கலைக்களஞ்சியம்/அகிச்சத்ரா

அகிச்சத்ரா முற் காலத்தில் வட பஞ்சால தேசத்தின் தலைநகராக இருந்தது. கி.பி.10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச இராச்சியத்தின் பரேலி ஜில்லா ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் மத்திய சர்க்கார் தொல் பொருள் ஆராய்ச்சி இலாக்காவால் தோண்டிப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக கி.மு. 3-வது நுற்றாண்டிலிருந்து கி.பி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளம் பெற்றிருந்ததை விளக்கும் பொருள்கள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த பொருள்களில் கி.மு. முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷான் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுட்டட மண்ணாலான தெய்வங்களின் உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகியவை முக்கியமானவை. இங்கு நடத்திய ஆராய்ச்சி கங்கைச் சமவெளியில் இனி நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு அடிகோலுவதாகும். பி. ஆர். ஸ்ரீ