E

E : இ : மிதக்கும் புள்ளி. எண் முறையில் மடங்கு என்பதைக் குறிக்கும் குறியீடு. 17-E2 என்றால் 17-ன் அடுக்கு 2 என்பதைக் குறிக்கும்.

EAM : இஏஎம் : மின்னணுக் கணிதப் பதிவுக் கருவி : Electronic Accounting Machine என்பதன் குறும்பெயர். வழக்கமாக அலகு பதிவுக் கருவியைக் குறிக்கும்.

early binding : தொடக்கக் கட்டுமானம் : தொகுப்பு நிலையில் அச்செழுத்துருக்களைக் குறித்தளித்தல்.

EAROM : இஏரோம் : மின்னோட்டத்தால் மாற்றத்தக்க படிப்பு நினைவகம் : Electrically Alterable Read Only Memory என்பதன் குறும்பெயர். சேமிக்கப்பட்ட தரவுகளை அழிக்கத் தேவையில்லாமல் குறிப்பிட்டவற்றை மட்டும் மாற்றுகின்ற, படிக்கமட்டுமான (ரோம்) நினைவகம். அழிக்கத்தக்க செயல்முறையிலான, படிப்பதற்கான நினைவுப் பதிப்பி (EPROM) சாதனத்தில் எல்லாவற்றையும் அழித்துத்தான் புதியவற்றைச் சேர்க்க வேண்டும்.

earth : தரையிணைப்பு.

earth station : தரை நிலையம் : செயற்கைக்கோள் செய்தித் தொடர்புகளுக்கான அனுப்பீட்டு/ஏற்பு நிலையம். இது, நுண்ணலை அனுப்பீட்டுக்காக ஒரு கிண்ண வடிவ வானலை வாங்கியைப் பயன்படுத்துகிறது.

easter egg : ஈஸ்டர் முட்டை : ஒரு கணினி நிரலில் மறைந்து கிடக்கும் பண்புக்கூறு. மறைந்து கிடக்கும் ஒரு கட்டளையாக இருக்கலாம். நகைச்சுவையான செய்தியாக இருக்கலாம். ஒர் அசைவூட்டமாக இருக்கலாம். அந்த மென்பொருளை உருவாக்கியவர்களின் பட்டியலாக இருக்கலாம். ஈஸ்டர் முட்டையை உடைத்துப் பார்க்க, பயனாளர் பெரும்பாலும் தெளிவற்ற வரிசையில் பல விசைகளை அழுத்த வேண்டியிருக்கும்.

easy colour paint : எளிய வண்ண மை : தொழில்முறை சாராதவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட"ஆப்பிள் மெக்கின்டோஷ்" வரைகலைச் செயல்முறை. பயன்படுத்துபவர் ஒரு வண்ணத்தையும், தோரணியை யும் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஒரு கருவியினால் வண்ணம் பூசத் தொடங்குகிறார்.

easy writer : ஈசி ரைட்டர் : சொல் தொகுத்தலில் பயன்படுத்தப்படும் பல மென்பொருள் தொகுதிகளில் ஒன்று.

eavesdropping : ஒற்றுக்கேட்டல் : தரவுகளை இரகசியமாகக் கேட்டல். செய்திகளை இடைத் தடுப்பு செய்து கேட்டறிதல். இவ்வாறு செய்வது பெரும்பாலும் யாரும் அறிய முடியாததாக இருக்கும்.

EBAM : ஈபாம் : Electron Beam Addressed Memory என்பதன் குறும்பெயர். உலோக ஆக்சைடு அரைக் கடத்தி மேற்பரப்பின் மேல் படிக்கவோ எழுதவோ செய்யும் ஒளிக்கற்றையைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மின்னணு சேமிப்புச் சாதனம்.

EBCDIC : இபிசிடிக் : Extended Binary Coded Decimal Interchange Code என்பதன் குறும்பெயர். நவீன கணினிகளில் தரவுகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் 8 துண்மிக் குறியீடு. இபிசிடிக் மூலம் 256 தனி எழுத்துகளைக் குறிப்பிடலாம்.

e-bomb : மின்குண்டு : மின்னஞ்சல் குண்டு : மின்னஞ்சல் குண்டு என்பதன் சுருக்கம். சில கணினிக் குறும்பர்கள் (Hackers) ஒரு கணினிப் பிணையத்தில் (குறிப்பாக இணையத்தில்) நடைபெறும் தகவல் போக்குவரத்தை நிலைகுலையச் செய்வதற்குப் பயன்படுத்தும் உத்தி. ஏராளமான அஞ்சல் குழுக்களைக் குறி வைத்து அஞ்சல் அனுப்பி, அங்கிருந்து தொடரஞ்சலாக பிற அஞ்சல் குழுக்களுக்கும் அனுப்பச் செய்து, பிணையப் போக்கு வரத்தையும், கணினி சேமிப்பகங்களையும் அஞ்சல் போக்குவரத்தால் நிரம்பி வழியுமாறு செய்து நிலைகுலையச் செய்வர்.

ec : இசி : ஒர் இணைய தள முகவரி. ஈக்குவாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப் பெயர்.

