும்.

boot block : இயக்கத் தொடக்கப் பகுதி : இயக்க முறைமையை நினைவகத்தில் ஏற்றும் ஆணைகளையும், கணினியை இயக்கிவைக்கும் ஏனைய தகவல்களையும் பதித்து வைத்துள்ள வட்டுப் பகுதி.

boot/booting : இயக்கு/இயக்குதல் : கணினியைத் தொடக்கு என்பதைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் தனி மொழிச் சொல். நாம் கணினியின் பொத்தானை இயக்கியவுடன், ஏற்றும் பகுதியிலிருந்து ஆணை வந்து கணினி இயங்குகிறது. அந்த உற்பத்தியாளரே ரோமில் (ROM) சிறிய நிரலாக அமைத்திருப்பார்.

boot disk : இயக்கு வட்டு : கணினியை இயக்குவதற்குரிய இயக்கமுறைமை சேமிக்கப்பட்டுள்ள வட்டு. கணினியை இயக்கியதும், இந்த வட்டிலுள்ள இயக்க முறைமை நினைவகத்தில் ஏற்றப்பட்டு, கணினி பணியாற்ற தயாராகிவிடும். இயக்குவட்டு நெகிழ்வட்டாகவோ அல்லது நிலைவட்டின் ஒரு பகுதியாகவோ இருக்கலாம்.

boot drive : இயக்கு வட்டியக்ககம் : இயக்க முறைமை அமைந்துள்ள வட்டு இயக்ககம்.

boot failure : இயக்கத் தோல்வி : கணினியை இயக்க முற்படும் போது, இயக்க முறைமையை வட்டில் கண்டறிந்து நினைவகத்தில் ஏற்றிக் கணினி இயக்கத்தைத் தொடக்கி வைக்க முடியாமல் போகும்போது இத்தகைய தோல்வி நேருகிறது.

boot partition : இயக்க பாகப்பிரிவு : இயக்க முறைமைக் கோப்புகள் மற்றும் துணைக் கோப்புகள் எழுதப்பட்டுள்ள வட்டுப் பகுதி. கணினியை இயக்கும்போது அல்லது புத்துயிரூட்டும்போது இக் கோப்புகள் நினைவகத்தில் ஏற்றப்படுகின்றன.

boot protocol : இயக்க நெறிமுறை : ஆர்எஃப்சி 951 மற்றும் 1084 ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறை. வட்டில்லாத பணி நிலையக் கணினிகளை இயக்க வைக்கப் பயன்படுகிறது. பூட்பீ (bootP) என்றும் கூறுவர்.

boot record : இயக்கு ஏடு : கணினியைத் இயக்குவதற்கு வேண்டிய இன்றியமையாதவற்றைக் கொண்ட செயலாக்க அமைப்புப் பகுதி. இயக்கும் தகவலைச் சேமித்து வைக்கும் துணை நிலை சேமிப்பகத்தின் பகுதி.

boot ROM : இயக்கு ரோம் : வழங்கன் கணினியிலோ அல்லது பிற தொலைதுார நிலையத்திலோ பணி நிலையம் இயங்க அனுமதிக்கும் நினைவகச் சிப்பு. booting எக்கித் தள்ளல் ; boot sector இயக்கு வட்டக்கூறு : boot strap இயக்க முன்னோடி.

boot sector : இயக்கு வட்டக் கூறு; இயக்க வட்டுப் பிரிவு : ஒரு வட்டு பல்வேறு வட்டக் கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. இயக்க முறைமையை வட்டிலிருந்து நினைவகத்தில் ஏற்றும் எந்திரமொழி நிரல் பதிவு செய்யப்பட்டுள்ள பகுதி இயக்க வட்டக் கூறு எனப்படுகிறது. கணினிக்கு மின்சாரம் வழங்கியதுமே இந்த நிரல் தானாகவே செயல்படும். வட்டில் பதியப்பட்டுள்ள இயக்கமுறைக் கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை நினைவகத்தில் ஏற்றும் பணியை இச்சிறிய நிரல் செய்து முடிக்கிறது.

boot sequence : இயக்கும் முறை விசை.

