கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/U

U

u: யு : பத்துலட்சத்தில் ஒரு பங்கு (10-4) என்பதைக் குறிக்க கிரேக்க எழுத்து µ பயன்படுத்தப்படுகிறது. என்று உச்சரிக்கப்படும். மைக்ரோ (micro) என்று பொருள்படும். சில வேளைகளில் என்ற எழுத்துக்குப் பதிலாக u பயன்படுத்தப்படுகிறது.

.ua : யூஏ : ஒர் இணைய தள முகவரி உக்ரைன் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக் களப்பெயர்.

UDP : யுடிபீ: பயனாளர் தரவுச் செய்தி நெறிமுறை என்று பொருள்படும் User Datagram Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டீசிபி/ஐபீ-க்குள்ளேயே இணைப்பில்லா (Connection Less) நெறிமுறை ஆகும் இது. ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ அடுக்கில் போக்குவரத்து அடுக்கில் செயல்படுகிறது. யு.டி.பீ. ஒரு பயன்பாடு தருகின்ற தகவல் செய்திகளை, பொதிகளாக்கி ஐபி மூலமாக அனுப்பிவைக்கும். ஆனால், பொதிகள் ஒழுங்காகப் போய்ச் சேர்ந்தனவா என்பதைச் சரி பார்க்காது. எனவே யுடிபி, டீசிபி-யை விட வேகமானது, திறன்மிக்கது. இதன் காரணமாக, எஸ்என்எம்பீ உட்பட பல்வேறு நோக்கங்களுக்கு யு.டி.பீ. பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதன் நம்பகத்தன்மை செய்தியை உருவாக்கும் பயன் பாட்டைப் பொறுத்திருக்கிறது.

uid : பயனாளர் அடையாளப் பெயர்/ எண்.

.uk: .யுகே : ஒர் இணைய தள முகவரி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

uknet : யுகேநெட் : 1. கென்டக்கிப் பல்கலைக்கழக வளாகப் பிணையம். 2. இங்கிலாந்து நாட்டில், கென்ட் பல்கலைக் கழகத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஒர் இணையச் சேவை நிறுவனம்.

ultra DMA/33 : அதிவேக டிஎம்ஏ/33 : நேரடி நினைவக அணுகலை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட தகவல் பரிமாற்ற நெறிமுறை. ஏற்கெனவே உள்ள ஏடீஏ/ஐடிஇ நெறிமுறையைவிடச் செயல்திறன் மிக்கது. வெடிப்புப் பரிமாற்ற வீதம் (Burst Transfer Rate) இரு மடங்கு ஆகும். வினாடிக்கு 33 மெகாபைட் வரை அனுப்பும் திறன் வாய்ந்தது. தகவல் பரிமாற்ற நம்பகத் தன்மையையும் அதிகமாக்கியுள்ளது.

ultra high frequency : மீயுயர் அலைவரிசை

ultra-large-scale integration : மீப்பெருமளவு ஒருங்கிணைப்பு : ஒருங்கிணைப்பு மின்சுற்று உருவாக்கத்தில் ஒருவகை. மின்மப் பெருக்கி மற்றும் பிற பொருள்கூறுகளை மிக அடர்த்தியாகப் பிணைத்தல். மீப்பெருமளவு என்பது எவ்வளவு என்று துல்லியமாக வரையறுக்கப் படவில்லை. பொதுவாக, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொருள்கூறுகள் இருப்பின் இந்த வகையில் சேர்க்கலாம். சுருக்கமாக யுஎல்எஸ்ஐ எனப்படும்.

ultra SCSI : அதிவேக ஸ்கஸ்ஸி : ஸ்கஸ்ஸி-2 தரத்தின் நீட்டித்த வரன்முறை. வேக ஸ்கஸ்ஸியின் பரிமாற்ற வீதத்தைப் போல இரண்டு மடங்கு வேகம் கொண்டது. 8-பிட் இணைப்பில் வினாடிக்கு 20 மெகாபைட் வீதமும், 16-பிட் இணைப்பில் 40 மெகாபைட் வீதமும் அனுப்பும் திறன் கொண்டது.

UMA : யுஎம்ஏ : மேல்நிலை நினைவகப் பரப்பு எனப்பொருள் Upper Memory Area என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். டாஸ் இயக்க முறைமையில், 640கே தொடங்கி 1 மெகாபைட் வரையிலான நினைவகப் பகுதி.

