கணினி களஞ்சிய அகராதி இரண்டாம் தொகுதி/Z

Z

.Z: இஸ்ட்: ஒரு கோப்பு வகைப் பெயர். ஜிஸிப் (gzip) மூலம் இறுக்கிச் சுருக்கப்பட்ட யூனிக்ஸ் கோப்புகளை அடையாளங்காட்டும் வகைப்பெயர்.

.za : இஸ்ட்ஏ: ஓர் இணைய தள முகவரி தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

ZD Net: இஸ்ட் டி நெட் ; தொழில் நுட்பம் சார்ந்த தனிச்சிறப்பான இணையக் குழுக்களையும், இலவச/ பகிர் மென்பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத்தளம். பீசி பயன்பாட்டாளர் களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப் டேவிஸ் பதிப்பகக் குழுவினர் நிகழ்நிலை தகவல் சேவையாக இதனை உருவாக்கினர்.

zero access storage :சுழி (பூஜ்ய) அணுகு சேமிப்பகம்.

zero output signal : சுழி வெளிப்பாட்டு சமிக்கை (சைகை).

zero track sensor: சுழி தட உணர்வி.

zero wait state: காத்திருக்கத் தேவையில்லாமை, சுழி காத்திருப்பு நேரம்; காத்திருப்பற்ற நிலை குறிப்பிலா அணுகு நினைவகம் (RAM), செயலியானது காத்திருக்க வேண்டிய தேவையில்லாத அளவுக்கு வேகமாய்ச் செயல்படும் நிலை.

zetta:ஸெட்டா: அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செக்ஸ்டில்லியனைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டு அளவீட்டுச் சொல். ஒரு செக்ஸ்டில்லியன் என்பது 1021 ஆகும்.

zepto:ஸெப்டோ: அமெரிக்க அளவீட்டு முறையில் ஒரு செக்ஸ் டில்லியனில் ஒரு பங்கு என்பதைக் குறிக்கும் மெட்ரிக் முன்னொட்டுச் சொல். இதன் மதிப்பு 10-21 ஆகும்.

zero divide:சுழி வகுத்தல் : வகுத்தல் கணக்கீட்டில் வகுக்கும் எண் சுழியாக (ஜீரோவாக) இருத்தல். எந்தவோர் எண்ணையும் சுழியால் வகுத்துவரும் விடையைக் கணினி வழியாகக் கணிக்க முடியாது. எனவே ஒரு கணினி நிரலில் இது போன்ற கணக்கீடு அனுமதிக்கப்படமாட்டாது. இது ஒரு பிழையாகவே கருதப்படும்.

zit socket : ஸிஃப் பொருத்துவாய் : செருகச் சக்தி தேவையில்லா செருகு வாய் என்று பொருள்படும் Zero Insertion-force Socket என்பதன் சுருக்கம். ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகைகளுக்கான ஒருவகைப் பொருத்துவாய். ஒரு சிறிய நெம்பு கம்பி அல்லது திருப்புளி கொண்டு மெல்லத் திறந்து சிப்புவைச் செருகு வாயில் வைத்துவிட்டால் போதும், இறுகப் பற்றிக் கொள்ளும். பிற செருகுவாய்களில் சிப்புவை அழுத்திச் செருக வேண்டும். அடிக்கடி எடுத்துப் போட வேண்டிய சில்லுகளுக்கு/ அட்டைகளுக்கு ஸிஃப் பொருத்து வாய் உகந்தது. ஆனால் இவை அதிக இடத்தை அடைத்துக் கொள்ளும். மரபுமுறைச் செருகுவாய்களைவிடச் செலவு அதிகமாகும்.

Zip:ஸிப் : பீகேஸிப் (pkzip) போன்ற இறுக்கிச் சுருக்கும் மென்பொருள்  கொண்டு இறுக்கி வைக்கப்படும் ஆவணக் கோப்பினை அடையாளங் காட்டும் வகைப்பெயர்.

zip drive : லிப் இயக்ககம் : அயோ மெகா நிறுவனம் உருவாக்கிய ஒரு வட்டு இயக்ககம். 3.5 அங்குல விட்டமுள்ள செருகுவட்டிலேயே

லிப் இயக்ககம்

(லிப் வட்டுகள்) 100 மெகாபைட் தகவலை எழுத முடியும்.

.zm : இஸட்எம் : ஓர் இணைய தள முகவரி ஜாம்பியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

zmodem : இஸட்மோடம் : எக்ஸ் மோடம் கோப்புப் பரிமாற்ற நெறிமுறையின் மேம்பட்ட வடிவம். அதிக அளவு தகவல் பரிமாற்றத்தைக் குறைந்த பிழையுடன் கையாளும். கோப்புப் பரிமாற்றம் எதிர்பாரா இடையூறு காரணமாய் இடையில் நின்றுபோய் மீண்டும் தொடங்கும் போது தொடக்கத்திலிருந்து தொடங்காமல் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் மீள்தொடங்கு குறியிடம் (checkpoint restart) என்னும் வசதியைக் கொண்டுள்ளது.

zone - bit recording : மண்டல பிட் பதிவு.

zone header : மண்டலத் தலைப்பு : ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில், ஒவ்வொரு நினைவகத் தொகுதியும் தொடக்கத்தில் ஒரு தலைப்பினைக் கொண்டிருக்கும். நினைவக மேலாண்மை அமைப்புக்குத் தேவைப்படும் தகவல் இத்தலைப்பில் அடங்கியிருக்கும். நினைவகத் தொகுதி களை சிறப்பாகக் கையாள்வதற்கு இத்தகவல் உதவும்.

.ZOO : .ஸூ : கோப்பினை இறுக்கிச் சுருக்கும் ஸூ (zoo) என்னும்,மென்பொருள்கொண்டு இறுக்கப்பட்ட கோப்புகளை அடையாளம் காட்டும் கோப்பு வகைப் பெயர்.

zoo210 : ஸூ210 : கோப்புகளை இறுக்கிச் சுருக்கும் நிரலான ஸூ-வின் பதிப்பு 2.1 இவ்வாறு அழைக்கப்படுகிறது. இறுகிய கோப்புகளின் வகைப்பெயர் (extension) .zoo என இருக்கும். எல்ஹெச் ஆர்க் (LHARC) என்னும் நுட்பத்தின் அடிப்படையிலேயே ஸூ210-ன் படிமுறைத் தருக்கம் அமைந்துள்ளது. யூனிக்ஸ் மற்றும் இன்டெல் கணினிகளுக்கான ஸூ210 கிடைக்கிறது.

zoom box : ஸூம்பெட்டி; பெரிதாக்கும் பெட்டி : மெக்கின்டோஷ் கணினிகளில் திரையில் தோன்றும் ஒரு சாளரத்தின் சட்டத்தில் மேல் வலது மூலையில் காணப்படும் ஓர் இயக்குவிசை (control). பயனாளர் இப்பெட்டிமீது மாறிமாறிச் சொடுக்கும்போது, சாளரம் மீப்பெரும் அளவுக்கும், பயனர் முன்பு சரிசெய்து வைத்திருந்த தொடக்க அளவுக்கும் இடையே மாறிக் கொண்டிருக்கும்.

zoomed video port :பெரிதாக்கப்பட்ட ஒளிக்காட்சித் துறை.

zr: இஸ்ட்ஆர்: ஓர் இணைய தள முகவரி ஸயர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

zulu time: ஸூலு நேரம்: கிரீன்விச் சராசரி நேரம் என்பதைக் குறிக்கும் கொச்சை வழக்கு.