ECAD : எக்காட் : மின்னணுவியல் கணினிசார் வடிவமைப்பு என்று பொருள்படும். "Electronic Computer-aided Design"என்ற ஆங்கிலத் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம்.

e-cash : மின் பணம்.

ECC : ஈசிசி (பிழை திருத்தக் குறியீடு) : பிழை திருத்தத்திற்காக தரவுத் தொகுதி முறையில் உள்ள குறியீடு.

ECF : இசிஎஃப் : உயர்தொடர்ப்பாட்டு வசதிகள் : முதன்மைப் பொறியமைவுகளிலிருந்து தரவு குறிப்புகளைக் கேட்கவும், தகவலிறக்கம் செய்யவும், முதன்மைப் பொறியமைவு நிரல்களைப் பிறப்பிக்கவும் DOS சொந்தக் கணினிகளை (PC) அனுமதிக்கிற IBM மென்பொருள். சொந்தக் கணினியிலிருந்து முதன்மைப் பொறியமைவுக்கு அச்சடிப்பி வெளிப்பாடுகளையும் இது அனுமதிக்கிறது.

echo : எதிரொலி;எதிரளிப்பு : மறுமொழி : 1. செய்தித் தரவு பரிமாற் றங்களின் போது அனுப்பப்பட்ட சமிக்கை சற்று தமாதமாக வருவதன் மூலம் சமிக்கை பிரதிபலிப்பதைக் குறிப்பிடுதல். 2. கணினி வரைகலைகளில், கணினி அமைப்பிற்கு வரை கலைகளை உள்ளீடு செய்யும்போது வடிவமைப்பவர் பெறும் பதில்கள்.

echo cancellation : எதிரொலி அழித்தறவு : முதன்மை அனுப்பீட்டுக் குறியீட்டிலிருந்து ஏற்படும் எதிரொலிகளினால் உண்டாகும் தேவையற்ற குறியீடுகளைத் தனிமைப்படுத்தி, வடிகட்டுவதற்கான மிகைவேக அதிர் விணக்க மற்றும் அதிர்விணக்க நீக்கத் தொழில்நுட்பம்.

echo check : எதிரொலி சோதனை;மறுமொழிச் சோதனை : தரவு கணினி இடமாற்றல் இயக்கத்தின் போது துல்லியத்தைச் சோதித்தல். இம்முறையில் பெறப்பட்ட தரவுகளைத் தொடங்கிய இடத்திற்கு அனுப்பி மூலத் தகவல்களுடன் ஒப்பிடுதல்.

echoplex : எதிரொலிச் சரிபார்ப்பு : தரவு தொடர்பில் பிழை கண்டறியப் பயன்படும் ஒரு நுட்பம். தகவலைப் பெறும் நிலையம், பெற்ற தகவலை மீண்டும், அனுப்பிய நிலையத்துக்குத் திருப்பியனுப்பும். அதனைத் திரையில் கண்டு, தரவு துல்லியமாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

echo suppressor : எதிரொலி ஒடுக்கி : ஒரு தொலைபேசி இணைப்பில் எதிர்த்திசை அனுப்பீட்டுக்கு வழி செய்கிற செய்தித்தொடர்பு உத்தி. இதன் மூலம், மின்சுற்று வழியைத் திறம்பட ஒரு வழிச்சுற்றாக்க முடிகிறது. தொலைபேசி இணைப்புகளில், குறிப்பாகச் செயற்கைக்கோள் மின்சுற்று வழிகளில், இடையூறாக இருக்கும் எதிரொலி விளைவுகளைக் குறைக்க இது பயன்படுகிறது.

Eckert, J. Presper : எக்கர்ட், ஜே. பிரஸ்பெர் : ஜான் மவ்க்லியுடன் சேர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூர் மின்பொறியியல் கல்லூரியில் 1943

"https://ta.wikisource.org/w/index.php?title=கணினி_களஞ்சிய_அகராதி-2/Z&oldid=1085168" இலிருந்து மீள்விக்கப்பட்டது