bootstrap : ஏற்றும் வசதி; முன்னோடி : கணினியில் பெரிய நிரலை துழைக்க அனுமதிக்கும் வசதி.

bootstrap loader : முன்னோடி ஏற்றி : ஏற்றுப் பதிவேட்டின் முதல் பகுதி. இந்தத் தொழில்நுட்பத்தின்படி ஒரு நிரல் தொடரின் முதல் சில நிரல்களின் மூலம் மீதமுள்ளவற்றையும் உள்ளிட்டுச் சாதனத்திலிருந்து கணினியில் கொண்டு வரமுடியும்.

bootstrapping : இயக்கத்தொடக்கம் : பூட்ஸ்ட்ராப் என்னும் சிறிய அரிச்சுவடி நிரலைப் பயன்படுத்தி வேறொரு நிரலை நினைவகத்தில் ஏற்றி, ஒரு கணினியை இயக்க வைத்தல்.

boot tape : ஏற்றுக் நாடா : பல கணினிகளில் இயக்க முறை மையை நாடாவில், பொதுவாக பேழையில் சேமிப்பார்கள். நாடா இயக்க முறைமையைப் பயன்படுத்தும் கணினியை இயக்கும் நாடா அடங்கியுள்ள, நாடா இயக்ககம் இல்லாமல் பயன்படுத்த முடியாது.

bootup disk : இயக்கும் வட்டு.

boot virus : இயக்க நச்சு நிரல் : ஃபிளாப்பி எனும் வட்டில் இயக்குப் பகுதியில் எழுதப்பட்ட நச்சுநிரல். அத்தகைய நெகிழ்வட்டை ஏற்றும்போது அது கணினி அமைப்பில் தொற்றிக் கொள்கிறது. சான்றாக, மைக்கேல் ஏஞ்சலோ வைரசானது அது பிடித்துள்ள வட்டை ஏற்றினால் மைக்கேல் ஏஞ்சலோ பிறந்தநாளான மார்ச் 6ஆம் நாள் அன்று அது ஏற்றப்பட்ட கணினியில் உள்ள தரவுகளை அழித்துவிடும்.

BOP : பிஓபீ : பிட் சார்ந்த நெறிமுறை என்று பொருள்படும் Bit-Oriented Protocol என்பதன் குறும்பெயர்.

border : எல்லை : திரையின் மீது இயங்கும் சாளரத்தில், பயனாளரின் பணியிடத்தைச் சுற்றியுள்ள விளிம்பு. ஒரு ஆவணம் அல்லது வரைகலையைச் சுற்றி தெரியக்கூடிய எல்லைக்கோடு, அச்சில், ஒரு பக்கம் அல்லது ஒவியத்தில் ஒன்று அல்லது மேற்பட்ட விளிம்புகளில் காணப்படும் கோடு அல்லது அமைப்பு.

Border Gateway protocol : எல்லை நுழைவி நெறிமுறை : இன்றைய இணையத்தின் முன்னோடியாக விளங்கிய என்எஸ்எஃப். நெட் பிணையத்தில் பயன்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்ற நெறிமுறை. புறநுழைவி நெறிமுறை (External Gateway Protocol) யின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சுருக்கச்சொல் பிஜிபீ (BGP) ஆகும்.

border layout : கரை உருவரை.

border properties : கரைப் பண்புகள்.

bore : போர் : ஒரு நெகிழ்வட்டு அல்லது காந்த நாடா சுருணை போன்றவற்றின் துளையின் குறுக்களவு.

Borland C++ : போர்லேண்ட் சி++ : டாஸ் மற்றும் விண்டோஸ் பயன்பாடுகளுக்காக போர்லாண்ட் நிறுவனம் உருவாக்கிய அன்சி சி மற்றும் சி++ தொகுப்பு மொழி மென்பொருள். சி-யில் எழுதப்பட்ட விண்டோஸ் நிரல்கள் மற்றும் டர்போசி-யை ஏற்பதுடன் பிழை நீக்கவும் செய்யும்.

