கலைக்களஞ்சியம்/அக்ரிடீன்
அக்ரிடீன் (Acridine) கரித்தாரிலிருந்து கிடைக்கும் ஆந்த்ரசீனில் உள்ள ஒரு பொருள். இது ஊசியை யொத்த படிக வடிவுள்ளது. தோலை அரிக்கும் தன்மையுள்ளது. இதை நீரில் கரைத்தால் அக்கரைவு ஒளிரும். ஆந்த்ரசீனைக் கந்தக அமிலத்துடன் கலந்தால் அக்ரிடீன் அமிலத்தில் கரைந்துவிடும். அக்கரைவைப் பொட்டாசியம் டைக்குரோமேட்டுடன் கலந்தால் அக்ரிடீன் டைக்குரோமேட்டு படியும். அதிலிருந்து நவச்சார ஆவியால் அக்ரிடீனைப் பிரிக்கலாம்.
இதுவும் இதையொத்த மற்றப் பொருள்களும் பல வினச்-சுற்றுக் கூட்டுக்கள் (Hetero-cyclic compounds) என்னும் வகையைச் சேர்ந்தவை.