UMB : யுஎம்பி ; மேல்நிலை நினைவகத் தொகுதி என்று பொருள்படும் Upper Memory என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யுஎம்ஏ நினைவகப் பரப்பில், சாதன இயக்கி அல்லது நினைவகத்தில் தங்கிச் செயல்படும் (TSR) நிரல்களுக்காகப் பயன்படுத்தப்படும் நினைவகத் தொகுதி. EMM386.EXE போன்ற தனிச்சிறப்பான நினைவக மேலாண்மை நிரல்களால் இத்தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

unbuffered : இடையகமற்ற : பெற்ற தகவல்களை இடைநிலை நினைவகத்தில் சேமித்துவைத்துப் பிறகு செயலாக்குவதற்குப் பதிலாக, பெற்றவுடனேயே செயலாக்கத்துக்கு உட்படுத்திவிடுகிற தன்மையைக் குறிக்கிறது.

unbundle : கட்டுப்பிரித்தல் : ஒரு மென்பொருள் கூட்டுத் தொகுப்பை மொத்தமாக விற்பதற்குப் பதில் அதிலுள்ள மென்பொருள் கூறுகளை தனித்தனியே பிரித்து விற்பனை செய்தல், (எ-டு) எம்எஸ்ஆஃபீஸ் தொகுப்பினுள் வேர்டு, எக்ஸெல், அக்செஸ் போன்றவற்றைத் தனித் தனியே விற்பனை செய்தல்.

uncompress : விரித்துப் பெருக்குதல்: இறுக்கிச் சுருக்கப்பட்ட (compressed) கோப்பினை விரித்துப் பெருக்கி மூலக் கோப்பினைப் பெறுதல்.

unconditional branch instruction : நிபந்தனையற்ற கிளைபிரி ஆணை.

undeliverable : சேர்ப்பிக்க முடியாத : வினியோகிக்க முடியாத : தகவலைப் பெறவேண்டியவரிடம் சேர்ப்பிக்க முடியாத நிலை. ஒரு மின்னஞ்சலை முகவரிதாரருக்குச் சேர்ப்பிக்க முடியாமல் போனால், அஞ்சல் வழங்கன் அந்த மடலை, காரணத்தை விளக்கும் பின்குறிப்புடன் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிவைக்கும். மின்னஞ்சல் முகவரி தவறாக இருக்கலாம். முகவரிதாரரின் அஞ்சல் பெட்டி நிரம்பியிருக்கலாம்.

undercolour separation : மூல வண்ணப் பிரிப்பு : சிஎம்ஒய்கே வண்ண அமைப்பில், வண்ண அச்சிடலின் மூலவண்ணங்களான வெளிர்நீலம் (கியான்), செந்நீலம் (மெஜந்தா), மஞ்சள் நிறங்களைப் பிரித்து அவற்றுக்குச் சமமான சாம்பல் நிற அளவுகளாய் மாற்றி கறுப்பு மையால் அச்சிடும் முறை. இந்த முறையில், வண்ண மைகளைக் கலந்து உருவாக்கும் சாம்பல் நிறத்தைவிடத் தெளிவாகவும், கூர்மையாகவும் அமையும்.

undernet : அண்டர்நெட் : இணைய தொடர் அரட்டை (IRC)க்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுப் பிணையம். மிகப்பெரிய, மிகச்சிக்கலான ஐஆர்சி பிணையத்துக்கு மாற்றாக 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுபற்றிய விவரங்கள் undernet.org என்ற முகவரியில் கிடைக்கின்றன.

underscore : அடிக்கீறு : கீழிறங்கித் தோற்றமளிக்கும் இணைப்புக் குறி. விசைப்பலகையில் இணைப்பு/ கழித்தல் (Minus/Hyphen) குறிக்கு மேல்பகுதியில் இருக்கும். நகர்வு(Shift) விசையுடன் சேர்த்து அழுத்தினால் அடிக்கீறு கிடைக்கும். பெரும்பாலும் இரட்டைச் சொற்களை ஒரே சொல்லாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. (எ-டு) First_Name, Basic_Pay அடிக்கோடு (underline) வேறு, அடிக்கீறு (underscore) வேறு. அதுபோலவே இணைப்புக் குறியும், அடிக்கீறும் வேறுவேறு.

undo/redo : செய்தது தவிர்/தவிர்த்தது செய்.

undock : பிரி; விலக்கு : 1.பிணைக்கப்பட்ட பணிநிலையக் கணினியிலிருந்து மடிக்கணினியைப் பிரித்தெடுத்தல். 2. கருவிப் பட்டையை சாளரத்தின் விளிம்பிலிருந்து பிரித்தெடுத்து வேறிடத்தில் வைத்தல். இதனால் கருவிப்பட்டை, விருப்பப்படி நகர்த்திச் செல்லும்படியான தனிச் சாளரமாக ஆகிவிடும்.

unexpected halt : எதிர்பாரா இடை நிறுத்தம்.