Borland (Borland int'l) போர்லாண்ட் : 1983இல் பிலிப்கான் உருவாக்கிய முன்னணி பீ சி மென் பொருள் நிறுவனம். அதனுடைய டர்போ பாஸ்கல் கல்வி நிலையங்களிலிருந்து வெளிவந்து வணிகப்பொருளானது டர்ப்போ சி தொழில்துறை தர அளவு கோலானது. டர்போ பாஸ்கல் மற்றும் போர்லண்ட் சி++ மூலம் விண்டோஸ் மற்றும் பொருள் நோக்கு நிரலாக்கமும் இயலும்.

borrow : கடன் வாங்கு : கணித முறையில் கழித்தல் செய்யும் போது, குறைந்த வரிசை இலக்கத்தினை உயர்த்தி அடுத்த உயர் வரிசை இலக்கத்திலிருந்து ஒன்று கழிக்கப்படுகிறது.

boss screen : முதலாளியின் திரைக் காட்சி; மேலதிகாரியின் திரைத் தோற்றம் : அனைத்துக் கணினி இயக்க முறைமைகளிலும் கணினி விளையாட்டுகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளன. சொந்தக்கணினிகளின் வருகைக்குப்பின் கணினி விளையாட்டுகள் பலரையும் ஈர்த்தன. அலுவலகங்களில் கணிப்பொறிகள் புகுத்தப்பட்டபின், அலுவலக ஊழியர்கள் பணி நேரத்தில் கணினி விளையாட்டுகளில் மூழ்கி விடுவது வாடிக்கையாக நிகழும் ஒன்று. அந்த நேரம் முதலாளி அல்லது மேலாளர் அங்கே வந்து விட்டால், உடனடியாக கணினித் திரையில் ஒரு புதிய தோற்றத்தை வரவழைத்து விடுவர். இது போல முதலாளி/மேலதிகாரி வரும்போது காட்டுவதற்கென்றே டாஸ் விளையாட்டுகளில் தனிச்சிறப்பான திரைத் தோற்றங்கள் இருந்தன. அதில் பெரும்பாலும் வணிகம் தொடர்பான விவரங்கள் காணப்படும். இப்போதுள்ள மேக், விண்டோஸ், லினக்ஸ் பணித்தளத்தில் இத்தகைய சிக்கல் இல்லை. நொடியில், ஒரு கட்டிச் சொடுக்கில் திரைத் தோற்றத்தை மாற்றிவிட முடியும்.

bot : பாட் : நாடாவின் தொடக்கம் எனப்பொருள்படும். Beginning of Tape என்பதன் குறும் பெயர். ஒரு காந்த நாடாவில் பதிவு செய்வதை எந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் குறியீடு.

bottleneck : இடர்ப்பாடு.

bottom-up design : கீழிருந்து-மேல் வடிவமைப்பு : ஒரு மென் பொருள் பயன்பாட்டை உருவாக்குவதில் பின்பற்றப்படும் வடிவமைப்புச் செயல்முறை. முதலில் கீழ்நிலைப் பணிகளுக்கான நிரல்வரைவும், பிறகு அவற்றை அடிப்படையாகக் கொண்டு உயர்நிலைப் பணி களுக்கான நிரல் வரைவும் வடிவமைக்கப்படும்.

bottom-up programming : கீழிருந்து-மேலான நிரலாக்கம் : பெரும்பாலான நிரலர்கள், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் ஆகிய இரண்டு முறைகளின் சரியான கலவையே சிறந்தமுறை என நம்புகின்றனர்.

bottom up technique : கீழிருந்து மேல் செல்லும் நுட்பம்.

bounce : திருப்புகை, திருப்பிவிடும்; திருப்பியனுப்பு : நமக்கு வரும் மின்னஞ்சலை நமது கருத்துரை எதுவுமின்றி, மேலொப்பம் எதுவுமின்றி அப்படியே இன்னொருவருக்குத் திருப்பி அனுப்புதல். அந்த மின்னஞ்சலைப் பெறுபவர்க்கு நாம் திருப்பியனுப்பிய மடல் என்பதை அறிய முடியாது. நமக்கு அஞ்சல் அனுப்பியவரிடமிருந்து அது வந்துள்ளதாகவே எண்ணிக் கொள்வார்.

