கலைக்களஞ்சியம்/அச்சு
அச்சு : இச்சொல் பொறியியலில் இருசையும், கணிதத்தில் ஒரு பொருள் எந்த வரையைச் சுற்றிச் சுழல்கிறதோ அந்த வரையையும், உடற் கூற்றியலில் உடம்பின் நீள நடுக்கோட்டையும், இரண்டாவது கழுத்து முள்ளெலும்பையும், தாவரவியலில் தண்டும் வேரும் சேர்ந்த தாவர உடலின் நடுக்கோட்டையும் பூகோலவியலில் பூமியின் வட துருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் ஒரு கற்பிதக் கோட்டிற்கும் அச்சு என்று பெயர். இந்தப் பூமியின் அச்சு அயன வீதியின் தளத்திற்கு 660 30' சாய்ந்திருக்கிறது.