unfreeze columns : அணைத்து நெடுக்கையும் விடுவி.

ungroup : குழு கலை.

unhide : வெளிக்கொணர்.

unhide columns : நெடுக்கைகள் வெளிக்கொணர்.

unhandled exception : கையாள விதிவிலக்கு : இயக்கநேரப் பிழைகளை முன்கூட்டியே அறிந்து அவற்றைக் கையாளும் நிரல் கூறுகளை நிரலர் எழுத வேண்டும். இது விதிவிலக்குக் கையாளுதல் (Exception Handling) என்றழைக்ப்படுகிறது. நிரலர் கையாளாத பிழை, இயக்க நேரத்தில் ஏற்படுமெனில், இயக்க முறைமை நிரலைப் பாதியிலேயே முடித்துவிடும்.

unicode : யுனிகோடு : 1988-1991 காலகட்டத்தில் யுனிகோடு கூட்டமைப்பு உருவாக்கிய 16 பிட் எழுத்துக் குறியாக்கத் தர வரையறை. ஒர் எழுத்தைக் குறிக்க இரண்டு பைட்டுகள் பயன்படுவதால் மொத்தம் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட (216) எழுத்துகளைப் பெறமுடியும். எனவே யுனிகோடில் உலகத்திலுள்ள வரிவடிவம் கொண்ட அனைத்து மொழி எழுத்துத் தொகுதிகளையும் பெறமுடியும். ஆனால் 1-பைட் எழுத்துக் குறிமுறையான ஆஸ்க்கியில் 256 எழுத்துகள் மட்டுமே இயலும். ஆஸ்க்கியின் 256 எழுத்துகளும் யுனிக்கோடின் முதல் 256 இடங்களில் இருத்தப்பட்டுள்ளன. 39,000 இடங்கள் பல்வேறு மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 21000 இடங்கள் பண்டைச் சீன வரி வடிவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியிடங்கள் வருங்கால விரிவாக்கத்துக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழுக்கு 128 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிகமான இடங்கள் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Uniform Naming Convention : 905 சீரான பெயரிடு மரபு : பிணையத்தில், கோப்புகளுக்குப் பெயரிடுவதில் பின்பற்றப்படும் நடைமுறை. பிணையத்திலுள்ள பிற கணினிகள் ஒரு குறிப்பிட்ட கோப்பினைக் கையாள நேரும்போது குழப்பமில்லாமல் அதே பெயரை அதே பாதையுடன் அணுக வழியேற்படும்.

Uniform Resource Citation: ஒருசீரான வள விவரிப்பு  : வைய விரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIS), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவைபோன்ற பண்புக்கூறுகளையும், மதிப்புகளையும் கொண்டிருக்கும்.

Uniform Resource Identifier : ஒரு சீரான வள அடையாளங்காட்டி : இணையத்தில் எந்த மூலையில் இருப்பினும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் வகை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றுடன் அடையாளங்காட்டப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்துச் சரம். இது, ஒருசீரான வளப் பெயரையும் (URNS) ஒருசீரான வள இடங்காட்டியையும் (URL) உள்ளடக்கியது.

Uniform Resource Name : ஒருசீரான வளப் பெயர்  : இணையத்தில் இருக் கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக் கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை . ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்பிற்கான வரன் முறைகள், இணையப் பொறியியல் முனைப்புக் குழு (Internet Engineering Task Force - IETF) வின் பரிசீலணையில் உள்ளது. urn:, fpi;, path; போன்ற திட்டமுறையிலடங்கிய அனைத்து ஒருசீரான வள அடையாளங்காட்டிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அவை, ஒருசீரான வள இடங்காட்டிகளையும் (URLs) கொண்டிருக்காது. .

UniForum : யுனிஃபாரம் : 1. திறந்த நிலை முறைமை வல்லுநர்களின் பன்னாட்டுச் சங்கம். யூனிக்ஸ் பயனாளர்கள், நிர்வாகிகளைக் கொண்ட அமைப்பு. 2. யுனிஃபாரம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, சாஃப்ட்பாங்க் காம்டெக்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட தொடர்ச்சியான யூனிக்ஸ் வணிகக் கண்காட்சிகளைக் குறிக்கிறது.

