கலிங்கத்துப் பரணி/கோயில் பாடியது
பழையகோயிலும் புதியகோயிலும்
தொகு97
- ஓதி வந்தவக் கொடிய கானகத் துறைய ணங்கினுக் கயன்வ குத்தவிப்ள்
- பூத லம்பழங் கோயி லென்னினும் புதிய கோயிலுண் டதுவி ளம்புவாம். 1
புதிய கோயிலுக்குக் கடைக்கால்
தொகு98
- வட்ட வெண்குடைச் சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடைப்
- பட்ட மன்னர்தம் பட்ட மங்கையர் பரும ணிக்கருத் திருவி ருத்தியே. 2
கோயில் இயல்பு
தொகு99
- துவர்நி றக்களிற் றுதிய ரேவலிற் சுரிகை போர்முகத் துருவி நேரெதிர்த்
- தவர்நி ணத்தொடக் குருதி நீர்குழைத் தவர்க ருந்தலைச் சுவர டுக்கியே. 3
தூணும் உத்தரமும்
தொகு100
- அறிஞர் தம்பிரா னபயன் வாரணம் அரசர் மண்டலத் தரண றப்பறித்
- தெறித ரும்பெருங் கணைம ரங்கள்கொண் டெழுது தூணொடு த் திரமி யற்றியே. 4
கை மரமும் பரப்பு மரமும்
தொகு101
- கடித ழிந்துபோர் மிதிலை யிற்படுங் கரிம ருப்பினைத் திரள் துலாமெனும்
- படிப ரப்பியப் பரும யானையின் பழுவெ லும்பினிற் பாவ டுக்கியே. 5
மேல் முகடு
தொகு102
- மீளி மாவுகைத் தபயன் முன்னொர்நாள் விருத ராசரைப் பொருது கொண்டபோர்
- ஆளி வாரணங் கேழல் சீயமென் றவை நிரைத்துநா சிகையி ருத்தியே. 6
வெற்றிடத்தை மூடுதல்
தொகு103
- துங்க பத்திரைச் செங்க ளத்திடைச் சோள சேகரன் வாளெ றிந்தபோர்
- வெங்க தக்களிற் றின்ப டத்தினால் வெளிய டங்கவே மிசைக விக்கவே. 7
கோபுரமும் நெடுமதிலும்
தொகு104
- கொள்ளிவாய்ப் பேய்காக்குங் கோபுரமு நெடுமதிலும்
- வெள்ளியாற் சமைத்ததென வெள்ளெலும்பி னாற்சமைத்தே. 8
கோயில் வாயிலில் மகரதோரணம்
தொகு105
- காரிரும்பின் மகரதோ ரணமாகக் கரும்பேய்கள்
- ஓரிரண்டு கால்நாட்டி யோரிரும்பே மிசைவளைத்தே. 9
மதில்களின் காட்சி
தொகு106
- மயிற்கழுத்துங் கழுத்தரிய மலர்ந்தமுகத் தாமரையு மருங்கு சூழ்ந்த
- எயிற்கழுத்து நிணக்கொடியு மிளங்குழவிப் பசுந்தலையு மெங்குந் தூக்கி. 10
மதுரையின் மகரதோரணம்
தொகு107
- பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின் செவிச்சுளகு பலவுந் தூக்கி
- மணியூச லெனமதுரை மகரதோ ரணம்பறித்து மறித்து நாட்டி. 11
ஈம விளக்கு
தொகு108
- பரிவிருத்தி யலகிட்டுப் பசுங்குருதி நீர்தெளித்து நிணப்பூச் சிந்தி
- எரிவிரித்த ஈமவிளக் கெம்மருங்கும் ஏற்றியதோ ரியல்பிற் றாலோ. 12
வீரர்களின் பேரொலி
தொகு109
- சலியாத தனியாண்மைத் தறுகண் வீரர் தருகவரம் வரத்தினுக்குத் தக்க தாகப்
- பலியாக வுறுப்பரிந்து தருது மென்று பரவுமொலி கடலொலிபோற் பரக்குமாலோ. 13
வீர வழிபாடு
தொகு110
- சொல்லரிய ஓமத்தீ வளர்ப்ப ராலோ தொழுதிருந்து பழுவெலும்பு தொடர வாங்கி
- வல்லெரியின் மிசையெரிய விடுவ ராலோ வழிகுருதி நெய்யாக வார்ப்ப ராலோ. 14
தலை துதிக்கும் முண்டம் வழிபடும்
தொகு111
- அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யரிவ ராலோ
- அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்ப ராலோ
- கொடுத்தசிரங் கொற்றவையைப் பரவு மாலோ
- குறையுடலங் கும்பிட்டு நிற்கு மாலோ. 15
அச்சுறுத்தும் தலைகள்
தொகு112
- நீண்டபலி பீடத்தி லரிந்து வைத்த
- நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென் றெண்ணி
- ஆண்டலைப்புள் ளருகணைந்து பார்க்கு மாலோ
- அணைதலுமச் சிரமச்ச முறுத்து மாலோ. 16
அஞ்சி அலைந்தன
தொகு113
- கடன மைந்ததுக ருந்தலைய ரிந்த பொழுதே கடவ
- தொன்றுமிலை யென்றுவிளை யாடு முடலே
- உடல்வி ழுந்திடினு கர்ந்திடவு வந்த சிலபேய்
- உறுபெ ரும்பசியு டன்றிடவு டன்றி ரியுமே. 17
குரல் ஒலியும் வாத்திய ஒலியும்
தொகு114
- பகடி டந்துகொள்ப சுங்குருதி யின்று தலைவீ
- பலிகொ ளென்றகுர லெண்டிசைபி ளந்து மிசைவான்
- முகடி டந்துருமெ றிந்தெனமு ழங்க வுடனே
- மொகுமொ கென்றொலிமி குந்தமரு கங்கள் பலவே. 18
மெய்க் காப்பாளர்கள்
தொகு115
- தமரு கங்கள்தரு கின்றசதி யின்கண் வருவார்
- அமரி யின்புறும நாதிவரு சாத கர்களே. 19
யோகினிப் பெண்கள்
தொகு116
- படைவ லங்கொடுப சுந்தலையி டங்கொ டணைவார்
- இடைமொ ழிந்திடைநு டங்கவரு யோகி னிகளே. 20
பெருந்தலை கண்டு பேய் உறங்காமை
தொகு117
- வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று
- தூங்குதலை சிரிப்பனகண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய். 21
காலன் இடும் தூண்டில்
தொகு118
- அரிந்ததலை யுடனமர்ந்தே ஆடுகழை அலைகுருதிப் புனலின் மூழ்கி
- இருந்தவுடல் கொளக்கால னிடுகின்ற நெடுந்தூண்டி லென்னத் தோன்றும். 22
கொள்ளிவாய்ப் பேயின் தன்மை
தொகு119
- கொல்வா யோரி முழவாகக் கொள்ளி வாய்ப்பேய் குழவிக்கு
- நல்வாய்ச் செய்ய தசைதேடி நரிவாய்த் தசையைப் பறிக்குமால். 23
கோயிலைச் சுற்றியுள்ள சுடலை
தொகு120
- நிணமுந் தசையும் பருந்திசிப்ப நெருப்பும் பருத்தி யும்பொன்று
- பிணமும் பேயுஞ் சுடுகாடும் பிணங்கு நரியு முடைத்தரோ. 24