கலைக்களஞ்சியம்/அண்டர்மகன் குறுவழுதி

அண்டர்மகன் குறுவழுதி கடைச் சங்க காலப் புலவர். தொகைநூல்களிற் குறுவழுதியார் என்னும் பெயர் காணப்படுகிறது. அவரும் இவரும் ஒருவரோ என்பது ஐயத்துக்கிடமானது. வழுதி என்ற பெயராற் பாண்டிய மரபினரென்பது விளங்கும். (புறம்.346 ; குறுந். 345; அகம். 150,228).