utility programme : பயன்கூறு நிரல்

uninstall: நிறுவியது நீக்கு ; நிறுவு கைநீக்கு : ஒரு கணினியில் நிறுவப்பட்ட மென்பொருள் தொகுப்பை முற்றிலுமாக நீக்கிவிடுதல். விண்டோஸ் 95/98/என்டி முறைமைகளில் ஒரு மென்பொருளை நிறுவும்போது, சில கோப்புகளை முறைமைக் கோப்புறையில் எழுதிக் கொள்ளும். அம் மென்பொருளின் தகவமைவுகளை பதிவேட்டிலும் (Registry) குறித்துக் கொள்ளும். எனவே ஒரு மென்பொருளை சாதாரண முறையில் அழித்தோம் (Delete) எனில் மேற்சொன்ன தகவல்கள் நீக்கப்படாமல் தங்கிப்போகும். பின்னாளில் தொல்லையேற்படும். எனவே, நிறுவுகைநீக்கல் முறையிலேயே ஒரு மென்பொருளை அகற்றவேண்டும்.

union-compatible : இணைக்கத் தகு : தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பயன்படுத்த முடியும்.

unit, visual display : புலன்காட்சி அலகு.

unit, audio response: கேட்பொலி உணர் அலகு; கேட்பொலி உணர்பாகம்.

unit, central control : மையக் கட்டுப்பாட்டகம்.

unit, central processing : மையச் செயலகம்.

unit, control : கட்டுப்பாட்டகம்.

United States Of America Standards Institute : அமெரிக்க நாட்டுத் தர நிறுவனம் (USASI) அமெரிக்கத் தேசியத் தர நிறுவனத்தின் (ANSI) முந்தைய பெயர்.

universal access number : உலகளாவிய அணுகு எண்.

unit, logical : தருக்கமுறை அலகு.

unit, tape : நாடா அலகு: நாடா அகம். Universal Server : யுனிவர்சல் செர்வர் (உலகளாவிய வழங்கன்) : 1. ஆரக்கிள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள். ஒரு ஹெச்டீடீபீ கோரிக்கையின் அடிப்படையில் உரை, ஒலி, ஒளிக்காட்சி போன்ற பலவிதமான தகவல்களை தனது தகவல் தளத்திலிருந்து எடுத்துக் கொடுக்கும் மென்பொருள். 2. இன்ஃபார்மிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தரவுத் தள மென்பொருள். பயனாளருக்குத் தேவையான குறிப்பிட்ட தரவு இனக்களைக் கையாளவும், குறிப்பிட்ட வழிமுறையில் செயலாக்கவும் பல்வேறு மென்பொருள் கூறுகளுடன் செயல்படக்கூடியது.

universal time coordinate : உலகளாவிய நேர மதிப்பு : இணையத்தில் கணினிகளுக்கிடையேயான ஒத்திசைவு கருதிப் பயன்படுத்தப்படும் நேரம். பெரும்பாலும் கிரீன்விச் சராசரி நேரமாகவே இருக்கும்.

UNIX shell account: யூனிக்ஸ் செயல்தளக் கணக்கு : யூனிக்ஸ் முறைமைக்குக் கட்டளைவரி மூலமான அணுகலைத் தருகிறது. உரை வடிவிலானத் தகவல்களை மட்டுமே பெறமுடியும். வரைகலை வடிவிலான தகவல்களைப்பெறுவது சாத்தியமில்லை.

UNIX shell scripts : யூனிக்ஸ் செயல்தள உரைநிரல்கள் : வரிசையாக எழுதப்பட்டு கோப்புகளில் சேமிக்கப்பட்டு நிரல்களாக இயக்கவல்ல, யூனிக்ஸ் கட்டளைகள். எம்எஸ் டாஸில் தொகுதிக் கோப்பு (.bat) இத்தகு வசதியை நல்குகிறது.

UNIX wizard : யூனிக்ஸ்வழிகாட்டி : வல்லமைபெற்ற, உதவும் மனப்பாங்குள்ள யூனிக்ஸ் நிரலர். சில நிறுவனங்கள் இதையே ஒரு பணிப் பெயராகப் பயன்படுத்துகின்றன. comp.unix.wizards எனும் செய்திக்குழு, பயனாளர்களின் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கிறது.

unknown host : தெரியாப் புரவன், கண்டறியாப் புரவன்: கிளைக் கணினி, ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியில் இணைப்புக் கேட்டு கோரிக்கை சமர்ப்பிக்கும்போது, அத்தகைய வழங்கனைப் பிணையத் தில் கண்டறிய முடியவில்லையெனில் இத்தகைய பதிலுரை கிடைக்கும்.

unknown recipients : தெரியாத பெறுநர்; கண்டறியாப் பெறுநர்: ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள பெறுநர் முகவரியைக் கண்டறிய முடியாதபோது அனுப்புநருக்குக் கிடைக்கும் தகவல்.

