கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/C


C

.ca : சிஏ : இணையத்தில் ஒரு தள முகவரி கனடா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் களப்பெயர்.

c2C : நுகர்வோர் - நுகர்வோர் மின் வணிக நடவடிக்கை : மின் வணிக (e-commerce) நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்கள் (customer) அல்லது நுகர்வோர் (consumer) தங்களுக்குள் நடத்திக் கொள்ளும் வணிகப் பரிமாற்றம். தம்மிடமுள்ள ஒரு பழைய பொருளை இணையத்தில் விளம்பரம் செய்து விற்றல் அல்லது ஏல விற்பனை இதில் அடங்கும்.

C++ : சி++ : பெல் ஆய்வுக் கூடத்தில் 1980களின் தொடக்கத்தில் ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரப் உருவாக்கிய கணினி மொழி. டென்னிஸ் ரிட்சி உருவாக்கிய சி-மொழியின் விரி வாக்கமாய் அமைந்த மொழி. சி. மொழியின் பொருள் நோக்கிலான நிரலாக்கப் பதிப்பு என இதனைக் கூறலாம். ஆப்பிள் மற்றும் சன் நிறுவனங்கள் உட்பட பல்வேறு கணினி நிறுவனங்களும் இம் மொழியை விழைந்தேற்றுக் கொண்டன.

.cab : கேப் : ஒரு குறிப் பிட்ட வகை கோப்பின் வகைப் பெயர் (file extention). பல கோப்புகளை இறுக்கிச் சுருக்கி ஒரே கோப்பாக உருவாக்குவர். பின் அதனை விரித்து மீண்டும் தனித்தனிக் கோப்புகளைப் பெறுவர். மைக்ரோசாஃப்ட் நிறு வனத்தின் விண்டோஸ் 95/98 போன்ற இயக்க முறைமைத் தொகுப்புகள் இது போன்ற கேப் கோப்பு வடிவிலேயே வழங்கப்படுகின்றன cab என்பது cabinet என்பதன் சுருக்கம் ஆகும். பல கோப்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பெட்டி என்ற பொருளைக் குறிக்கிறது.

C2 : சி2 : அமெரிக்காவில் தேசிய கணினி பாதுகாப்பு மையம், கணினி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பாக வரையறுத்துள்ள அளவு கோலில் மிகக் குறைந்த அளவிலான பாதுகாப்பு அலகு. பயனாளர், ஒரு நுழைசொல் (password) மூலம் கணினி அமைப்பை அணுக வேண்டும். தகவல் பரிமாற்றங்களை தணிக்கை செய்யும் முறையும் இதில் அடங்கும். ஆரஞ்சு புத்தகத்தில் சி2 பாதுகாப்புத் தரமுறை விளக்கப் பட்டுள்ளது. காண்க orange Book.

cabinet : நிலைப்பெட்டி கணினிப் பெட்டி; வெளிக்கூடு : ஒரு கணினியின் இன்றியமையாத பாகங்களான


கணினி வெளிக்கூடு மையச் செயலகம், நினைவகம், புறச்சாதனங்களுக்கான விரிவாக்கச்செருகு வாய்கள் அடங்கியதாய்ப் பலகை மற்றும் நிலை வட்டகம், நெகிழ் வட்டகம், குறுவட்டகம் இவற்றை உள்ளடக்கியுள்ள கணினிப் பெட்டி.

cable matcher : வட இசைவி : ஒரு சாதனத்தில் இணைக்கப்படும். வடத்தில் சற்று வேறுபாடான கம்பி இணைப்புகள் இருக்கும்போது, அதனைப் பொருத்தமானதாய் மாற்ற உதவும் ஒர் இடையிணைப்புச்சாதனம்.

cable modem : வட இணக்கி : சாதாரணத் தொலைபேசிக் கம்பித் தடத்தில் இணைந்து செயல்படும் இணக்கியிலிருந்து மாறுபட்டது. கோ-ஆக்சியல் கேபிள் எனப்படும் இணையச்சு வடம் வழியாகத் தகவலை அனுப்பவும் பெறவும் செய்கிற இணக்கி. வினாடிக்கு 500 கிலோ துண்மி(பிட்)கள் வரை தகவல் பரிமாற்ற வேகமுள்ளவை வட இணக்கிகள். தற்போது அதிகமாய்ப் பயன்பாட்டில் உள்ள வழக்கமான இணக்கிகளைவிட அதிக வேகத்தில் தகவலை அனுப்பவல்லவை.

cable ribbon : வட நாடா

cable television : வடத்தொலைக்காட்சி

cabling diagram : வட வரைபடம் : கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வடஇணைப்புகளைப் புரிந்து கொள்ள இத்தகைய வரைபடங்கள் தேவை.

cache card : இடைமாற்று அட்டை : ஒரு கணினியின் இடைமாற்று நினைவகத்தை (cache memory) அதிகப்படுத்தும் விரிவாக்க அட்டை.

cache settings : இடைமாற்று அமைப்புகள்.

caddy : குறுவட்டுறை : வட்டினை இந்த குழைம (பிளாஸ்டிக்) உறையில் இட்டு குறுவட்டகத்தில் செருகுவர். பழைய கணினிகளில் இருந்த ஒருவகை குறுவட்டகத்தில் இதுபோன்ற உறையிலிட்ட குறுவட்டினைத்தான் பயன்படுத்த முடியும். இப்போதுள்ள

குறுவட்டுறை

குறுவட்டகங்களில் உறையில்லாத வட்டுகளைப் பயன்படுத்தலாம்.

CAFM : சிஏஎஃப்எம் : Compare to Aided Factory Management என்பதன் குறும்பெயர், கணினி உதவிடும் தொழிற்சாலையாகும்.

calendar : நாட்காட்டி

calendar programme : நாட்காட்டி நிரல் : காலங்காட்டி நிரல் : மின்னணுக் காலங்காட்டியை ஒத்திருக்கும் ஒரு காலக் குறிப்பேட்டை படைத்துக் காட்டும் ஒரு பயன்பாட்டு நிரல். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்ற வேண்டிய நமது பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். சில காலங்காட்டி நிரல்கள் சுவரில் மாட்டும் நாள் காட்டிகளை ஒத்துள்ளன. சிலவற்றில், ஒரு நாளில் ஒவ்வொரு மணி நேரத்திலும் நினைவுக் குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்ள முடியும். காலங்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி நமது பணியை நமக்கு நினைவூட்டவல்ல நிரல்களும் உண்டு. ஒரு கணினிப் பிணையத்தில், ஒர் அலுவலகத்தின் பல்வேறு அலுவலர்களின் காலங்காட்டிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் திறனுள்ள நிரல்களும் உள்ளன.

caliback : திரும்ப அழைப்பு : தொலைபேசி மூலமாக அணுகும் ஒரு கணினியில் பயனாளரை அடையாளங்காணும் ஒரு பாதுகாப்பு முறை. ஒரு பயனாளர் கணினி அமைப்பை தொலைபேசி மூலமாக அணுகுகிறார். அடையாளப் பெயரையும் நுழைசொல்லையும் தருகிறார். உடனே இணைப்புத் துண்டிக்கப் பட்டுவிடும். கணினி, முன்பே குறித்து வைத்துள்ள அந்தப் பயனாளரின் தொலைபேசி எண்ணுக்குத் தானாகவே தொடர்பு கொண்டு, இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். இந்தப் பாதுகாப்பு முறை, அத்துமீறி நுழையும் ஊடுருவிகளைத் தடுக்கிறது. ஒரு பயனாளரின் நுழைபெயரையும், நுழைசொல்லையும் இன்னொருவர் திருடினாலும் அதனைப் பயன் படுத்திக்கொள்ள முடியாது.

callback modem : திரும்ப அழைக்கும் இணக்கி : திரும்ப அழைப்புப் பாதுகாப்பு முறையில் பயன்படுத்தப்படும் இணக்கி. வெளிலிருந்து தொலைபேசிமூலம் கணினி அமைப்பை அணுகும்போது பயனாளர் ஒரு மறைக்குறியீட்டைத் தருவார். ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள அட்டவணையில் மறைக்குறியீடு சரிபார்க்கப்பட்டு அக்குறியீட்டுக்குரிய பயனாளரின் தொலைபேசி எண்ணைத் தானாகவே தொடர்புகொண்டு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

calculate : கணக்கிடு; மதிப்பிடு.

calculus boolean : பூலியன் வகையீட்டு நுண்கணிதம்

callable statement : அழைதகு கூற்று

caller ID : அழைத்தவர் அடையாளம்.

call accepted packet : அழைபேற்புப் பொட்டலம்; அழைப்பேற்ற பொதிவு.

call blocking : அழைப்புத்தடுப்பி

call connected packet : அழைப்பு இணைத்த பொதிவு.

call cleaning : அழைப்பு நிறைவேற்றம்

call establishment : அழைப்பு ஏற்படுத்துகை அழைப்பு நிறுவுகை,

CALS : கால்ஸ் : கணினிவழி ஈட்டுதல் மற்றும் தகவுப் பொருத்த உதவி என பொருள்படும் Computer Aided Acquisition Logistics Support என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்து அழைப்பு குறும்பெயர். வணிகமுறை விற்பனையாளர்களுடன் மின்னணு முறை தகவுப் பரிமாற்றத்துக்கான பாதுகாப்புத் தர நிர்ணயத் துறையாகும்.

calligraphic sequence : எழுத்து வனப்பு வரிசைமுறை; வரிவடிவ வரிசைமுறை.

call request packet : அழைப்புக் கோருவோர் பொதிவு.

call screening : அழைப்பு வடிகட்டல்

cal setup : அழைப்பு அமைப்பு முறை.

called terminal : அழைக்கப்பட்ட முனையம். calling rate : அழைப்பு வீதம்

calling terminal : அழைக்கும் முனையம்

camera ready : அச்சுக்குத் தயாராய் : நூல் அச்சுத் துறையில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நூலில் இடம்பெற வேண்டிய விவரங்களை கணினியில் தட்டச்சு செய்து தாளில் அச்செடுப்பர். பிறகு விவரங்களையும் இடையிடையே இடம்பெறும் படங்களையும் வெட்டி ஒர் அட்டையில் ஒட்டுவர். அச்சில் வரவேண்டிய பக்கங்களை இவ்வாறு அட்டைகளில் ஒட்டி வடிவமைப்பர். பிறகு அதனை ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்பட ஃபிலிமாக படம் பிடிப்பர். அந்த ஃபிலிமை வைத்து அச்சு வார்ப்பினை உருவாக்குவர். அச்சு வார்ப்பினைக் கொண்டு நூல் பக்கங்களை அச்சிடுவர். ஆனால், இப்போதெல்லாம் அட்டைகளில் வெட்டி ஒட்டிப் பக்கங்களை வடிவமைக்க வேண்டிய தேவையில்லை. கணினித் திரையிலேயே வெட்டி ஒட்டி பக்கங்களை வடிவமைக்க வல்ல மென்பொருள் தொகுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அச்சுக்கு தயாரான பககங்களை உருவாக்க முடியும் என அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன.

campus wide information system : வளாகத் தகவல் முறைமை : கணினிப் பிணையங்கள் மூலமாக ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழக வளாகத்துக்குள் தகவல் மற்றும் பிற சேவைகளை வழங்கும் முறை. இத்தகவல் அமைப்பு முறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறிப்புகள், வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் நிரல்கள் அனைத்தும் இருக்கும். தரவு தளங்களை அணுகும் வசதியும் இருக்கும்.

campus interview : வளாக நேர்முகத்தேர்வு.

cancelbot : தவிர்க்கும் எந்திரன் : இணையத்தில் செய்திக் குழுக்களில் வெளியிடப்படுவதற்காக அடுக்கப்பட்ட கட்டுரைகளில் ஒவ்வாதவற்றைக் கண்டறிந்து நீக்குகின்ற ஒரு நிரல். பலருக்கும் அனுப்பப்படுவதற்கு முன்பாகக் கண்டறிந்து நீக்கும். நீக்கப்படுவதற்கான அடிப்படை வரையறையை அந்த நிரலை உருவாக்கியவரே நிர்ணயம் செய்கிறார். எனினும் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான தவிர்க்கும் எந்திரன்கள், பலநூறு செய்திக் குழுக்களில் இடம்பெறும் எண்ணற்ற உதவாக் குப்பைச் செய்திக்குறிப்புகளைக் கண்டறிந்து நீக்கிவிடுகின்றன.

cancel button : தவிர் பொத்தான்

cancel character : தவிர் எழுத்துரு

cancel message : தவிர்க்கும் செய்தி : யூஸ்நெட் எனப்படும் செய்திக் குழுக்களுக்கான வழங்கன் கணினிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சில கட்டுரைகளை வெளியிடாமல் தவிர்க்கவும், அல்லது கணினியில் இருந்தே நீக்கிவிடவும் அக்கணினிக்கு அனுப்பப்படும் ஒரு செய்தி.

candidate key : அடையாளத் திருவி : ஒர் அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட கிடக்கையை (Row) தனித்து அடையாளம் காணப் பயன்படும் புலம். கூட்டு முதன்மைத் திறவியின் (Compound Primary Key) ஓர் அங்கமாக இருக்கும்.

canonical form : விதிமுறை மாதிரிப்படிவம் : கணிதத்திலும், நிரல்வரைவிலும் ஒரு வெளிப்பாடு அல்லது கட்டுரைத் தொடருக்கான மாதிரிப் படிவம்.

cant undo : செய்தது தவிர்க்க இயலாது. canvas : வரைதிரை.

capability : திறன்; ஆற்றல்.

capacity, memory : நினைவகக் கொள்திறன்.

caps (key) : தலைப்பெழுத்து(விசை); மேல் எழுத்து (விசை).

caps lock : தலைப்பெழுத்துப் பூட்டு.

card format : அட்டை வடிவமைப்பு.

caption : தலைப்பு.

capture, data : தரவுக் கவர்வு.

capture card and display card : பதிவு அட்டை மற்றும் காட்சி அட்டை.

card formate : அட்டை வடிவம்.

card job controle : வேலைக்கட்டுப்பாட்டு அட்டை

card loader : அட்டையேற்றி.

card punch buffer : அட்டைத் துளை இடையகம்.

card punching : அட்டை துளையிடல்.

card reader : அட்டை படிப்பி: 1. இது ஓர் உள்ளிட்டுச் சாதனம். பெரும் பாலும் ஒரு நபரை அடையாளம் காணப் பயன்படுவது. ஒரு குழைம (பிளாஸ்டிக்) அட்டையில் காந்த முறையில் இரு தடங்களில் எழுதப்பட்ட தகவலைப் படித்துச் சரிபார்க்கும் கருவி. ஒரு தொழிலாளியின் அடையாள அட்டையாக இருக்கலாம் அல்லது பற்று அட்டை (credit card)யாக இருக்கலாம். 2. கணினி செயல்படாத நேரத்தில், அட்டைகளில் துளையிடும் முறையில் எழுதப்பட்ட தகவலைப் படித்தறியும் கருவி. இப்படிச் செய்வதன் மூலம் மையச்செயலியின் நேரம் பெருமளவு மிச்சமாகும். கணினி செயல்படும்போது, தகவலை உள்ளீடு செய்யும் முறையைக் காட்டிலும், மையச்செயலியிடம் குறைந்த நேரமே வேலை வாங்கப்படும்.

card verifier : அட்டை சோதிப்பி; அட்டை சரிபார்ப்பி.

carriage automatic : தானியங்கி நகர்த்தி.

carriage motor : நகர்த்தி விசைப்பொறி.

carriage register : நகர்த்திப் பதிவகம்.

carriage return, automatic : தானியங்கு நகர்த்தி திரும்புகை.

Carrier Sense Multiple Access (CSMA) : சுமப்பி உணர் பன்முக அணுகல்.

carrier system : ஒலியேந்தித் தகவல் தொடர்பு முறை; சுமப்பி முறைமை : பல்வேறு அலைவரிசைகளை, செய்திகளைச் சுமந்து செல்லும் ஊடகமாகப் பயன்படுத்தி, ஒரே பாதையில் பல்வேறு தடங்களில் பல்வேறு செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பிவைக்கின்ற தகவல் தொடர்பு முறை. ஒவ்வொரு செய்தி அலையும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணுள்ள மின்காந்த அலையின் மேல் பண்பேற்றம் (modulation) செய்து ஒரே அலைக்கற்றையாக மறுமுனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு, அதே அதிர்வெண் அடிப்படையில் பண்பிறக்கம் (demodulation) செய்யப்பட்டு மூலத்தகவல் பெறப்படும்.

carry bit : மீந்திடும் துண்மி : இரும எண்களின் கூட்டல் 0+0-1, 0+1=1, 1+0=1; 1+1= 10 என்று அமையும். இத்தகைய இரும எண் கூட்டலைச் செய்யும் மின்சுற்றுகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மின்சுற்றும் இரண்டு உள்ளீடுகளை ஏற்கும். 0 அல்லது 1 என்பதை விடையாகத் தரும். இரண்டு உள்ளீடுகளும் 1 ஆக இருப்பின் வெளியீடு 0 ஆக இருக்கும். மீதமுள்ள 1, அடுத்த மின்சுற்றின் உள்ளீடாக அமையும். இவ்வாறு இரும எண் கூட்டலில் இரண்டு 1-களைக் கூட்டும்போது பெறப்படும் 1,0-வில், 0 விடை யாகவும், 1 மீந்திடும் துண்மியாகவும் அமைகிறது.

  1 1 
  1 0 1 0 
  0 1 1 1
——————————
1 0 0 0 1
——————————

மேற்கண்ட கூட்டலில் மூன்று முறை 1 மீதமாகிறது. முதல் இருமுறை அடுத்த கூட்டலுடன் சேர்க்கப்படுகிறது. கடைசியாக மீந்திடும் 1 விடையின் இடப்புற பிட்டாக அமர்ந்து கொள்கிறது.

cartesian coordinates : கார்ட்டீசியன் ஆயத்தொலைவுப் புள்ளிகள் : ஒரு
கார்ட்டீசியன் ஆயத் தொலைவுப் புள்ளிகள்

தளத்தில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் இரு அச்சுகள் (இரு பரிமாணம்), அல்லது வெளியில் செங்குத்தாக வெட்டிக் கொள்ளும் மூன்று அச்சுகள் - இவற்றை அடிப்படையாகக் கொண்டு குறிக்கப்படும் ஒரு புள்ளி. இவற்றில் கிடை மட்ட அச்சு x எனவும், செங்குத்து அச்சு y எனவும் இவை இரண்டுக்கும் 90 டிகிரி உயரவாக்கில் அமையும் அச்சு z என்றும் அழைக்கப்படுகின்றன. வீட்டில் அறையின் ஒரு மூலையில் இது போன்ற மூன்று அச்சுகளின் அமைப்பைக் காண்லாம். தரையில் உள்ள ஒரு புள்ளியை x,y ஆகிய இரு அச்சுகளின் ஆயத் தொலைவு அடிப்படையில் குறிப்பிடலாம். தரைக்கு மேல் மேல்தளம் வரையுள்ள எந்தவொரு புள்ளியையும் மூன்று அச்சுகளின் ஆயத்தொலைவுகளாகக் குறிப்பிட வேண்டும். 17ஆம் நூற்றாண்டில் இந்த வரைவியல் கணிதமுறையை ஃபிரெஞ்சுக் கணித மேதை டகார்ட்டீஸ் (Descartes) அறிமுகப்படுத்தினார்.

cartoon sounds : கார்ட்டூன் ஒலிகள்; கேலிப்பட ஒலிகள்.

cartridge drive பொதியுறை இயக்ககம்; நாடா பேழை இயக்ககம்.

cascading style sheets : அடுக்கி வைத்த அழகுத் தாள்கள் : ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் இணைய ஆவணங்களில் சிறப்புத் தன்மைவாய்ந்த, அழகாக அடுக்கிவைக்கப்பட்ட பக்கங்கள். ஹெச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்குபவர்கள் இது போன்று வடிவமைக்கப்பட்ட பக்கங்களை இணைத்துக் கொள்வதற்கான வரை முறைகளை வைய விரிவலைக் கூட்டமைப்பு நிர்ணயம் செய்துள்ளது. ஹெச்டிஎம்எல் 3.2-ன் தர நிர்ணயத்தில் இவை அடங்கியுள்ளன. ஒரு வலைப்பக்கத்தில் உரை விவரங்கள் இடம்பெறும்விதம், அதன் எழுத்துரு, உருவளவு, வண்ணம் போன்றவை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. cascade : அடுக்கு : தொடர்: கவிப்பு : சீட்டு விளையாட்டில் கையில் சீட்டுகளை ஒன்றடுத்து மற்றொன்றை அடுக்கி வைத்திருப்பதுபோல, அடுக்கி வைக்கும் முறை, விண்டோஸ் பணிச்சூழலில் ஒரு நேரத்தல் திறக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட

அடுக்கு

சாளரங்களை இம்முறையில் அடுக்கி வைக்கலாம். 1. ஒரு சாளரத்தில் அமையும் உரையாடல் பெட்டியில் (dialog box) 2-angloGullig (text box), பட்டியல் பெட்டி (list box), தேர்வுப் பெட்டி, (check box), கட்டளைப் பொத்தான்கள் (command buttons) போன்ற அனைத்து இயக்குவிசைப் பொருட்களையும் ஒரே திரையில் அமைக்க முடியாதபோது ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட திரைகளில் அவற்றை அடுக்கி வைப்பர் 2. இணையச் செய்திக் குழுக்களில் ஒரு செய்தி ஒருவரிடமிருந்து இன்னொரு வருக்கு அனுப்பப்படும்போது மூலச்செய்தியில் ஒவ்வொரு வரியிலும் > என்ற அடையாளம் சேர்க்கப்படும். அவரிடமிருந்து இன்னொருவர்க்குப் போகும்போது இன்னொரு அடையாளம் சேர்க்கப்படும். இதுபோல் சேர்ந்துகொண்டே போகும்.

cascading windows : அடுக்கிவைத்த சாளரங்கள் வரைகலைப் பணிச்சூழலில், தலைப்புப்பட்டை தெரியும் வண்ணமாக ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்படும் பல்வேறு சாளரத் திரைகள்.

case control structure : நிலைக்கட்டுப்பாட்டு அமைப்பு.

case logic : எழுத்துருவ தருக்கம்.

