21  நரிச் செயல்!

மொழி நலமும் இனநலமும் காவாதார்
தமிழ் காப்போம் எனமு ழங்கல்
குழிமுயலைக் காப்பமெனக் கோளரிபால்
நரிகொண்டு சேர்த்தல்’ ஒக்கும்;
பழி சேர்க்கும் செந்தமிழ்க்கு; தமிழகத்தைப்
பகைவரின்கைக் கொண்டு சேர்க்கும்.
விழி சோர்தல் இல்லாது தமிழரெல்லாம்
வியன்றமிழைக் காத்தல் செய்வீர்!

-1963

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/024-089&oldid=1514511" இலிருந்து மீள்விக்கப்பட்டது