unmoderated : நடுவரில்லாத; கண்காணிப்பாளரில்லாத: செய்திக் குழுக்களுக்கும், அஞ்சல் பட்டியல்களுக்கும் பெரும்பாலும் நடுவர் ஒருவர் இருப்பார். அவ்வாறு நடுவர் இல்லாத செய்திக் குழுக்களில் வழங்கனால் பெறப்படும் அஞ்சல் பட்டியல்களில் செய்திகள், கட்டுரைகள், சந்தாதாரர்களுக்குத் தாமாகவே அனுப்பி வைக்கப்படும்.

unmount : பெயர்த்தெடு; கழற்று: நீக்கு : ஒரு கணினியில் ஒரு வட்டினையோ நாடாவையோ பயன்பாட்டிலிருந்து நீக்கிவிடுதல். வன்பொருளாகக் கழற்றியெடுக்க வேண்டியதில்லை. மென்பொருள் கட்டளை மூலமாகவும் செய்ய முடியும். யூனிக்ஸ் முறைமையில் இச்சொல் அதிகம் பயன்படுகிறது.

unread : படிக்கப்படாத : 1. ஒரு செய்திக்குழுவில் பயனாளர் ஒருவர் இதுவரை வாசித்திராத கட்டுரை. செய்தி வாசிப்புக் கிளையன் நிரல், பயனாளரால் படிக்கப்பட்ட, படிக்கப்படாத கட்டுரைகளுக் கிடையே வேறுபாடு கண்டு, அவர் இதுவரை படித்திராத கட்டுரைகளை மட்டுமே வழங்கனிலிருந்து பதிவிறக்கம் செய்து தரும். 2. பயனாளருக்குக் கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல், ஆனால் மின்னஞ்சல் நிரல் மூலமாக இன்னும் திறந்து படிககப்படாதது.

unrecoverable error: திருத்த முடியாப் பிழை; மீட்க முடியாப் பிழை : ஒரு நிரலில் ஏற்படும் பிழை. சரிசெய்ய முடியாத நிலையில் இருத்தல். கணினிச் செயல்பாட்டில் ஏற்படும் பிழைநிலையையும் குறிக்கும். புறநிலை மீட்பு நுட்பத்தின் மூலமே சரி செய்ய முடிகிற அழிவுசெய் பிழை.

unsealded twisted pair (UTP) : உறையிடா முறுக்கிணை வடம்.

unsent message : அனுப்பாச் செய்தி.

unshielded cable : உறையிடா வடம்: உலோக உறையிடப்படாத வடம்.இதுபோன்ற வடங்களில் உள்ள கம்பியிணைகள் பெரும்பாலும் முறுக்கப்பட்டிருக்கும். அவ்வாறு முறுக்கப்படவில்லையெனில் புறநிலை மின்காந்தப் புலங்களினால் இடையூறு ஏற்படும். இதன் காரணமாகவே, உறையிடா வடங்கள் குறைந்த தூரத் தகவல் தொடர்புக்கே பயன்படுத்தப்படுகின்றன.

unsubscribe : சந்தா நீக்கு : 1. ஒருவர் ஏற்கெனவே சந்தாதாரராக உள்ள ஒரு செய்திக் ழுவின் பெயரைப் பட்டியலிலிருந்து (செய்திவாசிப்பு கிளையன் நிரல் மூலம்) நீக்கி விடுதல். 2. ஒர் அஞ்சல் பட்டியலில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியை நீக்கிவிடல்.

untar : அன்டார் : யூனிக்ஸ் இயக்க முறையில் இருக்கும் ஒரு பயன்கூறு. யூனிக்ஸின் டார் (tar) நிரல்மூலம் ஒன்று சேர்க்கப்பட்ட காப்பகக் கோப்பிலிருந்து தனித்தனிக் கோப்புகளாகப் பிரித்தெடுத்தல்.

unzip : அன்ஸிப்: gzip, pkzip மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட காப்பகக் கோப்பினை விரித்துப் பெருக்கும் கட்டளை.

up arrow மேல் அம்புக்குறி.

update : மாற்றல்; இற்றைப்படுத்தல்; புதுப்பித்தல்.

updated driver : புதுப்பித்த இயக்கி.

updating and file maintenance :புதுப்பித்தலும் கோப்பு பராமரித்தலும்.

upgrade processor செயலி மேம்படுத்து.

upgrade, socket : பொருத்துவாய் மேம்படுத்து.

uppercase : பெரிய எழுத்து : ஆங்கில எழுத்துகளில் இருக்கும் அமைப்பு முறை. a என்பது சிறிய எழுத்து (Lower Case), A என்பது பெரிய எழுத்து (Upper case).

