E

EAM, Electrical Accounting Machines - ஈஏஎம் : மின் கணக்கிடும் எந்திரங்கள்.

EAROM, Electrically Alterable Read Only Memory - ஈரோம் : படிப்பதற்குரிய மின்மாற்று நினைவக வகை. தனிமின் சுற்றுகளைக் கொண்டு எப்பொழுதும் இதற்குத் தகவல் எழுத இயலும்.

EBAM - ஈபம் : மின்னணுக் கற்றை நினைவகம்.

EBCDIC - எப்க்டிக் : தகவல் தொடர்புக் குறிமுறை. இதில் 256 தனித்த உருக்குறிமுறைகளை உண்டாக்க 8 தகவல் இருமிகள் பயன்படுகின்றன.

EBR - ஈபிஆர் : மின்னணுக்கற்றைப் பதிவு.

e-business, e-biz - மின் தொழில் : மின் வணிகம். இணையத்தின் நன்மைகளில் ஒன்று.

e-cash - மின்பணம்: எண்பணம் அவ்வளவு எளிதில் நடைமுறைக்கு வருவதற்கில்லை. பல சிக்கல்களை எழுப்புவது. வங்கி வல்லுநர்கள், பொறியியல் வல்லுநர்கள் ஆகியோரின் அறிவுரைகளை ஏற்றே, இதற்குச் சட்ட ஒப்புதல் அளிக்க வேண்டும். சிக்கல் முதன்மையாக கருதவேண்டுவது மோசடி. குறிப்பாக அன்னியச் செலாவணி. பா. Internet.

echo - எதிரொலி : செலுத்திய குறிகை மீண்டும் மூலத்திற்கு வருதல். இதிலுள்ள தாமதம் இது ஒரு மறிப்பு என்பதைக் காட்டும்.

echo check - எதிரொலிச் சரிபார்ப்பு : செலுத்துகையின் துல்லியத்தைச் சரிபார்க்கும் முறை. இதில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அதன் மூலத்திற்கே தகவல் திருப்பி அனுப்பப்படும். திரையிலிருந்து இது முதலில் பெறுவிக்குச் சென்று பின் மீண்டும் திரைக்கு வரும். இதனால் துல்லியம் சரி பார்க்கப்படுகிறது.

echoplex technique - எதிரொலிப்பகுதி நுட்பம் : இந்நுணுக்கம் முழு இருபகுதி கம்பிகள் கொண்ட தகவல் தொடர்பு அமைப்பிலுள்ள பிழைகளைக் கண்டறியப் பயன்படுவது. விசைப் பலகையில் ஓர் உரு, தட்டச்சு செய்யப்படும் பொழுது, அது குறி கையாக மாறிப் பெறுவிக்குச் செல்கிறது. பின் மீண்டும் காட்சிமுனையை அடைகிறது. இதனால் தட்டச்சு செய்யப்பட்ட உரு திரையில் தெரியும் பொழுது, அது அதே போல் உள்ளதா இல்லையா என்று சரிபார்க்கலாம்.


ECL, Emitter Coupled Logic - ஈசிஎல் : உமிழ்வி இணைந்த முறைமை,


e-commerce - மின்வணிகம் : இதைக் கல் காரை வாங்குதல் என்று வேடிக்கையாகக் கூறலாம். கணிப்பொறி வழி வடிவமைப்பு இதன் அடிப்படை மின்னணு ஊடகம் மூலம் ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்கு இடையே நடைபெறும் வணிக நடவடிக்கை. தவிர, இதில் பல தொழில் நுட்பங்களும் அடங்கும். இது 1995-இல் தொடங்கியது. ஐந்தாண்டு வரலாறு கொண்டது. இதைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1) மின்னணுச் செய்தி: மின்னஞ்சல், குரலஞ்சல்.

2) வலையத் தொழில் நுட்பம்: இதில் இணையம் அக இணையம், புற இணையம் என இரு வகை.

3) செய்தித் தொடர்பு ஊடகங்கள்: முகப்புக் குரல், ஒப்படைப்பு வழி, ISDN.

4) மின் ஆவணங்கள்: EDI, EFT.


e-commerce Course - மின் வணிகப் படிப்பு : மின் வணிகம் என்பது மிகப் புதிய தொழில் நுட்பம். விரைந்து வளர்ந்து வருவது. தனியார் கணிப்பொறி நிறுவனங்கள் ஒரு தனிப் படிப்பாகப் பாடத் திட்டம் அமைத்துச் செயற்படுத்தி வருகின்றன. அப்பாடத் திட்டத்தின் உள்ளடக்கங்களாவன:

1. மின்வணிகக் கருத்துகளும், பயிற்சிகளும்.

2. நிகழ்நிரல் அணுகுமுறைகளும், நுட்பங்களும்.

