கலிங்கத்துப் பரணி/இந்திர சாலம்
தீபக்கால் கட்டில்
தொகு153
- இவ்வண்ணத் திருதிறமுந் தொழுதிருப்ப எலும்பின்மிசைக் குடர்மென் கச்சிற்
- செவ்வண்ணக் குருதிதோய் சிறுபூதத் தீபக்கால் கட்டி லிட்டே. 1
பிண மெத்தை
தொகு154
- பிணமெத்தை யஞ்சடுக்கிப் பேயணையை முறித்திட்டுத் தூய வெள்ளை
- நிணமெத்தை விரித்துயர்ந்த நிலாத்திகழும் பஞ்சசய னத்தின் மேலே. 2
கொலு வீற்றிருத்தல்
தொகு155
- கெடாதபடி கெடுஞ்செழியர் கெடும்பொழுதின் இடும்பிண்டி பால மேந்தி
- இடாகினிக ளிருமருங்கு மீச்சோப்பிப் பணிமாற விருந்த போழ்தின். 3
கோயில் நாயகியை கும்பிடுதல்
தொகு156
- அடல்நாக எலும்பெடுத்து நரம்பிற் கட்டி அடிக்கடியும் பிடித்தமரின் மடிந்த வீரர்
- குடர்சூடி நிணச்சட்டை யிட்டு நின்ற கோயில்நா யகிநெடும்பேய் கும்பிட் டாங்கே. 4
காளியிடம் நெடும்பேய் கூறல்
தொகு157
- சுரகுருவின் தூதாகி யமன்பாற் செல்வோன் துணித்துவைத்த சிரமன்று தின்ற பேயைச்
- சிரமரிய வதற்குறவா யொளித்துப் போந்த சிலபேயைத் திருவுள்ளத் தறிதி யன்றே. 5
முதுபேயின் வருகை கூறல்
தொகு158
- அப்பேயி னொருமுதுபேய் வந்து நின்றிங் கடியேனை விண்ணப்பஞ் செய்க வென்ற
- திப்பேயிங் கொருதீங்குஞ் செய்த தில்லை என்கொலோ திருவுள்ள மென்னக் கேட்டே. 6
முதுபேய் மன்னிப்பு கேட்டல்
தொகு159
- அழைக்க வென்றலும ழைக்க வந்தணுகி அஞ்சி யஞ்சியுன தாணையிற்
- பிழைக்க வந்தனம்பொ றுத்தெ மக்கருள்செய் பெண்ண ணங்கெனவ ணங்கவே. 7
காளியின் அருள்மொழி
தொகு160
- அருத்தி யிற்பிழைநி னைத்த கூளியை யறுத்த வன்தலைய வன்பெறப்
- பொருத்தி யப்பிழைபொ றுத்த னம்பிழை பொறாத தில்லையினி யென்னவே. 8
முதுபேய் வேண்டல்
தொகு161
- உய்ந்து போயினமு வந்தெ மக்கருள ஒன்றொ டொப்பனவொ ராயிரம்
- இந்த்ர சாலமுள கற்று வந்தனெ னிருந்து காணென விறைஞ்சியே. 9
கண் கட்டு வித்தைகள்
தொகு162
- ஏற நின்னிருதி ருக்கண் வைத்தருள்செய் இக்கை யிற்சிலது திக்கைபார்
- மாறி இக்கையில ழைக்க மற்றவை மதக்க ரித்தலைக ளானபார். 10
163
- இக்க ரித்தலையின் வாயி னின்றுதிர நீர்கு டித்துரு மிடித்தெனக்
- கொக்க ரித்தலகை சுற்ற மற்றிவை குறைத்த லைப்பிணம் மிதப்பபார். 11
164
- அடக்க மன்றிது கிடக்க வெம்முடைய அம்மை வாழ்கவென வெம்மைபார்
- கடக்க மென்றபயன் வென்றி வென்றிகொள் களப் பெரும்பரணி யின்றுபார். 12
165
- துஞ்சி வீழ்துரக ராசி பாருடல் துணிந்து வீழ்குறை துடிப்பபார்
- அஞ்சி யோடும்மத யானை பாருதிர ஆறு மோடுவன நூறுபார். 13
166
- அற்ற தோளிவை யலைப்ப பாருவை யறாத நீள்குடர் மிதப்பபார்
- இற்ற தாள்நரி யிழுப்ப பாரடி யிழுக்கும் மூளையில் வழுக்கல்பார். 14
167
- நிணங்கள் பார்நிண மணங் கனிந்தன நிலங்கள் பார்நில மடங்கலும்
- பிணங்கள் பாரிவை கிடக்க நம்முடைய பேய லாதசில பேய்கள் பார். 15
வித்தை கண்ட பேய்களின் மயக்கம்
தொகு168
- என்ற போதிலிவை மெய்யெ னாவுட னிருந்த பேய்பதறி யொன்றன்மேல்
- ஒன்று கால்முறிய மேல்வி ழுந்தடிசில் உண்ண வெண்ணிவெறும் மண்ணின்மேல். 16
169
- விழுந்துகொ ழுங்குரு திப்புன லென்றுவெ றுங்கைமு கந்துமுகந்
- தெழுந்து விழுந்தசை யென்று நிலத்தை யிருந்து துழாவிடுமே. 17
170
- சுற்ற நிணத்துகில் பெற்றன மென்றுசு லாவுவெ றுங்கையவே
- அற்ற குறைத்தலை யென்று விசும்பை யதுக்கு மெயிற்றினவே. 18
171
- கயிற்றுறி யொப்பதொர் பேய்வறி தேயுடல் கௌவின தொக்கவிரைந்
- தெயிற்றை யதுக்கி நிலத்திடைப் பேய்கள் நிறைத்தன மேல்விழவே. 19
172
- முறம்பல போல நகங்கள் முறிந்து முகஞ்சித றாமுதுகுந்
- திறம்பலி லாவிறல் யோகினி மாதர் சிரித்துவி லாவிறவே. 20
பேய்கள் வேண்டுதல்
தொகு173
- அக்கண மாளு மணங்கினை வந்தனை செய்துக ணங்களெலாம்
- இக்கண மாளுமி னித்தவிர் விச்சையெ னக்கைவி திர்த்தலுமே. 21
முதுபேயின் வேண்டுகோள்
தொகு174
- கொற்றவர்கோன் வாளபய னறிய வாழுங்
- குவலயத்தோர் கலையனைத்துங் கூற வாங்கே
- கற்றுவந்தார் கற்றவவன் காணு மாபோல்
- கடைபோகக் கண்டருளென் கல்வி யென்றே. 22
தாயின்மேல் ஆணை
தொகு175
- வணங்குதலுங் கணங்களெலா மாயப் பாவி
- மறித்தெம்மை மறுசூடு சுடுவை யாகில்
- அணங்கரசி னாணையென அணங்கு மிப்போ
- தவைதவிரெங் கிவைகற்றா யென்ன வாங்கே. 23
முதுபேய் வரலாறு
தொகு176
- நின்முனிவுஞ் சுரகுருவின் முனிவு மஞ்சி
- நிலையரிதென் றிமகிரிபுக் கிருந்தேற் கௌவை
- தன்முனிவு மவன்முனிவுந் தவிர்க வென்று
- சாதனமந் திரவிச்சை பலவுந் தந்தே. 24
177
- உன்னுடைய பழவடியா ரடியாள் தெய்வ
- உருத்திரயோ கினியென்பா ளுனக்கு நன்மை
- இன்னுமுள கிடைப்பனவிங் கிருக்க வென்ன
- யானிருந்தேன் சிலகால மிருந்த நாளில். 25