UPS : யுபீஎஸ்: தடங்கலில்லா மின்வழங்கல் எனப்பொருள்படும் Uninterrupted Power Supply என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். கணினிக்கும் மின்வழங்கு முனைக்கும் இடையே பயன்படுத்தப்படும் சாதனம். இதனுள்ளே ஒரு மின்கலம் இருக்கும். திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால், கணினிக்கு மின்கலத்திலிருந்து மின்சாரம் கிடைத்துவிடும். இதனால் கணினி தடங்கலின்றி தொடர்ந்து செயல்படும். மின்தடங்கலை உணர்ந்து உடனடியாக மின் கலத்துக்கு மாற்றித்தரும் சிறப்பு உணரி உள்ளே இருக்கும். 10 அல்லது 20 நிமிடங்களே மின்கலத்திலிருந்து கணினிக்கு மின்சாரம் கிடைக்கும். இந்த நேரத்துக்குள் பயனாளர் தன்னுடைய பணியை முறைப்படி முடித்துக்கொள்ள வேண்டும். முக்கிய தகவல்களை சேமித்துக் கொள்ள வேண்டும்.

urban legend : நகர்ப்புறக் கதை : இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மைபோல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பதுபோன்ற செய்திகள் உலவுவதுண்டு. ஆர்வத்தைத் தூண்டும் சில செய்திகள் ஆபத்தைச் சுமந்து வருவதும் உண்டு. மின்னஞ்சலின் கருப்பொருளாக ஆர்வத்தைத் தூண்டும் செய்தி இருக்கும் அம்மடலைத் திறந்தால் உங்கள் கணினியில் நச்சுநிரல் குடியேறிவிடும்.

URL : யுஆர்எல்: ஒருசீரான வள இடங்காட்டி எனப்பொருள்படும் Uniform Resource Locator என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்திலிருக்கும் வளம் ஒன்றின் இருப்பிடம் காட்டும் முகவரி. இணைய வளங்களைக் கண்டறிய உலாவிகள் இந்த முகவரியையே பயன்படுத்திக் கொள்கின்றன. பெரும்பாலும் யுஆர்எல், அவ்வளத்தை அணுகப் பயன்படும் நெறிமுறையின் பெயரைத் தொடக்கத்தில் கொண்டிருக்கும். வளம் சேமிக்கப் பட்டுள்ள வழங்கனின் பெயர் அடுத்து இடம்பெறும். அடுத்து களப்பிரிவு இடம் பெறுவதுண்டு. (எ-டு). http://www.microsoft.com.

.us : .யு.எஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பாநெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப்பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே, .com, .gov, .edu, .org, .mil, .net ஆகிய மேல்நிலைக் களப் பெயருக்கு அடுத்து .us என்று சேர்க்கப்படுவதில்லை. இப்போது இணையம் உலகெங்கும் பரவிவிட்டதால், அமெரிக்கத்தளங்கள் .gov.us, .mil.us என்பதுபோன்ற பின்னொட்டுகளைப் பெறும்.

usable : பயன்படத்தகு : ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் எப்பணிக்காக வடிவமைக்கப்பட்டதோ அப்பணியில் எளிதாகத் தகவமைத்துக்கொள்ளும் தன்மையை இவ்வாறு குறிப்பர். இப்பண்பு மிகுந்திருப்பின், அதனைக் கற்க எளிதாக இருக்கிறது, நெளிவு சுளிவாக உள்ளது. பிழைகளின்றி உள்ளது. தேவையற்ற குழப்பமான  செயல்முறைகள் இல்லாத சிறந்த வடிவமைப்பைப் பெற்றுள்ளது என்று பொருள்.

ՍՏB யுஎஸ்பி; உலகளாவிய நேரியல் பாட்டை என்று பொருள்படும் Universal Serial Bus என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வினாடிக்கு 1.5 மெகாபிட் தகவல்களை கணினிக்கும் புறச்சாதனங்களுக்ககுமிடையே பரிமாற்றவல்ல நேரியல் பாட்டை. குறுவட்டு (CD-ROM) இயக்ககங்கள், அச்சுப் பொறிகள், இணக்கிகள்(Modems), சுட்டிகள் (mice), விசைப்பலகைகள் போன்ற 127 புறச் சாதனங்களை ஒற்றைப் பொதுப்பயன் துறை வழியாக கணினியுடன் இணைக்க முடியும். டெய்சி சக்கர இணைப்பின் மூலம் இது சாத்தியம். உடனிணைப்புகளையும், பலவகை தரவுத் தாரைகளையும் ஏற்கும். இன்டெல் நிறுவனம் உருவாக்கியது. டெக் நிறுவன அக்செஸ் பாட்டையுடன் போட்டியிடக் கூடியது, குறிப்பாக குறைவேகப் பயன்பாடுகளில்.

