கலைக்களஞ்சியம்/அடுக்குநிலச் சாகுபடி
அடுக்குநிலச் சாகுபடி (Terrace cultivation) மலைச் சரிவுகளை நீர் தேங்கும்பொருட்டுப் படிப்படியாக வெட்டிச் சாகுபடி செய்தல். நீரைத்தேக்க இச்சம இடங்களைச் சுற்றிச் சில சமயங்களில் சுவர்கள் கட்டப்படும். சமநிலம் குறைவாகவும் மக்கள் மிகுந்துமுள்ள பிரதேசங்களில் மலைப்பாங்கான இடங்களில் அடுக்குநிலச் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. உதா: இந்தியா, சீனா, ஜாவா.