கனியமுது/கண்ணன் என் நண்பன்.



கல்லூரி விடுதி தன்னில்

கண்ணனும் முருக வேளும்

எல்லாரும் போல அன்றி -

இணைபிரி யாத நண்பர்!

கல்வியில் துறைகள் வேருய்க்

கற்றனர் எனினும், மற்ற

பல்வகை கடப்பும் ஒன்று

படுத்தின; அறையும் ஒன்ரும்!


இருபது வயதை எட்டும்

எழில்மிகு கனவுக் காலம்;

பருவமோ மனித வாழ்வில்

பக்குவம் தோன்றா நேரம்:

ஒருவரின் உடையை மற்றோர்

உடுத்திடல் கண்ட தோழர்

'இருவரும் மனைவி யையும்

மாற்றுவர் என்றும் சொன்னர்!

தோள்மீது கையைப் போட்டுத்

துடிப்புடன் முருக வேளும்

கோள்மூட்டும் தோழர் கூட்டம்

குமைந்திட உறுதி தந்தான்!

"நாள் மட்டும் என்றே? ஆனால்

நட்புக்கோர் எடுத்துக் காட்டாய்

ஆள்மாற்றச் சம்ம தித்தேன்;

அறைகூவல் ஏற்பீர்!” என்றான்.

பெற்றோர்கள் பணம்அ னுப்பப்

பிள்ளையார் பொறுப்பு ணர்ந்து

கற்றால்தான் உறுதி அன்றிக்,

காலத்தைக் கரைத்து விட்டு,

மற்றோர்க்குப் பார மாகி

மகிழ்பவர் நிறைய உண்டே!

சற்றேனும் எதிர்கா லத்தைச்

சார்ந்திடின் தவறே இல்லை.

முருகவேள் பட்டம் பெற்று,
மொழியியல் வல்லா னாகிப்,
பெருகவோர் அலுவல் தேடிப்,
பிறர்மெச்சும் வாழ்வு நேர
உருகிடும் கண்ணன் விட்டே
ர் மாறி வந்து சேர்ந்தான்!
கருகிய பயிராய் நண்பன்
கலங்கினான் கண்ணீர் சிந்தி!


கனிமொழி என்னும் பேரைக்
காரணப் பெயராய்த் தாங்கி,
இனிமையும் எழிலும் கூடி
இளமையிற் கொலுவிருந்தும்
தனிமையைத் தீர்க்கொ ணாது,
தந்தைக்குக் கவலை யாகிப்
பனிமலர் ஒன்று வாடும்

பான்மையைக் கண்ட சுற்றம்-

43

இருமனம் ஒருங்கி ணைத்தே
எழில்மணம் பரப்பும் நல்ல
திருமணம் இருவ ருக்கும்
தேர்ந்தனர்! ஓலை பெற்றும்
வருமாறு புரியா னாகி
வருந்தினன் கண்ணன் தானும்;
திருமணத் தன்றைக் குத்தான்
தேர்வுநாள் ஆன தாலே!


உயிர்க்குயி ரான தோழன்
வரவொண்ணா நிலைமை ஓர்ந்து
செயிர்த்தனன் முருக வேளும்!
சிலையெனுந் துணையி டத்தே
அயர்வினை உரைத்தான்! அன்னாள்,
அவளருங் கொழுநன் நட்பைப்
பயிர்ப்புடன் உணர்ந்து கொண்டாள்;

பழகிய நெருக்கம் கண்டாள்!

44

புதுமலர்த் தேனை மாந்தி
மயங்கிடும் வண்டு போலப்,
புதுவாழ்வின் தனிமை இன்பம்
பூரண மாக உண்டு,
மெதுவாக நகர்ந்த நாளை
விரட்டியே, நன்மை தீமை
பொதுவாக்கிக் காணும் ஊரார்
போற்றிடும் நெறியில் நின்றார்.


நீண்டநாள் ஆன பின்னர்
நெருங்கிய நண்பன் கண்ணன்
ஆண்டொரு பணியைப் பெற்றோன்
அவ்வூர்க்கு மாற்ற லாகி
வேண்டிய படுக்கை பெட்டி
மிடுக்குடன் வந்து சேர்ந்தான்
'மீண்டும் நாம் கூடி னோமே;

விந்தையே! எனம கிழ்ந்தார்.

