கலைக்களஞ்சியம்/அடிநிலை
அடிநிலை (Base) : கட்டடச் சிற்பத்தில் அடிநிலை என்பது ஒரு தூணின் அடியில் தரைக்குமேல்
காணப்படும் பகுதி. இது தூணைத் தாங்கி நிற்கிறது. தூணின் கனம் பரவி இருக்கும் பரப்பை இது அதிகமாக்கி அதை நிலைப்படுத்த உதவுகிறது. பழங்கால இந்தியக் கட்டடச் சிற்பத்தில் கல்லினால் ஆன அடிநிலையில் அழகிய வேலைப்பாடமைந்த சித்திரங்கள் செதுக்கப்பட்டன. அடிநிலையை இரும்பு போன்ற உலோகத்தினால் அமைப்பதும் உண்டு.