case-sensitive search : எழுத்து வடிவ உணர்வுத் தேடல் : ஒரு தரவு தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களில் ஒரு குறிப்பிட்ட விவரத்தைத் தேடும்போது மேற்கொள்ளப்படும் ஒருமுறை. ஆங்கிலச் சொற்களை சிறிய எழுத்தில் அல்லது பெரிய எழுத்தில் அல்லது கலந்த எழுத்துகளில் எழுதலாம். தேடும்போது வடிவ ஒப்புமை இல்லாமலும் தேடலாம். ஒர் ஆவணத்தில் Computer என்ற சொல் உள்ளதா எனத் தேடும்போது, COMPUTER, computer என்ற சொற்களையும் கண்டறிந்து சொல்லும். ஆனால், வடிவ அடிப்படையில் தேடினால், Computer என்ற சொல் இருந்தால் மட்டுமே உள்ளதெனக் காட்டும் computer, COMPUTER ஆகிய சொற்களைப் புறக்கணிக்கும்.

case sensitivity : எழுத்து வடிவ உணர்வு : ஒரு நிரலாக்க மொழியில், ஒரு நிரலில் சிறிய எழுத்து பெரிய எழுத்து வடிவங்களை வேறு படுத்திப் பயன்படுத்துதல். எடுத்துக் காட்டாக சி,சி++ மற்றும் ஜாவா மொழிகளில் sum, SUM, Sum ஆகிய மூன்று சொற்களும் வேறு வேறாகவே அறியப்படும். எழுத்து வடிவ உணர்வு மிக்கவை என்று இம்மொழிகளைக் கூறுவர். ஆனால் பேசிக், பாஸ்கல் போன்ற மொழிகளில் மேற்கண்ட மூன்று சொற்களும் ஒன்றாகவே கருதப்படும். இம்மொழிகள் வடிவ உணர்வற்ற மொழிகள்.

case statement : கிளைபிரி கூற்று : அடா, பாஸ்கல், சி, சி++, ஜாவா மற்றும் விசுவல் பேசிக் மொழிகளில் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கட்டளைத் தொடர். ஒரு மாறியின் மதிப்பைச் சோதித்து அம்மதிப்பின் அடிப்படையில் வெவ்வேறு பணிகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கட்டளை ஒன்றுக்குள் ஒன்றாக அமையும் if....then....else கட்டளைக்குப் பதிலாக சில சூழ்நிலைகளில் கிளைபிரி கட்டளையமைப்பு பயன்படுத்தப்படுகிறது.

catena : தொடுப்புப் பட்டியல் : பல்வேறு உறுப்புகளைச் சேர்த்துத் தொடுக்கப்பட்ட ஒரு பட்டியலில் ஒர் உறுப்பு, பட்டியலில் உள்ள அடுத்த உறுப்பினைச் சுட்டுமாறு அமைக்கப்பட்டிருக்கும்.

catch : பிடி.

cat eye : பூனைக் கண்.

catalogue : பட்டியல்;அடைவு

category : வகையினம்

category storage : வகையினச்சேமிப்பகம்

cathode ray tube (CRT) : எதிர்மின்வாய் கதிர்க் குழாய்.

cathode ray tube visual display unit: எதிர்மின்வாய்க் கதிர்க்குழாய் காட்சி திரையகம்.

ca.us : சிஏ.யு.எஸ் : இணையத்தில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த வலைத் தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

CBT : சிபிடீ : கணினி அடிப்படையிலான பயிற்சி என்ற பொருள்படும் Computer Based Training stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினியையும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருளையும் பயன்படுத்திக் கற்பிக்கும் முறை. இம்முறையில் உரைக் கோவை மட்டுமின்றி, வண்ணமிக்க வரைகலைப் படங்கள், அசைவூட்டப் படங்கள் மற்றும் குரல் மூலமான விளக்கங்கள் உட்பட பயனாளரை ஈர்க்கும் வண்ணம் பாடங்கள் அமைக்கப்பட்டிருக்கும். பயன்படுத்த எளிமையானதாகவும் நுட்பமானதாகவும் இருக்கும். ஒரு மென்பொருள் தயாரிப்பாளர் தன் மென்பொருளைப் பயன்படுத்துபவருக்கு அம்மென்பொருளைப் பயன்படுத்தும் வழிமுறைகளையே. ஒரு சிபிடீ-யாகத் தயாரிக்க முடியும். ஒரு மேலாண்மைத்துறைக் கருத்தரங்கில் சிபிடீ-யை ஒரு சிறந்த கற்பித்தல் கருவியாகப் பயன்படுத்தலாம்.

CC : சிசி, நகல் : உண்மை நகல் என்று பொருள்படும் Carbon Copy அல்லது Courtesy Copy என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை அப்படியே இன்னொருவருக்கு அனுப்ப, மின்னஞ்சல் மென்பொருளில் வழியுள்ளது. To என்பதில் அஞ்சல் பெறுபவரின் முகவரியைத் தரவேண்டும். CC என்பதில் வேறு ஒருவரின் அல்லது பலரின் முகவரியைத் தரலாம். அவர்களுக்கும் அஞ்சல் சென்று சேரும். CC-யில் தரப்பட்ட முகவரிதாரர்கள் அனைவரும் இந்த மடல் வேறு எவருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் முடியும். இந்த வகை யில் bc என்று குறிப்பிட்டு இன்னும் சிலருக்கு அதே மடலை அனுப்பி வைக்கும் முறையிலிருந்து மாறுபடுகிறது. bcc-யில் குறிப்பிடப்படும் முகவரிதாரர்களுக்கும் மடல் கிடைக்கும். ஆனால், இந்த மடல் எவருக்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிய முடியாது.

(bcc-blind carbon copy). .cc : .சிசி : இணையத்தில் தள முகவரி காகஸ் தீவுகளைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் களப்பிரிவு.

CCITT groups 1-4 : சிசிஐடீடீ 1-4 விதிகள் : பன்னாட்டு தந்தி - தொலை பேசி ஆலோசனைக் குழு (International Telegraph and Telephone Consultative Committee) தொலை நகல் எந்திரங்களின் மூலமாக பட உருவங்களை குறியீடுகளாக்கவும் மறுமுனைக்கு அனுப்பி வைக்கவும் பரிந்துரை செய்த நான்கு பிரிவிலான நெறிமுறைகள். முதலிரண்டு பிரிவுகள் தொடர்முறை (analog) சாதனங்களுக்கும் 3,4-வது பிரிவு நெறிமுறைகள் இலக்கமுறை (digital) சாதனங்களுக்கும் ஆனவை.

ccNUMA : சிசிநூமா நினைவக அணுகலில் ஒரு வழிமுறை.Cache Coherent Non-Uniform Memory Access என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஒத்தியைந்த பல்செயலாக்கக் கணினி முறைமைகள் (Symmetric, Multiprocessing System) பலவற்றை, அதிவேக/அகல அலைக்கற்றையுடைய வன்பொருள் ஊடகம் மூலம் ஒருங்கிணைத்து ஒரே கணினி அமைப்பாகச் செயல்பட வைக்கும் ஒரு தொழில்நுட்பம்.

cd : சிடி (CD) : கோப்பகம் மாறு என்று பொருள்படும் change directory என்ற தொடரைக் குறிக்கும் கட்டளைச் சொல். எம்எஸ்டாஸ், யூனிக்ஸ் மற்றும் எஃப்டீபீ கிளையன் நிரல்களில் இக்கட்டளை பயன் படுத்தப்படுகிறது. இக்கட்டளைச் சொல்லையடுத்துத் தரப்படுகின்ற பாதையுடன்கூடிய இன்னொரு கோப்பகத்துக்கு மாறிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, C:\VB> CD\VC\AProject என்ற கட்டளை மூலம் VB என்னும் கோப்பகத்திலிருந்து, VC என்னும் கோப்பகத்திலுள்ள Project என்னும் உள்கோப்பகத்துக்கு மாறிக் கொள்ளமுடியும். பிறகு அங்கிருக்கும் கோப்புகளையும் பயன்பாடுகளையும் எளிதாகக் கையாள முடியும்.

CD : சிடி : 1. மின்சாரம் அறியப்பட்டது என்று பொருள்படும் Current Detected என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஒர் இணக்கியிலிருந்து, இணைக்கப்பட்ட ஒரு கணினிக்கு அனுப்பப்படும் சமிக்கை. இணக்கி, தகவலை ஏற்கத் தயார் நிலையில் இருப்பதை உணர்த்துவது. காண்க DCD. 2. குறு வட்டு என்று பொருள்படும் Compact Disc என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

cdew : சிடெவ் : மெக்கின்டோஷ் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயன்பாட்டு நிரல். கணினிச் சாதனங்களை நம் விருப்பப்படி அமைத்துக் கொள்வதற்குப் பயன்படுகிறது. மேக் பதிப்பு 6 (Mac OS 6)-ல் இந்த நிரல், முறைமைக் கோப்புறையில் வைக்கப்பட்டிருந்தது. விசைப்பலகை மற்றும் சுட்டிக்கான சிடெவ்கள் கணினியை இயக்கும்போதே நிறுவப்பட்டுவிடும். ஏனைய சிடெவ்கள் அந்தந்த மென்பொருள் தொகுப்புகளுடன் இணைந்து வருகின்றன. மேக் பதிப்பு 7இல் சிடெவ்கள் கன்ட்ரோல் பேனல்கள் என்று அழைக்கப்பட்டன.

CDFS : சிடிஎஃப்எஸ் : 1. குறுவட்டில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை. 32 துண்மி (பிட்) பாதுகாப்பு முறையில் இது அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே விண்டோஸ் 95/98 ஆகிய இயக்க முறைமைகளில் குறுவட்டின் உள்ளடக்கத்தை அணுகும் முறைகள் வரையறுக்கப்படுகின்றன. 2. யூனிக்ஸ் இயக்க முறைமையில், ஒரு கோப்பு முறைமை, படிக்க மட்டுமேயான, கழற்றி எடுக்கப்படும் ஒர் ஊடகத்தில் (குறிப்பாக குறுவட்டு) அமைந்துள்ளது என்பதைக் குறிக்கும் தகுதிச்சொல். குறுவட்டு ஐஎஸ்ஓ 9660 தர நிர்ணயப்படி அமைந்தது என்பதை இச்சொல் குறிக்கும். நிலைவட்டு, நாடா, தொலைவுப் பிணைய இயக்ககங்கள் மற்றும் குறுவட்டு இயக்ககங்களை யூனிக்ஸ் கணினியில் நிறுவும்போது இதுபோன்ற கட்டளைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

CD- : சிடி-ஐ : ஊடாடும் குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk, Interactive என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒளிவ வட்டு(optional disk)த் தொழிநுட்பத்தில் வன்பொருள்/மென்பொருள் பற்றிய தர நிர்ணயம். படஉருவக் காட்சி, உருத் தெளிவு, அசைவூட்டம் கேட்பொலி மற்றும் சிறப்பு விளைவுகள் ஆகிய கூறுகளை சிடி-ஐ உள்ளடக்கியது. இத்தர நிர்ணயம் தகவலை குறியீடாக்கல், இறுக்கிச் சுருக்குதல், சுருக்கியவற்றை விரித்தல், பதிவான தகவலை திரையிடல் ஆகிய செயல்முறைகளையும் உள்ளடக்கியது.

CDP : சிடிபீ : தகவல் செயலாக்கத்தில் சான்றிதழ் படிப்பைக் குறிக்கும் Certificate in Data Processing stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர், கணினி மற்றும் நிரலாக்கம், மென்பொருள் உருவாக்கம், முறைமை ஆய்வு உட்பட, கணினி தொடர்பான துறைகளில் சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சிபெறும் தனிநபர்களுக்கு இன்ஸ்டிடியூட் ஃபார் சர்ட்டிஃ பிகேஷன் ஆஃப் கம்ப்யூட்டர் புரொஃபஷனல்ஸ் என்ற நிறுவனம் இந்தச் சான்றிதழை வழங்குகிறது.

CD Player : சிடி இயக்கி

CD plus : சிடி பிளஸ் : குறுவட்டில் தகவலைப் பதியும் முறை. கணினித் தகவல்களையும் கேட்பொலிப் பதிவுகளையும் ஒரே குறுவட்டில் பதிய இம்முறை வழிவகுக்கிறது. தகவல் பகுதியைப் படிக்கும்போது கேட்பொலிப் பதிவுகளோ, கேட் பொலிப் பகுதியை இயக்கும்போது தகவல் பகுதியோ பாதிக்கப்படுவதில்லை.

CD-R : சிடிஆர் : பதிதகு குறுவட்டு எனப் பொருள்படும் Compact Disk Recordable starp என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறுவட்டு எழுதி (CD Writer) மூலம் தகவலைப் பதிப்பித்து, குறுவட்டகத்தில் வைத்துப் படிக்க முடிகிற ஒருவகைக் குறுவட்டு. CD Recorder : குறுவட்டெழுதி : குறுவட்டுப் பதிவி : ஒரு குறுவட்டில் எழுதும் சாதனம். குறுவட்டில் இந்தச் சாதனம் மூலம் ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது. நிரந்தரத் தகவல் சேமிப்புக்காகவும், பாதுகாப்பு நகலாக(Backup) பயன்படுத்தவும்,மென் பொருள்களைப் பல நகல்கள் எடுத்து வினியோகிக்கவும் குறுவட்டெழுதி மூலம் வட்டில் தகவல்கள் எழுதப்படுகின்றன.

CD-ROM : சிடி-ரோம் படிக்க மட்டுமேயான குறுவட்டு என்று பொருள்படும் Compact Disk - Read Only Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விவரச் சேமிப்பகத்தில் ஒருவகை. அதிகக் கொள்திறன் உள்ளது (650 MB). தகவலைப் படிக்க மின்காந்தமுறைக்குப் பதில் லேசர் கதிர் பயன்படுத்தப்படுகிறது. ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது (Write Once Read Many Times).

CD - ROM changer : சிடி.ரோம் மாற்றி.

CD-ROM Drive : குறுவட்டகம்; குறுவட்டு இயக்ககம் : படிக்க மட்டுமேயான தகவல்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டினை கணினியில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய வட்டகம் அல்லது வட்டு இயக்ககம்.

CEO : முதன்மை மேலாண் அலுவலர்.

CD-ROM juke box : குறுவட்டு தொகுதிப்பெட்டி குறுவட்டுகளின் தொகுதியை கணினியுடன் இணைத்துக் கையாள வழி செய்யும் வட்டியக்குச் சாதனம். 200 குறுவட்டுகள் வரை இதில் வைத்துப் பயன்படுத்த முடியும். பயனாளர் எந்த வட்டிலுள்ள தகவலையும் கையாள விரும்பலாம். இச்சாதனம் அக்குறிப்பிட்ட வட்டினைத் தேடிக் கண்டறிந்து தகவலை எடுத்துத் தரும். ஒரு நேரத்தில் ஒரு குறுவட்டு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட குறுவட்டினைக் கையாளும் திறனுள்ள கணினியெனில், தொகுதிப் பெட்டியிலுள்ள வட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கையாள முடியும்.

CD-ROM/XA : சிடி-ரோம்/எக்ஸ்ஏ, குறுவட்டு/எக்ஸ்ஏ சிடி-ரோம் எக்ஸ்டெண்டடு ஆர்க்கிடெக்சர் என்பதன் சுருக்கச் சொல். ஒரு விரி வாக்கப்பட்ட குறுவட்டுத் தகவல் பதிவு முறை. ஃபிலிப்ஸ், சோனி, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன. சிடி-ரோம்/எக்ஸ்ஏ, ஐஎஸ்ஓ 9660 தரநிர்ணயத்திற்கு ஒத்தியல்பானது.

CDV : சிடிவி : 1. இறுக்கப்பட்ட இலக்கமுறை ஒளிக்காட்சி என்று பொருள்படும் Compressed Digital Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அதிவேக ஊடகங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏற்ப இறுக்கிச் சுருக்கப்பட்ட ஒளிக்காட்சி உருவப்படங்கள். 2. குறுவட்டு ஒளிக்காட்சி என்றுபொருள்படும் Compact Disc Video என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 5 அங்குல விட்ட முள்ள வட்டினைக் குறிக்கிறது.

cell definition : சிற்றம் வரைவிலக்கணம்; கல வரையறை.

cell pointer : சிற்றம் சுட்டு, கலச்சுட்டு.

cellular automata : செல்பேசி தானியங்கு கொள்கை,

Cellular Digital Packet Data : செல்பேசி இலக்கமுறைப் பொதி விவரம் : ஏற்கெனவேயுள்ள செல்பேசித் தடங்களின் வழியே வினாடிக்கு 19.2 கிலோபிட் வேகத்தில் இருதிசை விவரப் பொதி தகவல் பரிமாற்றத்திற்கான தர நிர்ணயம்.

censorship : தணிக்கைமுறை : ஒரு தகவல் தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக்கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தகவல் பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இணையத்தில் சில குறிப்பிட்ட பகுதிகள் பலவிதமான கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றன. எடுத்துக்காட்டாக, இணையத்தில் செய்திக் குழுக்களில் alt என்னும் பிரிவில் முழுவதுமோ, alt.sex அல்லது alt.music.write-power ஆகிய பிரிவுகளில் வெளியிடப்படும் ஆபாசமான ஆட்சேபத்துக்குரிய செய்திகள் செய்திக்குழுவின் இடையீட்டாளரால் (moderator) தணிக்கை செய்யப்படுகின்றன. சில நாடுகளில் அந்நாடு பின்பற்றும் தேசியக் கொள்கை அடிப்படையில் சில அரசியல் மற்றும் கலை, பண்பாட்டு வலைத் தளங்களை அந்நாட்டுப் பயனாளர்கள் பார்வையிட அனுமதிப்பதில்லை.

center vertically : செங்குத்து மையப்படுத்து.

central control unit : மையக் கட்டுப்பாட்டகம் .

central office : மைய அலுவலகம்  : தகவல் தொடர்பு அமைப்பில் வாடிக்கையாளர்களின் தகவல் தொடர்புத் தடங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்படும் இணைப்பு மையம்.

central processor : மையச் செயலி . மையச் செய்முறைப்படுத்தி, மையச் செயலாக்கி.

centronics parallel interface : சென்ட்ரானிக்ஸ் இணைவழி இடை முகம் : கணினிக்கும் அதன் புறச்சாதனங்களுக்கும் இடையேயான இணைவழி தகவல் பரிமாற்றப் பாதைகளுக்கான தர நிர்ணயம். அச்சுப்பொறிகளை உற்பத்தி செய்யும் சென்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தத் தர நிர்ணயத்தை முதலில் உருவாக்கியது. சென்ட்ரானிக்ஸின் இணைவழி இடைமுகம்,எட்டு இணைவழி தகவல் தடங்களையும் கட்டுப்பாடு மற்றும் நிலையறி தகவலுக்கான கூடுதல் தடங்களையும் வழங்குகிறது.

CERN : செர்ன் : அணு இயற்பியலுக்கான ஐரோப்பிய ஆய்வுக் கூடம் என்று பொருள்படும் Conseil Europeen Pour La Recherche Nucleaire (The European Laboratory for Particle Physics) என்ற பெயரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் செர்ன் ஆய்வுக் கூடம் அமைந்துள்ளது. 1989ஆம் ஆண்டில் இந்த ஆய்வுக் கூடத்தில்தான் டிம் பெர்னர்ஸ்-லீ வையவிரிவலையை (World Wide Web) உருவாக்கினார். அறிவியல் ஆய்வு அறிஞர்களுக்கிடையே தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தித் தருவதே இதன் நோக்கமாய் இருந்தது.

CERN server : செர்ன் வழங்கன் கணினி : செர்ன் ஆய்வுக் கூடத்தில் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய ஹெச்டிடிபி (HTTP) வழங்கன் கணினிகளில் ஒன்று. இணையம் முழுவதிலும் இப்போதும் செர்ன் கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் சேவைகள் இலவசமாகவே கிடைக்கின்றன.

CERT : செர்ட் : கணினி அவசர நடவடிக்கைக் குழு என்று பொருள்படும் Computer Emergency Response Team என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையப் பயனாளர்களுக்கு 24 மணிநேரமும் கணினிப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனம் இது. புதிய நச்சுநிரல் (Virus) மற்றும் வேறெந்த கணினிப் பாதுகாப்பு அபாயம் குறித்தும் ஆலோசனைகள் பெறலாம்.

.cf : சிஏஃப் : மத்திய ஆஃப்ரிக்கக் குடியரசில் செயல்படும் இணைய தள முகவரிகளில் குறிப்பிடப்படும் பெரும் புவிக்களப் பெயர்.

.cg : சிஜி : இணையத் தள முகவரி, காங்கோ நாட்டில் பதிவுசெய்யப்பட்டது என்பதைக் குறிப்பதற்கான பெரும் புவிக்களப் பெயர்.

CGA : சிஜிஏ : வண்ண வரைகலைத் தகவி என்று பொருள்படும் Colour Graphics Adapter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். 1981இல் ஐபிஎம் நிறுவனம் அறி முகப்படுத்திய ஒளிக்காட்சித் தகவிப்பலகை, சிஜிஏ, பல்வேறு எழுத்து மற்றும் வரைகலைக் காட்சி முறைகளைத் தரவல்லது. எழுத்து முறைகளில் 16 நிறங்களில் 25 வரிகள், 80 எழுத்துகள், 25 வரிகள்/40 எழுத்துகள் காண்பிக்கும் முறைகளும் உண்டு. 2 நிறங்களில் 640 கிடைமட்ட படப்புள்ளிகளும் (pixels), 200 செங்குத்துப் படப்புள்ளிகளும் இடம்பெறும் வரைகலைக் காட்சி முறையும், 320x200 படப்புள்ளி, நான்கு நிறக் காட்சிமுறையும் உண்டு.

CGI : சிஜிஐ : பொது நுழைவாயில் இடைமுகம் எனப்பொருள்படும் Common Gateway Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஹெச்டீடீபீ போன்ற தகவல் பரிமாற்ற வழங்கன் (Server) கணினிகளுக்கிடையேயும், தரவுத் தளம் மற்றும் ஏனைய பயன்பாட்டு மென் பொருள் தொடர்பான விவரப் பரிமாற்றம் செய்துகொள்ளும் புரவன் கணினிகளுக்கிடையேயும் நடைபெறும் தகவல் தொடர்புக் குரிய செந்தரக் கட்டுப்பாடுகளை இது குறிக்கிறது.

CGl-bin : சிஜிஐ-பின் : Common Gateway Interface-binaries stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஹெச்டீடீபி வழங்கன் கணினிகளில் சிTஐ நிரல்களின் மூலம் இயக்கப்படும் புறநிலைப் பயன்பாடுகள் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் கோப்பகம் (directory),

CGI script : சிஜிஐ உரைநிரல்

.ch : சிஹெச் : இணைய தளங்களில் சுவிட்சர்லாந்து நாட்டுத் தள முக வரியில் குறிப்பிடப்படும் பெரும் புவிப்பிரிவு களப் பெயர்.

chain printer : சங்கிலி அச்சுப்பொறி,

chain printing : சங்கிலி அச்சுப்பதிவு.

