கலைக்களஞ்சியம்/அட்வொக்கேட்டு

அட்வொக்கேட்டு (Advocate) : சாதாரணமாகக் கட்சிக்காரர்களுக்காகக் கோர்ட்டு அல்லது வேறு விசாரணை மன்றங்களில் (Tribunals) வாதம் செய்பவர்கள் அட்வொக்கேட்டு என்று அழைக்கப்படுவார்கள். இங்கிலாந்திலுள்ள பாரிஸ்ட்டர் போலல்லாமல் இந்தியாவிலுள்ள அட்வொக்கேட்டுகளுக்குக் கட்சிக்காரர்களுக்காக வக்காலத்து வாங்கவும் கோர்ட்டில் வாதம் செய்யவும் அதிகாரமுண்டு. முக்தியார், பிளீடர், வக்கீல்,அட்வொக்கேட்டு எனப் பலவகைப்பட்ட வழக்கறிஞர்களில் 1926 ஆம் ஆண்டின் இந்திய வழக் கறிஞர் சபைச் சட்டப்படி (Indian Bar Council Act) தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்பவர்கள் அட்வொக்கேட்டு எனப்படுவர். ஒவ்வொரு இராச்சியத்திலும் உள்ள வழக்கறிஞர் சபை இவ்விஷயத்தில் தகுந்த விதிகளை ஏற்படுத்தும். பல்கலைக் கழகங்களில் சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள், தேர்ந்த அட்வொக்கேட்டுகளிடம் ஓராண்டு சட்டப் பயிற்சி மாணவராக (Apprentice) ஆகித் தொழில் கற்றுக்கொண்டு அட்வொக்கேட்டுகளாகப் பதிவு செய்து கொள்வார்கள். ஒரு பிளீடர் குறிக்கப்பட்ட சில ஆண்டுகள் அனுபவத்திற்குப் பிறகு அட்வொக்கேட்டாகப் பதிவுசெய்து கொள்ளலாம். ஓர் உயர் நீதிமன்றத்திலுள்ள (High Court) அட்வொக்கேட்டுகள் மற்ற உயர்நீதி மன்றங்களிலும் அட்வொக்கேட்டுக்களாக ஆகலாம். அட்வகேட்டுகள் மேன்மையும், கௌரவமும் உடைய தொழிலினராகக் கருதப்படுகிறார்கள். ஓர் அட்வொக்கேட்டு தொழில் முறையில் தவறாய் நடந்துகொண்டால் அது வழக்கறிஞர் சபையின் உறுப்பினர்களால் நேர்ர்தெடுக்கப்பட்ட விசாரணை மன்றத்தால் முதலில் விசாரிக்கப்படும். பிறகு அவர்களுடைய ஆறிக்கையை உயர்நீதி மன்றம் ஆராய்ந்து தீர்மானிக்கும். உயர்நீதி மன்றத்தின் தீர்மானப்படி தவறாக நடந்துகொண்ட அட்வொக்கேட்டின் பொயர் அட்வெக்கேட்டுப் பதிவுப் பட்டியிலிருந்து நீக்கப்படும்.

ஒரு நீதிமன்றத்தின் அட்வோக்கேட்டுக்கு அந்த நீதிமன்றத்திலும், அந்த நீதிமன்றத்தின் கீழ்பட்ட கோர்ட்டுகளிலும் அல்லாமல் வேறு இராச்சியத்தில் உள்ள உயர்நீதி மன்றத்திற்குக் கீழ்ப்பட்ட எல்லாக் கோர்ட்டுகளிலும் அட்வெக்கேட்டு முறையில் தொழில் செய்ய அதிகாரம் உண்டு. குறிப்பிட்ட சில ஆண்டுகள் இராச்சியத்தில் அட்வெக்கேட்டாக அனுபவம் பெற்ற பிறகு அவர் உச்சநீதி மன்றத்தில் (Supreme Court) அட்வெக்கேட்டாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவுசெய்து கொண்டால் அப்படிப்பட்டவர் இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் அங்கே அட்வெக்கேட்டாகப் பதிவு செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் அட்வொக்கேட்டுகள் ஆஜராக அதிகாரம் உண்டு. அட்வெக்கேட்டுகள் அகௌரவமான அவ்வது இழிவான வேலைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏ. என். வி.