3. தகவல் தள வடிவமைப்பைச் செயற்படுத்தல் இதற்கு மைக்ரோசாஃப்ட் எஸ்குயூஎல் பணியாளி 7.0ஐப் பயன்படுத்தல்.

4. யூஎம்எல்.

5. மைக்ரோசாஃப்ட் முன் பக்கம்.

6. ஜாவா நிகழ்நிரலாக்கம்.

7. எச்டிஎம்எல் நிகழ்நிரலாக்கல் எச்டிடிபி 11.

8. வி.பி எழுத்து, ஜாவா படி எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்தி, படி எழுதுதல்.

9. டிஎச்டிஎம்எல்.

10. ஏஎஸ்பி, வினையுறு பணியாளிப் பக்கங்கள்.

11. எச்எம்எல், விரிகுறி மொழிகள்.

12. ஐஐஎசில் இடையப் (வெப்) பக்கங்களை ஒம்புதல்.

13. டபுள்யூஎம்எல்.

14. டபுள்யூஎம்எல் எழுத்துப் படிகள்.

15. மேம்படுத்திகள்.

16. விஷூவல் பேசிக்கைப் (6.0) பயன்படுத்தி காம் பகுதிகள்.

17. மைக்ரோசாஃப்ட் நடவடிக்கைப் பணியாளி.

18. ஜாவா மொழியைப் பயன்படுத்தி இணைக்கப்பட்ட கருவியமைப்புகளுக்கு நிகழ் நிரலாக்கம் செய்தல்.

19. விஷூவல் இண்டர்டெவ்வைப் பயன்படுத்தி, இணையத்தளங்களை (வெப்சைட்டுகள்) உருவாக்கல்.

20. சைட்சர்வர் 3.0 வணிகப் பதிப்பைப் பயன்படுத்தி, நுகர்வோர் இணையத்தளங்களுக்குரிய தொழிலை அமைத்தல்.

21. சைட்சர்வர் 3.0 வணிகப் பதிப்பைப் பயன்படுத்தி வணிக இணையத்தளத்தை அமைத்தல்.

22. செயற்படுத்தும் திட்டம்.


E Com Ecosystem - மின் வணிகச் சூழல் அமைப்பு : தொழில்துறை விளையாட்டாளர்கள் உள்ள பன்முகச் சமூகம். திறந்தவெளிக் கணிப்பொறிச் சூழலில் பணியாற்றுபவர்கள் பயன்கள் பலவற்றைப் பயனாளிகள் பெற உதவுபவர்கள்.


EDI - Electronic Data change. ஈடிஐ : மின்னணுத் தகவல் மாற்றம், மிதமா.


edit - To arrange data into the format required for later processing.
பதிப்பி : பின்பு முறையாக்கலுக்கு வேண்டிய தகவல்களை ஒரு படிவமைப்பில் இருக்குமாறு ஒழுங்கு செய்தல்.


editing functions - பதிப்பு வேலைகள் : இவை பின் வருமாறு:

1. தேவையில்லாத தகவல்களை நீக்கல்.

2. புலங்களை எந்திரப் படிவமைப்புக்கு மாற்றல்.

3. பின் பயன்களுக்கு வேண்டிய தகவல்களைத் தயாரித்தல்

4. படி எடுத்தல்.

5. வெட்டல்.

6. ஒட்டல்.

7. மாற்றீடு செய்தல்.


editor - A computer programme used to keep preparing a text or data for entry into a computer. It may be to retrieve and rearrange data previously stored in a file.
பதிப்பிப்பி : இது ஒரு கணிப்பொறி நிகழ்ச்சிநிரல். கணிப்பொறியில் செலுத்துவதற்குரிய பாடம் அல்லது தகவலை ஆயத்தம் செய்ய உதவுவது. ஒரு கோப்பில் முன்னரே சேமித்த தகவல்களை மீட்கவும் மீண்டும் ஒழுங்கு செய்யவும் உதவுவது.

EDP, Electronic Data Processing - ஈடிபி : மின்னணுத் தகவல் முறையாக்கல்.

EDS, Exchangeable Disk Storage - ஈடிஎஸ் : மாற்றக் கூடிய தட்டுச் சேமகம்.

EDVAC- எட்வாக் : இதை வான் நியூமன் என்னும் கணித அறிஞர் 1945இல் புனைந்தார். நிகழ்நிரல் சேமிக்கப்பட்ட முதல் கணிப்பொறி இதுவே. ஆகவே, சிறப்புள்ளது.

e-education - மின்கல்வி : கல்வி கற்க உதவும் தொழில்நுட்ப முறை. இது பலவகைப் படிப்புகளின் கற்றல் முறையைக் கணிசமாக மாற்றும். கற்பவர்கள் பயனுள்ள தகவல்களை விரைவாக விரும்பியவாறு பெறுவது.

