கனிச்சாறு 1/080-089
76 எத்தனை நாள் இந்திப்போர் ?
எத்தனை நாள் எத்தனை ஆண்
டெத்தனைப் போர் எத்தனைப் பேர்
எத்தனைத் தோள் இந்திக் கெழுவதோ?
எத்தனைப்பேச் செத்தனைத்தாள்?
எத்தனைப்பா டெத்தனைப் பாட்
டெத்தனை தாம் எழுதிக் குவிப்பதோ?
எத்தனைநாள் நாம் பொறுப்ப
தெத்தனைப் பேர் நாமிறப்ப
தெத்தனைநாள் இந்தி எதிர்ப்பதோ?
ஒத்திணையும் எண்ணமிலை;
ஒன்றிரண்டு பார்த்துவிட
ஊர்ப்படைக்கு நாளொன் றுரைப்பமே!
-1967