கலிங்கத்துப் பரணி/காடு பாடியது
75
- களப்போர் விளைந்த கலிங்கத்துக் கலிங்கர் நிணக்கூழ் களப்பேயின்
- உளப்போ ரிரண்டு நிறைவித்தாள் உறையுங் காடு பாடுவாம். 1
மரம் செடி கொடிகள்
தொகு76
- பொரிந்த காரைக ரிந்த சூரைபு கைந்த வீரையெ ரிந்தவேய்
- உரிந்த பாரையெ றிந்த பாலையு லர்ந்த வோமைக லந்தவே. 2
77
- உதிர்ந்த வெள்ளிலு ணங்கு நெல்லியொ டுங்கு துள்ளியு லர்ந்தவேல்
- பிதிர்ந்த முள்ளிசி தைந்த வள்ளிபி ளந்த கள்ளிப பரந்தவே. 3
78
- வற்றல் வாகைவ றந்த கூகைம டிந்த தேறுபொ டிந்தவேல்
- முற்ற லீகைமு ளிந்த விண்டுமு ரிந்த புன்குநி ரைந்தவே. 4
பரிதியின் செயல்
தொகு79
- தீய வக்கொடிய கான கத்தரைதி றந்த வாய்தொறுநு ழைந்துதன்
- சாயை புக்கவழி யாதெ னப்பரிதி தன்க ரங்கொடுதி ளைக்குமே. 5
நிழல் இல்லாமை
தொகு80
- ஆடு கின்றசிறை வெம்ப ருந்தினிழல் அஞ்சி யக்கடுவ னத்தைவிட்
- டோடு கின்றநிழ லொக்கும் நிற்கும்நிழல் ஓரி டத்துமுள வல்லவே. 6
நிழலின் செயல்
தொகு81
- ஆத வம்பருகு மென்று நின்றநிழல் அங்கு நின்றுகுடி போனதப்
- பாத வம்புனல்பெ றாது ணங்குவன பருகும் நம்மையென வெருவியே. 7
நெருப்பும் புகையும்
தொகு82
- செந்நெ ருப்பினைத் தகடு செய்துபார் செய்த தொக்குமச் செந்த ரைப்பரப்
- பந்நெ ருப்பினிற் புகைதி ரண்டதொப் பல்ல தொப்புறா வதனி டைப்புறா. 8
நிலத்தில் நீரின்மை
தொகு83
- தீயின் வாயினீர் பெறினு முண்பதோர் சிந்தை கூரவாய் வெந்து வந்துசெந்
- நாயின் வாயினீர் தன்னை நீரெனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே. 9
நிலத்தின் வெம்மை
தொகு84
- இந்நி லத்துளோ ரேக லாவதற் கெளிய தானமோ வரிய வானுளோர்
- அந்நி லத்தின்மேல் வெம்மை யைக்குறித் தல்ல வோநிலத் தடியி டாததே. 10
இரவியும் இருபொழுதும்
தொகு85
- இருபொழுது மிரவிபசும் புரவிவிசும் பியங்காத தியம்பக் கேண்மின்
- ஒருபொழுதுந் தரித்தன்றி யூடுபோ கரிதணங்கின் காடென் றன்றோ. 11
பனிநீரும் மழைநீரும் வியர்வை நீரே
தொகு86
- காடிதனைக் கடத்துமெனக் கருமுகிலும் வெண்மதியுங் கடக்க வப்பால்
- ஓடியிளைத் துடல்வியர்த்த வியர்வன்றோ உகுபுனலும் பனியு மையோ. 12
தேவர் வாழ்க்கை
தொகு87
- விம்முகடு விசைவனத்தின் வெம்மையினைக் குறித்தன்றோ விண்ணோர் விண்ணின்
- மைம்முகடு முகிற்றிரையிட் டமுதவட்ட வாலவட்ட மெடுப்ப தையோ. 13
பேயின் மூச்சும் மரத்தின் புகையும்
தொகு88
- நிலம்புடைபேர்ந் தோடாமே நெடுமோடி நிறுத்தியபேய்
- புலம்பொடுநின் றுயிர்ப்பனபோல் புகைந்துமரங் கரிந்துளவால். 14
வறண்ட நாக்கும் முதிய பேயும்
தொகு89
- வற்றியபேய் வாயுலர்ந்து வறள்நாக்கை நீட்டுவபோல்
- முற்றியநீண் மரப்பொதும்பின் முதுப்பாம்பு புறப்படுமே. 15
சூறாவளியின் இயல்பு
தொகு90
- விழிசுழல வருபேய்த்தேர் மிதந்துவரு நீரந்நீர்ச்
- சுழிசுழல வருவதெனச் சூறைவளி சுழன்றிடுமால். 16
நீறு பூத்த நெருப்பு
தொகு91
- சிதைந்தவுடற் சுடுசுடலைப் பொடியைச் சூறை சீத்தடிப்பச் சிதறியவப் பொடியாற் செம்மை
- புதைந்தமணி புகைபோர்த்த தழலே போலும் போலாவேற் பொடிமூடு தணலே போலும். 17
முத்து சொரிதல் கண்ணீர் பொழிதல்
தொகு92
- மண்ணோடி யறவறந்து துறந்தங் காந்த
- வாய்வழியே வேய்பொழியு முத்த மவ்வேய்
- கண்ணோடிச் சொரிகின்ற கண்ணீ ரன்றேற்
- கண்டிரங்கிச் சொரிகின்ற கண்ணீர் போலும். 18
முத்துக்கள் கொப்புளங்கள்
தொகு93
- வெடித்தகழை விசைதெறிப்பத் தரைமேன் முத்தம்
- வீழ்ந்தனவத் தரைபுழுங்கி யழன்று மேன்மேற்
- பொடித்தவியர்ப் புள்ளிகளே போலும் போலும்
- போலாவேற் கொப்புளங்கள் போலும் போலும். 19
காற்றின் தன்மை
தொகு94
- பல்கால்திண் திரைக்கரங்கள் கரையின் மேன்மேற்
- பாய்கடல்கள் நூக்குமதப் படர்வெங் கானில்
- செல்காற்று வாராமல் காக்க வன்றோ
- திசைக்கரியின் செவிக்காற்று மதற்கே யன்றோ. 20
வெந்தவனமே இந்தவனம்
தொகு95
- முள்ளாறுங் கல்லாறுந் தென்ன ரோட முன்னொருநாள் வாளபயன் முனிந்த போரின்
- வெள்ளாறுங் கோட்டாறும் புகையான் மூட வெந்தவன மிந்தவன மொக்கி லொக்கும். 21
மணலின் தன்மை
தொகு96
- அணிகொண்ட குரங்கினங்கள் அலைகடலுக் கப்பாலை
- மணலொன்று காணாமல் வரையெடுத்து மயங்கினவே. 22