EEPROM - ஈப்ரம் : இது படிப்பதற்கு மட்டுமுள்ள நினைவகம். இதில் நிகழ் நிரலை எளிதில் மின்முறையில் அழிக்கலாம்.

effective address - An address actually used by the computer for executing an instruction.
பயனுறுமுகவரி : ஒரு கட்டளைக் குறிப்பை நிறைவேற்றக் கணிப்பொறி பயன்படுத்துவது.

க.6. effective instruction - The instruction carried out as a result of altering a basic instruction during programme modification.
பயனுறு கட்டளைக் குறிப்பு : நிகழ்நிரல் மாற்றத்தின் பொழுது அடிப்படைக் கட்டளைக் குறிப்பை மாற்றுவதால் உண்டாவது.

effective memory address - The memory address computed by information provided in a programme instruction.
பயனுறு நினைவக முகவரி: ஒரு நிகழ்நிரல் கட்டளைக் குறிப்பில் அளிக்கப்பட்ட செய்தியினைக் கணிக்கப்படுவது இது.

effective time - பயனுறு நேரம் : கணிப்பொறி இயங்கும் பொழுது, அதைப் பயனுள்ள வேலைக்குப் பயன்படுத்தும் நேரம். இதன் விளைவுகள்: 1. ஆக்கநேரம். 2. நிகழ்நிரல் வளர்ச்சிக் காலம். 3. விளக்க நேரம். 4. பயிற்சி.

EGA, Enhanced Graphic Adaptor ஈஜிஏ : உயர்வாக்கிய வரைகலை ஏற்பி. தனியாள் கணிப்பொறியில் கூடுதலாக உள்ள நினைவகம்.

ego-surfacing - தன்னைத் தேடல்: ஒருவர் தன் பெயரை இணையத்தில் தேடுதல்.

e-governance - மின்னாட்சி : அன்றாட அரசியல் அலுவலில் சான்றிதழ் வழங்கல், வரிகட்டல் முதலியவை எளிதாகவும் நம்பகமாகவும் விரைவாகவும் நடைபெற உதவுவது. பலருக்கு வேலை அளிக்கலாம். அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாடு அரசு தற்போது 50 தாலுக்காக்களில் இதை நடைமுறைப்படுத்தியுள்ளது. 2001-க்குள் 156 தாலுக்காக்களுக்கு இது விரிவுபடுத்தப்படும்.

e-health - மின்னலம் : மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டு உடல்நலம் பேணல்.

eight bit - எண்மி : சொல் அளவு எட்டு துண்மிகளைக் கொண்டது. பா. bit.

elapsed time - The total apparent time taken by a process as measured by the time between the apparent beginning and the apparent end of the process.
கழிநேரம் : ஒரு செயலினால் எடுத்துக் கொள்ளப்படும் மொத்தத் தோற்ற நேரம். செயலின் தோற்றத் தொடக்கத்திற்கும் தோற்ற முடிவிற்கும் இடையே நிகழும் நேரத்தால் அளக்கப்படுவது.

electron beam memory - The memory using a high resolution electron beam to store information. மின்னணுக்கற்றை நினைவகம் :

செய்தியை சேமிக்க உயர் பகுப்பு மின்னணுக்கற்றையை நினைவகம் பயன்படுத்தல்.

electronic bulletin board - An electronic call-up service helping users compose and store messages to be retrieved by other users. - மின்னணுத் தகவல் பலகை : மின்னணு அழைப்புப் பணி. ஏனைய பயனாளிகள் மீட்பதற்காகச் செய்திகளைத் தட்டச்சு செய்யவும், சேமிக்கவும் பிற பயனாளிகளுக்காகப் பயன்படுவது.

electronic data processing - The process carried out by electronic means. - மின்னணுத் தகவல் முறையாக்கல் : மின்னணு முறையினால் நடைபெறும் செயல்.

electronic spread sheet - A worksheet used in a computer to create and quickly analyse interrelated column reports in work spaces. - மின்னணு விரிதாள் : கணிப்பொறியில் பயன்படும் வேலைத்தாள். வேலை இடங்களில் தொடர்புள்ள பத்தி அறிக்கைகளை உருவாக்கவும் பகுக்கவும் பயன்படுவது.

electronic spread sheet, applications of - மின்னணு வரிதாள் பயன்கள் : இவை பின் வருமாறு. 1. சம்பளப் பட்டியல் தயார் செய்ய, 2. வருமானவரி கணக்கீடுகள் செய்ய, 3. பட்டியல்கள் தயார் செய்ய, 4. கணக்கு அறிக்கைகள் தயாரிக்க, 5. இருப்புப் பட்டியல் தயார் செய்ய, 6. ஆக்கச் செலவு நன்மைப் பகுப்பு, 7. நிதிக் கணக்கு தயார்செய்ய, 8. தேர்வு முடிவுகளைப் பகுத்துப் பார்க்க.

