கலைக்களஞ்சியம்/அனாம்

அனாம் (Annam) பிரெஞ்சு இந்தோ சீனப்பிரதேசத்தின் கீழைக்கரையில் பிரெஞ்சுப் பாதுகாப்பு நாடாயிருந்தது. இப்போது (1936) வியட்நாமின் ஒரு பகுதி. பரப்பு 56.974 மைல். மக் : சு. 71.84,000 (1948). பிரெஞ்சு ஐக்கியத்தில் உட்பட்ட நாடு வியட்நாம். அதன் அரசர் இங்கு வசிக்கிறார். தலை நகர் ஹ்வெ (Hue). மக் : சு. 40.000. முக்கிய விளை பொருள் அரிசி, பட்டு, தாமிரம், நாகம், தங்கம் முதலியனவும் கிடைக்கின்றன. இது இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜப்பான் வசம் சிக்கி 1945-ல் மறுபடியும் பிரான்சிற்கு உரிமையாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அனாம்&oldid=1465032" இலிருந்து மீள்விக்கப்பட்டது