Challenge Handshake Authentication Protocol : சேப் ; (CHAP) : பீபீபீ (ppp - point to point protocol) நெறிமுறை வழங்கன் : கணினிகளில் இணைப்பு ஏற்படுத்திக் கொள்பவரின் அடையாளத்தை இணைப்பு ஏற்படுத்தும் போதோ அல்லது அதன்பிறகோ அடையாளம் காண்பதற்காகப் பயன் படுத்தப்படும் சான்றுறுதி நெறிமுறைத் திட்டமுறை.

change : மாற்று.

change all : அனைத்தும் மாற்று.

change of control : கட்டுபாட்டு மாற்றுகை.

channel access : தட அணுகல் : 1. பிணைய அமைப்புகளில் இரண்டு அல்லது மேற்பட்ட கணினிகளை இணைக்கும் தகவல் பரிமாற்றத் தடத்தை அணுகி இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முறை. உள்ளடக்க அனுப்புகை (contention polling) மற்றும் வில்லை வளையம் (token ting) ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படும் தட அணுகல் முறைகளாகும். 2. கம்பியில்லாத் தொடர்பு முறையில் பயன்படுத்தப்படும் சிடிஎம்ஏ (CDMA) போன்ற தொழில்நுட்பத்தை இது குறிக்கிறது.

channel capacity : தட கொள்ளளவு/கொள்திறன், தட வேகம்; தட இணைப்புத் திறன் : ஒரு தகவல் பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப்படுகிறது.

channel, communication : தகவல் தொடர்புத் தடம்.

channel emitter : தட ஒளிர்வு; தட உமிழி.

channel guide : தட வழித்துணை.

channel hop : தடத்தாவல் : இணையத்தில் தொடர் அரட்டையில் (IRC) ஈடுபட்டுள்ளவர் ஒர் அரட்டைத் தடத்திலிருந்து இன்னொரு தடத்திற்கு அடிக்கடி மாறிக் கொண்டிருப்பது.

channel, information : தகவல் தடம்

channel, input/output : உள்ளீட்டு வெளியீட்டுத் தடம்.

channel op : தட நிர்வாகி,தட மேலாளர்;தட இயக்குனர் : channel opearator என்பதன் குறுக்கம். இணையத் தொடர் அரட்டையில் ஒவ்வொரு தடத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரட்டை உரையாடல்களை ஒருவர் மேற்பார்வை செய்து கொண்டிருப்பார். விரும்பத் தகாத அநாகரிகமான உரையாடலில் ஈடுபடுவோரை அரட்டைத் தடத்திலிருந்து நீக்கிவிட இவருக்கு அதிகாரம் உண்டு. channel, peripheral interface : புறச்சாதன இடைமுகத் தடம்.

channel, read/write : படி/எழுது தடம்.

channels : தடங்கள், வழிகள்.

character definition table : எழுத்து வரையறை அட்டவணை : கணினித் திரையில் புள்ளிகளால் ஆன எழுத்துகளையும், துண்மிவரைவு எழுத்து வடிவங்களையும் காண்பிக்க அடிப்படையாக விளங்கும் தோரணிகள் (patterns) அடங்கிய அட்டவணை. கணினிகள் நினைவகத்தில் இந்த அட்டவணையை இருத்தி வைத்துச் செயல்படும்.

character, binary code : இருமக் குறிமுறை எழுத்து.

character density : எழுத்து நெருக்கம்; எழுத்து அடர்வு : அச்சடிப்பில் அல்லது திரைக்காட்சியில், ஓர் அலகு பரப்பளவில் அல்லது குறிப்பிட்ட நீள அளவுக்குள் இடம்பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் அளவீடு.

character emitter : எழுத்து ஒளிர்வு; வரிவடிவ உமிழி.

character image : எழுத்துப் படிமம்; எழுத்து உருக்காட்சி : ஒர் எழுத்தின் வடிவில் ஒழுங்கமைக்கப்படும் துண்மிகளின் (பிட்) தொகுப்பு. ஒவ்வொரு எழுத்தின் உருவமும் செவ்வக வடிவத்தில் அமைந்த கட்டங்களுக்குள் அடங்கியுள்ளது. ஓரெழுத்தின் உயரமும் அகலமும் அதன் மூலமே நிர்ணயிக்கப்படுகின்றன.

characater layout : எழுத்து உருவரை.

character based programme : எழுத்து சார் நிரல்.

character mode : எழுத்துப் பாங்கு.

character, least significant : குறை மதிப்பெழுத்து.

character mode terminal : எழுத்துப் பாங்கு முனையம்.

character modifier : எழுத்து மாற்றமைப்பி.

character, numeric : எண்வகை எழுத்து.

character oriented : எழுத்து அடிப்படையிலான.

character printer : எழுத்தச்சுப்பொறி : 1.ஒரு நேரத்தில் ஓர் எழுத்தை அச்சடிக்கும் அச்சுப்பொறி, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் புள்ளியணி அச்சுப்பொறியும், டெய்ஸி-சக்கர அச்சுப்பொறியும் எடுத்துக்காட்டுகள். வரி அச்சுப்பொறி, பக்க அச்சுப்பொறி ஆகியவற்றோடு ஒப்பிட்டு அறிக. 2. வரைகலைப் படங்களை அச்சிடவியலாத புள்ளியணி அச்சுப்பொறிகளையும், டெய்ஸி சக்கர அச்சுப்பொறிகளையும், லேசர் அச்சுப்பொறிகளையும்கூட இச்சொல் குறிக்கிறது. இத்தகைய அச்சுப்பொறி கணினியிலிருந்து எழுத்து வடிவிலான விவரங்களைப் பெற்று அப்படியே எழுத்துவடிவில் அச்சிடும். வரைகலை அச்சுப் பொறியோடு ஒப்பிட்டு அறிக.

character reader magnetic ink : காந்த மை எழுத்துப் படிப்பி.

character recognition : எழுத்துணர்தல்; எழுத்தறிதல் : கணினியில் ஓர் எழுத்தை வெவ்வேறு எழுத்துருக்களில் (fonts) வெவ்வேறு பாணிகளில் (styles) (a : த : ஒ) பயன்படுத்துகிறோம். ஒரு தாளில் அச்சிடப்பட்ட எழுத்தை வருடுபொறி மூலம் வருடி கணினிக்குள் செலுத்தும்போது, கணினி அந்த எழுத்தை அடையாளம் கண்டு கொள்வதில் பிழை நேர வாய்ப் புண்டு. பிழையின்றி அறிய வேண்டு மெனில் எழுத்துகள் இந்த வடி வமைப்பில்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் சில கணினி அமைப்புகளில் உள்ளன. ஆனால் சில கணினிகள், தோரணி ஒப்பீட்டு (pattern matching) தொழில் நுட்ப அடிப்படையில் அமைந்த மென் பொருளின் உதவியுடன் எப்படிப்பட்ட வடிவமைப்பிலுள்ள எழுத்துகளையும் அடையாளம் கண்டுகொள்ளும்.

character rectangle : எழுத்து செவ் வகம் : ஒர் எழுத்தின் வடிவத்தைர எழுத்துச் செவ்வகம் வரைகலை வடிவில் படப்புள்ளி களால் குறிப்பிட எடுத்துக்கொள் ளப்படும் செவ்வகப் பரப்பு.

characters per inch: ஒர் அங்குலத்தில் எழுத்தெண்ணிக்கை : ஒர் அங்குல நீளத்தில், குறிப்பிட்ட உருவளவில் (size) அமைந்த, ஒரு குறிப்பிட்ட எழுத்துரு வடிவில் எத்தனை எழுத்துகள் இடம்பெற முடியும் என்கிற அளவீடு. இந்த எண்ணிக்கை எழுத்து வடிவின் இரண்டு பண்பியல்புகளினால் பாதிக்கப்படுகிறது. ஒன்று அதன்

Charge Coupled Device மின்னூட்டப்பிணைப்பு சாதனம் புள்ளி (பாயின்ட்) அளவு. அடுத்தது, அந்தக் குறிப்பிட்ட எழுத்துருவில் எழுத்துகளின் அகலம். ஒற்றையிட எழுத்துருக்களில் எழுத்துகள் சம மான அகலத்தைக் கொண்டிருக்கும். தகவுப் பொருத்தமுள்ள எழுத்துருக் களில் எழுத்துகளின் அகலம் வேறு படும். எனவே ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் என்பது சராசரி யாகக் கணக்கிடப்படும். ஒர் அங்குலத்தில் எத்தனை எழுத்துகள் character per inch என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர் சிபிஐ (CPI) எனப்படுகிறது.

character space: எழுத்து இடைவெளி

characters, special சிறப்பு எழுததுகள.

character style ; எழுத்தின் பாணி எழுத்தின் அழகமைவு தடித்த எழுத்து, சாய்வெழுத்து, அடிக் கோட்டெழுத்து, சிறிய எழுத்து, பெரிய எழுத்து என எழுத்துகளின் பாங்கு மாறுபடுகிறது. எழுத்துரு (font) என்பதையும் எழுத்தின் பாங்காகச் சேர்ப்பது, இயக்க முறை மையையும் அந்தக் குறிப்பிட்ட மென்பொருளையும் சார்ந்ததாகும்.

character user interface: எழுத்து வழி பயனாளர் இடைமுகம்; எழுத்தமைப் பணிச் சூழல் Character User Interface என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வெறும் எழுத்துகளை மட்டுமே திரையில் காட்டவல்ல பயனாளர் இடைமுகம், கணினிப் பணிச்சூழல். வரை கலைப் பணிச்சூழலுடன் ஒப்பிட்டு அறிக.

character view : எழுத்து தோற்றம் Charge Coupled Device (CCD) : மின்னூட்டப் பிணைப்புச் சாதனம்

(சிசிடி) charges magnetically : காந்தமுறை மின்னூட்டம்.

chart  : வரைபடம், நிரல்படம்.

chart options : நிரல்பட விருப்பத் தேர்வுகள்.

chart type : நிரல்பட வகை.

chart, system : முறைமை நிரல்படம்.

chat : அரட்டை : கணினி வழியாக நடைபெறும் நிகழ்நேர உரையாடல். அரட்டையில் பங்குபெறும் ஒருவர் ஒரு வரியை விசைப் பலகையில் தட்டச்சு செய்து என்டர் விசையை அழுத்தியதும், மறு முனையில் இன்னொருவரின் கணினித் திரையில் அச்சொற்கள் தெரியும். அதற்குரிய பதிலுரையை அவரும் தட்டச்சு செய்து அனுப்பலாம். இவ்வாறு உரையாடல் தொடரும். நிகழ்நேரச் சேவைகள் வழங்கும் கணினிப் பிணையங்களில் பெரும்பாலும் அரட்டைவசதி உண்டு. இணையத்தில் ஐஆர்சி (IRC) என்பது தொடர் அரட்டைச் சேவையாகும். தற்போது இணையத்தில் குரல் அரட்டை (Voice Chat) வசதியும் உள்ளது.

chat page : அரட்டை பக்கம்.

chat room ; அரட்டை அரங்கம்

cheapernet : மலிவுப் பிணையம்.

check now : இப்போது சரிபார்.

check : சரிபார்ப்பு

check, arithmatic : கணக்கீட்டுச் சரிபார்ப்பு

check, even parity : இரட்டைச் சமன் சரிபார்ப்பு

check, odd parity : ஒற்றைச் சமன் சரிபார்ப்பு

check register : சரிபார்ப்புப் பதிவேடு

check out : சரிபார்த்து அனுப்புகை.

check spelling : எழுத்துப் பிழையறி

chipcard : சிப்பு அட்டை, சில்லு அட்டை

chip, silicon : சிலிக்கான் சிப்பு: சிலிக்கான் சில்லு,

chipper : சிப்பாக்கி; சில்லு ஆக்கி,

chipset : சிப்புத் திரட்டு; சில்லுத் தொகுதி.

churing : கடைதல்.

churn rate : உதிரும் வீதம்; குறையும் வீதம், ஒதுங்கு வீதம் : செல்பேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நிகழ்நேர வணிகத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் மற்றும் இது போன்றோர் அடிக்கடி தங்கள் சந்தாவைப் புதுப்பிக்காமல் விட்டு விடுவர். இதனால் அக்குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2 முதல் 3 விழுக்காடு வரை அவ்வப்போது குறைந்துவிட வாய்ப்புண்டு. இந்த எண்ணிக்கை அதிகமாகும் எனில் அந்நிறுவனத்துக்கு புதிய செலவுகளை உருவாக்கும். விளம்பரம் மற்றும் பல நட வடிக்கைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க நிறையப் பணம் செலவழிக்க வேண்டும்.

choice : தேர்வு.

chorus : குழு ஒலி.

.ci : சிஐ : இணைய தள முகவரியில் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சேர்ந்த தளத்திற்கான பெரும் புவிபிரிவுக் களப்பெயர்.

chimes of doom : சாவு மணி : இறுதி மணியோசை : மெக்கின்டோஷ் கணினிகளில், மிக மோசமான பழுது ஏற்பட்டு செயல்படாத நிலையேற்படும்போது தொடர்ந்து மணியொலிக்கும்.

cipher system : மறையெழுத்து முறை

cipher text : மறையெழுத்து உரை

circuit, AND : உம்மை மின்சுற்று.

circuit, leastable : ஈருறுதி மின்சுற்று

circuit board : மின்சுற்றுப் பலகை

circuit capacity : மின்சுற்று கொள்திறன் திறன்.

circuit card : மின்சுற்று அட்டை.

circuit, control : கட்டுப்பாட்டு மின்சுற்று.

circuit diagram : மின்சுற்று வரிப் படம்.

circuit, NOR : இல் அல்லது மின்சுற்று.

circuit switching : மின்சுற்று இணைப்பாக்கம்.

circulating register : சுழற்சிப் பதிவகம்.

circuit data services : மின்சுற்று தகவல் சேவைகள் மின்சுற்று தொடர்பிணைப்புத் தொழில்நுட்ப அடிப்படையில், மடிக்கணினி மற்றும் செல்பேசி வாயிலாக அதிவேக தகவல் பரிமாற்றத்தை வழங்குதல்.

circuit, virtual : மெய்நிகர் மின்சுற்று.

check, parity : சமன் சரிபார்ப்பு.

check, validity : செல்லுபடிச் சரிபார்ப்பு.

checked objects : தேர்வு செய்த பண்பு.

checked property : சரிபார்ப்புப்பொருள்.

chicken-and-egg-loop : கோழியா முட்டையா மடக்கு.

.ck : சிகே : இணைய தள முகவரியில், குக் தீவின் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

.cl : .சி.எல் : (.cl) : இணைய தள முகவரியில், சிலிநாட்டுத் தளங்களைக் குறிக்கும் பெரும் புவிபிரிவுக் களப்பெயர்.

clari newsgroups : கிளாரி செய்திக்குழுக்கள் : இணையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய செய்திக்குழு. கிளாரிநெட் செய்திக் குழுவை தகவல் தொடர்பு நிறுவனம் பராமரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் (Reutuers), யுனைட்டட் பிரஸ் இன்டர்நேஷனல் ஒயர் சர்வீசஸ், ஸ்போர்ட்ஸ் டிக்கர், காமர்ஸ் பிசினஸ் டெய்லி மற்றும் பிற செய்தி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட செய்திக் கட்டுரைகளை இதில் காணலாம். மற்ற செய்திக் குழுக்களைப் போலன்றி, கிளாரிநெட் செய்திக் குழுவில் உறுப்பினராகக் கட்டணம் உண்டு. இச்சேவையைக் கட்டணம் செலுத்தி வாங்கியுள்ள இணையச் சேவை நிலையங்கள் மூலமாகவே இச்செய்திக் குழுவை அணுக முடியும்.

class and objects : இனக்குழுவும் இனப் பொருட்களும்

class hierarchy : இனக்குழுப் படி நிலை; வகுப்பு தொடர்முறை.

classless interdomain routing : பிரிவிலாக் களங்களுக்கிடையே திசைவித்தல் : இணையத்தில் உயர் நிலை திசை செலுத்து அட்டவணைகளின் உருவளவைச் சிறிதாக்க, ஒருங்கிணைப்புச் செயல் தந்திரத்தைப் பயன்படுத்தும் ஒரு முகவரி அமைப்புமுறை. முதன்மை திசைவிகள் (Routers) ஏந்திச் செல்லும் தகவல்களின் அளவைக் குறைக்கும் பொருட்டு, பல்வேறு திசை வழிகள் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தத்திட்டமுறை செயல்பட இதனை ஏற்றுக்கொள்ளும் திசைவித்தல் நெறி முறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லை நுழைவாயில் நெறிமுறை (Border Gateway Protocol-BGP)யின் பதிப்பு 4 மற்றும் ஆர்ஐபீயின் பதிப்பு 2 (RIPv2) இவற்றுள் சில. இத்திட்ட முறையின் தலைப்பெழுத்துக் குறும் பெயர் CIDR ஆகும்.

class methods  : வகுப்பு வழி முறைகள், இனக்குழு வழிமுறைகள்.

class module : வகுப்புக் கூறு; இனக்குழு கூறு

Class A Network : ஏ.-பிரிவு பிணையம் : 16,777,215 புரவன் (Host) கணினிகள் வரை இணைக்கத்தக்க ஒர் இணையப் பிணையம். ஏ.-பிரிவு பிணையங்கள், ஒரு பிணையத்தை அடையாளங்குறிக்க ஐபி (IP) முகவரியின் முதல் எண்மியைப் (பைட்) பயன்படுத்திக் கொள்கிறது. முதல் துண்மியை (பிட்) சுழியாக (0) மாற்றி விடும். புரவன் கணினி கடைசி மூன்று வண்மிகளால் குறிக்கப்படும். ஏ-பிரிவு முகவரியிடல் தற்போது 128 பிணையங்கள்வரை ஏற்றுக் கொள்கிறது. மிகச்சில பிணையங்களையும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான புரவன் கணினிகளையும் கொண்ட மிகப்பெரிய அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு ஏ-பிரிவு முகவரிமுறை ஏற்றது.

classic style : மரபுப் பாணி.

classify : வகைப்படுத்து.

class path : வகுப்புப் பாதை இனக் குழுப் பாதை : ஜாவா மொழியில் நூலக இனக் குழுக்களைச் சேமித்து வைத்துள்ள கோப்பகத்தைக் குறிக்கும்.

clean boot : தூய இயக்கம் : இயக்க முறைமையின் குறைந்த எண்ணிக் கையிலான கோப்புகளின் துணை கொண்டு கணினியை இயக்கிவைக்கும் முறை. கணினிச் செயல்பாட்டில் ஏற்பட்ட பழுதினைக் கண்டறிய இம்முறை பயன்படுகிறது. கணினியில் செயல்படுத்திய ஒரு குறிப்பிட்ட மென்பொருளின் காரண மாகத்தான் சிக்கல் ஏற்பட்டது என்பதைப் பிரித்தறிய முடியும்.

cleaning disk : தூய்மை வட்டு.

clear down : துடைத்தெறி.

clear method : துடைப்பு வழிமுறை.

clear outline : சுற்றுக்கோடு நீக்கு.

clear print area : அச்சு பரப்பெல்லை நீக்கு.

clear request packet : துடைத்தெறி வேண்டுகோள் பொதி,

clean install : தூய நிறுவுகை : கணினியில் ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள ஒரு மென்பொருளை மீண்டும் நிறுவும்போது, முன்பே நிறுவப்பட்டுள்ள கோப்புகளை நிறுவாமல் விட்டுவிடும். ஒரு மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் நேரும்போது, இவ்வாறு மறு நிறுவுகை செய்வது பயன்தராது. முன்னால் நிறுவியபோது இருந்த பயன்பாட்டு அல்லது முறைமைக் கோப்புகள் எதுவும் இல்லாத வகையில் மறுநிறுவுகை செய்ய வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருளினால் ஏற்பட்ட சிக்கல் தீர வாய்ப்புண்டு.

clear/delete/remove : அழி/நீக்கு/அகற்று. click speed : சொடுக்கு வேகம் : பயனாளர் சுட்டியின் மேலுள்ள பொத்தானை அல்லது வேறு சுட்டும் சாதனத்தை முதலாவது தடவை அழுத்தியதற்கும் இரண்டாவது தடவை அழுத்தியதற்கும் இடையிலுள்ள எந்த குறுகியகால இடை வெளி, இரட்டைச் சொடுக்காக (double click) எடுத்துக் கொள்ளபடுமோ, அந்தக் காலஅளவு, சொடுக்கு வேகம் எனப்படும். இரண்டு ஒற்றைச் சொடுக்குகளாக எடுத்துக் கொள்ள இயலாததாக ஆக்கும் விரைவான கால இடைவெளி.

clear key : துடைக்கும் விசை; விலக்கு விசை : சில விசைப்பகுதிகளில் எண்முறை விசைப்பலகையின் மேல்பக்க இடது மூலையில் உள்ள விசை. நடப்பில் தெரிவு செய்த பட்டியலைத் துடைக்கவோ நடப்பில் தெரிவு செய்ததை நீக்கவோ பயன்படும்.

client error : வாடிக்கையாளர் பிழை : வாடிக்கையாளர் தவறு ; கிளையன் பிழை : கட்டளை ஒன்றைப் பொருள் கோள் செய்வதில் உள்ள சிரமத்தின் விளைவாக அல்லது சேய்மை புரவன் கணினியுடன் சரிவர இணைக்க இயலாமையின் விளைவாக எழும் சிக்கல்.

client - server relationship : கிளையன் - வழங்கன் உறவுமுறை.

clickstream : சொடுக்கு தாரை : வலைத்தளம் ஒன்றில் ஒன்றைத் தேடும்போது பயனாளர் செல்லும் வழி. வலைப்பக்கத்தில் செய்யப்படும் ஒவ்வொரு தனித்தனித் தேர்வும் தாரையில் ஒரு சொடுக்கைச் சேர்த்துவிடும். தேவையானதைக் கண்டுபிடிக்க இயலாமல் மேலும் பயனாளர் சொடுக்குத் தாரரையில் போவாரானால் அவர் வேறு வலைத்தளத்துக்குத் திசைமாறிச் செல்லக் கூடும். பயன்படுத்தும் போக்குகளை ஆய்ந்தால் வலைத்தளம் உருவமைப் போர் இணக்கமான தள அமைப்புகள், இணைப்புகள், தேடு வசதிகள் போன்றவற்றை வழங்க முடியும்.

clients/server architecture : கிளையன்/வழங்கன் கட்டுமானம்.

client-server relationship : கிளையன்-வழங்கன் உறவுநிலை.

