கலைக்களஞ்சியம்/அங்கோலா

அங்கோலா மேற்கு ஆப்பிாிக்காவில் போர்ச்சுகேசியர்களுக்குச் சொந்தமான நாடு. பான்டங்கோலா என்னும் சுதேசப் பெயரைப் போர்ச்சுகேசியர்கள் அங்கோலா என்று திருத்திவிட்டனர். வடக்கே காங்கோ ஆற்றிலிருந்து அட்லான்டிக் கரையோரமாகவt 1000 மைல் நீளத்திற்கு இப்பிரதேசம் பரந்து இருக்கிறது. காங்கோ முகத்துவாரத்தை யடுத்து அமைந்துள்ளதால் பெரும்பாலும் காடாக இருக்கிறது. சுதேச மக்களின் உழைப்பால் பல மைல் நீளம் பொிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1575 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டை ஆண்டுவரும் போர்ச்சுகேசியர்கள் இந்நாட்டின் முன்னேற்றத்திற்காக மிகுதியாக ஒன்றும் செய்துவிடவில்லை. 1928-ல் தலைநகரம் லுவாண்டாவிலிருந்து ஹூவாம்போ அல்லது நோவாலிஸ்பன் என்னும் நகருக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது, ஆயினும் 1945 வரை தலைநகரம் மாற்றப்படவில்லை. காப்பிக்கொட்டை, வைரம், சர்க்கரை முதலியவை ஏற்றுமதியாகின்றன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர் ஆப்பிரிக்கச் சுதேசிகள்; 170 ஐரோப்பியர்களும் வசிக்கின்றனர். பரப்பு; 481,351 ச.மைல் மக்; 4,111,796 (1950) தலைநகரம்; லுவான்டா; மக் 137,139 (1950)

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அங்கோலா&oldid=1453489" இலிருந்து மீள்விக்கப்பட்டது