U.S. Department of Defense : யுஎஸ் பாதுகாப்புத்துறை: அமெரிக்க அரசின் இராணுவப் பிரிவுதான் அக்கால ஆர்ப்பாநெட்டை (ARPANET) உருவாக்கியது. Advanced Research Project Agency என்பதன் சுருக்கமே ARPA என்பது. அன்றைய ஆர்ப்பாநெட்தான் இன்றைய இணையமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

use error correction : பிழை திருத்தும் வசதி.

usenet : யூஸ்நெட்: செய்திக் குழுக்களுக்கான பிணையம்.

usenet user list: யூஸ்நெட் பயனாளர் பட்டியல்: மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) பராமரித்து வரும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல். யூஸ்நெட்டில் அஞ்சலிடும் பயனாளர்களின் பெயரையும் மின்னஞ்சல் முகவரிகளையும் இப்பட்டியல் கொண்டிருக்கும்.

user : பயனாளர்கள்.

user account : பயனாளர் கணக்கு : பாதுகாப்பான பல்பயனாளர் கணினி அமைப்புகளில், அதை அணுகவும் அதன் வளங்களைப் பெறவும் ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறை. இதுபோன்ற கணக்குகளை முறைமை நிர்வாகி உருவாக்குகிறார். பயனாளர் கணக்கு என்பது, பயனாளர் பெயர், நுழைசொல், உரிமைகள், அனுமதிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

user agent : பயனாளர் முகவர்: குறும்பரப்புப் பிணையங்களுக்காக ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியத்தில், கிளையன் கணினி, வழங்கனுடன் இணைத்துக் கொள்ள உதவும் ஒரு நிரல்.

user and group accounts : பயனாளர், குழுக் கணக்குகள்.

user and group permissions : பயனாளர், குழு அனுமதிகள்.

user difined: பயனாளர் வரையறுத்த.

user-defined data type : வரையறுத்த வரையறுக்கும் தரவு இனம் : நிரலொன்றில் நிரலர் வரையறுக்கும் தரவு இனம். நிரலாக்க மொழியில் இருக்கும் மூலத் தரவுகளிலிருந்து மாறுபட்டது. பயனாளர் உருவாக்கும் தரவினம் மூலத் தரவிகளின் சேர்க்கையாகவே இருக்கும். பெரும்பாலும் தரவுக் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும்.

(எ-டு): சி-மொழியில் struct employee

{

chan name [15];

int age;

float wage;

};

struct employee e1, e2;

user defined function key : பயனாளர் வரையறுக்கும் பணிவிசை.

user-defined exception : பயனாளர் வரையறு விதிவிலக்கு.

user files : பயனாளர் கோப்புகள்.

user interface tier :பயனாளர் முக அடுக்கு.

user level security wiz : பயனாளர் நிலை பாதுகாப்பு வழிகாட்டி

username : பயனாளர் பெயர் : ஒரு கணினி அமைப்பில் அல்லது பிணையத்தில் பயனாளர் ஒருவரை அடையாளங் காணப் பயன்படுவது. புகுபதிகைச் செயல்பாட்டில் பயனாளர் முதலில் பயனாளர் பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு சரி யான நுழைசொல்லைத் தரவேண்டும். பயனாளர் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியில் @ அடையாளத்துக்கு முன்பாக இருக்கும் பெயரே பயனாளர் பெயராகவும் இருக்கும்.

user state : பயனாளர் நிலை : மோட்டோரோலா 680x0 நுண்செயலி செயல் படக்கூடிய மிகக்குறைந்த சலுகை நிலை. இந்த நிலையில்தான் பயன்பாட்டு நிரல்கள் செயல்படுகின்றன. USnail : யு'ஸ்னெயில் : 1. அமெரிக்க நாட்டு அஞ்சல் சேவைக்குத் தரப்படும் கிண்டலான பெயர். மின்னஞ்சலோடு ஒப்பிடுகையில் பழைய அஞ்சல் சேவை எவ்வளவு மெதுவானது என்பதைச் சுட்ட இவ்வாறு அழைக்கப்படுகிறது. 2. அமெரிக்க நாட்டு அஞ்சல் சேவையினால் வினியோகிக்கப்படும் மடல்.

USRT : யுஎஸ்ஆர்டி : உலகளாவிய ஒத்திசைவு வாங்கி/அனுப்பி என்று பொருள்படும் Universal Synchronous Receiver Transmitter என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒத்திசைவுத் நேரியல் தகவல் தொடர்புக்குத் தேவையான வாங்கி மற்றும் அனுப்பி இரண்டுக்குமான மின்சுற்றுகளையும் ஒருங்கே கொண்ட ஒற்றை ஒருங்கிணைவு மின்சுற்று.

utility software : பயன்கூறு மென்பொருள்.

utility statistics : பயன்கூறு புள்ளிவிவரம்.

utilization ratio: பயன்பாட்டு விகிதம்.

