77  வாளெடுத்துக் கொள்ளுங்கள்!

தோளெடுத்துப் பொங்குகின்ற தமிழ்மறவீர்!
இந்தியினைத் தொலைத்தற் கென்றோர்
நாளெடுத்துக் கொள்ளுங்கள்; தாய்மனைவி
மக்கள்முன் தமிழைக் காக்கச்
சூளெடுத்துக் கொள்ளுங்கள் ; வடவர்நெறி
மேன்மேலும் சூழின், கூர்த்த
வாளெடுத்துக் கொள்ளுங்கள்; வந்தமையும்
செந்தமிழ்த்தாய் வாழ்வும் அன்றே!

-1970

 
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/081-089&oldid=1515071" இலிருந்து மீள்விக்கப்பட்டது