கலிங்கத்துப் பரணி/தேவியைப் பாடியது
காளியின் வடிவழகு
தொகு121
- உவையுவை யுளவென் றெண்ணி உரைப்ப தெனுரைக்க வந்த
- அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம். 1
பரிபுரம் விளங்கும் பாதம்
தொகு122
- ஒருமலை மத்துவலத் துலவுக யிற்றினுமற்
- றுலகுப ரித்தபணத் துரகவ டத்தினுமப்
- பருமணி முத்துநிரைத் துடுமணி தைத்தவிணைப்
- பரிபுரம் வைத்ததளிர்ப் பதயுக ளத்தினளே. 2
காளி தேவியின் குங்குமப்பொட்டு
தொகு123
- அருமறை யொத்தகுலத் தருணெறி யொத்தகுணத்
- தபயனு தித்தகுலத் துபயகு லத்துமுதல்
- திருமதி யொக்குமெனத் தினகர னொக்குமெனத்
- திகழ்வத னத்தினிடைத் திலகவ னப்பினளே. 3
சதிகொள் நடனம்
தொகு124
- அரவொடு திக்கயமப் பொழுதுப ரித்தவிடத்
- தடியிட வுட்குழிவுற் றசைவுறு மப்பொழுதில்
- தரணித ரித்ததெனப் பரணிப ரித்தபுகழ்ச்
- சயதர னைப்பரவிச் சதிகொள் நடத்தினளே. 4
பால் நிரம்பிய கிண்ணம்
தொகு125
- தணிதவ ளப்பிறையைச் சடைமிசை வைத்தவிடைத்
- தலைவர்வ னத்தினிடைத் தனிநுகர் தற்குநினைத்
- தணிதவ ளப்பொடியிட் டடையவி லச்சினையிட்
- டமுதமி ருத்தியசெப் பனையத னத்தினளே. 5
ஆடையும் இடைக்கச்சும்
தொகு126
- பரிவக லத்தழுவிப் புணர்கல விக்குருகிப்
- படர்சடை முக்கணுடைப் பரமர்கொ டுத்தகளிற்
- றுரிமிசை அக்கரியிற் குடரொடு கட்செவியிட்
- டொருபுரி யிட்டிறுகப் புனையுமு டுக்கையளே. 6
தேவியின் பிள்ளைகள்
தொகு127
- கலைவள ருத்தமனைக் கருமுகி லொப்பவனைக்
- கரடத டக்கடவுட் கனகநி றத்தவனைச்
- சிலைவளை வுற்றவுணத் தொகைசெக விட்டபரித்
- திறலவ னைத்தருமத் திருவுத ரத்தினளே. 7
தேவியின் அணிகள்
தொகு128
- கவளம தக்கரடக் கரியுரி வைக்கயிலைக்
- களிறுவி ருப்புறுமக் கனகமு லைத்தரளத்
- தவளவ டத்திடையிற் பவளமொ டொத்தெரியத்
- தழலுமி ழுத்தரியத் தனியுர கத்தினளே. 8
காளியின் கைகள்
தொகு129
- அரியுமி டற்றலையிட் டலைகுரு திக்கெதிர்வைத்
- தறவும டுத்தசிவப் பதனைமு ழுத்திசையிற்
- கரிகர டத்தொளையிற் கலுழியி டைக்கழுவிக்
- கருமைப டைத்தசுடர்க் கரகம லத் தினளே. 9
தேவியின் உதடுகள்
தொகு130
- சிமையவ ரைக்கனகத் திரளுரு கப்பரவைத்
- திரைசுவ றிப்புகையத் திசைசுடு மப்பொழுதத்
- திமையவ ரைத்தகைதற் கிருளுமி டற்றிறைவற்
- கினியத ரத்தமுதக் கனியத ரத்தினளே. 10
சிவனின் பகை தீர்த்தவள்
தொகு131
- உருகுத லுற்றுலகத் துவமைய றச்சுழல்வுற்
- றுலவுவி ழிக்கடைபட் டுடல்பகை யற்றொழியத்
- திருகுதலைக் கிளவிச் சிறுகுத லைப்பவளச்
- சிறுமுறு வற்றரளத் திருவத னத்தினளே. 11
காதணிகளும் மாலைகளும்
தொகு132
- அண்டமுறு குலகிரிகள் அவளொருகா லிருகாதிற்
- கொண்டணியிற் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம். 12
தேவியின் ஆற்றல்
தொகு133
- கைம்மலர்மே லம்மனையாம் கந்துகமாங் கழங்குமாம்
- அம்மலைக ளவள்வேண்டின் ஆகாத தொன்றுண்டோ. 13