client side image maps : கிளையன் பக்கபடிமப் பதிலீடுகள் : வலைத் தளப் பக்கக் கிளையன் (எ.டு.: வலை உலாவி) தெரிவு செய்ய உதவும் சாதனம். இதன்மூலம் ஒரு படிமத்தின் பல பகுதிகளைச் சுட்டிமூலம் சொடுக்கி விருப்பத் தேர்வின்படி பயனாளரால் தெரிவு செய்யப்பட்டவற்றைக் காட்டலாம். சின்னத்தைச் சொடுக்கி பட்டியலில் விரும்பிய படங்களைப் பார்ப்பதை ஒத்தது. தொடக்க காலத்தில் (1993) படிமங்களை வலைத்தளத்தில் நடைமுறைப்படுத்தியது போன்று கிளையன் பக்க படிமத்தை அனுப்ப வலை வழங்கனை ஒருங்கிணைக்காது. ஆனால் செயல்பட வைக்கும். பொதுவாக பதிலீட்டு வேகத்தை மேம்படச் செய்யும்.

clipboard computer : பிடிப்புப் பலகைக் கணினி : எந்த இடத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடிய கணிணி, தோற்றத்திலும் செயல்பாட்டிலும் மரபுமுறைப் பிடிப்புப் பலகையை ஒத்தது. பிடிப்புப் பலகைக் கணினியில் நீர்மப் படிகக் காட்சித் திரை (LCD) உள்ளிட்டுச் சாதனத்துக்குப் பதிலாக ஒரு பேனா இருக்கும். பயனாளர் பேனாவைத் தொட்டுச் செயல்படுத்துவர். பிடிப்புப் பலகையில் பதிவான தகவல் கம்பி வடம் அல்லது இணக்கியின் வழியாக வேறு கணினிக்கு மாற்றப்படுகிறது. மரபுமுறைப் பிடிப்புப் பலகையைப் பயன்படுத்துவது போலவே, களப்பணி, தகவல் சேகரிப்பு, கூட்டம் போன்றவற்றில் பிடிப்புப் பலகைக் கணினியும் பயன்படுத்தப்படும்.

clipboard object : இடைநிலை பலகைப் பொருள்கள்,

clipboard view : இடைநிலை பலகைத் தோற்றம்.

clipper chip : கிளிப்பர் சிப்பு: துள்ளல் வகை இணைப்பு நெறிமுறையையும், மறைக் குறியீடுகளைக் கொண்ட நெறிமுறையையும் அமல் படுத்துகிற ஒருங்கிணைந்த மின் சுற்று. அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கழகம் உண்டாக்கியது. 64 துண்மி தகவல் தொகுதிகளையும், 80 துண்மிகளுக்கான திறவிகளையும் கொண்டது. தொலைபேசித் தகவல்களை இரகசியக் குறியீடுகளாக வைக்க அமெரிக்க அரசு இதனை உருவாக்கியது. மறைக்குறியீடுகள் என்ன குறிப்பிடுகின்றன என்பதை அமெரிக்க அரசு அறிய முடியும். அந்த மின்சுற்றைத் தன் நாட்டில் கட்டாயமாக்க முயன்ற அமெரிக்க அரசின் எண்ணம் நிறைவேறவில்லை.

clipping path : கிளிப்பிங் வழி: ஆவணமொன்றின் ஒரு பகுதியை மூடிமறைக்கப் பயன்படுத்தும் பல் கோண வடிவம் அல்லது வளைவு. ஆவணத்தை அச்சிடும்போது கிளிப் வழியில் உள்ளது மட்டுமே தோன்றும்.

clock/calendar : கடிகாரம்/நாட்காட்டி: சரியான நேரம் மற்றும் தேதி காட்டுவதற்கு நுண் கணினியினுள் நேரக் கணக்கு கொண்ட தனியான சுற்று பயன்படுத்தப்படுகிறது. மின்கலம் அளிக்கும் மின்சாரத்தின் மூலம் அது இயங்குகிறது. கணினியை நிறுத்திவிட்டாலும் அது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இயக்க முறைமை நேரம்/தேதியைப் பயன்படுத்த இயலும். சான்றாக, கோப்புகளை உருவாக்கிய தேதியைப் பதிக்கலாம். கோப்பினைப் படித்த நேரம், திருத்தம் செய்த நேரம் எல்லாம் குறிக்கலாம். எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் அதைப் பயன்படுத்த இயலும். சான்றாக, ஓர் ஆவணத்தில் அன்றைய தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க உதவும்.

clock, digital : இலக்கமுறை கடிகாரம்.

clock doubling : இரட்டிக்கும் கடிகாரம்: இரட்டிக்கும் மின்துடிப்பு : சில இன்டெல் நுண்செயலிகள் பயன்படுத்தும் தொழில்நுட்ப முறை. அதன்மூலம் தகவல்களையும், ஆணைகளையும் அமைப்பு முறையின் மீதப் பகுதியைவிட இரட்டை அளவு வேகத்தில் சிப்பு செயல் முறைப்படுத்த இயலும்.

clocking : நேரம் அளவிடல்.

clock pulse : கடிகாரத் துடிப்பு: மின் துடிப்பு அதிர்வு : இலக்கமுறை சாதனத்தின் செயல்பாடுகளோடு ஒத்தியங்கச்செய்வதற்காக படிக ஊசலினால் ஒரு கால ஒழுங்கில் உற்பத்தி செய்யப்படும் மின்னணுத் துடிப்பு.

clock signal generator : கடிகார சமிக்கை இயற்றி.

clock timer : நேரங்காட்டி; காலங்காட்டி கடிகாரம்.

close box : மூடு பெட்டி : மெக்கின் டோஷ் வரைகலை முறை பயன்படு இடைமுகப்பில் சாளரத் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் உள்ள சிறுபெட்டி. பெட்டியின் மீது சொடுக் கினால் சாளரம் மூடப்பட்டு விடும்.

close botton : மூடு பொத்தான்: விண்டோஸ் 95/98/ என்டி இயக்க முறைமைகளில் தோன்றும் சாளரங்களில் தலைப்புப் பட்டையில் வலது மூலையில் உள்ள x குறியிட்ட ஒரு சதுரப்பொத்தான். விண்டோஸ் 3.x பணித்தளத்தில் இப்பொத்தான் தலைப்புப் பட்டையின் இடது மூலையில் இருக்கும். பொத்தானில் சொடுக்கினால் பலகணி மூடப்படும்.

closed frame : மூடிய சட்டம்

closed routine : மூடிய நிரல்கூறு; மூடிய துணை நிரல்.

closing files : மூடிய கோப்புகள்.

close statement: மூடு ஆணை; மூடு கூற்று.

closeup : அணுக்கக் காட்சி: நெருக்கக் காட்சி.

.cm : சிஎம் : இணைய தள முகவரி, கேமரூன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

CMA : Computer Aided Manufacturing என்பதன் முதலெழுத்துக் குறும் பெயர். கணினி உதவியுடன் உற்பத்தி என்பது இதன் பொருள்.

cloth ribbon : துணி நாடா: தொடு நிலை அச்சுப்பொறி தட்டச்சுப் பொறி ஆகியவற்றில் பொதுவாக மையிடப்பட்ட நாடா பயன்படுத்தப் படும்.அச்சுப்பதிப்புமுனை நாடாவைத் தாக்கி மையைத் தாளுக்கு கொண்டு சென்று பதியவைக்கிறது. பின் புதுமை பெறுவதற்காக நாடா சிறிது நகரும். அச்சுப்பொறியில் பொருந்துவதாக துணி நாடா சுருணையில் பொதிய வைக்கப்பட்டிருக்கும் அல்லது நாடாப் பேழையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும். பல காரியங்களுக்கும் துணிநாடா போதுமானது என்றாலும், துல்லியம் வேண்டும் என்னும்போது அதற்குப் பதிலாக ஃபிலிம் நாடா பயன்படுத்தப்படும். ஆனால் ஃபிலிம் நாடா பன்முறைப் பயனுக்கு உதவாது. துணிநாடாவில் மீண்டும் மீண்டும் மை தடவிக் கொள்ளலாம். அதனால் அது பன்முறைப் பயனுக்கு உகந்தது.

CMOS RAM : சீமாஸ் ரேம் : நிரப்பு உலோக ஆக்சைடு குறைகடத்தி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நினைவகம் அமைத்தல். சீமாஸ் சிப்புகள் மிக மிகக் குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. மின்சாரம் வழங்கும் சாதனத்தின் இரைச்சலைத் தாங்கவல்லவை. இம்மாதிரியான சிப்புகள் மின்கலங்கள் அளிக்கும் மின்சாரத்தில் செயல்படும் வன்பொருள் பாகங்களில் மிகுந்த பயனுள்ளவையாய் இருக்கின்றன. நுண்கணினிக் கடிகாரங்கள், செயல்முறையில் அமைப்பில் இருந்துவரும் சிலவகை அழித்தெழுது அட்டைகள் போன்ற வன்பொருள்களில் பயனுள்ளவையாய் உள்ளன.

CMOS setup : சீமாஸ் அமைவு: தேதி, நேரம் போன்று சில குறிப்பிட்ட விருப்பத் தேர்வுகளை அமைத்துக் கொள்ள, இயக்க நேரத்தில் அணுகக் கூடிய பயன்பாடுமிக்க அமைப்பு.

CMY : சிஎம்ஒய்: CYAN (மயில்நீலம்), MAGENTA (செந்நீலம்) ,YELLOW (மஞ்சள்), என்ற சொற்களின் முதல் எழுத்துக்களான சொல். ஒளியை உட்கிரகித்து உருவாக்கப்படும் வண்ணங்களை வருணிப்பதற்கான ஒரு மாதிரி. தாளின்மீது படும் மை போன்றது. ஒளியை நீக்கும் வகையிலான கணித்திரை ஒளிக்காட்சி போன்றது அன்று. கண்ணிலுள்ள மூவகை கூம்புவடிவ செல்கள் மயில் நீலம், செந்நீலம், மஞ்சள் நிறங்களால் முறையே உட்கிரகிக்கப்படும் அதாவது (வெண்மை நிறத்திலிருந்து பிரிந்து வரும்) சிவப்பு, பச்சை, நீல நிறங்களை உணர்கின்றன. ஒளியை வடிகட்டும் இந்த அடிப்படை நிறங்களிலுள்ள வண்ணப் பொருளின் விழுக்காடு கலந்து விரும்பிய நிறத்தைக் கொண்டு வரலாம். எந்த வண்ணப் பொருளும் இல்லாதிருந்தாலும் வெண்மையில் எந்த மாற்றமும் இராது. இந்த வண்ணப்பொருள்கள் எல்லாவற்றையும் நூறு விழுக்காடு சேர்த்தால் வெண்மை கருமை ஆகிவிடும்.

CMYK : சிஎம்ஒய்கே : CYAN (மயில் நீலம்), MAGENTA (செந்நீலம்) YELLOW (u065&oir), BLOCK (565.ju) ஆகிய சொற்களின் முதல் எழுத்து களால் உருவான குறும்பெயர் CYMK. CMY நிறமாதிரி போன்ற ஒரு நிற மாதிரி. நூறு விழுக் காடு மயில் நீலம், செந்நீலம், மஞ்சள் சேர்ப்பதைப் போலன்றி தனிக் கருப்புநிறக் கூறுடன் சேர்ந்தால் கருப்பு நிறம் காட்டும் தன்மையது.

.cn : சின் : ஒர் இணைய தள முகவரி, சீன நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.

coaxial cable : இணையச்சு வடம்

cocktail party : கலக்கல் விருந்து

.co : சிஓ : ஒர் இணையத் தள முகவரி, கொலம்பிய நாட்டைச்சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

code, absolute : முற்றுக் குறிமுறை; நேரடிக் குறிமுறை.

code, alphabetic : அகரவரிசைக் குறி முறை எழுத்துக் கோவை குறிமுறை.

code, alphanumeric : எழுத்தெண்க் குறிமுறை.

code, binary : இருமக் குறிமுறை.

Code, Division Muitiple Access : பகுதி பன்முக அணுகல்குறிமுறை : பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கியும் அறியும். அதனால் பெற்ற சமிக்கையை குறியீடு ஆக்க முடியும். ஒவ்வொரு தொடர்பிலா வரிசைமுறையும் வெவ்வேறு தகவல் தொடர்பு தடத்தை ஒத்தது. இலக்கமுறை செல்பேசிக்காக மோட்டாரோலா இந்தப் ஒன்று சேர்ப்பு வகையைப் பயன்படுத்துகிறது.

code editor : குறிமுறை தொகுப்பி.

code error : பிழைக் குறிமுறை.

code generator : குறியீடு உருவாக்கி.

code, machine : எந்திரக் குறிமுறை.

code, optimization : குறிமுறைச் சரித்திறனாக்கம்.

code, relocatable : மறுஇட அமைவுக் குறிமுறை.

code, source : ஆதாரக் குறிமுறை; மூலக் குறிமுறை; மூல வரைவு.

cobweb site : ஒற்றடைத் தளம் : அநேக நாட்களாகப் பழக்கத்தில் இல்லாதுபோன ஒரு வலைத்தளம். codec : கோடெக் : coder, decoder என்ற இருசொற்களின் கூட்டுச் சொல்.

coded decimal number : குறிமுறைப் பதின்ம எண்.

coded decimal representation, binary: இருமக் குறிமுறைப் பதின்ம உருவகிப்பு.

coded digit, binary : இருமக் குறிமுறை இலக்கம்.

coded octal binary : இருமக் குறிமுறை எண்மம்.

coder : குறிமுறையாக்கி,

codingsheet : குறிமுறையாக்கத் தாள்.

code system : குறியீட்டு முறைமை

coding basics : குறிமுறை அடிப்படைகள்.

coding, absolute : முற்றுக்குறி முறையாக்கம்.

coding, automatic : தானியங்கு குறிமுறையாக்கம்.

coding, direct : நேரடி குறிமுறையாக்கம்.

co-efficient : குணகம்

cold link : குளிர் தொடுப்பு: புதுத்தெடுப்பு : தகவல் வேண்டுமென்று கேட்டதன் மேல் உண்டாக்கப்படும் இணைப்பு. அந்த வேண்டுகோள் நிறைவேறியவுடன் இணைப்பு துண்டிக்கப் பெறும். அடுத்தமுறை கிளையன். வழங்கனிடம் மீண்டும் தகவல் வேண்டுமெனக் கேட்டால் மீண்டும் இணைப்பு நிறுவப்பட வேண்டும். பரிமாற நிறைய தகவல்கள் கொண்டிருந்தால், கிளையன்/ வழங்கன் கட்டமைப்பில் குளிர் இணைப்புகள் பயனுள்ளவை. மைக்ரோசாப்ட் எக்செல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கு நிலை தகவல் பரிமாற்றம் குளிர் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது.

cold restat : புது மறுதொடக்கம்.

code snippet : குறியீட்டுச் சிறுபகுதி : 1. வரைகலைப் பயன்பாட்டில் இடைமுகம் ஒன்றில் பயனாளர், பட்டியில் விருப்பத்தேர்வு செய்யும் போது அல்லது பொத்தானை அழுத்தும்போது என்ன நிகழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சிறிய நிரல் பகுதி. 2. பெரிய செயல் முறைத் திட்டத்தின் பகுதியாக உள்ள செயல்முறை நிரலில் சிறு துண்டு. அச்சிறுபகுதி குறிப்பிட்ட வேலை அல்லது பணியை நிறைவேற்றும்.

collaborative filtering : இணைந்து வடிகட்டல், உடனுழை வடிகட்டல் : பலருடைய பட்டறிவுகளிலிருந்தும், கருத்துகளிலிருந்தும் தகவல் பெறும் ஒருவழி. ஜெராக்ஸ் பார்க்கில் டெலிக் டெர்ரி என்பவரால் இந்தக் கலைச்சொல் உண்டாக்கப்பட்டது. ஆவணங்களைப் படித்துக்கொண்டு வரும்போதே, பயன்படுத்துபவர்கள் அவ்வப்போது விளக்கஉரை குறித்துக் கொண்டுவரும் நுட்பத்தை முதலில் அவர்தான் பயன்படுத்தினார். தவிரவும், உள்ளடக்கம் பொறுத்து மட்டுமின்றி மற்றவர்கள் என்ன எழுயிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் அடுத்து எந்த ஆவணங்களைப் படிக்கலாம் என்பதைத் தெரிவு செய்யமுடியும். இணைந்து வடிகட்டுதலின் சாதாரண பயன்பாடு என்னவென்றால் குறிப்பிட்ட மக்களுக்கு விருப்பமான உலகளாவிய வலைத்தளங்களின் பட்டியலை உண்டாக்குவதாகும். பலருடைய அனுபவங்களை எழுத்தில் கொணர்ந்து சுவையான வலைத் தளங்களின் பட்டியலை வடிகட்டும் முறையில் உருவாக்க முடியும். அங்காடி ஆராய்ச்சிக்கான கருவியாக இணைந்து வடிகட்டுதலைப் பயன்படுத்துகிறார்கள். உற்பத்திப் பொருள்கள் பற்றிய கருத்துகள், மதிப்பீடுகள் ஆகியவை கொண்ட தரவுத் தளம் ஏற்படுத்தி, தரவுத் தளத்திலுள்ள கருத்துகளை வைத்து எந்தப் புது உற்பத்திப் பொருளை மக்கள் விரும்பி வாங்குவார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் முன் கூட்டிக் கூற இயலும்.

collection, data : தகவல் சேகரிப்பு : தரவுத் திட்டம்.

collector : சேகரிப்பி; திரட்டி.

colour : வண்ணம்; நிறம் : அலை வரிசை பொறுத்து மனிதர் கட்புலனால் காணத்தக்க ஒளியின் ஒரு பண்பு நிறம் என இயற்பியல் குறிப்பிடுகிறது. உயர் அலைவரிசை உடைய வயலெட் நிறத்திலிருந்து குறை அலைவரிசை உடைய சிவப்பு நிறம்வரை நிறங்கள் உண்டு. மின் காந்த நிறமாலை முழுமையின் ஒரு சிறு பகுதியாகக் காணக்கூடிய ஒளிப்பட்டையில் அந்த நிறங்களைக் காணலாம். கணினி ஒளிக்காட்சித்தில் வன்பொருளும் மென்பொருளும் இணைந்து செயல்பட்டு நிறம் உண்டாக்கப்படுகிறது. தனித்தனி நிறங்களுக்குரிய துண்மிகளை இணைக்கும் வேலையை மென்பொருள் செய்கிறது. அந்தத் துண்மிகளுக்குத் திரையில் குறிப்பிட்ட இடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. படக்கூறுகள் எனப்படும் தனித்தனிப் புள்ளிகள் அல்லது குறியீட்டு எண் குறிப்பிட்ட இடமாகும். வன்பொருளிலுள்ள தகவமைப்பு ஏற்பாடு இந்தத் துண்மிகளை மின்குறியீடுகளாக மாற்றுகிறது. எதிர் மின்வாய்க் கதிர்க் குழல் காட்சித் திரையில் நேரிணைவான இடங்களில் உள்ள வெவ்வேறு நிறமுடைய எரியங்களின் பிரகாச அளவை அந்தக் குறியீடுகள் கட்டுப்பாடு செய்கின்றன. பயனாளரின் கண்கள் எரியங்கள் (Phosphors) கொடுக்கும் ஒளிகளை இணைத்து ஒர் ஒற்றை நிறமாகக் காண்கின்றன.

colour balancing : வண்ண சம நிலைப்படுத்துதல்; நிறச் சமனாக்கம்.

colour burst : நிற வெடிப்பு : வண்ணத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்காக ஆரம்பத்தில் உண்டாக்கப்பட்ட தொழில் நுட்பம். ஒளிக் காட்சி சமிக்கையில் நிறத்தைக் குறியீட்டு வடிவில் மாற்ற உதவும் தொழில் நுட்பமாக இப்போது உள்ளது.

colour contrast : வண்ண மாறுபாடு; நிற வேறுபாடு.

colour enrichment : நிறச் செறிவு.

colourimeter : வண்ணமதிப்பீட்டுச் சாதனம் : தரமான தொகுப்பு வண்ணங்களைக் குறிப்பிடும் முறையில் வண்ணங்களை மதிப்பிட்டு அடையாளம் காண உதவும் சாதனம்.

colour graphics adapter : நிற வரைகலைத் தகவி.

colour inkjet printer : வண்ண மையச்சுப் பொறி.

colour laser printer : வண்ண லேசர் அச்சுப் பொறி.

colour mode property : நிறப்பாங்குப் பண்பு.

colour named literals : நிறப்பெயர் நிலையுரு; நிறப்பெயர் மதிப்புருக்கள். colour look-up table : நிற நோக்கு அட்டவணை : கணினியின் ஒளிக் காட்சி தகவியில் சேமித்து வைக்கப் பட்டுள்ள அட்டவணை. கணினியின் காட்சித்திரையில் காட்டக்கூடிய வெவ்வேறு வண்ணங்களுக்கு நேரிணையான நிறக்குறியீட்டு நிலை எண்களைக் கொண்டது அப் பட்டியல், மறைமுகமாக வண்ணம் காட்டப்படும்போது, நிறத் துண்மிகள் ஒரு சிறிதளவு ஒவ்வொரு படக்கூறுக்காக சேமித்து வைக்கப்பட்டு, நிறத்திற்காகப் பார்க்கவேண்டிய பட்டியலிலிருந்து குறியீட்டு நிலை எண்களின் ஒரு தொகுதியைத் தெரிந் தெடுப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றன.

colour management : நிற மேலாண்மை : அச்சுத்துறை யில் வெளிப்பாட்டுச் சாதனங்கள் பலவற்றில் எதையும் பயன்படுத்தி துல்லியமான ஒருசீரான வண்ணம் உண்டாக்கும் முறை, நுண்ணாய்வுக் கருவி, ஒளிப்படப்பிடிப்புக் கருவி, அல்லது காட்சித் திரை எதிலுமிருந்து ஆர்ஜிபி உள்ளீட்டினைத் துல்லியமாக அச்சிடு கருவி, அச்சிடு கருவிக்கான அளவுக் கோட்டுச் சாதனம் அல்லது உருவம் திரும்பவும் கொணருவதற்கான வெளிப்பாட்டு சாதனம் ஆகிய வற்றுக்காக சிஎம்ஒய்கே வெளிப் பாட்டுக்கு மாற்றுதலும் நிற மேலாண்மை என்பதில் உள்ளடங் கும். ஈரப்பதம் காற்றழுத்தமானி காட்டும் அழுத்தம் போன்ற சூழல் மாறுபாடு களுக்கேற்ப செயற் படுவதும் உள்ளடங்கும்.

colour management system : நிற மேலாண்மை முறைமை : கோடாக் நிறுவனம் உருவாக்கிய தொழில் நுட்பம். மற்ற மென்பொருள் விற்பனையாளர்கள் அதைப் பயன் படுத்த உரிமங்கள் வழங்கப்பட்டன. ஒளிக்காட்சித் திரை, கணினிக் காட்சித் திரை, மற்றும் அச்சு வடி வில் எதிலும் தோன்றும் வண்ணங் களுக்கு இணையானவற்றை உண் டாக்கம் அளவீடு செய்யவும் பயன் படுவதற்கான தொழில் நுட்பமாகும்.

colour scanner : நிற வருடு பொறி : உருவங்களை இலக்கமாக்கிய உரு வமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக் கூடியது. வருடு பொறியின் துண்மி (bit)யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். துண்மியின் ஆழம் என்பது வண்ண த்தை 8, 16, 24 அல்லது 32 நுண்மிகளாக மாற்றும் ஆற்றலாகும். வெளிப்பாட்டை அச்சிட வேண்டுமானால் சாதாரண மாக உயர்வகை வண்ண வருடு பொறிகள் பயன்படுத்தப்படு கின்றன. அக்கருவிகள் தகவல்களை உயர் தெளிவுத்திறனுடன் குறியீடாக் கவோ அங்குல வாரிப் புள்ளிக் குறி களாகவோ ஆக்கக் கூடியவை. கீழ் மட்ட வண்ண வருடு பொறிகள் 72 அங்குல வாரிப் புள்ளிகள் கொண்ட தெளிவுத்திறனுடன் குறிகளாக்கு கின்றன. அச்சு செய்யக் கருதப்படாத கணினித் திரை உருவங்களை உண்டாக்க சாதாரணமாகப் பயன் படுத்தப்படுகின்றன.

colour missing : வண்ண இழப்பு; நிறம் காணப்படாமை.

column break : நெடு வரிசை நிறுத்தம்; நெடுக்கை முறிவு.

column count : நெடுக்கை எண்ணிக்கை.

column graph: நெடுக்கை வரை படம்.

column indicator : நெடுக்கை சுட்டிக் காட்டி. .

coiumbus.oh.us : கொலம்பஸ். ஓஹெச்.யுஎஸ். : இணையத்தில் ஒரு முகவரி அமெரிக்க நாட்டு ஒஹீயோ மாநிலத்துக் கொலம்பஸ்ஸில் உள்ள தென்பதைக் குறிப்பிடும் பெரும் புவிபிரிவுக் களப் பெயர்.

colemn chart : நெடுக்கை நிரல்படம் : மதிப்பளவுகள் செங்குத்தான பட் டை.களாக அச்சிடப்பட்டு வெளி யிடப்படும் பட்டை வரைபடம்.

column head : நெடுக்கைத் தலைப்பு.

column text chart : நெடுக்கை உரை நிரல்படம்.

columnar : நெடுக்கையாக.

column width : நெடுக்கை அகலம்.