electronic spread sheet, structure of - மின்னணு விரிதாள் அமைப்பு : இது பத்திகள், வரிசைகள் என இரு பகுதிகளைக் கொண்டது. இவை இரண்டும் சேர்வதால் நுண்ணறைகள் இடையே உருவாகின்றன. இவை பத்தி, வரிசை ஒட்டுகள் எனப்படும். இவ்வறையில் தகவல்களைத் தட்டச்சு செய்யலாம். இத்தாளின் திறன் இதுவே. இவ்வறைகள் வாய்பாடுகளைக் கொண்டிருக்கும். இவை மற்ற அறைகளிலுள்ள தகவல்களுக்குரிய சில கணிதக் கணக்கீடுகளைச் செய்யும். இக்கணக்கீட்டு முடிவுகள் ஒரு புதிய நுண்ணறையில் தோன்றும்.

elite - Something stolen or pirated. - திருட்டுப் பொருள், கொள்ளைப் பொருள்.

e-magazine - மின்னிதழ் : மின் முறையில் அச்சியற்றப்படும் பருவமலர்.

e-mail - மின்னஞ்சல் : உடன் செய்தித் தொடர்பிற்காக ஒவ்வொருவரும் வைத்திருப்பது. இணையத்தின் மற்றொரு பயனுள்ளதும் மிகப் பரவலாக உள்ளதுமான செயல். ஒரு வலையத்திலுள்ள கணிப்பொறியிலிருந்து அடுத்த வலையத்திலுள்ள கணிப்பொறிக்கு அனுப்பப்படுவது. இதைக் கொண்டு செய்திகள் அல்லது தகவல்களை உலகிலுள்ள எவருக்கும் உடன் அனுப்பலாம்; சில நிமிடங்களில் போய்ச் சேரும். தொலைபேசி அழைப்புகளை விட மலிவானது. எதிர்நோக்கஞ்சல் என்றும் வேடிக்கையாகக் கூறலாம்.

e-mail address - மின்னஞ்சல் முகவரி : அஞ்சல் முகவரியை ஒத்தது. இதில் இரு பகுதிகள் உள்ளன. 1. பயனாளியின் பெயர் : மின்னஞ்சல் முகவரியின் முதல் பகுதி. பயனாளி தன்னை அடையாளங் கண்டு கொள்ள ஒரு பெயரைத் தேர்ந்தெடுப்பது. 2. அஞ்சல் பெட்டி இடம்: இது இரண்டாம் பகுதி பயனாளியின் பெயரை @ என்று குறியினால் பிரிக்கப்படுவது. இது அஞ்சல் பெட்டியின் இடத்தைக் காட்டுவது. ஐஎஸ்வி பெயர், நாடு முதலிய விவரங்களைக் கொண்டது. எடுத்துக் காட்டு : Moorthy@giasmd01.vsnl.net.in

e-mail, working of.- மின்னஞ்சல் வேலை செய்தல் : இது அஞ்சல் பணி போன்றது. இதில் நாம் கடிதத்தை அனுப்புகிறோம், பெறுகிறோம். இதே போல, மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்புகிறோம் அல்லது பெறுகிறோம். நம்மை அடையாளங் கண்டுகொள்ள நமக்கென்று ஓர் அஞ்சல் முகவரி உள்ளது. இதே போல, மின்னஞ்சலின் ஒவ்வொரு பயனாளியும் ஒரு தனி மின்னஞ்சல் முகவரியைக் கொண்டிருப்பர். நமக்கு மின்னஞ்சல் பணி வழங்குபவர் ஒரு முகவரியைக் கொடுப்பர். இணைய கணக்கை நாம் பெறும் பொழுது, ஒரு கடவுச் சொல்லும் அளிக்கப்படும். நமக்கு வரும் மின்னஞ்சல் முகவரி அஞ்சல்பெட்டியில் சேமித்து வைக்கப்படும். இப்பெட்டி அஞ்சல் அளிப்பி எனப்படும். கணிப்பொறியில் அமைந்திருப்பது. நாம் விரும்பும் பொழுது இதை நம் கணிப்பொறிக்கு மாற்றிப் படிக்கலாம். எழுதலாம். அஞ்சல் கடவுச்சொல் என்பது வேறு எவரும் படிக்காதவாறு பாதுகாப்பது. நமக்கு வரும் அஞ்சல், அஞ்சல் அளிப்பியில் சேமித்து வைக்கப்படும். இங்கிருந்து வலையமைவின் மூலம் செல்ல வேண்டிய இடத்திற்கு அஞ்சல் செல்லும்.

e-manufacturing - மின் உற்பத்தி : மின்முறையில் பொருள்கள் உருவாக்கப்படுதல்.