Bouncekeys : திருப்பு விசைகள் : விண்டோஸ் 95/98இல் உள்ள ஒரு சிறப்புக் கூறு. விசைப்பலகையில் ஒரே விசையை இரு முறையோ, அறியாமல் தவறுதலாக வேறுசில விசைகளையோ சேர்த்து அழுத்தும்போது, அவற்றைப் புறக்கணிக்குமாறு நுண்செயலிக்கு ஆணையிடலாம்.

bound : கட்டுப்பட்ட : செயலகம் அல்லது உள்ளீடு / வெளியீடு போன்ற கணினியின் எந்தப் பகுதியின் செயல்முறையாவது, கட்டுப்பட்டதாக இருத்தல். வேகமாகச் செயல்படுவதைக் கணினியின் எந்த பாகம் தடைசெய்கிறது என்பதைக் குறிப்பிடுவது.

boundary : எல்லை : ஒரு கோப்பு போன்றவற்றில், நினைவகத்தில் வரையறுக்கப்பட்ட இடைவெளி, சான்றாக, நிரல் தொடர்கள் 16 பைட் எல்லைகளுக்குள் நினைவகத்தில் வைக்கப்படும். அத்தகைய முழு நினைவு முகவரியை எப்போதும் 16ஆல் வகுக்க முடியும்.

boundary fill : எல்லை நிரப்பி : ஒரு பகுதியை நிறத்தால் நிரப்பும் செயல்முறை. எல்லை மதிப்பு உள்ள படப்புள்ளிகளால் எல்லையமைக்கப்பட்ட அனைத்துப்படப்புள்ளிகளையும் புதிய மதிப்பு (நிறம்) களால் நிரப்புதல்.

bound column : கட்டுண்டநெடுக்கை.

bound controls : கட்டுண்ட இயக்கு விசைகள்.

boundry of input : உள்ளீட்டு எல்லை.

Bourne shell : போர்ன் செயல் தளம் : யூனிக்ஸ் இயக்க முறைமைக்காக முதன் முதலாக உருவாக்கப்பட்ட செயல்தளம் அல்லது நிரல் மாற்றி எனலாம். ஏடீ&டீ சிஸ்டம்-V யூனிக்ஸின் இடம் பெற்றது. 1979ஆம் ஆண்டில் ஏடீ&டீ பெல் ஆய்வுக் கூடத்தில் ஸ்டீவ் போர்ன் (steve bourne) இதனை உருவாக்கினார். ஏனைய யூனிக்ஸ் செயல்தளங்களில் இருக்கின்ற சில வசதிகள் (கட்டளை வரியில் ஒரு கோப்பினைத் திருத்தியமைப்பது, முந்தைய கட்டளைகளைத் திரும்ப வரவழைப்பது) இல்லாத போதும், செயல்தள நிரல்கள் பெரும்பாலானவை போர்ன் செயல்தளத்தில் இயங்குபவையாகவே உள்ளன.

box class : பெட்டி இனக்குழு.

box, decision : தீர்வுப் பெட்டி.

box drawing characters : பெட்டி வரையும் குறிகள் : நீட்டிக்கப்பட்ட ஆஸ்கியில் உள்ள பெட்டிகளை வரையப் பயன்படுத்தப்படும் குறிகளின் தொகுதி.

box layout : பெட்டி உருவரை.

bozo : போஸோ : இணையத்தில் குறிப்பாக செய்திக் குழுக்களில் முட்டாள்தனமான, பிறழ்மனப்போக்கு உடையவர்களைக் குறிக்கப் பயன்படும் கொச்சைச் சொல்; பேச்சு வழக்குச் சொல்.

bozo filter : போஸோ வடி கட்டி : இணையப் பயனாளரின் கணினியில் மின்னஞ்சல் மற்றும் செய்திக் குழுவுக்கான மென்பொருள் தொகுப்பில் இருக்கும் வசதி. இதன்மூலம் ஒருவர் தனக்கு, குறிப்பிட்ட சிலரிடமிருந்து வரும் மின்னஞ்சல்களையும், செய்திக்குழுக் கட்டுரை வடிகட்டிப் புறக்கணித்து விடலாம். பெரும்பாலும், போஸோக்களிடமிருந்து வரும் தகவல்களைத்தான் இவ்வாறு தடுப்பர்.