UUCP : யுயுசிபீ : யூனிக்ஸிலிருந்து யூனிக்ஸுக்கு நகலெடுப்பு என்று பொருள்படும் UNIX-to-UNIX Copy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். நேரியல் தகவல் தொடர்பினை, குறிப்பாக பொது இணைப்பக தொலைபேசிப் பிணையத்தைப் பயன்படுத்தி யூனிக்ஸ் கணினிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்யப் பயன்படும் மென்பொருள் நிரல்களின் தொகுப்பு.

UTP : யுடீபீ, உறையிடா முறுக்கிணை என்று பொருள்படும் Unshielded Twisted Pair என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒன்று அல்லது மேற்பட்ட முறுக்கிணைக் கம்பிகளை கொண்ட, கூடுதலான உறைகள் எதுவும் இடப்படாத ஒரு வடம். உறையிட்ட முறுக் கிணை வடத்தைவிட நெகிழ்வானது. குறைந்த இடப் பரப்பையே எடுத்துக் யுடீயீ கொள்ளும். ஆனால் குறைவான அலைக்கற்றை அகலம் கொண்டது.

uudecode¹ : யூயூடீக்கோடு¹ : uquy குறியாக்கம் செய்யப்பட்ட ஒரு கோப்பினை மூல இரும வடிவ மைப்பாக மாற்றும் யூனிக்ஸ் நிரலின் பெயர். இந்த நிரல் (யுயுஎன்கோடு நிரலோடு சேர்ந்து), படிமங்கள், இயக்குநிலைக் குறிமுறை போன்ற இரும வடிவிலான தகவல்களை மின்னஞ்சல் செய்திக்குழு வழியாக அனுப்பிவைக்க உதவுகிறது.

uudecode² : யுயுகுறிவிலக்கம்² : யுயுகுறியாக்கம் செய்யப்பட்ட கோப்பு ஒன்றினை யுயுடீக்கோடு நிரல் மூலமாக மீண்டும் மூல இருமக் கோப்பாகவே மாற்றும் செயல்முறை.

.uue : .uue : யுயுடீக்கோடு நிரல் மூலமாக, ஆஸ்கி வடிவமைப்பி லிருந்து குறிவிலக்கம் செய்து மீண்டும் இரும வடிவமைப்பாகவே மாற்றியமைக்கப்படும் கோப்பின் வகைப்பெயர்.

uuencode¹ : யுயுஎன்கோடு¹ : ஒரு பைட்டிலுள்ள ஒவ்வொரு பிட்டும் முக்கியத்துவம் உள்ள ஒரு இருமக் கோப்பினை அச்சிடத்தக்க 7துண்மி (பிட்) ஆஸ்கி எழுத்துகளாக, தகவல் இழப்பு ஏற்படாவண்ணம் மாற்றி யமைக்கும் ஒரு யூனிக்ஸ் நிரல். இந் நிரல் யுயுடீக்கோடு நிரலுடன் சேர்ந்து, படிமங்கள், இயக்குநிலைக் குறி முறை போன்ற இரும வடிவிலான தகவல்களை மின்னஞ்சல், செய்திக் குழு வழியாக அனுப்பிவைக்க உதவுகிறது. இவ்வாறு குறியாக்கம் செய்யப்பட்ட கோப் பின் அளவு மூலக் கோப்பின் அளவில் மூன்றில் ஒருபங்கே இருக்கும்.

uuencode² : யுயுகுறியாக்கம்² : யுயுகுறியாக்க நிரல்மூலம், ஒர் இருமக் கோப்பினை அச்சிடுவதற் கேற்ற 7 துண்மி(பிட்) ஆஸ்கி உரைக்கோப்பாக மாற்றியமைக்கும் செயல்முறை.

uupc : யுயுபீசி : ஐபிஎம் பீசிக்கள் மற்றும் டாஸில் செயல்படும் பீசி ஒத்தியல்புக் கணினிகள், விண் டோஸ் அல்லது ஒஎஸ்/2 முறைமை களுக்கான பதிப்பு. தொலைதுாரப் பிணையக் கணினிகளில் நுழைய, கோப்புகளைப் பதிய, நிரல்களை இயக்கப் பயன்படும் நிரல்களின் தொகுப்பு.

.uy : .யுஒய் : ஒர் இணைய தள முகவரி உருகுவே நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

.uz : .யுஇஸட் : ஒர் இணைய தள முகவரி உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.