45

"கனிமொழி வா வா; என்றன்
கண்ணனைப் பார்த்துக் கொள்வாய்;
இனிமேல் நீ என்னைப் போலே
இவனையுங் கருத வேண்டும்;
தனியாக வேறு வீட்டில்
தவித்திடா வண்ணம், இங்கே
எனக்குள வசதி முற்றும்
ஏற்பாடு செய்வாய்!" என்றான்.


கொழுநனே தெய்வம் என்னுங்
குலக்கொடி, கரங்கு வித்துத்
தொழுதனள் கூறு கின்றாள் :—
துணைவரின் துணை வருக்குப்
பழுதிலா வாறு பார்க்கும்
பக்குவந் தெரிந்த வள்நான்
கழுதையாய் உழைப்பேன்!" என்றாள்;

கண்ணனோ திடுக்குற் றானே!

அப்பாவி முருக வேளோ—
       “அவளது நகைச்சு வைக்குத்
தப்பாகப் பொருள் கொள்ளாதே!
       தயங்காதே கண்ணா!” என்றான்.
அப்பால் போய் மனையாள் நோக்கி
       “அப்படிச் சொல்ல லாமா;
எப்போது விளையாட்டு?” என்றே
       ஏகினன் அலுவ லுக்கே!

கண்ண்னோ பெயருக் கேற்ற
       கண்ணியன்! அன்றோர் நாளில்
நண்ணிடும் முடிவு சற்றும்
       நடைமுறைக் கியலு மாவென் (று)
எண்ணிடா உளத்த னாகி,
       முருகவேள் இயம்பும் சொல்லைப்
பெண்ணிடம் பேசு கின்றான்,

       பிறன்மனை விழையும் பேதை!

மனைவியை மாற்றிக் கொள்ளும்
    வழக்கமும் தமிழர்க் குண்டோ?
நினைவினிற் கூட அந்த
    நெறிகெட்ட செயலே எண்ணும்
உனையொரு மனித னென்றே
    உள்வீட்டில் தங்க வைத்த
வினையினை யாரி டத்தில்
    விளம்புவேன்!” எனவ ருந்திக்


கணவனின் வருகை நோக்கிக்
    கனிமொழி காத்தி ருந்தாள். -
உணவினை இருவ ருக்கும் -
    ஒழுங்காகப் படைத்த பின்னர்;
கனவினிற் கவிதை பாடும்
    கட்டிலிற் படுத்துக் கொண்டே
மணவினை முடிந்த நாளாய்
    வழங்காத அறிவுரைத்தாள்:-

ஆனந்தம் கவிதைகள்


“மார்கழிப் பறங்கிப் பூவை
வாயிற்கோ லத்தில் வைப்பார் ;
கூர்கொளும் வாழைப் பூவைக்
குழம்பாக்கி இலையில் வைப்பார் ;
சீர்கொளும் முல்லைப் பூவைச்
சிறந்திடக் குழலில் வைப்பார் :
தூர்கொளும் எருக்கம் பூவைச்
சுடுகாட்டில் அன்றோ வைப்பார் !



நண்பரிற் கூட இந்த
நால்வகை உண்டே, அத்தான்@
திண்ணையில் அம்ர்ந்து செல்வோர்;
தெருவோடு பேசிச் செல்வோர் :
உண்ணவும் இட்டு வந்தால்
உட்கார்ந்து தின்று செல்வோர் :
பெண்ணோடு துயிலும் இன்பப்
பேழைக்கும் வந்து செல்வோர் !

என்னவோ பொறுப்பில் லாமல்
எப்போதோ சொன்ன சொல்லை
இன்னமும் நினைவில் கொண்டே
நிறைவேற்ற இங்கு வந்த
கண்ணனோ நண்ப ருக்குள்
கடையனாம் , கயவ னாவான் !
கன்னியர் கற்பின் மேன்மை
கருதாத மூடன்!” என்றாள்.



“நம்பிக்கை மோசம் செய்த
நயவஞ்சக் கள்வன், நட்பாம்
செம்பொன்னைக் கரியாய் எண்ணும்
சீர்கெட்ட கீழோன் தன்னை
வெம்பகை யாக்கி விட்டேன் !
விடுவேனோ ?” என்றெ ழுந்தான்,
தம்பியோ கம்பி நீட்டித்
தப்பினான் : உயிர்பி ழைத்தான் !

கனியமுது







ஆனந்தம் கவிதைகள்