கலைக்களஞ்சியம்/அட்சஸன், எட்வர்டு குட்ரிச்

அட்சஸன், எட்வர்டு குட்ரிச் (Acheson, Edward Goodrich) (1856-1931) புதுப்பொருள் ஆக்கிய அமெரிக்க அறிஞர். வாஷிங்டன் நகரில் இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். சிறுவயதிலேயே இவர் வேலைக்குச் செல்ல நேர்ந்தது. ஓய்வு நேரத்தில் இவர் சோதனைகள் செய்து புதுப்பொருளைக் கண்டுபிடித்தார். மின்சாரத்தில் ஆர்வம் பிறந்து இவர் எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார். சில ஐரோப்பிய நாடுகளில் மின்சார விளக்குகளைப் போட இவர் உதவினார். கார்போரண்டம் (த.க) என்ற மெருகூட்டியை இவர் கண்டுபிடுத்தார். பென்சில் கரியை மிகத்தூய நிலையில் தயாரிக்க இவர் வகுத்த முறையினால் இவர் பணக்காரரானார். இப்பொருளைக் கொராயீடு நிலையிற்கொண்ட புதிய உயவுகளை இவர் கண்டுபிடித்தார்.