e-research - மின் ஆராய்ச்சி : இது மின் வணிகத்தின் உதவியால் நடைபெறுவது. மின்

வணிகக் கருத்துகள் இதில் பயன்படுகின்றன. தனியாக வோ குழுவாகவோ நடை பெறுவது.
e-services - மின்பணிகள்: வீடில்லாதவருக்கு முகவரி என்று ஒன்று இல்லை. இப் பணி இச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது. குரலஞ்சல் மூலம் தொலைபேசியின் வாயிலாக, இதைத் தெரிவிக்கலாம். இன்ன இடத்தில் இன்ன வேலைக் காகப் பேட்டி நடைபெறு கிறது. தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி தெரிவிக்கலாம். இதைக் கொண்டு முகவரி இல்லாத வரிகள் இப்பேட்டி யில் கலந்து கொள்ளலாம்.

e-text book - மின்பாடநூல்: மின்முறையில் உருவாக்கப்

emitter - A device in a punched card generating signal to simulate the presence of holes not actually punched. உமிழ்வி : பொத்த அட்டையிலுள்ள கருவியமைப்பு. இது உண்டாக்கும் குறிகை உண் மையில் பொத்தல் இடப் படாத துளைகள் இருப்பதைப் பகர்ப்பு செய்யும்.

emitter-coupled logic - a form of electronic logic - உமிழ்வி இணைந்த முறைமை : ஒரு வகை மின்னணு முறைமை.

emitter pulse - உமிழ்வி துடிப்பு : ஒர் அட்டையின் பத்திகளிலுள்ள குறிப்பிட்ட நெடுவரிசை

EMS, Expanded Memory Specification - ஈஎம்எஸ், விரிவாக்கிய நினைவகச் சுட்டு : தனியாள் கணிப்பொறியில் கூடுதலாக உள்ள நினைவகம்.

emulation - The process of using a computer to operate a data produced for a different computer type. மேம்படுத்தல்: வேறுபட்ட வகைக் கணிப்பொறிக்காக உண்டாக்கப்படும் தகவல்களை கணிப்பொறியை இயக்கப் பயன்படுத்தும் முறை.

emulator software - மேம்படுத்தும் மென்பொருள் : முத லில் ஒரு கணிப்பொறித் தொகு திக்காக எழுதப்பட்ட நிகழ் நிரல்களை, வேறு ஒரு கணிப் பொறியில் இயக்கப் பயன்படும் மென்பொருள்.

enable - To authorise an activity perhaps to be suppressed to write on a tape. இயலச்செய் : ஒருசொல் ஒடுக் கப்பட வேண்டிய செயலை நாடாவில் எழுதப் பயன் படுத்தல்.

encode - To represent data in digital form as a series of impulses denoting characters or symbols. It helps automatic processing. குறிபாட்டில் அடக்கு : உருக் களாக அல்லது குறியீடுகளாக உள்ளவற்றைத் தொடர் துடிப்புகளாக இலக்க வடிவத் தில் தகவலாகக் குறித்தல். இது தானியங்கு முறையாக்கலுக்கு உதவும்.

encoder - A device substituting one set of symbols for another. குறிபாட்டடக்கி : ஒரு தொகு திக் குறியீடுகளை மற்றொரு தொகுதிக் குறியீடுகளாக மாற்றீடு செய்யும் கருவியமைப்பு.

encryption - தகவல் மறைப்பு : செய்திகளைக் குறிமுறையில் மறைவாக வைத்தல். ஒரு விடு விக்கும் கருவியமைப் பில்லா மல் இச்செய்தியை ஒருவர் பெற இயலாது. இதில் வல்லுநர் இராஸ் ஆண்டர்சன். கணிப் பொறிக் குற்றங்களைத் தடுக்கப் பயன்படுவது. ஓ, decryption.

end directive - A statement in an assembly programme. it simply informs the assembler that further instructions need not be assembled or executed in the programme. முடிவானை : ஒரு கோவை நிகழ்நிரலின் கூற்று. கட்டளை களை மேற்கொண்டு கோவைப் படுத்தவோ செயற்படுத்தவோ வேண்டாமெனக் கோவையாக் கிக்கு இது தெரிவிப்பது.

end of file - A marker showing the end of the file. கோப்பு முடிவு : ஒரு குறிப்பி இதைக் காட்டுவது.

endmark! - A code signalling that the end of an item of information has been reached. முடிவுக்குறி : இது ஒரு குறி முறை. ஒரு செய்தி இனத்தின் முடிவு, நிறைவு பெற்றுவிட்டது என்பதைத் தெரிவிப்பது.

endorser - A special feature available on most magnetic ink character recognition readers. It imprints a bank endorsement on successful document reading. * ENIAC - ஈனியாக்: இது முதல் இலக்கக் கணிப்பொறி, 1942-1945 வாக்கில் புனையப்பட்டது. இதன் விரிவு. electronic numerical integer and calculator. மின் எண் தொலையாக்கி கணிப்பான். இது டபுள்யூ மாக்கிலி என்பவரால் புனையப் பட்டது. மேலொப்பமிடுவி : காந்த மை உரு அறிபடிப்பிகளில் பெரும் பாலானவற்றிலுள்ள ஒரு தனி இயல்பு. உறுதியான ஆவணப் படித்தலுக்காக இது வங்கியின் மேலொப்பத்தைப் பதிவு செய்யும்.