.com : .காம் : 1. வணிக அமை வனங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவரிகளை அடையாளம் காண உதவும் உயர்மட்டப் பகுதி. இணையத்தின் களப்பெயர் அமைப் பில் பெரும் பிரிவுக் களப் பெயர். காம் என்பது முகவரியின் இறுதிப் பாகத்தில் சேர்க்கப்படுவது, டிஎன்எஸ் (பொருள் வரையறை) பிரதேசம் (பொருள் வரையறை ) ஆகியவற்றையும் பார்க்க. (எ.டு). .கவ், மில், நெட், ஆர்க் இவற்று டன் ஒப்பிட்டுப் பார்க்கவும். 2. எம் எஸ் - பாஸ்ஸில் கோப்பின் வகைப் பெயர் கட்டளைக் கோப்பை அடையாளம் காட்டுவது.

combination chart : சேர்க்கை நிரல் படம்.

combined head : சேர்வுத் தலைப்பு; ஒன்றிணைந்த தலைப்பு.

combining characters : கூட்டு எழுத்துகள்.

combo box : சேர்க்கைப் பெட்டி.

combo box control : சேர்க்கைப் பெட்டி இயக்குவிசை.

command based : கட்டளை அடிப்படையிலான.

command buffer : கட்டளை இடை யகம் : பயனாளர் பதிந்துள்ள கட்ட ளைகள் வைத்திருக்கும் நினைவகத் திலுள்ள ஒரு பகுதி. பயனாளர் மீண்டும் கட்டளைகளை முழுவதும் தட்டச்சு செய்யாமல், கட்டளை களை மீண்டும் பயன்படுத்த உதவும். ஏதாவது பிழையிருந்தால் திருத்த வும், சிலவற்றை மாற்றவும், கட்டளைகளை நீக்கவும், பழைய கட்டளைகளின்ப ட்டியலைப் பெறவும் உதவும்.

command and control system : கட்டளை, கட்டுப்பாட்டு முறைமை. combinatorics : இணைப்பியல் : நிகழ்தகவு மற்றும் புள்ளி விவர தொகுப்பியல் தொடர்புடைய கணக்கியல் கிளை. எண்ணுதல், தொகுத்தல், வரிசைப்படுத்தல் ஆகியவை பற்றியது. இணைப்பியல் இரண்டு வகை இணைப்புகளையும் வரிசைமாற்ற வகைகளையும் கொண்டது. பெரிய குழுவிலிருந்து எடுத்த உறுப்புகளைத் தொகுத்தல், குழுவில் உறுப்புகள் இருந்துவந்த வரிசையைப் பொருட்படுத்தாமல் எடுத்துத் தொகுக்க வேண்டும். சான்றாக, 4 பொருள்கள் கொண்ட குழுவிலிருந்து ஒவ்வொரு முறையும் இரண்டு உறுப்புகள் எடுத்து ஆறு இணைப்பு வகைகள் உண்டாக்கு தல். ABCD என்னும் பொருள்களில் இரண்டை எடுத்து AB, AC, AD, BC, BD, CD என ஆறு உண்டாக்குதல். உறுப்புகளின் வரிசையை அப்படியே கொண்டு பெரியதிலிருந்து உறுப்பு கள் எடுத்துத் தொகுப்பது வரிசை மாற்ற வகையாகும். உதாரணமாக நான்கு பொருட் தொகுதியிலிருந்து இரண்டு பொருள்கள் எடுத்து வரி சை மாற்ற வகை செய்தலைக் குறிப் பிடலாம். முதல் தெரிந்தெடுப்பான Aயில் நான்கிலிருந்து எடுக்க வேண்டி யிருக்கும். அடுத்த B தெரிந்தெடுப்பு மீத மூன்றிலிருந்து எடுப்பதாகும். மொத்தத்தில் 12 வரிசைமாற்ற வகை கள் உண்டாக்கலாம். அதாவது AB, AC, AD, BA, BC, BD, CA, CB, CD, DA, DB, DC.

command button : கட்டளைப் பொத்தான் : அழுத்தும் பொத்தானைப் போன்ற உருவுடைய இயக்குவிசை. வரைகலை பயனாளர் இடைமுகத் தில் உள்ள உரையாடல் பெட்டியில் இருப்பது. கட்டளைப் பொத்தானை அழுத்தி பயனாளர் உரையாடல் பெட்டியிலுள்ள வேறு கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி அப்போதுதான் தெரிந்தெடுத்த கோப்பைத் திறப்பதுபோன்ற செயல்களைச் கணினியை செய்ய வைக்கலாம்.

command.com : கமாண்ட்காம் : எம்எஸ் டாஸ் இயக்க முறையின் தலையாய கோப்பு. அகக்கட்டளைகளை இதுவே நிறைவேற்றி வைக்கிறது.

command driven : கட்டளை முடுக்கி; குறியீட்டுச் சொற்களாக அல்லது எழுத்துகளாகக் கட்டளைகளை ஏற்றுக் கொள்ளுதல். இம்முறையை பயனாளர் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

command driven system : கட்டளையால் இயங்கும் முறைமை : கட்டுப்பாட்டு முனையத்திலிருந்து நுழைந்த ஆணையைக் கொண்டு பயனாளர் செயற்பாடுகளைத் தொடங்குகிற ஓர் அமைப்பு.

command interpreter : கட்டளை பெயர்ப்பி; ஆணை பெயர்ப்பி; கட்டளை வரி மாற்றி : சாதாரணமாக இது இயக்க முறைமையின் பகுதியாக இருக்கும். விசைப் பலகையிலிருந்து தட்டச்சான கட்டளைகளை ஏற்று அதில் சொன்னபடி வேலைகளைச் செய்து முடிக்கும். ஆணை பெயர்ப்பி பயன் பாட்டுத் தொகுப்புகளை இயக்கவும், பயன்பாடு தொடர்பான தகவல்கள் செல்வதை வழிப்படுத்தவும் செய் கிறது. ஒ.எஸ்/2 மற்றும் எம்எஸ்டாஸில் கட்டளை பெயர்ப்பி, கோப்புகளை நகர்த்தவும், படி எடுக்கவும், நீக்கவும், கோப்பகத் தகவல்களைக் காட்டவும் செய்கிறது. command language : கட்டளை மொழி : ஆணை பெயர்ப்பி அமைப் பால் சரியானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களும் சொற் கோவைகளும் கொண்ட தொகுதி.

command line : கட்டளை வரி : ஆணை மொழியில் எழுதப்பட்ட உரைக்கோவை, செயல்படுத்து வதற்கு ஆணை பெயர்ப்பிக்கு அனுப்பி வைக்கப்படுவது.

command line arguments : கட்டளை வரி உள்ளீடுகள்.

command line operating system : கட்டளை வரி இயக்க முறைமை.

command line user interface : கட்டளை வரி பயனாளர் இடைமுகம்.

command line interface : கட்டளை வரி இடைமுகம் : இயக்க முறைமைக் கும் பயனாளருக்கும் இடையே உள்ள ஒருவித இடைமுகம். பயனாளர் அதில் ஆணை களை ஒரு தனிவகை ஆணை மொழியைப் பயன்படுத்தித் தட்டச்சு செய்வார், கட்டளைவரி இடைமுகம் கற்றுக் கொள்வதற்குக் கடினமானது என்று கருதப்படுவது வழக்கமென்றாலும், ஆணை அடிப்படை கொண்ட அமைப்புகள் செயல் முறைப் படுத்தத்தக்கவை. செயல் முறைப் படுத்தும் இடைமுகம் அற்ற வரை கலை அடிப்படை கொண்ட அமைப் பில் இல்லாத நெகிழ்வு கிடைக்கிறது.

command path : கட்டளை வழி.

command prompt : கட்டளை தூண்டி.

command state : கட்டளை நிலை : ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை.

comment out : விளக்கக் குறிப்பாக்கு : ஒரு நிரலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை தற்காலிகமாக விளக்கக் குறிப்புப் பகுதியில் அடைத்துச் செயல்பட இயலாமல் செய்தல்.

commercial data processing : வணிகத் தரவு செயலாக்கம்.

commercial internet exchange : வணிக இணைய இணைப்பகம் : பொதுமக்களுக்கு இணைய சேவை அளிக்கும் இலாப நோக்கமில்லாத வணிக அமைவனம். வழக்கமான பிறர்சார்பான நடவடிக்கைகள், சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றோடு கூட அதன் உறுப்பினர்களுக்கு இணைய இணைப்பு வசதியையும் அளிக்கிறது.

commerce server : வணிக வழங்கன்; வணிகப் சேவையகம் ; நேரடியாகத் தொழில் நடவடிக்கைகள் நடத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எச்டீடீபி வழங்கன் கணினி. பற்று அட்டை எண்கள் போன்ற தகவல் களை மறைக் குறியீட்டு முறையில் வழங்கனுக்கும் வலை உலாவிக்கும் இடையில் தகவல் மாற்றம் செய்யப் படுகிறது. அஞ்சல்வழி வணிகம் புரியும் கம்பெனிகளும் வணிக வழங்கன்களை பயன்படுத்து கின்றன. சேமிப்பகம் அல்லது கம்பெனி அளிக்கும் பண்டங்கள் அல்லது சேவைகள் ஒளிப்படங் களாக விளக்கப்பட்டு காட்சியாக சேமிப்பகம் அல்லது கம்பெனியின் வலைத்தளத்தில் காட்டப்படு கின்றன. பயனாளர்கள் நேரடியாகத் தங்கள் வலை உலாவியைப் பயன்படுத்தி வேண்டியவற்றைக் கேட்டுப் பெறலாம். நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்ட். குவார்ட்டர் டெக்ட் போன்றவை உள்ளடங்கலாக அநேக கம்பெனிகள் வணிக வழங் கன்களை விற்பனை செய்கின்றன.

commercial software : வணிக மென்பொருள்.

common access method : பொது அணுகு வழிமுறை : ஃபியூச்சர் டொமைன் நிறுவனம் மற்றும் ஏனைய ஸ்கஸ்ஸி வணிக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தர வரை யறை. எப்படிப்பட்ட வன்பொருள் களைப் பயன்படுத்தினாலும் ஸ்கஸ்ஸி தகவிகள் (adapters) ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் தகவல் பரிமாற்றத் தைச் சாத்தியம் ஆக்குகின்ற பொது அணுகு வழிமுறை இதுவாகும்.

common applications environment (CAE) : பொதுப் பயன்பாட்டுச் சூழல்.

common business oriented language: பொது வணிகம் சார்ந்த மொழி. கோபால் (COBOL) மொழியின் விரி வாக்கப் பெயர்.

common control : பொதுக் கட்டுப்பாடு

common client interface : பொதுக் கிளையன் இடைமுகம் : என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ் - விண் டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடை முகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த முடியும். என்சிஎஸ்ஏ மொசைக்கின் எக்ஸ் - விண்டோஸ் மற்றும் விண்டோஸ் பதிப்புகள் டிசிபி/ஐபீ நெறிமுறை மூலமாக பிற நிரல்களுடன் தகவல் பரிமாறிக் கொள்கின்றன, விண்டோஸ் பதிப் பில் ஓஎல்இ தகவல் பரிமாற்றமும் இயல்வதாகும்.

Common Dialog Box Control : பொதுக் உரையாடல் பெட்டி இயக்குவிசை

common hardware reference platform : பொது வன்பொருள் குறிப்புப் பணித் தளம் : பவர்பீசி செயலியின் அடிப்படையில் அமைந்த ஒரு கணினிக் குடும்பத்துக் கான வரையறுப்பு. மேக்ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் மற்றும் சோலாரிஸ் உட்பட பல்வேறு இயக்க முறைமைகளில் இக்கணினிகள் செயல்பட முடியும்.

common imernet file system : பொது இணையக் கோப்பு முறைமை ; சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப் நெட்வொர்க் என்னும் கோப்பு முறைமைக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன் வைத்த தர வரையறை. இணையம் மற்றும் அக இணையக் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கோப்பு முறைமை ஆகும். ,

common language runtime(CLR) : பொதுமொழி இயக்கச் சூழல். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (.NET) தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம். பல்வேறு மொழியில் எழுதப்பட்ட நிரல்களை ஒரே இயக் க சூழலில் செயல்படுத்த முடியும்.

common language specification (CLS) : பொதுமொழி வரையறை: பொது மொழி வரையறுப்பு. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் . நெட் (.NET) தொழில் நுட்பத்தின் ஓர் அங்கம்.

common lisp : பொது லிஸ்ப் : லிஸ்ப் நிரலாக்க மொழியின் தரப்படுத்தப் பட்ட பதிப்பு. லிஸ்ப் மொழியை எந்த நிறுவனமும் தம் சொந்த வடிவில் வெளியிட முடியும். இதன் காரணமாய் லிஸ்ப் மொழி வெவ் வேறு வடிவில் வெளியிடப்பட்டது. எனவே அம்மொழியைத் தரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. தரப்படுத்தப்பட்ட பொது லிஸ்ப் மொழி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் லிஸ்ப் நிரலர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட மூலமொழி கிடைத்தது.

common storage area : பொது சேமிப்பகப் பரப்பு.

common user access : பொதுப் பயனர் அணுக்கம் : ஐபிஎம் நிறு வனத்தின் முறைமைப் பயன் பாட்டுக் கட்டு மானத்தில் ஒரு பகுதி யாக, பயனாளர் இடைமுகங்களை மேலாண்மை செய்வதற்கான தர வரையறைகளின் தொகுதி. வெவ் வேறு பணித்தளங்களில் ஒத்தியல் பாகவும் முரணின்றியும் செயல்படக் கூடிய பயன்பாடுகளை உருவாக்க உதவுவதற்கென இந்தப் பொதுப் பயனாளர் அணுக்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

communication data : தகவல் தொடர்பு தரவு.

communication device : தகவல் தொடர்புச் சாதனம்.

communication intertace : தகவல் தொடர்பு இடைமுகம்.

communication line : தகவல் தொடர்பு இணைப்பு.

communication link : தகவல் தொடர் புத் தொடுப்பு : கணினிகளுக் கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு வழியமைத்துத் தரும் இணைப்பு.

communications parameters : தகவல் தொடர்பு அளபுருக்கள் : கணினிகள் தம்மிடையே தகவல் பரிமாறிக் கொள்ளத் தேவையான பல்வேறு தகவமைவுகளைக் குறிக்கும் அளபுருக்கள் ஒத்தியங்காத் தகவல் தொடர்புகளில், எடுத்துக்காட்டாக, இரு இணக்கி (மோடம்)களுக் கிடையே தகவல் தொடர்பு நடை பெற மோடத்தின் வேகம், தகவல் துண்மிகள், முடிப்புத் துண்மிகளின் எண்ணிக்கை, மற்றும் வகைச் சமன் ஆகிய அளபுருக்களை சரியாக தகவ மைக்க வேண்டும்.

communications slot : தகவல் தொடர்புச் செருகுவாய் : மெக்கின் டோஷ் கணினியின் பல்வேறு மாதிரிகளில் பிணைய இடைமுக அட்டைகளைச் செருகுவதற்கென் உள்ள விரிவாக்க செருகுவாய்.

communication satellite : தகவல் தொடர்பு செயற்கைக்கோள் : பூமியின் மேலே சுற்றுப்பாதையில் பூமியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள், நுண்ணலை பரப்பும் நிலையமாக அது செயல் படும். தரைநிலையத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்கைகளை ஏற்று, அவற்றின் திறன் பெருக்கி வெவ்வேறு அலைவரிசைகளில் பூமியிலுள்ள இன்னொரு தரை நிலையத்துக்கு அனுப்பி வைக்கும். தொடக்க காலங்களில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை களுக்காகவே இத்தகைய தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன. கணினி தகவல்களின் அதிவேக பரப்புகைக் கும் பயன்படுத்த முடியும். ஆனால் இரண்டு இடையூறுகள் உள்ளன. ஒன்று, அலைபரவலில் ஏற்படும் தாமதம் (சமிக்கைகள் நீண்ட தொலைவு பயணம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலத்தினால் ஏற்படும் தாமதம்). இரண்டாவது தகவல் பாதுகாப்பு.

communications software : தகவல் தொடர்பு மென்பொருள் : பயனாள ரின் கட்டளைகளுக்கு ஏற்ப இணக் கியை (modem) கட்டுப்படுத்தும் மென்பொருள். பெரும்பாலும் இது போன்ற மென்பொருள் முனையக் கணினிகளை குறிப்பிட்ட வகையில் தகவமைத்தல், கோப்புகளைப் பரி மாறிக்கொள்ளல் போன்ற வசதி களைக் கொண்டிருப்பதுண்டு.

communication standard : தகவல் தொடர்புத் தரம்; செய்தித் தொடர்பு செந்தரம்; செய்தித் தொடர்பு திட்ட அளவு.

communications terminal protocol : தகவல் தொடர்பு முனைய நெறி முறை : ஒரு பயனாளர் தன்னுடைய கணினியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு கணினியை, அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு கணினியைப் போலவே அணுக வழி செய்யும் முனைய நெறிமுறை இது.

