27  முதலமைச்சே முதற்பகை!

தமிழகத்தின் முதலமைச்சே தமிழ்மொழியின்
முதற்பகையாய் இருக்கும் கீழ்மை,
தமிழகத்துள் அல்லாமல் பிறநாட்டில்
எங்கேனும் நடப்ப துண்டோ?
தமிழ்மொழியைக் காவாதான் தமிழ்த்தலைமை
தாங்குவதோ? தமிழ கத்தீர்,
தமிழகத்தின் வாழ்வெல்லாம் அன்னவரின்
வீழ்வன்றோ? எண்ணு வீரே!

-1965

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/030-089&oldid=1514517" இலிருந்து மீள்விக்கப்பட்டது