கலிங்கத்துப் பரணி/இராச பாரம்பரியம்
இமயத்தில் புலிக்கொடி
தொகு178
- செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
- சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப
- பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
- பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.
விளக்கம்:
ஒரு சமயம் கரிகாற்சோழன் போர் வேட்கையால் வட திசைக்கண் படையெடுத்துச் சென்றான். அப்போது வடக்கில் உள்ள உச்சிகளை உடைய இமயமலை குறுக்கே நின்று தடுத்தது. அதனைக் கரிகாலன் தன் போர்க்கருவி ஆகிய செண்டினால் தலைகீழாக திருப்பினான். "இம்மலை முன் நின்ற நிலையிலேயே நிற்கட்டும்" என்று எண்ணினான். புலிக்கொடியாாகிய அடையாளச் சின்னத்தை அம்மலையின் நடுவிடத்தில் பொறித்து,இமயமலையை முன் இருந்த நிலையிலேயே திரும்பவும் இருக்கச் செய்தான்.
நாரதர் கூறல்
தொகு179
- கால மும்மையுமு ணர்ந்தருளு நார தனெனுங்
- கடவுள் வேதமுனி வந்துகடல் சூழ்பு வியில்நின்
- போலு மன்னருள ரல்லரென ஆசி புகலாப்
- புகல்வ தொன்றுளது கேளரச வென்று புகல்வான். 2
விநாயகர் பாரதம் எழுதினார்
தொகு180
- பண்டு பாரதமெ னுங்கதை பராச ரன்மகன்
- பகர வெங்கரிமு கன்பரு மருப்பை யொருகைக்
- கொண்டு மேருசிக ரத்தொரு புறத்தி லெழுதிக்
- குவல யம்பெறு தவப்பய னுரைப்ப வரிதால். 3
181
- பார தத்தினுள வாகிய பவித்ர கதையெம்
- பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே
- நேர தற்கிதனை நான்மொழிய நீயு மெழுதி
- நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதையே. 4
இதுவும் வேதம் ஆகும்
தொகு182
- அதன் முதற்கண்வரு மாதிமுதன் மாய னிவனே
- அப்ர மேயமெனு மெய்ப்ரியம தாக வுடனே
- பதமு மிப்பதம் வகுக்கவரு பாத மதுவும்
- பாத மானசில பார்புகழ வந்த அவையும். 5
183
- அந்த முட்பட விருக்குமவ் விருக்கின் வழியே
- ஆகி வந்தவவ் வருக்கமும் வருக்க முழுதும்
- வந்த அட்டகமு மொட்டரிய சங்கி தைகளும்
- வாய்மை வேதியர்கள் தாம்விதி யெனும் வகையுமே. 6
184
- கமல யோனிமுத லாகவரு முங்கள் மரபிற்
- காவன் மன்னவர்க ளாகிவரு கின்ற முறையால்
- அமல வேதமிது காணுமிதி லார ணநிலத்
- தமல னேயபய னாகிவரு கென்ற ருளியே. 7
நாரதர் இருப்பிடம் செல்லல்
தொகு185
- அரணி வேள்வியி லகப்படு மகண்ட வுருவாய்
- அரவ ணைத்துயிலு மாதிமுத லாக வபயன்
- தரணி காவலள வுஞ்செல மொழிந்து முனிவன்
- தானெ ழுந்தருள மாமுனி மொழிந்த படியே. 8
நாரதர் கூறிய வரலாறு
தொகு186
- ஆதி மாலமல நாபிகம லத்த யனுதித்
- தயன் மரீசியெனும் அண்ணலை யளித்த பரிசுங்
- காதல் கூர்தரு மரீசிமக னாகி வளருங்
- காசி பன்கதி ரருக்கனை யளித்த பரிசும். 9
187
- அவ்வ ருக்கன்மக னாகிமனு மேதினி புரந்
- தரிய காதலனை யாவினது கன்று நிகரென்
- றெவ்வ ருக்கமும் வியப்பமுறை செய்த கதையும்
- இக்கு வாகுவிவன் மைந்தனென வந்த பரிசும். 10
188
- இக்கு வாகுவின் மகன்புதல்வ னான வுரவோன்
- இகலு வோனிகலு ரஞ்செய்து புரந்த ரனெனுஞ்
- சக்கு வாயிர முடைக்களிறு வாகன மெனத்
- தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும். 11
189
- ஒருது றைப்புனல்சி னப்புலியு மானு முடனே
- உண்ண வைத்தவுர வோனுலகில் வைத்த அருளும்
- பொருது றைத்தலைபு குந்துமுசு குந்த னிமையோர்
- புரம டங்கலும ரண்செய்து புரந்த புகழும். 12
190
- கடல் கலக்கவெழு மின்னமுது தன்னை யொருவன்
- கடவுள் வானவர்க ளுண்ணவருள் செய்த கதையும்
- உடல்க லக்கற அரிந்துதசை யிட்டு மொருவன்
- ஒருது லைப்புறவொ டொக்கநிறை புக்க புகழும். 13
191
- சுராதி ராசன்முத லாகவரு சோழன் முனநாள்
- சோழ மண்டலம மைத்தபிற கேழு லகையும்
- இராச கேசரிபு ரந்துபர கேச ரிகளாம்
- இருவ ராணைபுலி ஆணையென நின்ற இதுவும். 14
192
- கால னுக்கிது வழக்கென வுரைத்த அவனும்
- காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின்
- மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல்
- வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்ட விறலும். 15
193
- புலியெ னக்கொடியி லிந்திரனை வைத்த அவனும்
- புணரி யொன்றினிடை யொன்றுபுக விட்ட அவனும்
