K

Kanian Family of E-zines - கணியன் குடும்ப மின்னிதழ்கள் : இவை நான்கு : 1) தமிழ் நாளிதழ் 2) சினிமா திரை யுலக இதழ் 3) அருள் ஆன்மிகம் 4) மாணவன் மாணவர் இதழ்.

Kanithamizh Sangam - கணித்தமிழ்ச் சங்கம் : சென்னையில் செயற்படுவது நோக்கம் கணிப் பொறித் தமிழை வளர்ப்பது. தலைவர் அ. இளங்கோவன், செயலர் ஆண்டோ பீட்டர் கணி தமிழ் 2001 என்னும் நான்கு நாள் விற்பனை விழாவைச் சென்னையில் நடத்தியது (24-12-2000 - 27-12-2000).

Katiesoft- கேட்டிசாஃப்ட் : ஒரு பயன்பாட்டகம் ஒரே சமயத்தில் 4 தளங்களைக் கண்ணோட்டமிடவும் பார்க்கவும் பயன்படுவது.

KBPS - Kilobits per second. கேபிபிஎஸ் : ஒரு வினாடிக்கு இத்தனை கிலோபிட்டுகள்.

KCS - A thousand characters per second. கேசிஎஸ் : ஒரு வினாடிக்கு ஆயிரம் உருக்கள்.

Keely, Bert - பெர்ட் கீலி: மைக்ரோ சாப்ஃட் நிறுவனத் தின் சிற்பி. பலகை வடிவத் தனியாள் கணிப்பொறியை வடிவமைத்து அறிமுகப்படுத்த உள்ளார். பெர்ட் கீலி புகைப்படத்துடன்

kernel - 1) A set of procedures controlling the real resources in a virtual machine. 2) A message handling facility of a control system. தகவல் கரு : 1) ஒரு மாய எந்திரத்தில் மெய்யான மூலங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைத் தொகுதி 2) ஒரு கட்டுப்பாட்டுத் தொகுதியின் செய்தியைக் கையாளும் வசதி.

key - 1) The common field within a record utilized in identifying an item. 2) An individual button of a keyboard used to generate a code to represent a character. திறவு : 1) ஓர் ஆவணத்திலுள்ள பொதுப்புலம்; ஒரு தகவல் இனத்தை அடையாளமறியப் பயன்படுவது. 2) விசைப்பலகையின் தனிப் பொத்தான்; ஓர் உருவைக் குறிக்க ஒரு குறிமுறையை இயற்றுவது.

keyboard - விசைப்பலகை: திறவுப்பலகை. ஓர் உட்பலன் கருவியமைப்பு. இதிலுள்ள சொடுக்கிகள் ஒரு குறிமுறையை இயற்றுவது. இக்குறிமுறை தனி உருக்களைக் கொண்டிருக்கும். இவை எழுத்து, இலக்கம், குறி, கட்டளை ஆகியவையாகும்.

keyboard events - விசை திறவுப் பலகை நிகழ்வுகள் : இவை விசைப்பலகை உட் பலனைக் கண்காணிக்குமாறு நிகழ்நிரலுக்கு உதவுபவை. இந்த உட்பலன் நிகழ்நிரலுக்குச்செல்வது. தவிரத் தேவைப் பட்டால் உட்பலனைச் செல்லுபடியாக்குவது மாற்றுவது. இந்நிகழ்வுகளின் முதன்மை நோக்கம் உட்பலனைச் செல்லுபடியாக்கலே. பின்வரும் மூன்று நிகழ்வுகளும் விசைப் பலகையுடன் தொடர்புள்ளவை.

1) திறவழுத்தல் (keypress) : திறவு அழுத்தப்படும் பொழுது உண்டாவது.

2) திறவுகீழ் (keydown) : திறவு அழுத்தப்படும் பொழுது உண்டாவது.

