14  உயிர் வாங்குவேன்!

தாய்க்குறின் கேடே தழற்படு முளமே !
சேய்க்குறின் தீங்கே விழிநீர்ப் படுமே?
கேட்டீ எலுவ ! நாட்டுத் துயர்தரின்
ஈட்டி யாயினும் எந்தோள் அடுமே !
பல்லா யிரமாண் டுயர்வழி பயின்ற
செல்லா நல்லிசை வெல்லத் தமிழ்மொழிக்
கொருவன் இழிசெயின் நெறியிகந்
தருமுயிர் வாங்குவ னவ்விடத் தானே !

-1960

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/017-089&oldid=1514504" இலிருந்து மீள்விக்கப்பட்டது