Community Antenna Televisions (CATV) : சமுதாய அலைவங்கித் தொலைக்காட்சி

compatability : ஒத்தியல்பு.

compact : குறு; குறுக்கி; கச்சிதம்.

compact database : தகவல் தளத்தை இறுக்கு.

compact disc : குறுவட்டு : 1. தொடக்க காலங்களில், கேட்பொலி (audio) தகவலை இலக்கமுறை (digital) வடிவில் பதிந்து வைப்பதற் கான ஒரு ஒளியியல் சேமிப்பு ஊடக மாக அறிமுகம் ஆனது. இது மின் காந்த வட்டுகளிலிருந்து வேறு பட்டது. பளபளப்பான உலோகப் பூச்சும் பாதுகாப்பான பிளாஸ்டிக் மேல் பூச்சும் கொண்டது. 74 நிமிடங் கள் கேட்கக் கூடிய உயர்தர ஒலித் தகவலைப் பதிய முடியும். மிகு அடர்த்தியுள்ள லேசர் கதிர் மற்றும் பிரதிபலிப்பு ஆடிகளின் உதவியுடன் இதிலுள்ள தகவல் படிக்கப்படு கிறது. சுருக்கப் பெயர் சிடி (CD). சில வேளைகளில் ஒளிவட்டு என்று அழைக்கப்படுவதுண்டு. 2, சிடிரோம், சிடி-ரோம்/எக்ஸ்ஏ , சிடி -ஆர், சிடி-ஆர்டபிள்யூ, ஃபோட்டோசிடி, டிவிற என்று பல பெயர்களில், பல் வேறு வகையான தகவல் வடிவங்கள் பதியப்பட்டுள்ள குறுவட்டுகள் கிடைக்கின்றன. பல் வேறு படிப்பு/ எழுது வேகங்களில் மற்றும் கொள்ள ளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.

compact disc player : குறுவட்டு இயக்கி : குறுவட்டில் பதியப்பட் டுள்ள தகவலைப் படிப்பதற்கான ஒரு சாதனம். வட்டின் உள்ளடக் கத்தைப் படிப்பதற்குரிய ஒளியியல் கருவிகளையும், படித்த தகவலை சரி யான வகையில் வெளியீடு செய்வதற் குரிய மின்னணுச் சுற்றுகளையும் இச்சாதனம் கொண்டிருக்கும்.

compact disc interactive (CDI) : இடைப்பரிமாற்ற குறுவட்டு; ஊடாட்டம் குறுவட்டு.

compact disc-recordable and erasable : குறுவட்டு - பதிதகு மற்றும் அழிதகு : பதிதகு குறுவட்டுகள் வெற்று வட்டுகளாகத் தயாரிக்கப்படு கின்றன. அதாவது தொடக்கத்தில் அவற்றில் தகவல் எதுவும் பதியப் பட்டிருக்காது. இத்தகைய வெற்று வட்டுகளை வாங்கி அவற்றில் எழுது வதற்கென உரிய சாதனங்கள் மூலம் தகவலைப் பதியலாம். அவ்வாறு ஒருமுறை பதியப்பட்ட தகவலை மீண்டும் அழித்து எழுத முடியாது. அழிதகு குறுவட்டுகளில் ஒருமுறை எழுதப்பட்ட தகவலை அழித்து விட்டு மீண்டும் புதிய தகவலை எழுத முடியும்.

compact model : கச்சித மாதிரியம் ; இன்டெல் 80x86 செயலிக் குடும் பத்தில் பின்பற்றப்படும் ஒரு நினை வக மாதிரியம். இதில் நிரலாணைத் தொடர்களுக்கென 64 கேபி நினைவகம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் நிரலின் தகவல்களுக்கென 1 எம்பி வரை ஒதுக்கப்படுகிறது.

company sites : நிறுவனத் தளங்கள்.

comparative grammer knowledge : ஒப்பிலக்கண அறிவு

comparison operators : ஒப்பீட்டுச் செயற்குறிகள்

comparison tests : ஒப்பீட்டுச் சோதனைகள்

comparative knowledge : ஒப்புமை அறிவு

compatibility mode : ஒத்தியல்புப் பங்கு : ஒரு கணினி முறைமைக்காக உருவாக்கிய மென்பொருளோ வன் பொருளோ இன்னொரு கணினி முறைமையிலிருந்து செயல்படும் தன்மை. பொதுவாக இம்முறை, இன்டெல் நுண்செயலிகளுக்காக உருவாக்கப்பட்ட உயர்நிலை இயக்க முறைமைகளில் (ஓ எஸ்/2 மற்றும் விண்டோஸ் என்டி) எம்எஸ் -டாஸ் மென்பொருளை இயக்குதலைக் குறிக்கும். அல்லது சில யூனிக்ஸ் பணிநிலையங்கள் மற்றும் சில மெக்கின்டோஷ் கணினிகளில் எம் எஸ் - டாஸ் மென்பொருள் இயக்குவதைக் குறிப்பதுண்டு.

compilation software : தொகுப்பு: மென்பொருள்; மொழிமாற்றி மென் பொருள்,

compilation time : தொகுப்பு நேரம்; மொழிமாற்று நேரம்.

compiled basic : மொழிமாற்று பேசிக்: பொதுவாக பேசிக் மொழி ஒவ் வொரு ஆணையாக நிறைவேற்றக் கூடிய ஆணைமாற்றி (interpreter) யை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறில்லாமல், முழு நிரலையும் பொறி மொழியாக்கி இயக்கும் மொழிமாற்றியை (compiler) அடிப் படையாகக் கொண்ட பேசிக் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இவ்வாறு மொழி மாற்றப்பட்ட பேசிக் நிரல் மிக வேகமாக இயங் கும் என்பதால் தொழில் முறையான நிரல்களுக்கு இத்தகு பேசிக் மொழி யையே தேர்வு செய்வர்.

compiled language : மாற்றிய மொழி; தொகு மொழி : கணினியில் இயக்கப் படுவதற்கு முன் பொறிக் குறி முறையாக்கப்பட்ட ஒரு மொழி ஒவ் வொரு ஆணையாக மொழி பெயர்க் கப்பட்டு இயக்கப்படும் ஆணை மாற்று முறையிலிருந்து வேறுபட்டது. complied programme : தொகுக்கப் பட்ட நிரல்; மொழிமாற்றிய நிரல்.

compile time binding : தொகுநேர பிணைப்பு: மொழிமாற்று நேரப் பிணைப்பு : ஒரு நிரல் மொழிமாற்றப் படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (Identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சிலவகை நிரல்களில் இப்பொறுப்பு, நிரல் இயக்கப்படும்போது முடிவு செய் யப்படுவதுண்டு. compiling application : தொகுப்பு பயன்பாடு; மொழிமாற்றப் பயன்பாடு.

complementary operation : நிரப்பு கைச் செயல்பாடு : பூலியன் தருக்க முறையில், நேரெதிர் விடையை வரவழைக்கும் செயல்பாடு. இச் செயல்பாடு அதே தரவுகளின் மீதே நிகழ்த்தப்படுகிறது என்பது குறிப் பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ஏ என்பது சரி என்ற மதிப்புடையது எனில் 'இல்லை ஏ' என்பது தவறு என்ற விடையைத் தரும்.

complement, tens : பத்தின் நிரப் பெண்.

complementary operation : நிரப்பு கைச் செயற்பாடு.

complementation, boolean : Woolwoor நிரப்புகை.

complementing : நிரப்புதல்.

complete word : முழுச் சொல்.

complex instruction set computer (CISC) : கலவை ஆணைத் தொகுதிக் கணினி.

complex number : கலப்பு எண் : a+ib என்ற வடிவில் உள்ள எண். a,b ஆகிய இரண்டும் மெய் எண்கள். i என்பது -1ன் வர்க்க மூலம் 1- 1. a என்பது மெய்ப்பகுதி என்றும் b என்பது கற்பனைப் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. கலப்பு எண்களை இருபரிமாண வரைபடத் தாளில் எக்ஸ்-ஒய் அச்சுகளில் ஆயத் தொலைவுப் புள்ளகளினால் குறித்துக் காட்ட முடியும். கிடை மட்ட அச்சில் (எக்ஸ்) மெய்ப்பகுதி யும் (a), செங்குத்து அச்சில் (ஒய்) கற்பனைப் பகுதியும் (b) இடம் பெறும். எக்ஸ், ஒய் அச்சுகள் முறையே மெய், கற்பனை அச்சுகள் என்றழைக்கப்படுகின்றன. வரை படத் தளம் கலப்புத் தளம் (complex plane) எனப்படுகிறது.

complexity : உட்சிக்கல்நிலை; கடுஞ்சிக்கல்.

component event : பொருள்கூறு நிகழ்வு: ஆக்கக்கூறு நிகழ்வு.

component object model : பொருள் கூறு மாதிரியம். ஆக்கக் கூறு பொருள் மாதிரியம்.

component reusability : பொருள்கூறு மறுபயன்பாடு; ஆக்கக் கூறு மறுபயன் பாடு.

component dialog box : பொருள்கூறு உரையாடல் பெட்டி; ஆக்கக் கூறு உரையாடல் பெட்டி,

compose : உருவாக்கு.

compose message : செய்தியாக்கல்.

compose sequence : இயற்று வரிசை முறை.

comp.newsgroups : காம்ப்.நியூஸ் குரூப்ஸ்; கணி, செய்திக்குழுக்கள் : யூஸ்நெட் செய்திக் குழுக்களின் படிநிலைப் பெயர். முன்னொட்டாக (prefix) comp. என்ற சொல் இருக்கும். இந்தச் செய்திக் குழுக்களில் கணினி வன் பொருள், மென்பொருள் மற்றும் கணினி அறிவியல் தொடர்பான ஏனைய செய்திகளைப் பற்றிய கலந்துரையாடல்கள் நடை பெறும். யூஸ்நெட் செய்திக் குழுக் களின் படிநிலையில் அடிப்படை யான ஏழு குழுக்களில் comp என்ப தும் ஒன்று. ஏனைய ஆறு: news., rec., sci., Soc., talk., misc ஆகியவை .

component software : ஆக்கக்கூறு மென்பொருள்; பொருள்கூறு மென்பொருள் : கூறுநிலை மென் composite colour monitor 108 compressed drive

பொருளாக்கத்தில் பயன்படுத்தப்படும் பொருள் கூறுகள். பொருள் கூறுகள் பிற பொருட்கூறுகளுடன் இணைந்து ஓர் ஒட்டுமொத்த நிரலை உருவாக்குகின்றன. ஒரு நிரலர், ஏற்கெனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பொருள்கூறு ஒன்றினை தன் நிரலில் பயன்படுத்திக் கொள்ளமுடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொருள் கூறு எவ்வாறு உருவாக்கப்பட்டது, அதனுள்ளே எழுதப்பட்ட ஆணைத்தொடர்கள் எவை, அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ளாமலே அப்பொருள்கூறின் முழுப்பயனையும் நுகர முடியும்.

composite colour monitor : ஒருங்கு சேர் வண்ணத் திரையகம்.

composite key : கூட்டுத் திறவி : ஓர் அட்டவணையில் தகவலைத் தேடிப் பெறப் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புலம் திறவுகோலாகப் பயன்படும். (எ-டு) பணியாளர்களின் விவரங்களைப் பதிந்து வைத்துள்ள அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட ஏட்டை(record) இனங்காண பணியாளர் எண் திறவுகோல் புலமாகப் பயன்படமுடியும். சில அட்டவணைகளில் ஒற்றைப் புலம் திறவுகோலாகப் பயன்பட முடியாது. பல்வேறு வணிகர்களிடம் கொள்முதல் செய்த பல்வேறு பொருள்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலில் ஒரு குறிப்பிட்ட ஏட்டினை (record) இனங்காண வணிகர் எண்+பொருள் எண் இரண்டு புலங்களும் சேர்ந்த கூட்டுத் திறவுகோலையே பயன்படுத்த முடியும்.

composite display : கூட்டுருத் திரைக்கட்சி : தொலைக்காட்சி மற்றும் சில கணினித் திரைகளின் காட்சிப் பண்பியல்பைக் குறிக்கிறது. கூட்டுக் கலவையான சமிக்கைகளிலிருந்து ஒரு படிமத்தை மீட்டெடுக்கும் திறனைக் குறிப்பிடுகிறது. கூட்டுருக் காட்சி கறுப்பு வெள்ளையாகவோ, வண்ணமாகவோ இருக்கலாம், சாதாரண கறுப்புவெள்ளை அல்லது சிபநீ (RGB) வண்ணத்திரைகளைக் காட்டிலும் தெளிவற்றே இருக்கும். சிபநீ காட்சித்திரைகள் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறக்கூறுகளுக்குத் தனித்தனி சமிக்கைகளையும் தனித்தனி இணைப்புக் கம்பிகளையும் கொண்டுள்ளன. ஆனால் கூட்டுருக் காட்சித் திரைகள் ஒரே இணைப்புக் கம்பியிலேயே படிமத்தை உருவாக்குவதற்கான தகவல் சமிக்கைகளையும், கிடைமட்ட மற்றும் செங்குத்து வருடல்களுக்கான துடிப்புத் தகவல்களையும் பெறுகின்றன.

composite video display : கூட்டு ஒளிக்காட்சித் திரை.

composite statement : கலவைக் கூற்று.

compressed disk : இறுக்கிய வட்டு; இறுகு வட்டு : ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தகவலைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ்பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தகவலை இறுக்கிச் சுருக்கிப் பதிவதன் மூலம் அதிகமான அளவு தகவலைப் பதிய வழியமைத்துக் கொடுக்கின்றன.

compressed drive : இறுகு வட்டகம்; இறுகு இயக்ககம். compressed SLIP : இறுகு ஸ்லிப் : ஸ்லிப் என்பது ஓர் இணைய நெறி முறை (Internet Protocol). இதன் ஒரு பதிப்பு இறுகு ஸ்லிப் எனப்படு கிறது. இணைய முகவரித் தகவலை இறுக்கிச் சுருக்கிப் பயன்படுத்து கிறது. இதன் காரணமாய் சாதாரண ஸ்லிப் நெறிமுறையைவிட இது வேகமாகச் செயல்படுகிறது.

compression : இறுக்குதல்; இறுக்கம்.

comprassion alogrithm : இறுக்கப் படி முறை.

compression technique : இறுக்கிச் சுருக்கும் நுட்பம்,

computational complexity : கணக்கிடல் உட்சிக்கல் நிலை.

computational linguistics : கணக்கிடல் மொழியியல்.

computational stylistics : கணக்கிடல் நடையியல்.

compute : கணக்கிடு; கணி.

computer abuse : கணினி கெடு வழக்கு.

computer-assisted learning : கணினி வழி கற்றல் : கணினிகளையும் அவற்றின் பல்லூடகத் திறனையும் பாடங்களைக் கற்பிக்கப் பயன் படுத்திக் கொள்ளுதல்.

computer, all purpose : அணைத்து பயன் கணினி,

computer, anolog : ஒத்திசைக் கணினி; தொடர்முறை கணினி.

computer assisted manufacturing (CAM) : கணினி உதவி உற்பத்தி.

computer, butfered : இடைத்தடுப்புக் கணினி.

computer control : கணினிக் கட்டுப்பாடு.

computer control console : கணினி கட்டுப்பாட்டு பணியகம்.

computer, digital : இலக்கமுறைக் கணினி,

computer errors : கணினிப் பிழைகள்.

computer family : கணினிக் குடும்பம்: ஒரே வகையான நுண்செயலிகளை யோ, ஒரே வடிவமைப்பிலமைந்த நுண் செயலிகளையோ கொண்ட கணினிக்குழுக்களைக் குறிக்கும் சொல். (எ-டு) ஆப்பிள் குடும்பக் கணினிகள் மெக்கின்டோஷ் என்றழைக்கப்படுகின்றன. சுருக்க மாக மேக் எனப்படும் இவை மோட்டோரோலா 68000, 68020, 68030, 68040 ஆகிய நுண்செயலி களில் செயல்படுகின்றன. சில வேளை களில் அவை வேறு செயலிகளைப் பயன்படுத்திக் கொள்வதும் உண்டு, (எ-டு) மேக் கணினிக் குடும்பத்தில் இப்போதெல்லாம் பவர்பீசி (PowerPC) நுண்செயலிகள் பயன் படுத்தப்படுகின்றன. இவை பவர் மேக் என்றழைக்கப்படுகின்றன.

computer, first generation : முதல் தலைமுறைக் கணினி,

computer fraud : கணினி ஏய்ப்பு ; கணினி மோசடி.

computer graphics : கணினி வரைகலை : தொடக்க காலத்தில் கணினித் திரைகளில் வெறும் எழுத்துகளையும் எண்களையுமே பார்க்க முடிந்தது. இப்போதெல் லாம் திரைகளில் படங்கள் பவனி வருகின்றன. இதற்கு கணினி வரை கலைத் தொழில்நுட்பமே காரணம். படங்களை உருவாக்குவது, திரையில் காட்டுவது, நிலையாகப் பதிந்து வைப்பது ஆகிய பணிகளுக் கான பல்வேறு வழிமுறைகளை கணினி வரைகலை நுட்பம் உள்ளடக்கியுள்ளது.

computer graphics interface : கணினி வரைகலை இடைமுகம் : வரைகலைச் சாதணங்களான அச்சுப்பொறிகள்,வரைவுபொறிகள் ஆகியவற்றுக்குரிய மென்பொருள் தரவரையறைகள். ஏற்கெனவே இருந்த ஜிகேஎஸ் (GKS - Graphics Kernel System) என்ற வரையறையின் இணைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது. பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு, வரைகலைப் படங்களை உருவாக்குதல், கையாளுதல், காட்சிப்படுத்தல், அச்சிடல் ஆகியவற்றுக்கான வரையறுக்கப்பட்ட வழிமுறைகளை வழங்குகின்றன.

computer graphics metafile : கணினி வரைகலை மீகோப்பு : பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜிகேஎஸ் (GKS - Graphical Kernel System) தரவரையறைகளுடன் தொடர்புடைய தரக்கட்டுப்பாடு. ஒரு வரைகலைப் படத்தை ஆணைகளின் தொகுதியாக உருவகிப்பது, அந்த ஆணைகளைக் கொண்டு அப்படத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். பயன்பாடுகளை உருவாக்கும் நிரலர்களுக்கு இதற்கான வரையறுத்த வழிமுறைகளை வழங்குகிறது. ஒரு வரைகலை மீகோப்பை வட்டில் சேமிக்க முடியும். ஒரு வெளியீட்டுச் சாதனத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.

computer instruction : கணினி ஆணை; கணினி வழி பயிற்றுவித்தல்; கணினி அறிவுறுத்தம் : 1. ஒரு கணினி புரிந்து கொண்டு அதன்படி செயல்படுதற்குரிய ஓர் ஆணை. காண்க machine instruction 2.கற்பித்தலுக்குக் கணினியைப் பயன்படுத்துவது.

computer jargon : கணினி குழுமொழி.

computer, general purpose : பொதுப்பயன் கணினி.

computer graphics : கணினி வரைகலை; கணினி வரைவியல்,

computer integrated manufacture : ஒருங்கிணைந்த கணினி உற்பத்தி.

computer language : கணினி மொழி: ஒரு கணினியில் செயல்படுத்துவதற்கான ஆணைகளைக் கொண்டுள்ள ஒரு செயற்கை மொழி. இருமக்குறிமுறை மொழி தொடங்கி உயர்நிலை மொழிகள் வரை மிகப்பரந்த தொகுதியை இச்சொல் குறிக்கிறது.

computer name : கணினிப் பெயர் : ஒரு கணினிப் பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியைத் தனித்து இனங்காட்டும் பெயர். ஒரு கணினிப் பெயர் வேறொரு கணினிக்கு இருக்க முடியாது. களப்பெயராகவும் இருக்கக் கூடாது. பயனாளர் பெயர் என்பதும் கணினிப் பெயர் என்பதும் வேறு வேறாகும். பிணையத்தில் ஒரு கணினியின் பெயரைக் கொண்டே அதன் வளங்களைப் பிற கணினிகள் பெற முடியும்.

computer operator : கணினி இயக்குநர்.

computer-on-a-chip : சிப்பமைவுக் கணினி; சில்லுக் கணினி.

computer, personal : சொந்தக் கணினி.

computerphile : கணினிப் பைத்தியம் : கணினியில் பணியாற்றுவதிலேயே எப்போதும் மூழ்கிப் போகின்ற நபர். இவர் கணினிகளைச் சேகரித்து வைப்பார். கணினிப் பணியே இவர் பொழுது போக்கு.

computer power : கணினி சக்தி; கணினித் திறன் : பணி செய்வதில் கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIPS - Million Instruction Per Second) அல்லது வினாடிக்கு எத்தனை மிதவைப் பள்ளிக் கணக்கீடுகளைச் செய்யவல்லது என்ற முறையில் அளப்பதுமுண்டு (MFLOPS - Million Floating Point Operations Per Second) கணினியின் திறனை வேறு வகையிலும் மதிப்பிடலாம். மதிப்பிடுபவரின் தேவைகளையும் நோக்கங்களையும் பொறுத்தது.

computer press association : கணினிப் பத்திரிகையாளர் சங்கம் : கணினித் தொழில்நுட்பம் பற்றியும் கணினித் தொழில்துறை பற்றியும் எழுதுகின்ற பத்திரிகைகளில், வலைபரப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இவர்கள் சேர்ந்த ஒரு வணிக அமைப்பு.

computer process : கணினிச் செயலாக்கம்; கணினி செயற்பாங்கு: கணினி நடைமுறை.

computer readable : கணினி படித்தகு : கணினி படித்துப் பொருள் கொண்டு நிறைவேற்றும் வடிவில் அமைந்த ஆணை. இருவகையான தகவல் கணினி படித்தகு என்று சொல்லப்படுகிறது. பட்டைக் கோடுகள், காந்த நாடா, காந்த கையெழுத்துகள் மற்றும் வருடிப் பார்த்து அறிந்து கொள்ளும் ஏனைய வடிவங்கள் - இவையனைத்தும் கணினி படித்தகு தகவலாகும். கணினியின் நுண்செயலிக்குப் புரியும் வகையில் எந்திர மொழியில் இருக்கும் தகவல்.

computer revolution : கணினிப்புரட்சி : தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சி காரணமாக சமூக, தொழில் நுட்பத் துறைகளில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணினிகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சமூக வாழ்வில் இவற்றின் தாக்கம் புரட்சிகரமானது என்றுதான் கூறவேண்டும். கணினியின் வேகம், துல்லியம், சேமிப்புத் திறன் ஆகியவை தகவல் சேமிப்பு, செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

computer systems, audit of :கணினிமுறைமைத் தணிக்கை.

computer terminal, remote : சேய்மை கணினி முனையம்; தொலை கணினி முனையம்.

computerisation : கணினி மயமாக்கல்.

computerise : கணினிமயமாக்கு.

computer, scientific : அறிவியல் கணினி.

computer, special purpose : சிறப்புப்பயன் கணினி.

computer telephone integration : கணினி-தொலைபேசி ஒருங்கிணைப்பு : தொலைபேசியில் வரும் அழைப்புகளை முறைப்படுத்துதல், மாற்று எண்ணுக்கு திசைதிருப்புதல், தானாகப் பதில் தருதல், ஒரு தகவல் தளத்தில் உள்ள தகவலைத் தேடி அறிவித்தல், தானாகவே இன்னொரு தொலைபேசி எண்ணை அழைத்து தகவலைத் தெரிவித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் ஆட்களின் தலையீடு எதுவுமின்றி செய்து முடிக்கக் கணினியையும் கணினி மென்பொருள்களையும் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.

con : கான் (கன்சோல்) : எம் எஸ் டாஸ் இயக்க முறைமையில் விசைப் பலகை மற்றும் கணினித் திரையைக் குறிக்கும் கருத்தியலான சாதனப் பெயர். உள்ளீடு மட்டும் செய்யமுடிகிற விசைப்பலகை மற்றும் வெளியீடு மட்டும் செய்ய முடிகிற காட்சித் திரை இரண்டும் சேர்ந்து முறையே முதன்மையான உள்ளீட்டு/வெளியீட்டு ஊடகமாய் எம் எஸ்-டாஸ் இயக்கமுறைமையில் பயன்படுகின்றன.

concatenation : ஒன்றிணைப்பு: இணைத்தல்; பிணைத்தல்.

concept : கருத்துரு; மனவுரு; கருத்தமைவு.

concept. database : தரவுத் தளக் கோட்பாடு; தரவுத் தள எண்ணக் கருத்துரு .

conceptual scheme ; கருத்துருத் திட்டவரை : தரவுத் தளங்கள் பல, மூன்று நிலைத் திட்டவரைக் கட்டுமானத்தை ஏற்பவையாய் உள்ளன. தரவுத்தளத்தின் கட்டமைப்பு மற்றும் தகவல் உள்ளடக்கம் இரண்டும் சேர்ந்தே திட்டவரைக் கட்டுமானத்தை நிர்ணயம் செய்கின்றன. மூன்று திட்டவரைகளுள் கருத்துருத் திட்டவரை (தருக்க முறைத் திட்ட வரை) தகவல் தள முழுமையின் மாதிரியை விளக்குவதாய் உள்ளது. எனவே இது அக மற்றும் புற (Internal and External) திட்டவரைகளுக்கு இடைப்பட்டதாய் விளங்குகிறது. அகத் திட்டவரை, தகவல் சேமிப்பையும், புறத்திட்டவரை பயனாளருக்குத் தகவலை வெளிப்படுத்தும் பணியையும் செய்கின்றன. பொதுவாக திட்டவரை என்பது தரவுத் தளம் வழங்கும் தரவு வரையறை மொழி (Data Definition Language - DLL)யின் கட்டளைகளால் வரையறுக்கப்படுகின்றது.

concurrent execution : உடன்நிகழ் நிறைவேற்றம் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கூறுகளை அல்லது நிரல்களை, ஒரே நேரத்தில் இயங்குவதுபோல் தோற்றமளிக்குமாறு செயல்படுத்துதல். ஒரு நிரலைப் பல்வேறு பணிக்கூறுகளாக அல்லது பல்வேறு புரிகளாக (threads) பிரித்து நேரப் பங்கீட்டு முறையில் ஒற்றைச் செயலியில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் மூலமும் உடன் நிகழ் நிரல்களை நிறைவேற்ற முடியும்.