BPI : பிபிஐ : ஓர் அங்குலத்தில் இத்தனை பிட்டுகள் எனப்பொருள்படும் bit per inch என்பதன் சுருக்கம். bytes per inch என்பதற்கு BPI என்று குறும்பெயர் தரப்படுகிறது.

bps : பிபீஎஸ் : ஓர் வினாடியில் இத்தனை பிட்டுகள் எனப்பொருள்படும் bits per second மற்றும் bytes per second என்பதன் குறும்பெயர், bps என்பதாகும்.

bracket : அடைப்புக்குறி.

brain-damaged : மூளை பாதிக்கப்பட்ட : மோசமாக நடக்கும் அல்லது அழிக்கும் முறையில் செயல்படும் நிரலைக் குறிப்பிடும் சொல்.

brain dump : குப்பைத் தகவல் : மின்னஞ்சல் அல்லது செய்திக்குழு வழியாக கேட்கப்பட்ட கேள்விக்கு வந்து குவிந்த முறைப்படுத்தப்படாத ஏராளத்தகவல் குப்பை, அவற்றைப் புரிந்து கொள்வதும் பொருளறிவதும் மிகக்கடினமான செயல்.

brain-wave interface : மூளை- அலை இடைமுகம் : மனிதனின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப கணினி செயலாற்றும் திறனுடைய மென்பொருள் மற்றும் வன்பொருள்.

branch : இணை பிரிதல் : 1. சில நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டின் ஓட்டம் ஒன்று அல்லது பலபாதைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தல். 2. ஒரு நிரல்வரிசையில் இருந்து மற்றொரு நிரல் வரிசைக்குக் கட்டுப்பாட்டினை மாற்றக்கூடிய ஆணை.

branching : கிளைத்தல்; கிளை பிரித்தல்.

branching Statement : கிளைபிரிக் கூற்று ; கிளைபிரி கட்டளை.

branch Instruction : கிளை பிரிப்பு ஆணை : ஒரு நிரலில் இரண்டில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குக் கணினிக்கு உதவும் ஆணை. நிரலை இயக்கும்போது, சூழ்நிலைக்கேற்ப பிரிந்து போதல் செயல்படுத்தப்படும்.

branch point : பிரியும் இடம் : ஒரு நிரலில் பிரிந்து போதலைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடம்.

branded : முத்திரைப் பெயர்.

BRB : பிஆர்பி : நான் மீண்டும் வருவேன் என்று பொருள்படும் I'll be right back என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இணைய அரட்டை மற்றும் இணைய தகவல் சேவைகளில் கலந்து கொள்வோர் தற்காலிகமாக அக்குழுக்களிலிருந்து பிரியும் போது தரும் செய்தி.

bread board : சோதனைப் பலகை; பிரெட்போர்ட் : ஒரு செயல்முறைச் சாதனம் அல்லது ஒரு அமைப்பின் சோதனை முறையிலான அல்லது தற்காலிகமான மாதிரி அமைப்பு.

சோதனைப் பலகை

breadth-first search : அகல - முதல் தேடல் : மரவடிவ தரவு அமைப்பை அலகம் ஒரு முறை. இம்முறையில் ஒரு நிலையில் உள்ள எல்லா முனைகளையும் தேடிய பின் அடுத்த நிலையில் தேடுவது. இதன் மூலம் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான கருக்கமான பாதையை முதலில் கண்டு பிடிக்க முடியும்.