entrance - The location of a programme at which execution is to start. Otherwise known as entry point. நுழைவு: நிறைவேற்றல் தொடங்கும் நிகழ்நிரலின் இடம் entry - 1) The address of the first instruction in a programme to be obeyed, 2) A unit of information either input or output. பதிவு : 1. ஒரு நிகழ்நிரலில் நடைபெற வேண்டிய முதல் கட்டளையின் முகவரி, 2. தகவல் அலகு உட்பலன் அல்லது வெளிப்பலன். வேறு பெயர் பதிவுமுனை.

entry instruction - The instruction obeyed when entry is first made to a routine. பதிவுக்கட்டளை : ஓர் வழக்க மான செயலுக்கு முதலில் செய்யப்படும் பதிவு. இது கட்டளையாக நடைபெறுவது.

environment division - The section of a programme written in COBOL defining the hardware and files to be used by the programme. சூழல் பிரிவு : கோபல் மொழி யில் எழுதப்படும் நிகழ்நிரலின் பகுதி. நிகழ்நிரலால் பயன் படுத்தப்படும். வன்பொருளை யும் கோப்புகளையும் வரை யறை செய்வது.

EPROM - ஈப்ரோம் : படிப்பதற்கு மட்டும் உள்ள நினை வகம், அழிக்கக்கூடியது, நிகழ் நிரலாக்கக் கூடியது. வரம்பில் அணுக்க நினைவகத்திற்கு எதிரானது.

equality unit - சம அலகு : இரு எண்களை உட்பலனாக ஏற்றுக் கொள்ளும் கருவி யமைப்பு. இவ்விரு எண்கள் சமமானால் 1 என்றும் வெளிப் பலன் குறிகையையும், சம மில்லை என்றால் 0 என்னும் குறிகையையும் காட்டும்.

equation solver - சமன் பாட்டுத் தீர்வி : இது ஓர் எந்தி ரம். ஒருபடித்தான சமன்பாடு முறைகளைத் தீர்க்கப் பயன் படுவது.

equivalence binary digit - சமான இரும எண் : ஒரு தொகுதிப் பண்பியல்புகளின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு தனி இரும எண்ணால் குறிக்கத் தேவைப்படும் இருமிகளின் எண்ணிக்கை: எ-டு 26 கூறு களைக் கொண்ட நெடுங் கணக்கின் ஒவ்வொரு எழுத் தையும் குறிக்க 5 இருமிகள் தேவை. ஏனெனில், இருமக் குறிமானத்தில் 26 என்பது 11010.

equivalence element - A logic element in which the relationship between two binary input signals is defined by the equivalence operation. சமான கூறு : முறைமைக் கூறு. இதில் இரும உட்பலன் குறி கைகளுக்கிடையே உள்ள தொடர்பு சமான இயக்கத்தால் வரையறை செய்யப்படுவது.

equivalence operation - A Boolean operation in two operands. சமான செயல் : இரு செயலிடங்களில் நடைபெறும் பூல்செயல்.

erasable storage - அழிக்க கூடிய சேமகம் : எ.டு. காந்த நாடா.

erase - அழி : சீரான குறிமுறையினால் ஓர் ஊடகச் சேமிப்பிலுள்ள தகவலை மாற்றீடு செய்தல். இக்குறிமை இன்மைத் தகவல்களைக் குறிக்கும். இவை சுழிகளாகவோ எண்களாகவோ இட உருக்களைக் குறிக்கும்.

erase head - அழிப்புத்தலை : நாடாப்போக்கு வரவிலுள்ள கருவியமைப்பு. புதிய தகவல்களை நாடாவில் எழுதப்படுவதற்குப் பழைய தகவல்களை நீக்கல்.

e-revolution - மின் புரட்சி : மின் வணிகப் புரட்சி.

ergonomics - பணிச் சூழியல் : அலுவலகங்களில் வேலை செய்யும் போது மனித உடலை ஆராயும் துறை. கணிப்பொறித் துறையோடு நெருங்கிய தொடர்புடையது.

error - பிழை : தவறு. எதிர்பார்க்கும் முடிவு ஏற்படாத நிலை. இப்பிழை இருவகை: 1. மென்பொருள் அல்லது நிகழ்நிரல் பிழைகள். 2. வன் பொருள் பிழைகள்.

error analysis - பிழை பகுப்பு : இலக்கக் கணிப்பொறியில் ஒரு சிக்கலைத் தீர்க்கும் பொழுது அடிப்படை எண்கணிதச் செயல்கள் உள்ளன. இவற்றில் ஏற்படும் பிழைகளின் தொகு விளைவை மதிப்பிடல்.