- வலியி னிற்குருதி யுண்கென வளித்த அவனும்
- வாத ராசனைவ லிந்துபணி கொண்ட அவனும். 16
194
- தேங்கு தூங்கெயிலெ றிந்தவவ னுந்தி ரள்மணிச்
- சுடர்வி மானமது வான்மிசையு யர்த்த அவனும்
- தாங்கள் பாரதமு டிப்பளவும் நின்று தருமன்
- தன்க டற்படைத னக்குதவி செய்த அவனும். 17
195
- தளவ ழிக்குநகை வேல்விழி பிலத்தின் வழியே
- தனிந டந்துரகர் தங்கண்மணி கொண்ட அவனும்
- களவ ழிக்கவிதை பொய்கையுரை செய்ய உதியன்
- கால்வ ழித் தளையை வெட்டியர சிட்ட அவனும். 18
கரிகால் வளவன்
தொகு196
- என்று மற்றவர்கள் தங்கள்சரி தங்கள் பலவும்
- எழுதி மீளவிதன் மேல்வழுதி சேரன் மடியத்
- தன்ற னிக்களி றணைந்தருளி வீர மகள்தன்
- தனத டங்களொடு தன்புய மணைந்த பரிசும். 19
197
- தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில்
- தொடர வந்திலா முகரி யைப்படத்
- தெழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்
- றிங்க ழிக்கவே அங்க ழிந்ததும். 20
198
- தத்து நீர்வரால் குருமி வென்றதுந்
- தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன்
- பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப்
- பண்டு பட்டினப் பாலை கொண்டதும். 21
199
- ஒருவர் முன்னொர்நாள் தந்து பின்செலா
- உதியர் மன்னரே மதுரை மன்னரென்
- றிருவர் தம்மையுங் கிழிகள் சுற்றுவித்
- தெரிவி ளக்குவைத் திகல்வி ளைத்ததும். 22
முதலாம் பராந்தகன்
தொகு200
- வேழ மொன்றுகைத் தாலி விண்ணின்வாய் விசைய டங்கவு மசைய வென்றதும்
- ஈழ முந்தமிழ்க் கூடலுஞ் சிதைத் திகல்க டந்ததோ ரிசைப ரந்ததும். 23
- முதலாம் இராசராச சோழன்
201
- சதய நாள்விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன் றனியொர் மாவின்மேல்
- உதய பானுவொத் துதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும். 24
முதலாம் இராசேந்திர சோழன்
தொகு202
- களிறு கங்கைநீ ருண்ண மண்ணையிற் காய்சி னத்தொடே கலவு செம்பியன்
- குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங் கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும். 25
முதலாம் இராசாதிராசன்
தொகு203
- கம்பி லிச்சயத் தம்பம் நட்டதுங் கடிய ரண்கொள்கல் யாணர் கட்டறக்
- கிம்பு ரிப்பணைக் கிரியு கைத்தவன் கிரிக ளெட்டினும் புலிபொ றித்ததும். 26
இராசேந்திர சோழன்
தொகு204
- ஒருக ளிற்றின்மேல் வருக ளிற்றையொத் துலகு யக்கொளப் பொருது கொப்பையிற்
- பொருக ளத்திலே முடிக வித்தவன் புவிக விப்பதோர் குடைக வித்ததும். 27
இராச மகேந்திரன்
தொகு205
- பனுவலுக்கு முதலாய வேத நான்கிற்
- பண்டுரைத்த நெறிபுதுக்கிப் பழையர் தங்கள்
- மனுவினுக்கு மும்மடிநான் மடியாஞ் சோழன்
- மதிக்குடைக்கீ ழறந்தளிர்ப்ப வளர்ந்த வாறும். 28
முதற் குலோத்துங்கன் தோற்றம்
தொகு206
- குந்தளரைக் கூடற்சங் கமத்து வென்ற கோனபயன் குவலயங்காத் தளித்த பின்னை
- இந்தநிலக் குலப்பாவை யிவன்பாற் சேர என்ன தவஞ் செய்திருந்தா ளென்னத் தோன்றி. 29
வெற்றிச் சிறப்பு
தொகு207
- எவ்வளவு திரிபுவன முளவாய்த் தோன்றும் எவ்வளவு குலமறைக ளுளவாய் நிற்கும்
- அவ்வளவு திகிரிவரை யளவுஞ் செங்கோல் ஆணைசெல்ல வபயன்காத் தளிக்கு மாறும். 30
- கரிகாலன் எழுதி முடித்தான்
208
- இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்
- தெழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி
- ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல்
- உரைசெய் பல்புகழு மொன்றுமொழி யாத பரிசே. 31
காளி வியத்தல்
தொகு209
- எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்
- எமர்பொ றுக்கவென விப்படிமு டித்த விதனைத்
- தொழுது கற்றனமெ னத்தொழுது சொல்லு மளவிற்
- சோழ வம்சமிது சொன்னவறி வென்னவழகோ. 32
காளி மகிழ்தல்
தொகு210
- வையகமாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே
- ஐயனையான் பெற்றெடுத்த வப்பொழுதும் இப்பொழுதொத் திருந்த தில்லை. 33
காளி புகழ்தல்
தொகு211
- உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச் சயதுங்கன் மரபு கீர்த்தி
- அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பா னவனே யென்ன. 34