கலைக்களஞ்சியம்/அதினே

அதினே (Athene) : அறிவு, கலைகள், விஞ்ஞானம் ஆகியவற்றிற்குரிய கிரேக்கப் பெண் தேவதை. இவள் ஜூஸ் தலையிலிருந்து சர்வாயுதபாணியாய் எழுந்ததாகக் கூறுவர். இவளே மனிதர்க்குத் தலை சிறந்த வரமாக ஒலிவ மரத்தை உண்டாக்கியதால், இவள் பெயரை வைத்தே கிரேக்கத் தலைநகரத்துக்கு ஆதன்ஸ் என்று பெயரிட்டனர். இத்தேவதையை ரோமானியர்கள் மினர்வா என்று அழைப்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அதினே&oldid=1455878" இலிருந்து மீள்விக்கப்பட்டது