error character - பிழையுரு : தகவலிலுள்ள பிழையைக் காட்டும் உரு.

error correction - பிழை திருத்தம் : இது கணிப்பொறியால் செய்யப்படுவது.

error message - பிழைச் செய்தி : நிகழ்நிரலின் செய்தி வெளிப்பலன். இந்நிகழ்நிரல் பிழை வகையைக் காட்டுவது.

error register - பிழை பதிவகம் : இது ஒரு தனிச் சேமிப்பிடம் பிழை ஏற்படின், இதன் தனி இருமி நிலைகள் சரியாக அமையும்.

escape character - விடுபடு உரு : ஒரு குறிமுறையில் தெரிவிக்கப்படும் அடுத்தடுத்து வரும் உருக்களைக் காட்டும் ஓர் உரு. இது நடப்புநிலையிலுள்ள குறிமுறைமையிலிருந்து வேறுபடுவது.

escape sequence - விடுபடு வரிசை : இதில் வினாக்குறி (?) மேற்கோள் குறி "" முதலியவை இருக்கும். ESDI, Enhanced Small Device Interface - ஈஎஸ்டிஐ : உயர்வாக்கிய சிறு கருவியமைப்பு இடைமுகம். கணிப் பொறியிலுள்ள கடின இயக்கி வகை.

even parity check - A parity check where the number of ones (zeros) in a group of binary digits is expected to be even. இருமைச் சமன் கட்டுப்பாடு : இக்கட்டுப்பாட்டில் இரும எண் தொகுதியிலுள்ள ஒன்றுகளின் (சுழிகள்) எண்ணிக்கை சமமாக இருக்கும்.

event - A processing action altering data files. நிகழ்வு : தகவல் கோப்புகளை மாற்றும் முறையாக்கும் செயல்.

events, kinds of - நிகழ்வுகளின் வகைகள் : இவை சாளர இயங்கு தொகுதியின் ஒருங்கிணைந்த பகுதிகள். அரிய பயன்பாடுகளை உருவாக்க உதவுபவை. இவை சுட்டெலி நிகழ்வுகள், அமைப்பு நிகழ்வுகள், விசைப்பலகை நிகழ்வுகள், சுமை நிகழ்வுகள், பயனாளி நிகழ்வுகள் எனப் பல வகை.

event triggering - நிகழ்வுகள் தூண்டல் : விஷூவல் பேசிக் பயன்பாட்டில் இரு வேறுபட்ட விசை நிகழ்வுகள் உள்ளன. முதல்வகை பயனாளி நிகழ்வு. இதைப் பயனாளி பயன்படுத்துவார். இரண்டாம் வகை அமைப்பு நிகழ்வு. இதில் அடங்குவன: 1. நேரங்குறிப்பியின் செயல்கள். 2. தகவல் அணுக்கப் பிழைகள். 3. படிவ நிலை மாற்றங்கள். 4. கட்டுப்பாட்டு நிலை மாற்றங்கள். இந்நிகழ்வுத் தூண்டல் ஒரு நிகழ்நிரலிலுள்ள அனைத்துச் செயல்களையுங் கட்டுப்படுத்துகிறது.

exception principle system - The system reporting only those results different from predesignated results. விலக்குநெறிமுறை : முன்னரே தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ள முடிவுகளிலிருந்து வேறுபட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் முறை.

exchange - The interchange of contents between two locations. பரிமாற்று : இரு இடங்களுக்கிடையே உள்ளடக்கங்களை மாற்றிக் கொள்ளுதல்.

exchangeable disk store - A backing store device in the device magnetic disks are loaded into a disk transport, eg. a capsule having 6 disks. மாற்றுவட்டுச் சேமகம் : தாங்கு சேமகக் கருவியமைப்பு. இதில் வட்டுப் போக்குவரத்துப் பொறிநுட்பத்தில் காந்தவட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். எ-டு 6 வட்டுகள் கொண்ட பொதிகை

exchange instruction - An instruction found in some assembly language systems. It is used to interchange the operands of two registers, eg. the contents of x register are placed in y register. பரிமாற்றுகட்டளை : சில கோவை மொழியமைப்புகளில் காணப்படுவது. இரு பதிவகங்களின் செயலிடங்களை ஒன்றுக்கு மற்றொன்று மாற்றப் பயன்படுவது.

exchange message - This is a device placed between a communication line and a computer. It takes care of certain communication functions to free the computer from other work. பரிமாற்றுசெய்தி : கணிப்பொறிக்கும் செய்தித் தொடர்பு வழிக்கும் இடையிலுள்ள கருவியமைப்பு இது. கணிப்பொறியைப் பிற வேலையிலிருந்து விடுவிக்கச் சில செய்தித் தொடர்பு வேலைகளை இது மேற்கொள்ளும்.