conditional : நிபந்தனைக்குட்பட்டது: ஒரு நிபந்தனை மெய்யாக இருக்கும்போது அல்லது மெய்யாக இல்லாதபோது ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு செயல்பாட்டை மேற்கொள்ளுமாறு ஒரு நிரலில் அமைக்கப்படும் கட்டளை தொடர்பானது.

conditional compilation : நிபந்தனை மொழிமாற்றம் : ஒரு நிரலின் மூல வரைவினை சில நிபந்தனைகளின் அடிப்படையில் பொறிமொழியாய் மொழிபெயர்க்கும் முறை. எடுத் துக்காட்டாக நிரலை மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் {DEBUG) குறியீடு வரையறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிரலர் குறிப்பிட்ட பகுதிகள் மொழி மாற்றப்படவேண்டும் என்று கட்டளை அமைக்க முடியும். conditional branch instruction : நிபந்தனைச் சார் ஆணை.

conditional jump instruction : நிபந்தனை தாவல் ஆணை.

conditional operators :நிபந்தனை செயற்குறிகள்.

conditonal sum: நிபந்தனைக் கூட்டல் .

condition code :நிபந்தனைக் குறிமுறை : முந்தைய பொறி ஆணையின் அடிப்படையில் ஒரு துண்மி தொகுதியில் ஒரு குறிப்பிட்ட துண்மி நிகழ் (on) அகல் (off) நிலைக்கு மாற்றப்படுவதுண்டு. பெரும்பாலும் தொகுப்பு மொழி(assembly language) அல்லது பொறிமொழிச் சூழலில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நிபந்தனைக் குறிமுறைகள் பெரும்பாலும் வன்பொருள் தொடர்பானவை. ஆனால், மிச்ச வழிவு (carry overflow),சுழி விடை(zero result)அல்லது குறைநிலை(negative) விடைதரும் குறிமுறைகளைக் கொண்டிருக்கும்.

conditional line:நிபந்தனைக் கோடு .

confidence factor :நம்பிக்கைக் காரணி.

connected graph இணைந்த வரைபடம்

conjugation : புடைபெயர்ப்பு.

connect :இணைத்திடு .

connected line :இணைத்தடம்; தொடர்புடைய இணைப்பு.

connect charge :இணைப்புக் கட்டணம் ,வணிகமுறைத் தகவல் தொடர்பு அமைப்பு அல்லது சேவையுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு பயனாளர் செலுத்த வேண்டிய தொகை. சில சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இவ்வளவு தொகை என இணைப்புக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. வேறுசில சேவைகளுக்கு, சேவையின் வகைக்கேற்ப அல்லது பெற்ற தகவலின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. வேறு சில சேவையாளர்கள், எவ்வளவு மணி நேரம் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கின்றனர். சில வேளைகளில், இணைப்பின் தொலைவு, அலைக்கற்றை அகலம் அல்லது மேற்கூறியவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளைக் கணக்கில் கொண்டும் இணைப்புக் கட்டணம் வரையறுக்கப்படுகின்றது.

connect using இதன்மூலம் இணைத்திடு.

connector box : இணைப்புப்பெட்டி .

connectionless:இணைப்பிலா: ஒரே பிணையத்தில் அல்லது வெவ்வேறு பிணையங்களிலுள்ள இரண்டு கணினிகளுக்கிடையே நேரடி இணைப்பு இல்லாமலும் தகவல் தொடர்பு சாத்தியப்படும். தகவலைப் பொதிகளாகக் கூறுபிரித்து ஒவ்வொரு பொதியின் மீதும் அனுப்பும்/பெறும் கணினிகளின் முகவரி இடப்பட்டு பிணையத்தின் வழியே அனுப்பி வைக்கப்படும். பிணைய வழிகளில் பயணம் செய்து தகவல் பொதி இறுதியில் இலக்குக் கணினியைச் சென்றடைந்துவிடும். இதனையே இணைப்பிலாத் தகவல் தொடர்பு என்கின்றனர்.

connection matrix:இணைப்புஅணி .

connection-oriented network service(CONS): இணைப்புசார்பிணைய சேவை. connection oriented protocol : இணைப்புசார் நெறிமுறை.

connection oriented : இணைப்பு அடிப்படையிலான; இணைப்பு சார்ந்த : ஒரு பிணையத்தில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிணையங்களிலுள்ள இரு கணுக்(node) கணினிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் நடைபெற ஒரு நேரடி இணைப்புத் தேவைப்படுகிற தகவல் தொடர்பு முறைக்கு இணைப்பு சார்ந்த தகவல் தொடர்பு என்று பெயர்.

connections : இணைப்புகள்.

connection wizard : இணைப்பு வழிகாட்டி,

connectivity : இணைப்புநிலை : 1.ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் {Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைபேசி இணைப்பின் தரத்தையோ, இரைச்சல் இல்லாத் தன்மையையோ தகவல் தொடர்பு சாதனங்களில் அலைக்கற்றை அளவையோ குறிக்கும். 2.பிற சாதனங்களுக்கிடையே தகவலை அனுப்புவதற்குரிய ஒரு வன்பொருளின் திறன், அல்லது பிற மென்பொருள் தொகுப்புகளுடன் தொடர்பு கொள்வதற்குரிய ஒரு மென் பொருளின் திறன். 3.பிணையத்திலுள்ள வேறொரு கணினியுடனோ, பிற வன்பொருள் சாதனத்துடனோ, பிற மென்பொருள் தொகுப்புடனோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்குரிய ஒரு வன்பொருள்/மென் பொருள் அல்லது ஒரு கணினி இவற்றின் திறனைக் குறிக்கிறது.

connectivity platform : இணைப்பு நிலைப் பணித்தளம்.

connector : இணைப்பி : வன்பொருள் அமைப்பில், இரண்டு வடங்களை இணைக்கவோ, ஒரு இணைப்பு வடத்தைச் சாதனத்துடன் இணைக்கவோ பயன்படுகிறது. (எ-டு: ஆர்எஸ் - 232-சி என்னும் இணைப்பி இணைக்கியின் இணைப்பு வடத்தை ஒரு கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது). பெரும்பாலான இணைப்பிகள் ஆண்,பெண் என்கிற இரு வகைகளில் அடங்கிவிடுகின்றன. ஆண் இணைப்பிகள் (male connectors) ஒன்று அல்லது மேற்பட்ட பின்களைக் கொண்டிருக்கும். இவற்றை நுழை இணைப்பிகள் என அழைக்கலாம். பெண்வகை இணைப்பிகளில், ஆண் இணைப்பிகளிலுள்ள பின்களை ஏற்பதற்கான துளைகள் இருக்கும். இவற்றை துளை இணைப்பிகள் என்று அழைக்கலாம்.

connector, multiple : பன்முக இணைப்பி.

connector symbol : இணைப்புக் குறியீடு.

consequent rules : வினைவுறு சட்டங்கள்,

console printer : பணியக அச்சுப் பொறி.

console applications | பணியகப் பயன்பாடுகள்.

console display register : பணியகக் காட்சிப் பதிவகம்

consolidate : ஒருங்கு திரட்டு

console log : பணியகப் பதிவு

console switch :பணியக விசை. constant expression : மாறாத் தொடர் : ஒரு நிரலில், அனைத்தும் மாறிலிகளால் ஆன ஒரு கணக்கீட்டுத் தொடர். நிரல் நிறைவேற்றப்பட்டு முடியும்வரை அதன் ஒட்டுமொத்த மதிப்பு மாறாது.

constants and variables : மாறிலிகளும் மாறிகளும்.

Constant Angular velocity (CAV) ! மாறாக் கோண வேகம்.

Constant Linear Velocity (CAV): lomme நேர் வேகம்.

constant area : மாறாப் பரப்பு.

constellation : கொத்து; திரள் : தகவல் தொடர்பு அமைப்பில் சுமப்பி அலைகளின் (carrier wave) வெவ்வேறு நிலைகளை உருவகிக்கும் ஒரு தோரணி (pattern) அமைப்பு. ஒவ்வொரு நிலையும் ஒரு குறிப்பிட்ட துண்மி சேர்க்கைகளைக் கொண்டிருக்கும். ஒரு தகவல் தொடர்பு சமிக்கையில் ஏற்படும், தனித்துக் காட்டக்கூடிய ஒவ்வொரு மாற்றத்தையும் அடையாளம் காட்டும் நிலைகளின் எண்ணிக்கையை இத்திரள் மூலம் அறியலாம். எனவே, ஒற்றை மாற்றத்தில் அதிகபட்சமாக குறிமுறைப்படுத்த வேண்டிய துண்மிகளின் எண்ணிக்கையை இது காட்டும்.

construct : கட்டு; கட்டமை; உருவாக்கு.

consumer electronics : நுகர்வோர் மின்னணுவியல்.

contact manager : தொடர்பு மேலாளர்.

context switching : சூழல் நிலை மாற்றம் : பல்பணி இயக்க முறைமையில் ஒருவகை மையச்செயலியின் கவனத்தை ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்குத் திருப்பும் செயல்முறை, ஒவ்வொரு பணிக்கும் நேரத்தைக் கூடுதலாக்கி மாற்றி மாற்றி ஒதுக்கீடு செய்யும் முறையிலிருந்து மாறுபட்டது. c

ontiguous : அடுத்தடுத்து; ஒட்டியுள்ள : பொது எல்லைக் கோட்டைக் கொண்ட அடுத்தடுத்த பகுதிகள். (எ-டு.) ஒரு வட்டில் அடுத்தடுத்த தகவல் குறிப்புகள் சேமிக்கப்பட்டுள்ள வட்டுப் பிரிவுகள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் முறை.

containing text : உரையடங்கிய.

content adviser : 2.உள்ளடக்க ஆலோசகர்

contiguous data structure : அடுத்தடுத்துள்ள தரவுக் கட்டமைப்பு.

continous forms : தொடர் படிவங்கள்.

continuous analysis : தொடர் பகுப்பாய்வு.

continuous stationary : தொடர் தாள்.

continuous tone printer : தொடர் மையச்சுப் பொறி : ஒருவகை அச்சுப்பொறி. உருவப் படங்களை அச்சிடும்போது சாம்பல் நிற அல்லது வண்ணப் படிமங்களைத் தொடர் மைபூச்சு முறையில் மிக இயல்பான வகையில் அச்சிடும்.

control : கட்டுப்பாடு; இயக்குவிசை: 1.ஒரு கணினியையும் அதன் செயல்பாடுகளையும் முறைப்படுத்தி மேலாண்மை செய்தல். பிழையற்ற செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த சரியான நேரத்தில் சரியான வரிசையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். கட்டுப்பாடு என்னும் சொல் வன்பொருள், மென்பொருள் இரண்டுக்கும் பொருந்தக் கூடியதே. வன்பொருளைப் பொறுத்தவரை கட்டுப்பாட்டு மின் இணைப்புப் பாட்டை (control bus) என்னும் மின்வழி மூலமாக கணினியின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மென்பொருளைப் பொறுத்தவரை தகவல்களைக் கையாளும் நிரல் ஆணைகளைக் குறிக்கின்றன. 2. ஒரு வரைகலைப் பயனாளர் இடைமுகத்தில் (GUI) ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டை நிறைவேற்றப் பயனர் இயக்குகின்ற, திரையில் தோன்றும் ஒரு சிறு உருப்பொருள். மிகப்பரவலாகப் பயன்படும் இயக்கு விசைகள், கட்டளைப் பொத்தான்கள், தேர்வுப் பெட்டிகள், உருள்பட்டைகள் போன்றவையாகும்.

control cards கட்டுப்பாட்டு அட்டைகள்.

control code கட்டுப்பாட்டுக்குறிமுறை : அச்சிடலில், தகவல் பரிமாற்றத்தில், திரைக்காட்சிகளில் ஒரு சாதனத்தின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரு கணினி நிரலில் பயன்படுத்தப்படும் அச்சிடவியலாக் குறிகள். (எ-டு: புதியவரி, ஒரு வரி நகர்த்தல், தாளை வெளித்தள்ளல், நகர்த்தியை திரும்பச் செய்தல் போன்ற பணிகளுக்கான அச்சுப் பொறிக் கட்டுப்பாட்டு குறிகள்). ஒரு பயன்பாட்டு மென்பொருள், அச்சுப் பொறியைக் கட்டுப்படுத்தும் வழி முறைகளைக் கொண்டிராதபோது ஒரு நிரலரால் அல்லது ஒரு பயனாளரால் கட்டுப்பாட்டுக் குறிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளித்தோற்றத் திரைக் காட்சியில் கட்டுப்பாட்டுக் குறிகள், உரைப்பகுதியை அல்லது காட்டியைக் கையாள்வதற்கென மையச்செயலியால் திரையகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒளிக்காட்சிக் கட்டுப்பாட்டு குறிகள் அன்சி (ANSI) மற்றும் விடீ-100 (VT100) ஆகும்.

control computer :கட்டுப்பாட்டுக் கணினி,

controls change of :கட்டுப்பாட்டு மாற்றம்.

control collection : இயக்கு விசைகள் தொகுப்பு.

control flow : கட்டுப்பாட்டுப் பாய்வு: ஒரு நிரலில் இயலக் கூடிய செயல் பாட்டு வழிகள் அனைத்தையும் நுணுகிப் பார்ப்பது. பொதுவாக இது ஒரு வரைபட வடிவில் விளக்கப்படும்.

control counter :கட்டுப்பாட்டு எண்ணி.

control elements :கட்டுப்பாட்டு உறுப்புகள்.

control flowchart : கட்டுப்பாட்டு பாய்வு நிரல்படம்.

control loops :கட்டுப்பாட்டு மடக்கிகள்.

control logic: கட்டுப்பாட்டுத் தருக்கம்.

control register, access:அணுகுக் கட்டுப்பாட்டுப் பதிவகம்,

control strip :கட்டுப்பாட்டுப்பட்டை : 1.பதிவு செய்யப்பட்ட தகவல்களை ஏற்கெனவே அறிந்த மதிப்புகளுடன் ஒப்பிட்டு, துல்லியத் தன்மையைப் பாதுகாக்கத் தேவையான திருத்தங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக் கருவிகள். 2.கணினிப் பணியின்போது அடிக்கடிப் பயன்படுத்தக்கூடிய நிரல்களை, தகவல்களைக் குறுவழி (shortcuts) வடிவில் எளிதில் கையாளக்கூடிய

அணுகுக்

இடத்தில் குழுவாக இருத்தி வைப்பது. நேரம், தேதி, மின்கலச் சக்தியின் நிலை போன்றவை இக்குழுவில் இடம் பெறலாம்.

control system : கட்டுப்பாட்டு முறைமை.

control tape : கட்டுப்பாட்டு நாடா

control, total : முழுக்கட்டுப்பாடு,

control unit, control : மையக் கட்டுப்பாட்டகம்.

control unit : கட்டுப்பாட்டகம்.

conventional memory : அடிப்படை நினைவகம்; மரபு நினைவகம்.

convention, binary to decimal : இருமபதின்ம மாற்றுகை.

convent data base : தரவுத் தளத்தை மாற்று.

conversion, data : தரவு மாற்றம்.

converter, analog/digital : தொடர்முறை - இலக்கமுறை மாற்றி.

converter, digital/analog : இலக்கமுறை முறை - தொடர்முறை மாற்றி.

convex : புற வளைவு: குவி.

cookie : குக்கி : 1.வாடிக்கையாளராகிய கிளையன் { client} கணினியின் கோரிக்கைக்கு மறுமொழியாக வழங்கன் (server) கணினி அனுப்புகின்ற தகவல் தொகுதி. 2.வைய விரிவலையில் ஒரு வலை வழங்கன் கணினி, கிளையன் கணினியில் பதிவு செய்கின்ற தகவல் தொகுதி. பயனாளர் மீண்டும் அதே தளத்தைப் பார்வையிடும்போது, இணைய உலாவியானது குக்கியின் ஒரு நகலை வலை வழங்கனுக்கு அனுப்பி வைக்கும். பயனாளர்களை அடையாளம் காணவும், பயனாளருக்கு ஏற்ற வகையில் வலைப் பக்கத்தை வடிவமைத்து அனுப்புமாறு வழங்கனுக்கு அறிவுறுத்தவும் மற்றும் பிற நிர்வாகப் பணிகளுக்கும் குக்கிகள் பயன்படுகின்றன. 3.தொடக்க காலத்தில் யூனிக்ஸ் இயக்க முறைமையில் தான் இத்தகைய குக்கி நிரல்கள் இயக்கப்பட்டன. அதிர்ஷ்ட குக்கி என அழைக்கப்பட்டது. ஒவ்வொரு முறை இந்த நிரலை இயக்கும் போதும் வெவ்வேறு அதிர்ஷ்ட செய்திகள் வெளியிடப்படும். பொது வாக, ஒரு பயனாளர் யூனிக்ஸ் முறைமைக்குள் தன்னை இணைத்துக் கொள்ளும்போது (logon) இந்த குக்கி நிரல் இயக்கப்படும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு செய்தி பயனாளருக்குக் கிடைக்கும்.

cookie filtering tool : குக்கி வடிகட்டிக் கருவி : ஒரு வலைத் தளத்தை அணுகும்போது பயனாளரைப் பற்றிய தகவல்களை, வலை உலாவி மூலம் அனுப்பி விடாமல் குக்கியைத் தடை செய்யும் ஒரு பயன் கூறு (utility).

cooperating sequential process : கூட்டுறவு வரிசைமுறைச் செயலாக்கம்.

cooperative multitasking : கூட்டுறவு பல்பணி முறை : பல்பணிச் செயலாக்கத்தில் ஒருவகை. ஒரு முன் புலப்பணியின் செயல்படா இடை நேரத்தில், ஒன்று அல்லது மேற்பட்ட பின்புலப் பணிகளுக்கான செயலாக்க நேரத்தை முன்புலப் பணி அனுமதிக்கும்போது மட்டுமே ஒதுக்க முடியும். மெக்கின்டோஷ் இயக்க முறைமையில் இதுதான் முதன்மையான பல்பணி முறையாகும்.

copy, backup : பாதுகாப்பு நகல்.

copy, hard : வன்நகல், தாள் நகல். copy, soft : மென்நகல், வட்டு நகல்.

copydisk : காப்பிடிஸ்க் : ஒரு நெகிழ் வட்டிலுள்ள தகவல்களை இன்னொரு நெகிழ்வட்டில் பதிவதற்கான எம்எஸ் டாஸ் கட்டளை.

CORBA : கோர்பா : பொதுப் பொருள் கோரிக்கை தரகர் கட்டுமானம் என்று பொருள்படும் Common Object Request Broker Architecture என்ற தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். 1992ஆம் ஆண்டில் பொருள் மேலாண்மைக் குழு உருவாக்கித் தந்த வரன்முறைகள் ஆகும். வெவ்வேறு பணித்தளங்களில் செயல்படும் இரு நிரல்களில் உருவாக்கப் பட்டுள்ள வெவ்வேறு பொருள்கூறு கள் தமக்குள்ளே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும். ஒரு நிரல், ஒரு பொருள் கோரிக்கை முகவர் (ORB) மூலமாக ஒரு பொருள்கூறின் சேவைக்கான கோரிக்கையை முன் வைக்கும். அந்தப் பொருள்களை உள்ளடக்கிய நிரலின் கட்டமைப்பு எப்படிப்பட்டது என்பதை அறிந்திருக்க வேண்டிய தேவை இல்லை. கோர்பா, ஒரு பொருள்நோக்கு பணிச் சூழலுக்கென வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும்.

core, bistable magnetic : இருநிலை காந்த உள்ளகம்.

core ferrite : இரும்பு உள்ளகம்.

core magnetic : காந்த உள்ளகம்.

core programme : உள்ளக நிரல் : குறிப்பிலா அணுகு நினைவகத்தில் (Random Access Memory) தங்கியிருக்கும் ஒரு நிரல் அல்லது நிரலின் ஒரு பகுதி.

cordless telephone : கம்பியில்லாத் தொலைபேசி.

coresident : உடன்தங்கல் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கள் ஒரே நேரத்தில் நினைவகத்தில் ஏற்றப்பட்டு இருக்கும் நிலையைக் குறிக்கிறது.

core store. : உள்ளக சேமிப்பு.

corona wire : மின்னுமிழ்வுக் கம்பி : லேசர் அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புக் கம்பி. காற்றை அயனியாக்க இதன் வழியாக உயர் மின்னழுத்தம் பாய்ச்சப்படுகிறது. அதன்மூலம் ஒரே சீரான நிலைமின்னூட்டம் ஓர் ஒளியுணர் ஊடகத்துக்கு மாற்றப்பட்டு லேசர் கதிர் உருவாக்கப்படுகிறது.

corporates : நிறுமங்கள்.

correction : திருத்தம்.

corrective : பழுது நீக்கல்.

country code : நாட்டுக் குறிமுறை.

count, record : ஏட்டு எண்ணிக்கை.

counter, binary : இரும எண்ணி.

counter, control : கட்டுப்பாட்டு எண்ணி.

counter, ring : வளைய எண்ணி.

counter, step : படி எண்ணி.

coupler, acoustic : கேட்பொலி பிணைப்பி.

course details : பாடத்திட்ட விவரம்; பாடத் திட்டம்.

CPSR : சிபீஎஸ்ஆர் : சமூகப் பொறுப்புணர்வுமிக்க கணினி இயலாளர் எனப் பொருள்படும் Computer Professionals for Social Responsability என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினித் தொழில்நுட்பம் இராணுவத் தேவை களுக்குப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து உருவாக்கப்பட்ட ஒரு பொதுநல அமைப்பு. மனித சமூகத் தின் வாழ்வியல் உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் மீது கணினிகளின் தாக்கம் இவைபோன்ற பிரச்சினைகளில் இவ்வமைப்பு நாட்டம் செலுத்துகிறது.

CPU cache : சி.பீ.யூ இடைமாற்றகம் : மையச் செயலகத்தையும் முதன்மை நினைவகத்தையும் இணைக்கும் விரைவு நினைவகத்தின் ஒரு பகுதி. சிபியூவுக்குத் தேவையான அதாவது சி.பீ.யூ அடுத்துக் கையாளவிருக்கும் தகவல் மற்றும் நிறைவேற்றவிருக்கும் ஆணைகளையும் இந்த நினைவகப் பகுதி தற்காலிகமாகக் கொண்டிருக்கும். முதன்மை நினைவகத்துடன் ஒப்பிடுகையில் சி.பீ.யூ இடைமாற்று நினைவகம் அதிக வேகமுடையது. இதிலுள்ள தகவல், தொகுதி தொகுதியாகப் பரிமாறப்படுவதால் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. சி.பீ.யூவுக்கு அடுத்துத் தேவைப்படும் தகவல் எதுவென்பதை சில படிநிலைத் தருக்க முறையில் இயக்க முறைமை தீர்மானிக்கிறது. இது, இடைமாற்று நினைவகம் (cache memory) என்றும் நினைவக இடைமாற்று (memory cache) என்றும் அழைக்கப்படும்.