Break : முறி; நிறுத்து : ஒரு நிரலாக்கத்தொடர் செயல்படுவதைத் தடுப்பதற்கான ஆணை. Control Break என்பதற்கு ஒப்புமை உடையதல்ல.

break code : முறிவு குறி முறை : விசையினை முதல் முதலில் அழுத்தும்போது வெளியிடப்படும் ஸ்கேன் குறியீடு.

break, control : கட்டுப்பாட்டு முறிப்பு : கணினியில் ஒரு நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது Ctrl, Break ஆகிய இருவிசைகளையும் அழுத்தி நிரலின் ஒட்டத்தை நிறுத்தலாம்.

break down : நிலைகுலைவு.

break detect : முறிவு அறிதல் : நீள் வரிசை அளவை 0-க்களை கண்டுபிடிக்கும், தகவல் தொடர் தகவியின் திறன்.

break key : முறிவு விசை : கணினி செய்துகொண்டிருக்கும் வேலையை நிறுத்துவதற்கான விசை. சில கணினிகளில் காணப்படும்.

break mode : முறிவு பாங்கு.

breakout box : அவசர உதவிப் பெட்டி : கணினியில் இரண்டு சாதனங்களுக்கு (கணினியும் இணக்கியும்) இடையில் ஒரு வடம் மூலம் இணைக்கப்படும் ஒரு வன்பொருள் சாதனம். தேவையெனில், வடத்தின் தனித்த கம்பிகளின் வழியாகவும் சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அவசர உதவிப் பெட்டி

breakpoint : முறிவிடம் : ஒரு கட்டுப்பாட்டு ஆணை மூலமாகவோ அல்லது கையால் இயக்குவது மூலமாகவோ ஒரு நிரலை நிறுத்தக்கூடிய ஒரு இடம். சோதனை செய்தல் அல்லது பிழைநீக்க நிரல்களில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

breakpoint instructions : நிறுத்துமிட ஆணைகள்.

break signal : முறிவு சமிக்கை : தொகுதி கோப்பு செயல்படுவதை நிறுத்தவோ அல்லது நிரலை நிறுத்தவோ அல்லது செய்தித் தகவல் தொடர்பு நிகழ்வை நிறுத்தவோ பயன்படுத்தப்படும் சிறப்பு எழுத்து அல்லது எழுத்துகளின் தொகுதி.

BRI : பிஆர்ஐ : அடிப்படைக் கட்டண இடைமுகம் என்ற பொருள் தரும் Basic Rate Interface என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஐஸ்டிஎன் தகவல் தொடர்பில் இரண்டு பி (64 கேபிபீஎஸ்) தடங்களையும் ஒரு டி (64 கேபிபீஎஸ்) தடத்தையும் பயன்படுத்தி குரல், ஒளிக் காட்சி மற்றும் கணினித் தகவல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அனுப்பிப் பெறக்கூடிய வசதி.

bridge : இணைவி : பல தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இனைத்து ஒரு பல்முனை மின் சுற்றினை உருவாக்கும் சாதனம்.

bridge router : இணைவித்திசைவி : பிணையத்தில் இணைவியாகவும் திசைவியாகவும் செயல்படும் ஒரு சாதனம். ஒரு குறும்பரப்பு அல்லது விரிபரப்பு பிணையத்தின் இரு கூறுகளை இது இணைக்கிறது. இரு கூறுகளுக்கிடையே தகவல் பொதிகளை வழிச்செலுத்த இரண்டாம் நிலை முகவரிகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.

bridge ware : இணைப்புப் பொருள் : ஒருவகைக் கணினிக்கு எழுதப்பட்ட நிரல்களை வேறு வகையான கணினி புரிந்து கொள்வதற்கு மொழி பெயர்ப்பு செய்யும் நிரல்கள்.

brietcase : கைப்பெட்டி : விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் இருக்கும் ஒரு கோப்புறை (folder). பொதுவாக இரண்டு கணினிகளுக்கிடையே (குறிப்பாக மேசைக் கணினிக்கும் மடிக்கணினிக்கும் இடையே) கோப்புகளை ஒத்திசைவுப்படுத்திக் கொள்ளப் பயன்படுகிறது. இந்தக் கோப்புறையிலுள்ள கோப்புகளை வேறொரு கணினிக்கு வட்டின் மூலமோ, கம்பிவடம் மூலமோ பிணையம் மூலமாகவோ மாற்றலாம். அவ்வாறு நகலெடுத்த கோப்புகளை மீண்டும் முந்தைய கோப்புறையில் மாற்றும்போது, திருத்தம் செய்யப்பட்ட கோப்புகளை நாளதுவரை புதுப்பித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/E&oldid=1085118" இலிருந்து மீள்விக்கப்பட்டது