exclusive or operation - The logical operation applicable to two operands to produce a result based on the bit patterns of the operands. தனியன் அல்லது செயலி : முறைமைச் செயல். இரு செயலிடங்களுக்குரியது. இவ்விடங்களின் இருமி கோலங்களுக் கேற்ப முடிவை உண்டாக்குவது.

execution - Carrying out one or more instructions in a computer programme. நிறைவேற்றல் : ஒரு கணிப்பொறி நிகழ்நிரலில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டளைகளைச் செய்து முடித்தல்.

execution time - The time taken by a computer to work thro a set of instructions. நிறைவேற்றுநேரம் : ஒரு தொகுதிக்கட்டளைகளைச் செய்து முடிக்க, ஒரு கணிப்பொறி எடுத்துக் கொள்ளும் நேரம்.

executive programme - This programme consists of a number of complex routines residing wholly or partly in the main memory. Its function is to monitor and supervise certain basic control functions. நிறைவேற்றுநிகழ்நிரல் : இது பல சிக்கலான நடைமுறைச் செயல்களைக் கொண்டது. இவை முதன்மை நினைவகத்தில் முழுதுமாகவோ பகுதியாகவோ அமைந்திருப்பவை. சில அடிப்படைக் கட்டுப்பாட்டு வேலைகளைக் கண்காணிப்பதே இதன் வேலை.

exit - The last instruction in a programme. It is generally a branch from the routine into another part of the programme.

வெளியேற்றம் : ஒரு நிகழ்நிரலின் இறுதிக்கட்டளை. நடைமுறைச் செயலியின் கிளை. நிகழ்நிரலின் அடுத்த பகுதிக்குச் செல்வது.

exit for statements - By using this statement we can leave the for loop at any point in the process.

வெளியேற்றுகூற்று : இக்கூற்றைப் பயன்படுத்திச் செயலின் எந்நிலையிலும் வளையத்திற்காக என்று விட்டுவிடலாம்.

exponent - A number or symbol written at the upper right of another number to show it is to be multiplied by itself a certain number of times, eg. The number 106 bytes mean 1 million bytes where 6 is the exponent of 10.

அடுக்குக்குறி : இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எ-டு 106 இருமிகள் என்பது 1 மில்லியன் எண்மிகள் ஆகும். இங்கு 6 என்பது 10ன் அடுக்குக்குறி.

exponent form - அடுக்குகுறி வடிவம்: இது அறிவியல் கணக்கீடுகளில் பயன்படுவது. எ-டு 000000000000127. இது பின் வருமாறு எழுதப்படும் 0.127×10-12.

extended precision arithmetic - An operation giving an answer more accurate than double precision arithmetic.

விரிவுத் துல்லிய எண்கணிதம்: இரு துல்லிய எண்கணிதத்தை விட மிகத் துல்லியமான விடையைக் கொடுக்கும் செயல் இது.

extensible language - A programming language. It can be modified by adding new features.

விரிவுமொழி : ஒரு நிகழ்நிரல் மொழி. புதிய இயல்புகளைச் சேர்த்து இதை மாற்றியமைக்க இயலும்.

extent - The physical location in a mass storage device allocated for use by a particular data set.

விரிவளவு : ஒரு பேரளவுச் சேமக் குருவியமைப்பிலுள்ள இடங்கள். ஒரு குறிப்பிட்ட தகவல் தொகுதிப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டவை.

external logic - The logic circuits residing outside the boundary of a central computer system, eg. mini computer or micro computer.

புறமுறைமை : ஒருமைக் கணிப்பொறித் தொகுதிக்கு வெளி எல்லையில் அமையும் முறைமைச் சுற்றுகள். எ-டு சிறு கணிப்பொறி, நுண்கணிப் பொறி.

extract - The removal of a selected part from an item of information.

பிரிபகுதி : ஒரு செய்தி இனத் திலிருந்து தெரிவு செய்த பகுதியை நீக்குதல்.

extract instruction - பிரி பகுதிக்கட்டளை : ஒரு செய்தி இனத்தின் தெரிவு செய்த பகுதிகளை ஒரு தனிப்பட்ட இடமாக வைக்கும் கட்டளை.

e- zines in Tamil - தமிழ் மின் இதழ்கள் : சிறியவையும் பெரியவையுமான தமிழ் இடையத் தளங்கள் (வெப் சைட்ஸ்) 1000 உள்ளன. தமிழ் இடைய அடைவுகள் மூன்று உள்ளன. கணியன் தமிழ்ச் செய்தி தொடங்கி நின்று விட்டது. பிற இதழ்களாவன. தமிழ்நாளிதழ், சினிமாதிரைப் படம். அருள்-ஆன்மீகம், மாணவன் மாணவன் இதழ், வெப் உலகம். இவற்றில் முதல் நான்கு சிங்கப்பூரைச் சார்ந்தது. ஐந்தாவது சென்னையில் நடத்தப் பெறுவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/E&oldid=1047043" இலிருந்து மீள்விக்கப்பட்டது