3) திறவுமேல் (keyup) : திறவு விடுபடும் பொழுது உண்டாவது. தொழில் முறையில் உட்பலனைச் சரிபார்ப்பதற்குரிய கட்டுப்பாட்டை இந்நிகழ்வுகள் அளிக்கின்றன. keyboard shortcuts -திறவுப் பலகைக் குறுக்கு வழிகள் : எந்நிகழ்நிரலுக்கும் இக்குறுக்கு வழிகளை உருவாக்கலாம். இதற்கு அப்பயன்பாட்டு உரையாடல் பெட்டிப் பண்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

key, primary -தொடக்கத்திறவு : இத்திறவு ஒரு தகவல் தள அட்டவணையிலுள்ள ஆவணத்தைச் சிறப்பாக இனங்காண்பது. தொடர்புறு தகவல்தளங்களில் இத்திறவு ஒன்றுக்கு மேற்பட்ட புலங்களைக் கொண்டிருக்கும்.

keyword - The significant word in a phrase in information retrieval systems. Eg. In the title modern medicine, the Word medicine is the keyword. திறவுச்சொல் : செய்தி மீட்பு முறைகளில் ஒரு சொற்றொடரிலுள்ள சிறப்புச் சொல். தற்கால மருத்துவம் என்னுந் தலைப்பில் மருத்துவம் என் பது திறவுச்சொல்.

kilobard -கிலோபாஃட் :ஒரு வினாடிக்கு ஓராயிரம் இருமிகள்.

kilburn, Tom Prof. -பேரா.டாம் கில்பர்ன்: 1948இல் மான்செஸ்டரில் உள்ள முதல் கணிப்பொறியை அமைத்தவர். ஒரு நிகழ்நிரலை ஒடவிடவும் சேமிக்கவல்ல நினைவகத்தைக் கொண்டது இக்கணிப்பொறி.தற்கால முன்னேற்றங்கள் எல்லாம் இதனோடு நெருங்கிய தொடர்புடையவை. கணிப் பொறிக் காலத்தின் மறக்கப்பட்ட முன்னோடி இவர்.

knowledge management - அறிவு மேலாண்மை : தகவல் தொழில்நுட்பத்தின் உயிர் நாடி.

knowledge management, types of- அறிவு மேலாண்மை வகைகள் : இப்பயிற்சி வகைகள் பின்வருமாறு : 1) உள் இணையத்தை அமைத்தல். 2) தகவல் களஞ்சியம் அமைத்தல். 3) முடிவுகளைச் செயல்படுத்தல் 4) குழுப்பணியை நிறைவேற்றல். 5) அறிவுப் பணியாளர் குழுவை உருவாக்கல். 6) புதிய அறிவுப் பங்களிப்புகளை நிறுவுதல். 7) அறிவு அடிப்படையில் அமைந்த பணிகளைத் தொடங்கல். 8) அகவல்லாண்மையின் மூலங்களைக் கண்டறிதல்.

Krishnamoorthy V. Dr.-முனைவர். வி. கிருட்டினமூர்த்தி : அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர், தகவல் தொழில் நுட்பவியல் அறிவுரையாளர். இவர்தம் சிறந்த பங்களிப்புகளில் ஒன்று பொன்மொழி. இது தமிழ்ச் சொல்முறை யாக்கி. இதில் இவர் 7000 சொல் வளமுள்ள அகர வரிசையை அடக்கியுள்ளார். இவற்றிற்கு இணையாக ஆங்கிலக் சொற்களையும் கொடுத்துள்ளார்.இது எழுத்துப் பிழையைத் திருத்த உதவுவது.இவர் ஒளியுரு அறிதல் மென் பொருள் உருவாக்குவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளார்.

K56flex - கே56பிளக்ஸ் : 56 கேபிபிஎஸ்களில் வேலைசெய்யும் இருபண்பிகளுக்குரிய திட்ட அமைப்பு. ராக்வெல் அனைத்துலக கழகத் தாலும் லூசண்ட் தொழில் நுட்பங்களாலும் உருவாக்கப்பட்டது. 1998 க்கு பின் இதன் பெயர் வி-90.

"https://ta.wikisource.org/w/index.php?title=கணிப்பொறி_அகராதி/K&oldid=1047050" இலிருந்து மீள்விக்கப்பட்டது