கனிச்சாறு 1/027-089
24 மணிநாள் விரைந்தது... !
கல்லறைப் பிணத்தைத் தோண்டிக்
கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச்
செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்!
செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேரும்
மணிநாளும் விரைந்த தன்றே!
-1965