66  தூள் தூள் தூளே!

ஊராளும் தலைவர்க்கே ஒன்றுரைப்போம்;
உணர்கஅவர்; “ஒண்ட மிழ்த்தாய்ப்
பேராளும் இடத்திலெல்லாம் பிள்ளைமொழி
இந்தியினைப் புகுத்து கின்றீர்!
சீராளும் செந்தமிழர் பொறுத்திருந்தார்!
இனிப்பொறுக்கார்! புலியைப் போல,
ஏராளம் தமிழ்நிலத்தில் அவர் எழின், உம்
எண்ணமெலாம் தூள் தூள் தூளே!"

 

1963

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/070-089&oldid=1515060" இலிருந்து மீள்விக்கப்பட்டது