கபிலரகவல்/ஏழுபிள்ளைகள்

திருச்சிற்றம்பலம்
சர்வஞ் சின்மயம்.

ஓம்

கணபதி துணை திருச்சிற்றம்பலம்

பெண்பால் நால்வரும், ஆண்பால் மூவருமாகிய ஏழுபிள்ளைகளையும் பிறந்தவிடங்களிலே வைத்துவிட்டு ஆதியும் பகவனும் அப்புறம் போகும்போது ஆதியானவள் அப்பிள்ளைகளை நோக்கி இந்தப் பிள்ளைகளை யாவர் காப்பாற்றுவாரென்று இரங்கிக் காலெழாது நிற்க அப்போது அவள் மனவருத்தம் தீரும்படி அக்குழந்தைகள் கடவுளருளினாலே உண்மை தெரிந்துசொல்லிய பாடல்கள்.

வெண்பா

தொகு

உப்பை

தொகு
கண்ணுழையாக் காட்டிற் கடுமுண் மரத்துக்கும்
உண்ணும்படி தண்ணீரூட்டுவார் - எண்ணும்
நமக்கும்படி யளப்பார் நாரியோர்பாகர்
தமக்குந்தொழிலேதுதான். (1)
எவ்வுயிருங்காப்பதற்கோ ரீசனுண்டோவில்லையோ
அவ்வுயிரில்யானுமொன்றிங் கல்லேனோ - வவ்வி
அருகுவது கொண்டிங்கலைவானேனன்னாய்
வருகுவதுதானே வரும். (2)

உறுவை

தொகு
சண்டப்பைக் குள்ளுயிர்தன் றாயருந்தத்தானருந்தும்
அண்டத்துயிர்பிழைப்ப தாச்சரியம் - மண்டி
அலைகின்றவன்னா யரனிடத்துலுண்மை
நிலைகண்டு நீயறிந்துநில். (3)

வள்ளி

தொகு
அன்னைவயிற்றி வருத்திவளர்த்தவன்றான்
இன்னம்வளர்க்கானோ வென்றாயே - மின்னரவம்
சூடும்பெருமான் சுருதிமுடிவிரிருந்
தாடும்பெருமானவன். (4)

அதிகமான்

தொகு
இட்டமுடனென்றலையி லின்னவகையென்றெழுதி
விட்டசிவனுஞ்செத்து விட்டானோ
முட்டமுட்டப்பஞ்சமேயானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நி. (5)

திருவள்ளுவர்

தொகு
கருப்பையுண்முட்டைக்குங் கல்லினுட்டேரைக்கும்
விருப்புற்றமுதளிக்கு மெய்யன் - உருப்பெற்றால்
ஊட்டிவளர்க்கானோ வோகெடுவாயன்னாய்கேள்
வாட்டமுனக்கேன்மகிழ். (6)

கபிலர்

தொகு
கெர்ப்பமுதலின்றளவங் கேடுவாராமற்காத்
தப்புடனே யன்னமளித்திட்டோன் - தப்பித்துப்
போனானோகண்டுயிலப்புக்கானோ நின்மனம்போல்
ஆனானோவன்னாயறை (7)

முற்றிற்று
திருச்சிற்றம்பலம்
சர்வம் சின்மயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=கபிலரகவல்/ஏழுபிள்ளைகள்&oldid=20130" இலிருந்து மீள்விக்கப்பட்டது