CPU cycle : சிபீயூ சுழற்சி : 1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு - ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக்கத்தைக் கொணர்தல் போன்ற மிக எளிய ஆணைகளை நிறைவேற்ற அல்லது செயல்பாடில்லா (NonOperation-No) ஆணையை நிறைவேற்ற சி.பீ.யூ எடுத்துக் கொள்ளும் நேரம்.

CPU fan : சி.பீ.யூ விசிறி : மையச் செயலகத்தின் மீது அல்லது சி.பீ.யூ வின் வெப்பக்கவர்வி மீது பொருத்தப்படும் ஒரு மின்சாரவிசிறி. சி.பீ.யூ வைச் சுற்றிக் காற்றைச் சுழலச் செய்து வெப்பத்தைத் தணிக்க உதவுகிறது.

CPU speed : சி.பீ.யூ வேகம் : ஒரு குறிப்பிட்ட மையச் செயலகத்தின் தகவல் செயலாக்கத் திறனின் ஒப்பீட்டு அளவுகோல். பெரும்பாலும் மெகா ஹெர்ட்ஸில் அளக்கப்படும்.

.cr : .சி.ஆர் : ஒர் இணையதள கோஸ்டா ரீக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

cracker : தகர்ப்பர்; உடைப்பவர் : ஒரு கணினி அமைப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடைத்து அத்துமீறி நுழையும் நபர். ஒரு கணினி அமைப்பிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக தகவலைப் பெறுதல் அல்லது கணினி வளங்களைப் பெறுதல் - இதுவே சில தகர்ப்பர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், அமைப்பின் பாதுகாப்பை வெற்றிகரமாக உடைத்து உள்நுழைவது மட்டுமே பெரும்பாலான தகர்ப்பர்களின் மைய நோக்கமாய் உள்ளது.

crash, conversion : முறிவு நிலை மாற்றம்.

create image : படிமம் உருவாக்கு.

create replica : படி உருவாக்கு.

create root pane : மூளப் பாளம் உருவாக்கு.

create shortcut : குறுவழி உருவாக்கு. creating : உருவாக்குதல்.

crash recovery : முறிவு மீட்சி : ஒரு கணினியில் நிலைவட்டு பழுதடைவது போன்ற ஒரு பேரழிவுப் பழுதுக்குப்பின் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்க அக்கணினிக்கு இருக்கும் திறனை இவ்வாறு குறிப்பிடலாம். பெரும்பாலும், தகவலுக்கு எவ்வித இழப்பும் இல்லாமல் மீட்கப்பட முடியும். சிலவேளைகளில், முழுவதுமாக இல்லாவிட்டாலும் சிறிதளவு தகவல் இழக்கப்படுவதுண்டு.

creator : கிரியேட்டர் : ஆப்பிள் மெக்கின்டோஷில் உள்ள ஒரு நிரல். ஒர் ஆவணத்தை உருவாக்கும்போது அதற்கும் அதை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்புக்கும் இடையே ஒரு தொடுப்பினை உருவாக்கும் நிரல் இது. ஒரு ஆவணத்தைத் திறக்கும்போது, இயக்க முறைமையானது அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப்பை அடையாளம் கண்டு திறக்க இத்தொகுப்புப் பயன்படுகிறது.

creeping featurism : படரும் சிறப்பு கூற்றியல் : ஒரு மென்பொருள் தொகுப்பின் புதிய பதிப்பில் அதனை உருவாக்கியவர் மேலும் மேலும் புதிய சிறப்புக் கூறுகளை சேர்த்துக் கொண்டே செல்லும் முறை. அத்தொகுப்பு மிகப் பெரிதாகி, பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிதாகி விடாமல் இந்த முன்னேற்றங்களைச் செய்வர். சந்தையில் இதே போன்ற பிற மென்பொருள் தயாரிப்புகளுடன் போட்டியிடப் புதிய பதிப்பினை வெளியிடும் போது, மேலும் புதிய சிறப்புக் கூறுகளைச் சேர்த்து அதன் செய்திறனை மேம்படுத்த முயலும்போது இவ்வாறு நிகழ்கிறது.

cripped version : சுருக்கப் பதிப்பு : ஒரு வன்பொருள் அல்லது மென் பொருள் தயாரிப்பின் முன்னோட்டப் பதிப்பு, சுருங்கிய வடிவில் இருக்கும். குறைந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.

critical error : உயிர் பாடிப் பிழை : நெருக்கடிப் பிழை : கணினியின் செயலாக்கத்தையே இடைநிறுத்தம் செய்துவிடும் பிழை. ஒரு மென் பொருள் மூலமாகவோ, பயனாளரின் தலையீட்டினாலோதான் அப்பிழையைச் சரிசெய்ய முடியும். (எ-டு) இல்லாத ஒரு வட்டிலிருந்து படிக்க முயல்தல், அச்சுப் பொறியில் தாள் தீர்ந்துபோகும் நிலை, தரவுச் செய்தி அனுப்புகையில் சரிபார்ப்புத் தொகை (checksum)யில் ஏற்படும் பிழை, இன்ன பிற.

cross development : குறுக்கு உருவாக்கம்; மாற்று உருவாக்கம் : ஒரு குறிப்பிட்ட முறைமையைப் பயன்படுத்தி முற்றிலும் வேறுவகையான ஒரு முறைமைக்கான நிரல்களை உருவாக்குதல். இலக்கு முறை மையைக் காட்டிலும் உருவாக்கு முறைமையின் உருவாக்கக் கருவிகள் உயர்தரமானதாக இருப்பின் இது இயலும்.

cross foot : குறுக்குக் கால்; குறுக்குச் சரிபார்ப்பு : ஒரு கூட்டுத் தொகையின் துல்லியத் தன்மையை சரிபார்க்கும் முறை. ஒரு கணக்குப் பதிவேட்டில் ஒரு கூட்டுத் தொகையைச் சரிபார்க்க அக்கூட்டலில் இடம் பெறும் நெடுவரிசை மற்றும் கிடைவரிசைகளின் கூட்டுத் தொகையைச் சரி பார்ப்பதைப் போன்றது. Cross-hatching :குறுக்குப்பின்னலிடல் :ஒரு வரைகலைப்படத்தின் பரப்பை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் பல வழிமுறைகளில் இதுவும் ஒன்று. ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளும் நிலையான இடை கோடுகளினால் ஆன நிழலிடு முறை.

cross - linked files :மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்புகள்: எம்எஸ்டாஸ், விண்டோஸ் 3.x, விண் டோஸ் 95 ஆகியவற்றில் ஏற்படும் கோப்புச் சேமிப்புப் பிழை. ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டிலுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுப் பிரிவு அல்லது கொத்துப் பகுதி, கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளுக்கு ஒதுக்கப்படுவதால் ஏற்படுவது. காணாமல் போன கொத்துகளைப் போலவே மாற்றித் தொடுக்கப்பட்ட கோப்புகளினாலும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்பு இயங்கிக் கொண்டிருக்கும்போதே நட்ட நடுவில் நின்று போகும்.

cross - platform: பல்பணித் தளத்தது , குறுக்குப் பணித்தளத்தது. மாற்றுப் பணித்தளத்தது : ஒன்றுக்கு மேற்பட்ட பணித்தளங்களில் இயங்கக்கூடிய ஒரு மென்பொருள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணினி அமைப்பில் இணைத்து இயக்கக்கூடிய ஒரு வன்பொருள் சாதனம்.

cross - post :குறுக்கு அஞ்சல்; மாற்று அஞ்சல் : ஒரு செய்திக் குழுவில் உள்ள ஒரு கட்டுரையை அல்லது செய்தியை, ஒரு மின்னஞ்சல் அமைப்பில் உள்ள ஒரு மடலை இன்னொரு மின்னஞ்சல்/செய்திக் குழுவில் நகலெடுப்பது. எடுத்துக்காட்டாக, யூஸ்நெட் செய்திக்குழுவிலிருந்து ஒரு காம்புசெர்வ் குழுவுக்குச் செய்தியை மாற்றுவது. அல்லது ஒரு மின்னஞ்சலை வேறொரு செய்திக் குழுவுக்கு அனுப்பி வைப்பது.

cross - reference :மாற்றுக்குறிப்பு .

CRT controller :சிஆர்டி கட்டுப்படுத்தி : ஒர் ஒளிக்காட்சி தகவிப் பலகையின் ஒரு பகுதியாக இருப்பது. இதுதான் ஒளிக்காட்சி சமிக்கைகளை இயற்றுகிறது. கிடைமட்ட, செங்குத்து ஒத்திசைவுச் சமிக்கைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது.

cryptography : மறைக்குறியீட்டியல்.

crystal 3D : முப்பரிமாணப் படிகம்.

Crystal Report : கிறிஸ்டல் ரிப்போர்ட்; தரவுத் தளங்களிலுள்ள தகவல்களில் அடிப்படையில் அறிக்கை தயாரிக்க உதவும் ஒரு மென்பொருள், விசுவல் பேசிக்கில் பெரும்பாலும் பயன் படுத்தப்படுகிறது.

cs : .சி.எஸ் : செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த இணைய தளம் என்பதை அடையாளம் காட்டும், பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர். c shell : சி செயல்தளம் : யூனிக்ஸ் இயக்க முறையில் இயங்கும் பல்வேறு கட்டளைவரி இடைமுகங்களில் இதுவும் ஒன்று. சி-செயல்தளம் மிகவும் பயனுள்ளது. ஆனால் அனைத்து முறைமைகளிலும் சி-செயல்தளம் இருக்குமென்று சொல்ல முடியாது.

CSMACD : சிஎஸ்எம்ஏ/சிடி : சுமப்பி உணர்வு பல்முக அணுக்கம் மோதல் அறிதல் என்று பொருள்படும் Carrier Sense Multiple Access/Collusion Deduction என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இது ஒரு பிணைய நெறிமுறை (Network Protocol). ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட கணுக்களில் (Nodes) கோரிக்கை அனுப்பப்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலையைக் கையாள்வதற்கான நெறிமுறை. ஒவ்வொரு கணுவும் பிணையப் போக்குவரத்தைக் கண்காணித்துக் கொண்டிருக்கும். தடம், போக்குவரத்தின்றி இருக்கும்போது தகவலை அனுப்பும். அதே நேரத்தில் இன்னொரு கணுவும் தகவலை அனுப்பி மோதல் ஏற்படின் இரண்டு கணுவும் தகவல் அனுப்புவதை நிறுத்திவிடும். மீண்டும் மோதல் ஏற்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு கணுவும் வேறுவேறு கால அளவுகள் காத்துக் கொண்டிருந்துவிட்டுப் பின் தகவல் அனுப்ப முனையும்.

CSO : சிஎஸ்ஓ : கணிப்பணி சேவைகள் அலுவலகம் என்று பொருள்படும் Computing Services Office என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் பயனாளர்களின் சொந்தப் பெயர்களை மின்னஞ்சல் முகவரிகளுடன் ஒப்பிட்டுத் தேடித்தரும் இணையச் சேவையாகும். இது பெரும்பாலும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களிலுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தேடும். கோஃபர் (Gopher) பிணையங்களின் வழியாக சிஎஸ்ஓ சேவையைப் பெறலாம். இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் சிஎஸ்ஓ-வில் இது உருவாக்கப்பட்டது.

CSO name server : சிஎஸ்ஓ பெயர் வழங்கன் : சி.எஸ்.ஒ அமைப்பின் மூலம் மின்னஞ்சல் முகவரி பற்றிய தகவலை வழங்கும் ஒரு கணினி.

CTL : சிடிஎல் : கன்ட்ரோல் (Control) என்ற சொல்லின் சுருக்கம்.

Ctrl-Alt-Delete : கன்ட்ரோல்-ஆல்ட்-டெலீட் : ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் மீட்டியக்கப் (reboot) பயன்படும் மூவிசைச் சேர்க்கை. Ctrl, Alt, Del என்று குறிக்கப்பட்டுள்ள மூன்று விசைகளையும் ஒருசேர அழுத்தினால் எம்எஸ் டாஸில் இயங்கும் கணினியில் இடைத்தொடக்கம் (warm boot) நடைபெறும். இம்முறையில் கணினி, அகப் பரிசோதனைகள் அனைத்தையும் மேற்கொள்வதில்லை. மின்சாரத்தை நிறுத்தித் தரும் முதல்தொடக்க (cold boot) முறையில் அனைத்துச் சரிபார்ப்புகளும் நிகழும். விண்டோஸ் 95/98/ என்டி/2000 இயக்க முறைமைகளில் Ctrl+Alt+Del விசைகளை அழுத்தும் போது ஒர் உரையாடல் பெட்டி தோன்றும். நடப்பிலுள்ள ஒரு பணியை மட்டும் முடித்து வைக்கலாம். அல்லது கணினியையே நிறுத்தவும் செய்யலாம்.

correction : திருத்தம்.

Ctrl-C : கன்ட்ரோல்-சி : 1. யூனிக்ஸ் இயக்க முறைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செயல்பாட்டை நடுவிலேயே முறிக்க இந்த இரு விசைகளையும் அழுத்த வேண்டும். 2. விண்டோஸ் இயக்க முறைமையில் இயங்கும் பல்வேறு பயன்பாடுகளிலும், தற்போது தேர்வு செய்துள்ள உருப்படியை (உரை, படம் எதுவும்) இடைநிலை நினைவகத்தில் நகலெடுத்துக் கொள்வதற்கான கட்டளை.

Ctrl-S : கன்ட்ரோல்-எஸ் : 1. மையக் கணினியுடன் முனையக் கணினி மென்பொருள் மூலம் கைகுலுக்கிக் கொள்கிறது. முனையக் கணினித் திரையில் தொடர் தகவல் திரையிடப்படும்போது இந்த இரு விசைகளையும் சேர்த்து அழுத்தும்போது அப்படியே நின்றுவிடுகிறது. மீண்டும் தொடர கன்ட்ரோல்-கியூ விசைகளை அழுத்த வேண்டும். 2. ஒர் ஆவணம் அல்லது கோப்பினைச் சேமிப்பதற்குப் பெரும்பாலான மென்பொருள் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் விசைச் சேர்க்கை.

corrupt data file : பழுதடைந்த தகவல் கோப்பு.

creation : உருவாக்கல்; தோற்றுவிப்பு.

creativity : படைப்பாக்கம்; படைப்புத் திறன்.

credit card number : பற்று அட்டை எண்: பணப் பொறுப்பு அட்டை எண்.

cropping : வெட்டுதல்.

CTS : சிடிஎஸ் : அனுப்பப் பாதை தயார் என்று பொருள்படும் Clear To Send என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். தொடர்நிலை (analog) தகவல் தொடர்பில் இணக்கிகள் கணினிக்கு அனுப்பும் சமிக்கை. கணினி, தகவலை அனுப்பத் தொடங்கலாம் என்பது பொருள். ஆர்எஸ் 232-சி இணைப்புகளில் 5-வது தடத்தில் அனுப்பி வைக்கப்படும் வன்பொருள் சமிக்கை.

cross-linked file : குறுக்குத் தொடுப்புக் கோப்பு.

crunching : நொறுக்குதல்.

crystal bistability : இருநிலை படிகம்.

.cu : .சியூ : ஒர் இணைய தள முகவரி. கியூபா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

CUL 8 R : சியூஎல் 8 ஆர் : பிறகு சந்திக்கலாம் என்ற பொருள்படும் See You Later stop Glgirl fair விந்தையான சுருக்கச்சொல். இணையக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டுள்ள ஒருவர் தற்காலிகமாக அக்குழுவை விட்டு நீங்கும்போது விடைபெறும் முகத்தான் குறிப்பிடும் சொல்.

cumulative record: திரட்டுப் பதிவேடு.

current : மின்னோட்டம்; நடப்பு : 1. ஒரு கடத்தி வழியாக மின்னூட்டம் பாய்தல், அல்லது பாயும் அளவு. ஆம்பியர் என்னும் அலகினால் அளக்கப்படுகிறது. 2. ஒரு தரவுத் தளத்திலுள்ள அட்டவணையில் நடப்பு ஏடு என்கிறோம்.

current data : நடப்புத் தரவு.

current data base: நடப்புத் தரவு தளம்.

current drain : மின்னோட்ட ஒழுக்கு : 1. ஒரு மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்சாரம் பெறும் கருவி எடுத்துக் கொள்கின்ற மின்சக்தி. 2. ஒரு மின்குமிழ் விளக்கு மின்சாரத்தை எடுத்துக் கொண்டு எரி கிறது. மின்சாரம் ஒரு மின்கலனிலிருந்து வருகிறது எனில் மின்சக்தி, மின்கலனில் வடிந்து கொண்டிருப்பதாகக் கூறலாம். சில வேளைகளில் குமிழ் விளக்கையே ஒழுக்கு என்றும் கூறுவர்.

current image : நடப்பு படிவம்.

current instruction register : நடப்பு ஆணைப் பதிவேகம்.

current intensity: மின்னோட்ட வலிமை.

current value : தற்போதைய மதிப்பு.

cursor blink speed : காட்டி மினுக்கு வேகம்; இடஞ்சுட்டி மினுக்கு வேகம்: திரையில் தோன்றும் காட்டி, தோன்றி மறைந்து மினுக்குகின்ற வேகம்.

cursor key : காட்டி விசை; இடஞ் சுட்டி விசை; சுட்டுக்குறி விசை.

custodian : பொறுப்பாளர்.

custom : வழமை.

custom IC : வாடிக்கையான ஒருங்கிணைப்புச் சுற்று.

custom view : தனிப் பயன் தோற்றம்.

cut-sheet feader : நறுக்குத்தாள் செலுத்தி.

cutter path : வெட்டுப் பாதை.

cu see Me : சியூசீe : கார்னெல் பல்கலைக்கழகம் (Cornel University) உருவாக்கிய ஒளிக்காட்சி கலந்துரையாடல் (Video Conference) மென்பொருள். விண்டோஸ் மற்றும் மேக் ஒஎஸ் பயனாளர்கள் இணையத்தில் நிகழ்நேர ஒளிக்காட்சி கலந்துரையாடலில் பங்கு பெறுவதற்கான முதல் மென்பொருளாகும் இது. ஆனால், இந்த மென்பொருள் செயல்பட அதிகமான அலைக்கற்றை வேண்டும். குறைந்தது 128 கேபி பீ.எஸ் வேக அலைக்கற்றை இருந்தால்தான் சரியாகச் செயல்படும்.

cut/copy/paste : வெட்டு/நகலெடு/ஒட்டு.

cut-sheet feeder: நறுக்கு தாள் செலுத்தி.

.cv : .சிவி: ஓர் இணைய தள முகவரி கேப் வெர்தே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.cy : .சிஒய் : ஒர் இணைய தள முகவரி சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

cybercafe or cyber cafe : மின்வெளி உணவகம் : 1. இணையத் தொடர்புகள் உள்ள கணினி முனையங்களைக் கொண்ட சிற்றுண்டி விடுதிகள். இங்கே காபி, தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டே இணையத்தில் உலா வரலாம். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு ரூபாய் எனக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாப்பிட வருபவர்கள் இணையத்தைப் பார்வையிடவும், இணையத்தில் உலாவ வருபவர்கள் சாப்பிடவும் இங்கே வாய்ப்புக் கிடைக்கிறது. 2. இணையத்தில் இருக்கின்ற ஒரு மெய்நிகர் (virtual) உணவகம். இது பெரும்பாலும் சமூகப் பயன்களுக்கானது. இங்கே கூடுபவர்கள் அரட்டை நிகழ்ச்சி மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்திக்கொள்வர். அறிக்கைப் பலகை முறையில் செய்திகளைப் பரிமாறிக்கொள்வர். செய்திக் குழுக்கள் மூலமாக கருத்துகளைப் பரிமாறிக் கொள்வர்.

cyberdog : சைபர்டாக் : ஆப்பிள் நிறுவனத்தின் இணையப்பயன் பாட்டுக்கான கூட்டுத் தொகுப்பு. இதில் இணைய உலாவி மற்றும் மின்னஞ்சல் இணைக்கப்பட்டுள்ளன. ஒப்பன்டாக் (OpenDoc) என்னும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய பயன்பாடுகளுடன் எளிதாக சேர்த்து இணைத்துச் செயல்படுத்த முடியும்.


cyber law : மின்வெளிச் சட்டம்.


cybernatics : தண்னாள்வியல்


cybernaut : சைபர்நாட்: மின்வெளி வீரர்; மின்வெளியாளி : எப்போதும் தன் வளமான நேரங்களை இணை யத்தில் உலா வருவதிலேயே செலவழிப்பவர். இன்டர்நாட்/இணைய வீரர் என்றும் அழைக்கப்படுவார்.


cycle code : சுழற்சிக் குறிமுறை.


cycle power : சுழற்சித் திறன் : நினை வகத்தில் உள்ள சில தகவல்களை துடைக்கும் பொருட்டு அல்லது கணினி செயலிழக்கும்போது அதற்குப் புத்துயிர் ஊட்டும் பொருட்டு கணினிக்குத் தரும் மின்சாரத்தை நிறுத்தி, மீண்டும் வழங்குவது.


cycle reset : சுழற்சி மாற்றமைவு: சுழற்சி திரும்ப அமைதல்.


cycle time : சுழற்சி நேரம்.


cyclic binary code : சுழற்சி இருமக் குறிமுறை : இரும எண்முறையில் ஒரு வகை. பதின்ம எண்களை (Decimal Numbers) இரும வகைக்கு; மாற்றும்போது எந்த வொரு இரும எண்ணும் முந்தைய இரும எண்ணோடு ஒப்பிட்டால் ஒரே யொரு துண்மி (bit) மட்டுமே மாறி இருக்க வேண்டும். 0111, 0101 ஆகிய இரு எண்களில் நடுத் துண்மி மட்டுமே மாறி இருக்கிறது. சாதாரன இரும எண் முறையிலிருந்து மாறுபட்டது.


பதின்மம் சுழற்சி இருமம் சாதா இருமம்
0 0000 0000
1 0001 0001
2 0011 0010
3 0010 0011
4 0110 0100
5 0111 0101
6 0101 0101
7 0100 0111
8 1100 1000
9 1101 1001


cyclic shift : சுழற்சி நகர்வு


cycle stealing : சுழற்சி பறிப்பு


.cz : .சிஇஸட் : ஒர் இணையதளம் செக் குடியரசைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப் பெயர்.