கண்ணாயிரத்தின் உலகம்/பூம்புகார் பதிப்பக வெளியீடுகள்

கண்ணாயிரத்தின் உலகம்!
(நாடகம்)

பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை

'கண்ணாயிரத்தின் உலகம்'— கற்பனைத் தேனில் குழைத்து அளிக்கப்பட்ட செந்தூரப் பெட்டகம்.

மகனுக்காக தந்தை வாழ்கிறார். அப்படி, தந்தைக்காக மகன் இருக்கிறானா?—இந்தப் புதிரின் மூலமாக உலகின் உண்மையான நிலைமை வெளிச்சமாகிறது.

ஆம்!

தந்தை உண்டாக்கிய உலகில் தனயன் இடம் பெற்றுச் சுகபோகம் அனுபவிக்கிறான். அங்கிருந்து கொண்டே வேறொரு உலகை அவன் கண்டு குமுறுகிறான். ஆனால் அதற்குள் அவனால் ஆழமாகக் காலூன்ற முடியவில்லை.

மாறுபட்ட இருவேறு உலகில் நின்று கொண்டு அவதிப்படும்—அசிங்கப்படும் ஒருவனின் பரிதாபத்தின் வாயிலாக ஒரு புதிய ஞானத்தை போதிக்கும் பொன்னோவியம்!

விலை ரூ.5.90
பூம்புகார் வெளியீடு



வேலைக்காரி
{நாடகம்)

பேரறிஞர் டாக்டர் சி.என். அண்ணாதுரை

உலகம் என்னவோ ஒன்றுதான். ஆனால் அதில் உலவும் பயங்கரமான பிரிவுகளுக்குக் கணக்கு வழக்கு உண்டா?

உயர்ந்தவன், தாழ்ந்தவன்; இருப்பவன், இல்லாதவன்; மேல் ஜாதி, கீழ் ஜாதி....

அப்பப்பா! இன்னும் எத்தனை எத்தனையோ! அப்படிப்பட்ட அழும்பான பிரிவுகளில் இன்னமும் இங்கே நிலவிவரும் பணத்திமிரையும் ஜாதித் திமிரையும் அகற்றும் நோக்கத்தோடு அமரர் அண்ணாவால் படைக்கப்பட்ட புரட்சி நாடகம் இது.

கத்தியைத் தீட்டும் ஒருவனை புத்தியைத் தீட்டும்படியாக அறிவுறுத்தும் புதுமை!

'சட்டம் ஓர் இருட்டறை; அதிலே வக்கீலின் வாதம் ஓர் விளக்கு' என்னும் வெளிச்சத்தை வழங்கும் இந்த வேலைக்காரி நாடகம் படித்து இன்புறத்தக்கது.

விலை ரூ.4.90
பூம்புகார் வெளியீடு



நீதிதேவன் மயக்கம் !
(நாடகம்)

பேரறிஞர் டாக்டர் சி. என். அண்ணாதுரை

'இதிகாசம்' என்னும் இருளால் புதையுண்டு போயிருந்த தமிழ்ச் சமுதாயத்தைப் புதுப்பிக்க, பொய்யை மெய்யாக்கி வாழ்ந்த ஓர் இனத்தின் ஆழமான சதியை அம்பலப்படுத்த, அமரர் அண்ணா அவர்கள் வழங்கிய மனோரஞ்சித மலர் இது.

கம்பராமாயணத்திலுள்ள குற்றம் குறைகளை இலங்கேஸ்வரன் மூலமாகக் கேட்டு, தீர்ப்பளிக்க முடியாமல் தடுமாறித் தலைசாய்க்கும் நீதி தேவனை இந் நாடக நூலில் காணலாம்.

இதுமட்டுமல்ல...அதே மாதிரியான பல்வேறு நிறமுள்ள—மணமுள்ள ஓரங்க நாடகங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்நூல் ஒவ்வோருவர் கரத்திலும் நிச்சயம் இருக்க வேண்டிய கலைக்களஞ்சியம்!

விலை ரூ.5.90
பூம்புகார் வெளியீடு



இரு பரம்பரைகள்
(சிறுகதைகள்)

பேரறிஞர் டாக்டர் சி. என். அண்ணாதுரை

சமூகத்தில் இன்றளவும் தீர்க்கப்பட முடியாமல் இருக்கின்ற பல்வேறு பிரச்னைகளை அடையாளம் காட்டுவது அல்லது அவைகளை நீக்குவதற்கான பரிகாரம் காண்பது என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. அதுவும், 'சிறுகதை'யின் வாயிலாகத் தெரியப்படுத்துவது அல்லது அதைப் படிப்போரைத் தெளிய வைப்பதென்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல; மிகப் பெரிய ஒரு கலையாகும்.

அந்தக் கலையில் புதுவழி கண்ட பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நிரம்ப உண்டு. 'சட்'டென்று கிளம்பி, 'பொட்'டென்று தளரும் இக்கால வெறியுணர்ச்சிக் கதைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட முத்தான—முகம் பார்க்கும் கண்ணாடிபோல் பயன்படும் சத்தான கதைகளின் தொகுப்பு நூல் இது.

விலை ரூ.5.90
பூம்புகார் வெளியீடு



செவ்வாழை
(சிறுகதைகள்)

பேரறிஞர் டாக்டர் சி. என். அண்ணாதுரை

மனிதன் மறைவான். ஆனால் மனிதருள் மாணிக்கமாகத் திகழும் மேதைகள் படைத்த இலக்கியம் என்றுமே மறைவதில்லை.

அது சாகாவரம் பெற்றது. வாழையடி வாழையென வரும் திருக்கூட்டம் செய்யும் தவறைத் திருத்தும் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் சக்தி அதற்குண்டு.

அமரர் அண்ணாவின் பொற்காலக் கதை இலக்கியமும் அத்தகையதே.

'செவ்வாழை' கதையோடு கைகோர்த்து வரும் ஒவ்வொரு கதையும் நாட்டுக்குத் திறவு கோல் போன்றது.

எனவே—

சமூகத்தில் நெறியோடு வாழக் கற்றுக் கொடுக்கும் அண்ணாவின் சிறுகதையாம் நறுங்கனியை நீங்களும் சுவையுங்கள்; மற்றவர்களையும் சுவைக்கச் செய்யுங்கள்.

விலை ரூ.5.90
பூம்புகார் பிரசுரம் பிரஸ்
63, பிராட்வே, சென்னை-1.